1 00:00:53,262 --> 00:00:55,473 த டெர்மினல் லிஸ்ட் 2 00:01:13,365 --> 00:01:15,242 -கண்டுபிடித்தேன். -எதை கண்டுபிடிச்சே? 3 00:01:17,161 --> 00:01:18,788 -இது மான். -எப்படி சொல்றே? 4 00:01:21,832 --> 00:01:22,792 குமிழ் நகங்கள். 5 00:01:23,667 --> 00:01:27,046 பிரமாதம். சரி, அப்ப அவை எங்கே தண்ணி குடிக்கும்னு தெரியும். 6 00:01:29,006 --> 00:01:30,633 ஒத்தையடிப் பாதை தெரியுதா? 7 00:01:30,716 --> 00:01:34,136 அதை தொடர்வோம். இப்ப எப்படி இருக்கும்னு தெரியும். 8 00:01:35,513 --> 00:01:38,891 அவை எங்கே குடிக்கும், சாப்பிடும், தூங்கும்னு தெரிஞ்சுக்கலாம். 9 00:01:41,936 --> 00:01:45,189 அவைகள் போகும் பாதைகள் இப்ப நமக்குத் தெரியும், 10 00:01:45,272 --> 00:01:49,151 ஆக, நாம் உயரமான இடத்தில் போய் இருந்து, அவற்றுக்காக காத்திருப்போம். 11 00:01:49,401 --> 00:01:50,903 சரி, தொடர்ந்து நடங்க. 12 00:01:57,743 --> 00:02:01,372 அப்படிதான். வழியை உருவாக்கு, என் மான் குட்டி. 13 00:02:17,012 --> 00:02:19,640 ஆகட்டும். நாம் மேலே ஓய்வெடுப்போம், வாலு. 14 00:02:34,864 --> 00:02:36,156 அப்பா. 15 00:02:36,991 --> 00:02:38,200 ஐ லவ் யு 16 00:02:38,826 --> 00:02:40,202 என்னைப் பார்க்கணுமா? 17 00:03:04,977 --> 00:03:06,270 எண்ணெய் விலைப் பட்டியல் 18 00:03:40,638 --> 00:03:43,766 பந்திக்கு முந்திக்கோ... காஃபிக்காக வெளியே போகிறேன். 19 00:06:01,779 --> 00:06:03,405 க்ரிப்டெக்ஸ் ஃபோன். 20 00:06:06,700 --> 00:06:08,577 எதை மறைக்கிறே, மார்கஸ்? 21 00:06:28,305 --> 00:06:30,015 என்னை வந்து பார்க்கணுமா? 22 00:06:30,557 --> 00:06:32,351 -அவை எங்க சாப்பிடும் தெரியும். -ஆம். 23 00:06:32,434 --> 00:06:34,228 எங்கே தூங்கும் தெரியும். 24 00:06:34,770 --> 00:06:37,314 இப்ப அவை போகும் பாதை தெரியும், அதனால் 25 00:06:37,397 --> 00:06:40,109 நாம் உயரமான இடத்தில போய், அவற்றுக்கு காத்திருப்போம். 26 00:06:41,735 --> 00:06:45,948 வழிகாணுதலில் துல்லியமா இருந்தால், என்ன தேடறோம்னு தெரிந்தால், 27 00:06:47,032 --> 00:06:49,409 ஒரு மானும் நம்மிடமிருந்து ஒளிய முடியாது. 28 00:07:03,257 --> 00:07:04,842 வாங்கடா, தடியர்களா. 29 00:07:05,425 --> 00:07:07,761 நாம் தடுக்கணும். ஒரு தடுப்பு தேவை. 30 00:07:09,930 --> 00:07:12,975 அதே! அதே! அடேங்கப்பா! 31 00:07:13,350 --> 00:07:15,269 அடேங்கப்பா! அதே, அடி அதை! 32 00:07:16,770 --> 00:07:21,650 அதேதான்! அப்படியேதான்! ஆம்! 33 00:07:22,776 --> 00:07:23,861 ரோல் டைட். 34 00:07:23,944 --> 00:07:27,239 அப்பட்டமா! நல்ல வாய்ப்பை விட்டே. 35 00:07:30,033 --> 00:07:31,368 -ஹேய். -ஹேய். 36 00:07:34,204 --> 00:07:36,874 -மெக்சிகோ போக தயாரா? -ஆம். 37 00:07:36,957 --> 00:07:41,670 கவனி, என்ன நடக்க போகுதுன்னு என்னாலேயே சொல்ல முடியாது. 38 00:07:42,212 --> 00:07:44,089 என்னை விட்டதும், நீ கிளம்பிடணும். 39 00:07:44,173 --> 00:07:48,051 என்ன, புதையல் எல்லாத்தையும் நீயே அபகரிச்சுக்குவியா? நடக்காது. 40 00:07:48,677 --> 00:07:50,596 நிஜமா சொல்றேன். மோசமாகப் போகுது. 41 00:07:53,307 --> 00:07:55,559 லூசி என் ஞானமகள், ரீஸ். 42 00:07:57,102 --> 00:08:00,564 அந்த தடியர்களை பழிவாங்கப் போகும் என்னை எதுவுமே 43 00:08:01,398 --> 00:08:04,776 இழுத்துப் பிடித்து தடுத்து நிறுத்திவிட முடியாது. 44 00:08:08,739 --> 00:08:10,407 ரைலி ஏர்க்கு வரவேற்கிறேன். 45 00:08:38,018 --> 00:08:40,145 வயோமிங்ல அந்த மான் சிக்கியதா? 46 00:08:40,229 --> 00:08:42,940 ஆம். மடையன் எல்லாத்தையும் இணையத்தில் போட்டான். 47 00:08:43,315 --> 00:08:45,067 ஏதாவது உதவிகரமா கிடைத்ததா? 48 00:08:45,400 --> 00:08:47,444 ரகசிய சான்டா பரிசு அனுப்பியிருக்கேன். 49 00:08:47,653 --> 00:08:48,737 அடுத்த உதவாக்கரையா? 50 00:08:49,029 --> 00:08:51,615 அட, நீ சொல். நான் விமானத்தில் இருப்பேன். 51 00:08:52,741 --> 00:08:56,453 நீ தரையிறங்கியதும் உனக்கு தகவல் இருக்கும். பயணம் இனிதாகுக! 52 00:09:06,338 --> 00:09:07,381 நீ தயாரா? 53 00:09:29,695 --> 00:09:33,532 மார்கஸ் போய்கின் 54 00:10:07,107 --> 00:10:10,235 -அதில என்ன தெரியுது? -முழு மேகஸீனை இறக்குறான். 55 00:10:10,319 --> 00:10:11,945 அட, அது தேவையில்லாத வேலை. 56 00:10:12,070 --> 00:10:15,407 மருத்துவ அறிக்கை மூளைக் கட்டி என்கிறது. அனேகமா தேறமாட்டான். 57 00:10:15,490 --> 00:10:18,869 கிளாஸ் தோட்டாக்களை சிதறடிக்கும்னு தெரியும். அவருக்கு ஆள் சாகனும். 58 00:10:19,036 --> 00:10:20,912 தடுமாற்றம் அல்ல, அது அனுபவம். 59 00:10:20,996 --> 00:10:22,372 ஆம், அவன் அனுபவசாலி. 60 00:10:22,831 --> 00:10:24,416 எட்டு போர் தொடுத்தல்கள். 61 00:10:24,916 --> 00:10:26,960 ஈராக், ஆஃப்கானிஸ்தான், லிபியா. 62 00:10:27,336 --> 00:10:29,963 வெள்ளி நட்சத்திரம், பல தாமிர நட்சத்திரங்கள். 63 00:10:30,505 --> 00:10:33,592 ஒரு படை பாராட்டு பதக்கம் கூட, வி சின்னத்துடன். 64 00:10:37,387 --> 00:10:41,058 ரொம்ப ஒன்றிடாதே. மேலே அதிகாரிகள் ஏற்கனவே கண்காணிக்கிறாங்க. 65 00:10:41,558 --> 00:10:44,102 -பெரிய வழக்குன்னா லாஸ் ஏஞ்சலீஸில்தான். -ஆம். 66 00:10:44,853 --> 00:10:46,980 சரி, ராம்ஸே அடிபணியாமலிருக்கலாம். 67 00:10:47,481 --> 00:10:49,483 அடிபணியாத ஒரே தருணம் சொல்லேன். 68 00:10:57,199 --> 00:10:59,284 பாஸ், நேரத்தை வீணாக்கறே. 69 00:10:59,368 --> 00:11:01,578 இடைவிடாத நாட்டம், மேக். இடைவிடாத நாட்டம். 70 00:11:01,703 --> 00:11:03,163 எனக்கு புரியுது, டெர்ரி. 71 00:11:03,413 --> 00:11:06,416 பார்க்கறது மட்டும் போதாது, பத்திரிகைல செய்தி வரணும். 72 00:11:06,500 --> 00:11:07,667 ஒலி பெருக்கில போடு. 73 00:11:08,043 --> 00:11:11,129 சொன்னபடி செய்ய எனக்கு மகிழ்ச்சி... மகிழ்ச்சி. ஹேய். 74 00:11:11,755 --> 00:11:13,799 என்னோடு இங்கே, ஆன்டனி லாயுன், 75 00:11:13,882 --> 00:11:17,260 துரத்தும் அதிரடிப் படையின் தலைமை ஏற்றார். 76 00:11:17,511 --> 00:11:19,221 டோனி தெரியும். எப்படி போகுது? 77 00:11:19,304 --> 00:11:22,391 சரியில்ல, சார். ரகசியமா எதையோ பறிப்பீங்கனு தெரியுது. 78 00:11:22,474 --> 00:11:26,603 யாரும் யாரிடமும் பறிக்கல. சரியா? எங்களிடம் சடலம் இருக்கு. தயாரா இருக்கோம். 79 00:11:26,686 --> 00:11:30,482 நீ சிகாகோல இருந்தப்ப, மில்வாகீயை பெரிசா சாதிக்க விட்டாயா? 80 00:11:30,565 --> 00:11:32,943 மில்வாகீக்கு அவங்க என்ன செய்றாங்கன்னே தெரியாது. 81 00:11:33,026 --> 00:11:35,320 -நல்லது, டோனி. -எங்களிடம் ஐந்து சடலங்கள். 82 00:11:35,445 --> 00:11:37,114 எங்க வழக்கு என்று அதிலே புரியுது. 83 00:11:37,864 --> 00:11:41,410 இல்ல தலைமையகத்தை கூப்பிடலாமா? வாஷிங்டன் என்ன சொல்லுது பார்ப்போமே? 84 00:11:45,914 --> 00:11:49,126 டெப்டுலா, உயிர்வாழும் அனைத்து குடும்ப உறுப்பினர், 85 00:11:49,376 --> 00:11:52,462 கூட்டாளிகளது விலாசம் தேவை. 20 வருட சேவை. பெரிய பட்டியல். 86 00:11:52,546 --> 00:11:55,257 -இதோ தர்றேன். -ஜூனியர், சிசிடிவி பதிவை கொடு. 87 00:11:55,549 --> 00:11:59,594 -முக அடையாளத்தை ஆய்வு செய்ய. -நமக்கு ஏற்கனவே அடையாளங்கள் தெரியும். 88 00:11:59,678 --> 00:12:01,972 எனக்கு ஜேம்ஸ் ரீஸ் பத்தி கவலை இல்லை. 89 00:12:02,055 --> 00:12:05,058 கார்ல அவனோட இருந்தது யார்னு தெரியணும். 90 00:12:07,644 --> 00:12:11,982 கேப்ஸ்டோன் குழுமத்தில் எங்கோ ஆர்-டி-4895ன்ற திட்டம் இருக்கு. 91 00:12:12,065 --> 00:12:15,277 அவங்க நெட்வொர்க் பெரியது. 100க்கு மேல் ரகசிய முதலீடுகள். 92 00:12:15,652 --> 00:12:19,656 27க்கு குறையாதவை, பிரச்சினை பகுதிகளில், பென்டகனின் நலனுக்கான 93 00:12:19,781 --> 00:12:21,992 நேரடியான, அல்லது கூட்டு தலையீடுள்ளவை. 94 00:12:22,075 --> 00:12:25,370 பிளாடூன் குடும்பத்தினரது உடல்நிலை ஆவணங்கள் கிடைத்தன. போதாது. 95 00:12:25,579 --> 00:12:27,247 ஆய்வு செய்யணும். தகவலறிய உரிமை. 96 00:12:27,414 --> 00:12:28,582 நாங்கள் ஏன்? 97 00:12:28,832 --> 00:12:30,876 இது ஒரு சந்ததியின் வரலாறு. 98 00:12:31,376 --> 00:12:35,255 ஒரு இணையப் பக்கமோ அல்லது ஒரு பெட்டிச் செய்தியோ இதற்குப் போதாது. 99 00:12:35,589 --> 00:12:38,884 -உன் துப்புகளை அனுப்பு, பார்க்கிறேன். -உன் இன்பாக்ஸை பார். 100 00:12:39,342 --> 00:12:41,136 அடாவடி நீ, ஒண்ணு சொல்லட்டுமா? 101 00:12:42,596 --> 00:12:45,515 போகணும். நேதனிடம் இந்த துப்புகள் வேணும்னு சொல். 102 00:12:45,599 --> 00:12:46,683 கேட்டி. 103 00:13:01,531 --> 00:13:02,532 ஹலோ? 104 00:13:06,077 --> 00:13:07,829 -ப்ரையன்? -கேட்டி. 105 00:13:08,163 --> 00:13:11,875 ஹேய், பசங்களா! ஹேய், டெப்! 106 00:13:11,958 --> 00:13:14,794 -கேட்டி! -மன்னி, தாழ்ப்பாளை பூட்ட முடியல. 107 00:13:14,878 --> 00:13:16,755 இங்க என்ன பண்றே? 108 00:13:16,880 --> 00:13:18,840 அட, என் மின்னஞ்சல் கிடைக்கலையா? 109 00:13:18,924 --> 00:13:23,678 சிரியாவிலருந்து திரும்பிட்டேன். இதுதான் மீண்டும் நுழைய நல்ல இடம்னு நினைச்சேன். 110 00:13:25,514 --> 00:13:27,140 சரி, அதான்... 111 00:13:28,391 --> 00:13:30,352 நீ அடுத்த வாரம் சொன்னேன்னு நினைச்சேன். 112 00:13:30,519 --> 00:13:32,979 அட, என்ன ஆச்சரியம். பழசையெல்லாம் பேசலாம். 113 00:13:33,063 --> 00:13:36,191 குழந்தையோடு விளையாடலாம். அவன் எழுந்ததும். 114 00:13:36,525 --> 00:13:39,027 அய்யோ, அழுக்கா இருக்கேன். குளிக்கவேயில்ல. 115 00:13:39,110 --> 00:13:42,155 இன்னும் உடை மாத்தல. ஒரு நொடி. இதோ வந்துடறேன். 116 00:13:43,156 --> 00:13:44,074 சரி. 117 00:13:58,046 --> 00:14:01,758 பாருங்க, நான் பொய் சொல்லப் போவதில்லை. நிலைமை நல்லா இல்ல. 118 00:14:02,300 --> 00:14:05,595 பென்டகனின் நிதித் திட்டம் தீவிரமா மாறுது, 119 00:14:05,720 --> 00:14:08,682 எல்லா துறைகளிலும், நிரவுதல் அல்லது செலவு குறைப்பு. 120 00:14:09,349 --> 00:14:14,062 இப்படி போகுமானால், நம் ஒப்பந்தம் 18 மாதத்தில் புதுப்பிக்காம காலாவதியாகும். 121 00:14:15,522 --> 00:14:19,192 எலாயஸ் ரைபெர்க் விஜயத்தை தள்ளிப்போட்ட நிலையில், நம்மிடமுள்ள 122 00:14:19,276 --> 00:14:21,611 முதலீட்டை பிரச்சினையா கருதக் கூடும். 123 00:14:22,946 --> 00:14:27,409 இருந்தாலும், நியூபெல்லம் நிர்வாகம், பொறுமையா அந்த விற்பனைக்கு முனையணும்னு 124 00:14:27,993 --> 00:14:29,536 கேப்ஸ்டோன் ஆலோசனை சொல்லுது. 125 00:14:30,620 --> 00:14:32,789 என்னை தெரியும், என்னை பத்தி தெரியும். 126 00:14:33,123 --> 00:14:35,834 நான் எதையும் சமாளிபேன்னா, சமாளித்ததா அர்த்தம். 127 00:14:35,917 --> 00:14:39,462 சான்டா பார்பரா எவ்ளோ சங்கடமாச்சுன்னு ஏதும் தெரியுமா? 128 00:14:40,046 --> 00:14:41,673 உங்க துணைத்தலைவர் உடல், கையில் 129 00:14:41,756 --> 00:14:44,426 போதை ஊசியுடன் போலீஸ் கொண்டு போனதை பார்த்த போது. 130 00:14:44,509 --> 00:14:46,970 ரைபெர்க் அங்கிருந்தார், ஸ்டீவ். பார்த்தார். 131 00:14:47,512 --> 00:14:52,392 உங்க திறமை மீதான நம்பிக்கை தளர்ந்திருந்தா எங்களை கோவிச்சுக்கக் கூடாது. 132 00:14:52,475 --> 00:14:55,020 எலாயஸ் விலகணும்னா, சொல்லுவார். பிரயோஜனமில்லை. 133 00:14:55,103 --> 00:14:59,107 வாஷிங்டனை பொறுத்தவரை, வேகமா இயங்குவது, ஆனா அனுமானிக்கக் கூடியது. 134 00:14:59,316 --> 00:15:01,359 வெற்றி பெற காய் நகர்த்த தெரியணும். 135 00:15:01,443 --> 00:15:03,778 நியூபெல்லத்துக்கு போர் வணிகமா இருந்ததில்ல. 136 00:15:03,862 --> 00:15:06,573 நீங்க ஆதரித்ததால் உங்களோடு இறங்கினேன், 137 00:15:06,656 --> 00:15:11,494 எனக்குத் தேவையானப்போ, நீங்க விற்க முயன்ற போது, வாயை மூடிட்டுருந்தேன், ஏன்னா... 138 00:15:12,662 --> 00:15:16,541 லாபம் அதிகமாயிருந்தது, ஆனால், என் வணிகத்தை சில்லறைக்கு 139 00:15:16,916 --> 00:15:18,293 விற்க விருப்பமில்லை. 140 00:15:18,376 --> 00:15:22,797 கிராக்கி இல்லன்னா உங்க தயாரிப்புகளை ஊக்கப் படுத்தமாட்டேன். 141 00:15:23,173 --> 00:15:25,300 எங்களுக்கு எப்போதும் கிராக்கி உண்டு. 142 00:15:27,260 --> 00:15:28,470 அதை கண்டுபிடிப்பேன். 143 00:15:28,553 --> 00:15:31,431 ஹார்ட்லேயின் வரவு செலவு துணைக்குழுவுக்கு வரும். 144 00:15:31,556 --> 00:15:34,601 அதுவரை துணைத் தலைவர் தேர்வு நலமாகட்டும். 145 00:16:18,770 --> 00:16:22,148 பெல்டை போடு, செல்லம். நாம் இறங்கப் போறோம். 146 00:17:18,538 --> 00:17:22,584 ஹேய், கார்லோஸ், அலெக்ஸ். எப்படி இருக்கீங்க பசங்களா? 147 00:17:24,961 --> 00:17:26,838 முதல் பையை எடுத்துக்கறேன். 148 00:17:30,800 --> 00:17:31,843 நன்றி. 149 00:17:34,012 --> 00:17:37,474 -நீ மறுபடி வந்தது அருமை, மகனே. -வருவதே அருமை. ஹலோ பாவொலா. 150 00:17:37,557 --> 00:17:39,601 -பார்த்ததில் சந்தோஷம். -எனக்கும். 151 00:17:42,729 --> 00:17:44,022 பயணம் எப்படி இருந்தது? 152 00:17:44,230 --> 00:17:47,233 பிரமாதம். தெளிவான வானம், மித பானங்கள். 153 00:17:47,442 --> 00:17:51,196 நம்ப வேணாம். போரின்போது பறப்பது போலவேதான் இப்பவும் பறக்கிறாள். 154 00:17:51,696 --> 00:17:54,824 போகலாம், பார்ட்டி மக்களே. நீச்சல் குளவீடு எனக்கு. 155 00:17:54,908 --> 00:17:56,826 -போவோம். -போகலாம். 156 00:18:04,959 --> 00:18:08,087 சிக்கலில் இருக்கும்போது உன் அப்பா பாஹா வந்தார். 157 00:18:09,214 --> 00:18:11,257 அவரும் இதைப் போலத்தான் பார்த்தார். 158 00:18:12,634 --> 00:18:13,676 அப்புறம்? 159 00:18:16,346 --> 00:18:19,015 ஒரு புத்துணர்வான தேவையை உணர்ந்தார். 160 00:18:19,974 --> 00:18:21,142 நீயும் அப்படி ஆவாய். 161 00:18:23,561 --> 00:18:25,063 நன்றி. சரி. 162 00:18:27,065 --> 00:18:29,984 லாஸ் ஆஞ்சலஸ் சம்பவம், கேமராக்களில் பதிவானது. 163 00:18:30,068 --> 00:18:31,945 அந்த என்சிஐஎஸ் முகவர் இறந்தது? 164 00:18:32,111 --> 00:18:33,947 கட்டட ஆள், ரீஸை அடையாளம் காட்டினான். 165 00:18:34,072 --> 00:18:36,366 அவன் வேற பெயரில் வந்ததா சொன்னான். 166 00:18:37,742 --> 00:18:40,912 ரீஸ், அவன் குடும்பம் பத்தி ஏதும் சந்தேகம் இருந்தா, 167 00:18:41,246 --> 00:18:42,539 இப்ப அது தீர்ந்தது. 168 00:18:42,747 --> 00:18:44,290 தாமதப் படுத்தினோம், ரிச். 169 00:18:46,876 --> 00:18:48,461 -செனடர் ப்ரையர், மேடம். -சொல். 170 00:18:48,920 --> 00:18:50,922 குழுவில், விலகியோரை சந்தித்தோம். 171 00:18:51,089 --> 00:18:55,134 -யார்? -ஹோல்ப்ரூக், கன்வைசர் கூட. 172 00:18:55,593 --> 00:18:57,095 யாரோ அவங்கள மாத்தினாங்களா? 173 00:18:57,345 --> 00:19:00,098 யாரா இருந்தாலும் கமுக்கமா இருக்க பார்க்கறாங்க. 174 00:19:00,181 --> 00:19:03,768 உங்க புதிய நிதித்திட்டம், பண வரவை ஏராளமா குறைக்கும். 175 00:19:05,019 --> 00:19:07,021 இது நம்மை எங்கு விட்டுச் செல்லும்? 176 00:19:07,772 --> 00:19:09,399 ஏற்கனவே நமக்கு லாபமே இல்லை. 177 00:19:09,941 --> 00:19:13,027 ஒரு ஓட்டு இழந்தால் கூட, உங்க லாபத்தை மறந்திட வேண்டும். 178 00:19:13,486 --> 00:19:15,196 செலவின மீட்சி மிகக் குறைவு. 179 00:19:15,655 --> 00:19:18,491 இந்த அமைப்பில, நாம் ஒரு தீர்மானத்தை முன்னெடுத்து, 180 00:19:18,575 --> 00:19:21,160 அது சட்ட சபையிலருந்து வரும்போது, வீணடிப்போம். 181 00:19:21,244 --> 00:19:23,037 ஜேம்ஸ் ரீஸ் நல்லவனா இருந்தான். 182 00:19:23,162 --> 00:19:27,333 முதிர்ந்த வாழ்வை அர்ப்பணித்தான், சமரசம் செய்றவனா திரும்பினான். 183 00:19:27,917 --> 00:19:31,004 லாபத்தில் எந்த ஒரு விடுவும் கிடைக்காது. 184 00:19:31,212 --> 00:19:35,300 நமக்கு ஒரு மாற்றம் தேவை, நிரவும் பேரமல்ல, நமக்கு தேவையானது... 185 00:19:43,641 --> 00:19:45,226 எனக்கு விசாரணையை ஒளிபரப்பணும். 186 00:19:45,393 --> 00:19:48,104 மேடம், இது ஒரு குழுவின் ரகசியக் கூட்டம். 187 00:19:48,187 --> 00:19:50,773 அப்ப, இறுதி ஓட்டில் கிளப்பி விடணும். 188 00:19:51,399 --> 00:19:53,902 சிறப்பு நடவடிக்கையை விட, பெரும் புள்ளிகள் 189 00:19:53,985 --> 00:19:57,488 முக்கியமானவர்கள் என்பதை இந்த செனடர்கள், எடுத்து சொல்லணும். 190 00:20:00,491 --> 00:20:02,994 அதை அவர்கள் எடுத்து சொல்வதை நான் பார்க்கணும். 191 00:20:20,845 --> 00:20:23,306 -ஆமென். -ஆமென் 192 00:20:24,349 --> 00:20:28,770 மார்கோ, பாவொலா, நன்றி. இதில் நீங்க முடிந்ததுக்கும் மீறி செய்துட்டீங்க. 193 00:20:28,853 --> 00:20:30,939 நாளை கறி உணவு இருக்கு. 194 00:20:31,564 --> 00:20:35,151 சுடும் ரீஸ், பண்ணைக்கு வந்ததுக்கு, அவனுக்கு வேலை கொடுக்கணும். 195 00:20:35,234 --> 00:20:37,695 இல்ல. செம்மறி ஆட்டை சுட நான் தேவையில்ல. 196 00:20:37,779 --> 00:20:41,491 தூர இலக்கை சுடுவது பத்தி, பள்ளியை விட, மார்கோவிடம் நிறைய கற்றதா 197 00:20:41,574 --> 00:20:42,742 என் அப்பா சொல்வார். 198 00:20:42,825 --> 00:20:45,453 எப்பவும் தாமஸ் சும்மாவே அதிகமாக புகழ்வார். 199 00:20:45,536 --> 00:20:48,373 நாம் அதே டாம் ரீஸ் பத்திதான் பேசறோமா? 200 00:20:50,041 --> 00:20:52,543 இங்கே எத்தனை முறை வந்தாலும், 201 00:20:52,627 --> 00:20:54,796 எவ்ளோ அழகா இருக்குன்னு மெய்மறப்பேன். 202 00:20:55,004 --> 00:20:59,884 போன முறை இங்கே வந்தப்போ, என்னோட மணநாள்னு நினைக்கிறேன். 203 00:21:05,473 --> 00:21:09,811 பெண்கள், மரத்தின் கீழ், பாட்டில் நிறைய மின்மினிப் பூச்சிகளை பிடித்தனர். 204 00:21:12,146 --> 00:21:16,109 பார். இந்தப் பண்ணை எங்களுக்கு புனிதமானது. 205 00:21:17,110 --> 00:21:20,405 குழப்பங்களிலிருந்து தள்ளி இருக்கும் ஒரு சரணாலயம். 206 00:21:29,038 --> 00:21:33,001 திரு. ரீஸ், இறுதிச் சடங்குக்கு போகணும்னு அம்மாவிடம் சொன்னேன். 207 00:21:33,126 --> 00:21:34,168 அன்டோனியா. 208 00:21:35,128 --> 00:21:38,589 லூசிக்கு சுகமில்லைனு தெரிந்திருந்தா கடிதம் எழுதியிருப்பேன். 209 00:21:40,717 --> 00:21:44,595 அது அவளுக்கு பிடிச்சிருக்கும், செல்லம். ரொம்ப பிடிச்சிருக்கும். 210 00:21:49,434 --> 00:21:51,853 ஜேம்ஸ், நான் வருந்தறேன். 211 00:21:52,812 --> 00:21:53,855 இருக்கட்டும். 212 00:21:55,231 --> 00:22:00,194 அருந்தவும், உண்ணவும் தந்த உபசரிப்பாளருக்கு மனமார்ந்த நன்றி. 213 00:22:20,840 --> 00:22:22,675 ஆக, இதுதான் கேள்வி. 214 00:22:23,134 --> 00:22:27,013 உன்னை பாலின் பண்ணையிலருந்து இங்கு பெயர்க்க என்ன செய்யணும் நான்? 215 00:22:29,640 --> 00:22:32,018 எனக்கு தெரியாது. முதலாளிகளை பொறுத்தவரை, 216 00:22:32,101 --> 00:22:34,604 அவர்களிடம் பிடித்தது, தலைகாட்டாம இருப்பது. 217 00:22:38,024 --> 00:22:40,943 அட! அழகா இருக்கின்றன, அல்லவா? 218 00:22:41,027 --> 00:22:42,987 அம்மா, அப்பாவிடம் காட்டுவோம். 219 00:22:43,529 --> 00:22:45,615 ...வணிகத்துக்கு நான் அவ்ளோ அலையல. 220 00:22:45,698 --> 00:22:48,117 அதோடு, அவங்களை சுலமா வெல்லலாம். 221 00:22:48,618 --> 00:22:50,203 அது கேட்க நல்லா இருக்கு. 222 00:23:06,302 --> 00:23:07,303 ரீஸ் செய்தி 223 00:23:08,221 --> 00:23:13,768 ஆர்டி4895 பற்றி ஏதாவது? 224 00:23:21,359 --> 00:23:24,487 பிளாடூன்ல பலருக்கு மூளைக்கட்டியாம். விசாரணை முடியல. 225 00:23:39,669 --> 00:23:40,545 ஹேய். 226 00:23:41,170 --> 00:23:45,341 ஹேய், சுத்தமாக்க உதவறேன். சூரிய அஸ்தமனத்தை பார்த்துட்டிருந்தேன். 227 00:23:48,219 --> 00:23:49,637 உனக்கு எவ்ளோ பிரச்சனை? 228 00:23:49,720 --> 00:23:51,430 கஷடமில்லை. ப்ரையன், வா. 229 00:23:51,681 --> 00:23:53,266 மாடில உன் ஆய்வுகளை பார்த்தேன். 230 00:23:54,851 --> 00:23:59,480 அது ஒரு கதை. அவ்ளோதான். ஓரிரு நாட்கள் போதும். 231 00:24:15,037 --> 00:24:21,043 எங்கே இருக்க? 232 00:24:27,633 --> 00:24:29,468 ஒரு பானம் விரும்புவன்னு நினைத்தேன். 233 00:24:32,346 --> 00:24:33,931 எப்பவும் மனதை படிப்பீங்களே. 234 00:24:46,694 --> 00:24:47,820 பென் பேசினான். 235 00:24:50,239 --> 00:24:53,910 உன் ஆளின் ஃபோன் மூலம் வந்த பணம், என்செனாடா வங்கியிலருந்து. 236 00:24:53,993 --> 00:24:55,661 எங்க ஆட்கள் விசாரிக்கிறாங்க. 237 00:25:04,086 --> 00:25:05,922 நான் எப்போதும் தீராம கேட்பது... 238 00:25:09,091 --> 00:25:13,012 "கடவுளின் நோக்கம் என்ன? கடவுளின் திட்டம் என்ன? 239 00:25:13,304 --> 00:25:18,976 அவருடைய எந்த தீர்க்கதரிசனத்தால், நீ இதைச் செய்யறே?" 240 00:25:21,854 --> 00:25:26,776 ஜாப் கதையை பத்தி நினைக்கும் போது, ஆச்சர்யப்பட்டேன், ஒருவேளை, 241 00:25:28,277 --> 00:25:31,572 உன்னை நிலைகுலைய வைக்க முடியுமான்னு, 242 00:25:33,241 --> 00:25:35,076 சாத்தானோட ஏதோ பந்தயம் வைத்தாரோ. 243 00:25:43,876 --> 00:25:45,336 ஜாபை வீழ்த்தவே முடியல. 244 00:25:50,091 --> 00:25:52,635 அவங்க என்னை ரொம்பவே நெருங்கிட்டாங்க. 245 00:26:37,847 --> 00:26:42,101 லூசி, இரு! லூசி, இங்கே திரும்ப வந்துடு! 246 00:26:48,274 --> 00:26:50,609 உனக்கு என்செனாடால வணிகம்னு தெரியும். 247 00:26:50,693 --> 00:26:54,363 அதாவது, அந்த கணக்கு இருந்தா போதும், மத்தது தானா நடக்கும். 248 00:26:54,447 --> 00:26:55,614 ஜேம்ஸ். 249 00:26:56,532 --> 00:26:58,617 ஹலோ. பளிச்சுனு இருக்கியே. அட. 250 00:26:59,160 --> 00:27:03,164 ராத்திரி உனக்கு ரொம்ப களைப்பா ஆகிவிட்டது போலிருக்கே? 251 00:27:03,414 --> 00:27:04,790 ஹேய், எப்போ வந்தே? 252 00:27:05,374 --> 00:27:07,710 30 நிமிடம் முன். ரெண்டு நாள் ஓய்வு. 253 00:27:08,210 --> 00:27:12,340 உன்னை தனி ஆளா இவனை முடிக்க விடுவேன்னு நினைச்சியா, என்ன? 254 00:27:12,506 --> 00:27:13,507 முடிப்பதா? 255 00:27:13,758 --> 00:27:15,384 மார்கோ விஷயங்களை சொன்னான். 256 00:27:17,053 --> 00:27:21,390 என் பாதுகாப்பு அணி தலைவன், லாரென், லூசி கொலையாளியை அடையாளம் கண்டதா தோணுது. 257 00:27:27,396 --> 00:27:29,565 -வணக்கம். -வணக்கம். 258 00:27:32,026 --> 00:27:34,862 உன் காரை எடுத்துப் போகவா? காஃபி வாங்கிவர. 259 00:27:35,154 --> 00:27:37,865 நான் போறேன். ப்ரையன், டெட்டி கடற்கரைல இருக்காங்க. 260 00:27:38,157 --> 00:27:40,117 -அவங்களோட இரு. -இது உங்க விடுமுறை. 261 00:27:40,201 --> 00:27:42,370 என்ன வேணும்னு சொல். எனது பரிசு. 262 00:27:42,453 --> 00:27:45,289 இரு வெள்ளை காஃபி. சாவி வாசல் கதவருகில் இருக்கு. 263 00:27:45,373 --> 00:27:46,415 நன்றி. 264 00:28:04,183 --> 00:28:05,434 கேட்டி புரனெக்? 265 00:28:17,696 --> 00:28:19,490 உங்களைபத்தி படிச்சேன், புரனெக். 266 00:28:20,616 --> 00:28:23,744 போர்ட்லண்ட், கெனோஷா, ஹுபே மாநிலம்... 267 00:28:24,745 --> 00:28:27,123 வலிய வம்பை தேடிக் கொள்ளும் சுபாவம். 268 00:28:27,206 --> 00:28:30,042 ஆம், ஆழமா பார்க்க அதுதான் சிறந்த வழி. 269 00:28:31,627 --> 00:28:32,628 நல்லா பேசறீங்க. 270 00:28:34,713 --> 00:28:36,006 ஜேம்ஸ் ரீஸ் எங்கே? 271 00:28:36,799 --> 00:28:38,509 -தெரியாது. -நான் நம்பல. 272 00:28:38,592 --> 00:28:39,593 இருக்கட்டும். 273 00:28:40,928 --> 00:28:44,265 உங்க வேலையை எல்லாம் பார்த்தா, சாமர்த்தியசாலியா தெரியுது. 274 00:28:44,432 --> 00:28:46,684 அப்போ, நீங்க ஒரு கொலைக்கு துணையாவதேன்? 275 00:28:46,767 --> 00:28:48,727 அது கொலையல்ல, தற்காப்பு. 276 00:28:48,811 --> 00:28:50,396 லாஸ் ஆஞ்சலஸ் நிகழ்ச்சியல்ல. 277 00:28:50,479 --> 00:28:52,690 ஜேம்ஸ் ரீஸ் தன் குடும்பத்தினரை கொல்லல. 278 00:28:53,691 --> 00:28:55,526 சால் அக்னனிடம் பேச வேண்டியதுதானே? 279 00:28:55,609 --> 00:29:00,030 கேப்ஸ்டோன், கடற்படை சீல்ஸ் வீரர்களுக்கு மூளைக் கட்டி தந்தது எப்படினு விசாரிங்க. 280 00:29:00,156 --> 00:29:01,490 அதுதான் உண்மைக் கதை. 281 00:29:02,032 --> 00:29:05,286 சால் அக்னனிடம் பேச ஆசைதான். செய்வேன். ஆனா செத்துட்டான். 282 00:29:06,829 --> 00:29:08,038 சில முறை அழைத்தேன். 283 00:29:08,456 --> 00:29:11,000 அக்னன் சான்டா பார்பரால, போதை அதிகமாகி, நீங்க 284 00:29:11,292 --> 00:29:13,294 ரீஸுடன் லாஸ் ஆஞ்சலஸ்ல இருந்த மறுநாள். 285 00:29:13,711 --> 00:29:15,588 கையில் ஊசியோட செத்து கிடந்தான். 286 00:29:15,671 --> 00:29:19,091 போதை வழக்கமில்லாதவன். அது ஆர்வத்தை தூண்டுது, இல்லையா? 287 00:29:20,509 --> 00:29:22,511 அதோட, என்சிஐஎஸ் ஜாஷ் ஹோல்டர், 288 00:29:23,179 --> 00:29:25,598 இன்னொருத்தரின் துப்பாக்கியால் சுடப்பட்டு, 289 00:29:25,681 --> 00:29:29,894 ரீஸ் தப்பியோடிய முந்தைய இரவு, இறந்தான், அதுவும் அசாதாரணமானது. 290 00:29:40,696 --> 00:29:42,865 அருமையான தகவல் கிடைத்தது. புரியுது. 291 00:29:46,118 --> 00:29:49,205 ஆனா, மேலும் யாரும் சாவதை விரும்பமாட்டீங்கதானே. 292 00:29:50,539 --> 00:29:54,335 கொலைக்கு உடந்தை என்ற குற்றத்துக்கு ஆளாக விரும்பமாட்டீங்க. 293 00:30:03,344 --> 00:30:05,804 அவர் எங்க இருக்கார்னு தெரியாது. 294 00:30:08,766 --> 00:30:13,020 ஆனா... எனக்கு தெரிய வந்தா, உங்களுக்கு சொல்றேன். 295 00:30:14,480 --> 00:30:16,023 அப்படி சொல்லுங்க, புரனெக். 296 00:30:25,658 --> 00:30:27,117 குடும்பத்தோடு மகிழுங்க. 297 00:31:17,084 --> 00:31:18,460 உங்களுக்கு என்ன வேணும்? 298 00:31:26,510 --> 00:31:27,845 என்ன இதெல்லாம்? 299 00:31:29,430 --> 00:31:30,347 நாம் பேசுவோம். 300 00:31:31,307 --> 00:31:33,767 மெஸ்ஸீன்ஸ் போர் பத்தி தெரியுமா? 301 00:31:34,226 --> 00:31:35,394 தெரியாது. 302 00:31:35,811 --> 00:31:39,732 முதல் உலகப் போர். பிரிட்டன், ஜெர்மனிக்கு ஃப்ளாண்டர்ஸ்ல இழுபறி. 303 00:31:40,858 --> 00:31:45,029 ஜெனரல் ப்ளூமர்னு ஒருவர் பிரிட்டன் அணியில், ரொம்ப பொறுமையானவர். 304 00:31:45,362 --> 00:31:49,783 எதிரி இடத்தின் கீழே, 8000 மீட்டர் நீளமான சுரங்கத்தை அஞ்சு மாதமா தோண்டினார். 305 00:31:49,867 --> 00:31:54,997 272 கிலோ வெடிகளை அதில் நிரப்புகிறார், பிறகு ஒரு நாள், டமால்! 306 00:31:56,915 --> 00:32:00,127 வெடிப்பு 10,000 ஜெர்மானியரை கொல்லுது. இழுபறி முடிந்தது. 307 00:32:02,838 --> 00:32:04,798 ஜெர்மானியனுக்கு எது தாக்கியதுனே தெரியல. 308 00:32:04,882 --> 00:32:08,052 அது, சுவாரசியம்தான். நாம் இங்க என்ன செய்யறோம், ஸ்டீவ்? 309 00:32:09,011 --> 00:32:11,764 எதிரிங்க இடத்துக்குள்ளே போக கஷ்டப் பட்டிருக்கேன். 310 00:32:12,806 --> 00:32:13,807 உண்மை தான். 311 00:32:14,391 --> 00:32:17,603 இன்னும் ஒரு வருடத்தில, ஹார்ட்லே, ஓய்வு பெறுவாள். 312 00:32:17,686 --> 00:32:19,104 அவளை நினைக்க யாருமில்ல. 313 00:32:19,271 --> 00:32:23,942 இப்ப போய், அவளை பெரிய ஆளாக்கிடணுமா, அல்லது 314 00:32:24,568 --> 00:32:25,903 வாரிசாக்கணுமானு யோசி. 315 00:32:26,362 --> 00:32:28,864 நமது பேரம் வெறும் தகவல்களுக்காக. 316 00:32:28,947 --> 00:32:30,074 அது சரிதான். 317 00:32:30,949 --> 00:32:34,203 என் முதலீட்டை காக்க, பேரத்தை மாத்தறேன், புரியுதா? 318 00:32:34,286 --> 00:32:36,997 -நிதித் திட்டம், வணிகத் தடை. -ஓட்டுகள் முடிவாகின. 319 00:32:37,164 --> 00:32:38,207 ப்ரையர் அல்ல. 320 00:32:41,377 --> 00:32:45,589 ப்ரையர். ப்ரையர் தான் இந்த இரட்டை சீரமைப்பை கோருபவன். 321 00:32:45,881 --> 00:32:47,633 நீ அவன் போக்கை மாத்த வேணாம். 322 00:32:49,718 --> 00:32:51,261 அவனை என்னிடம் விட்டுடு. 323 00:32:59,395 --> 00:33:04,817 இது உனக்கு ரொம்ப நல்லதாகும் ரிச்சர்ட். உனக்கு இன்னும் தெரியல. 324 00:33:23,711 --> 00:33:26,714 நவாஹாஸும் அவன் கும்பலும், பல கார்டல்களின் அடியாட்கள். 325 00:33:26,797 --> 00:33:30,676 கொடூரமான, ஆத்திரம் மிக்கவன். தேவையான காசு தந்தா எவரையும் கொல்வான். 326 00:33:30,926 --> 00:33:32,428 இவன்தான்னு நல்லா தெரியுமா? 327 00:33:32,511 --> 00:33:34,680 எங்க தொடர்புகள்படி, மூணு வாரம் முன், 328 00:33:34,763 --> 00:33:38,475 வளாகத்திலருந்து கையாளோட போனான். நவாஹாஸ் மட்டும் திரும்பினான். 329 00:33:38,934 --> 00:33:41,270 இடது கையில் ஒரு காயத்துடன். 330 00:33:48,569 --> 00:33:49,570 இது அவன்தான். 331 00:33:51,155 --> 00:33:56,910 நவாஹாஸும், ஆட்களும் அடியாட்களை என்செனாடா வெளியே பழைய தொழிற்சாலைல பயிற்றுவிப்பர். 332 00:33:56,994 --> 00:34:00,122 -எத்தனை பேர்? -சில சமயம் 12 பேர். சில சமயம் அதிகமா. 333 00:34:00,831 --> 00:34:02,875 பயிற்சி பெரும் பசங்கள் தனி. 334 00:34:02,958 --> 00:34:06,503 நமக்கு தேவையான பாதுகாப்புக்காக ஒரு புயல் வருது. 335 00:34:06,587 --> 00:34:10,132 இங்குள்ள குன்றுகள், 200 மீட்டர் உயர பார்வை தர முடியும். 336 00:34:10,549 --> 00:34:14,052 தொடர், காத்திரு. சுடுவதற்கு ரொம்ப சுலபமா இருக்கும். 337 00:34:14,136 --> 00:34:15,262 இல்லை. 338 00:34:15,679 --> 00:34:18,348 -ஜேம்ஸ்? -இல்லை, சுடுவது சரியல்ல. 339 00:34:18,474 --> 00:34:20,058 தெளிவா பார்க்கலாமே. 340 00:34:20,142 --> 00:34:22,227 ஆரோன், முன்னாள் சிறப்பு அதிரடி வீரன். 341 00:34:23,437 --> 00:34:24,813 அவன் உத்திகள் சிறப்பானவை. 342 00:34:24,897 --> 00:34:28,150 உத்திகளை சந்தேகிக்கல, ஆரோன். உத்தி பிரச்சினை இல்ல இது. 343 00:34:28,233 --> 00:34:30,360 நாம் போய் நிக்கணும். பார்க்கணும். 344 00:34:30,694 --> 00:34:33,405 நேருக்கு நேர் மோதணும். அப்படிதான் செய்யணும். 345 00:34:36,492 --> 00:34:38,494 ஹேய், தனியா ஒரு நொடி பேசுவோமா? 346 00:34:46,543 --> 00:34:48,045 கவனி, எனக்கு புரியுது. 347 00:34:48,504 --> 00:34:51,715 அவன் ரத்தத்தை சிந்த உன்னை மாதிரியே எனக்கும் வெறியுண்டு. 348 00:34:52,591 --> 00:34:53,842 ஆனா, இவன்? 349 00:34:54,635 --> 00:34:57,221 இவன் பெரிய விஷயத்தை நோக்கி கூட்டி செல்லல. 350 00:34:57,638 --> 00:34:59,014 ஸ்டீவ் ஹார்ன் தான். 351 00:34:59,556 --> 00:35:01,892 சுடு. வெற்றிகரமா கிளம்பு. 352 00:35:04,311 --> 00:35:08,482 அவங்களை கொல்ல வந்தப்போ, லாரென் லூசி மேல கவிழ்ந்து காப்பாத்தப் பார்த்தா. 353 00:35:09,441 --> 00:35:10,901 அதை சொல்லியிருக்கேனா? 354 00:35:11,026 --> 00:35:15,531 ஆக, லூசியின் கடைசி தருணங்கள், அம்மா காப்பாத்த கவிழ்ந்து கதறுவது, 355 00:35:15,697 --> 00:35:17,574 நவாஹாஸ் அதை பார்த்திட்டிருந்தான். 356 00:35:21,411 --> 00:35:25,249 யார் தண்டிக்கிறான்னு அவன் பார்க்கணும். வேற மாதிரி செய்யக் கூடாது. 357 00:35:35,217 --> 00:35:36,385 சரி. 358 00:35:39,680 --> 00:35:41,014 சரி, போவோம். 359 00:35:51,650 --> 00:35:54,570 உங்க ஆட்களை உயிரைப் பணயம் வைங்கனு சொல்ல முடியாது. 360 00:35:54,653 --> 00:35:56,572 நானும் பென்னும் பார்த்துக்கறோம். 361 00:35:56,780 --> 00:35:57,781 வேணாம். 362 00:35:58,824 --> 00:36:01,952 இது தீமையை ஒரேயடியா உலகிலிருந்து ஒழிக்கும் வாய்ப்பு. 363 00:36:03,370 --> 00:36:07,249 இதுதான் சரியான வழி. நாம் உலகுக்கு ஒரு சேவையை செய்வோம். 364 00:36:11,628 --> 00:36:12,629 சரி... 365 00:36:14,548 --> 00:36:18,135 உயரமான இடத்தை கண்காணிக்க பயன்படுத்தறோம். மேலும் கீழும். 366 00:36:20,178 --> 00:36:21,305 ரீஸ். 367 00:36:22,097 --> 00:36:23,348 இல்ல, ஒண்ணுமில்லை. 368 00:36:26,101 --> 00:36:29,313 மத்தவங்க நடந்து அணுகணும். 369 00:36:30,230 --> 00:36:31,481 ரீஸ்? 370 00:36:31,607 --> 00:36:33,275 ஒண்ணுமில்ல, நல்லா இருக்கேன். 371 00:36:39,239 --> 00:36:43,493 நடந்ததை நீங்க சொல்வதிலிருந்து, வேகமா வளரும் கட்டின்னு தெரியுது. 372 00:36:43,577 --> 00:36:47,456 அது க்ளியோப்ளாஸ்டோமாவா இருந்தா, துரதிர்ஷ்டம். அபூர்வமானதும் கூட. 373 00:36:48,206 --> 00:36:51,501 -நிச்சயமா சொல்ல... -திசு பரிசோதனை இல்லாம முடியாது. தெரியும். 374 00:36:52,336 --> 00:36:54,922 மெக்சிகோ மாநகர்ல பிரமாதமான டாக்டர்கள் உண்டு. 375 00:36:55,547 --> 00:37:00,344 சரியா திட்டமிட்டா, ஆறுலிருந்து ஒன்பது மாதம். பழைய வாழ்க்கைக்கு திரும்பலாம். 376 00:37:02,888 --> 00:37:04,473 வேற வழி ஏதாவது? 377 00:37:07,768 --> 00:37:10,228 வேதனை. அனேகமா, மரணம். 378 00:37:22,824 --> 00:37:25,494 நோய்க்குறிகளை தவிர்க்க என்ன செய்யலாம்? 379 00:37:26,536 --> 00:37:29,414 கர்டிகோஸ்டெராயிட்ஸ் வீக்கத்தை குறைக்கும். 380 00:37:29,498 --> 00:37:34,419 ப்ரொப்ரனலால், டொபிரமேட் வலிப்புகளை, ஒற்றைத் தலைவலியை குறைக்கலாம். 381 00:37:36,630 --> 00:37:38,173 மருந்து உங்களை காப்பாத்தாது. 382 00:37:45,681 --> 00:37:48,266 -சொல்லியிருக்கணும். -அவனுக்கு தெரிஞ்சிருக்காது. 383 00:37:48,350 --> 00:37:50,852 அபத்தம். அவனைக் கேள். 384 00:37:59,361 --> 00:38:03,991 பார், சகோதரா, உன் உடம்போட நீ என்ன வேணுமானாலும் செய். 385 00:38:06,952 --> 00:38:09,329 ரகசியமா வெச்சிருந்ததுக்கு திட்ட முடியாது. 386 00:38:09,871 --> 00:38:12,082 புரியுது. நான் யார் கருத்து சொல்ல? 387 00:38:13,542 --> 00:38:15,210 எனக்கு ஒரே கேள்விதான்... 388 00:38:17,004 --> 00:38:18,547 உன்னால் செயல்பட முடியுமா? 389 00:38:20,007 --> 00:38:22,217 ஆரோனும் ஆட்களுமே முடிக்கலாம், ஜேம்ஸ். 390 00:38:24,177 --> 00:38:27,305 வேணும்னா, நவாஹாஸை துண்டுகளாக்கி கொண்டு வரலாம். 391 00:38:31,268 --> 00:38:35,147 மாறா, பாவொலா, அன்டோனியாவா இருந்தா என்ன செய்வீங்க? 392 00:38:36,189 --> 00:38:38,400 அவன் மூஞ்சை பார்க்க விரும்புவீங்களா? 393 00:38:44,573 --> 00:38:46,158 எனக்கு ஒண்ணும் இல்லை. 394 00:38:49,202 --> 00:38:51,580 இதைத் தவிர எனக்கு இழப்பதற்கு ஒண்ணுமில்ல. 395 00:38:55,625 --> 00:38:57,544 என்னிடம் எல்லாமே பறித்தான். 396 00:38:59,296 --> 00:39:03,091 சரி, ஆரோனிடம் சொல்றேன். 397 00:39:59,481 --> 00:40:01,817 இப்பவும் எப்படி நிக்கறேன்னே தெரியல. 398 00:40:02,651 --> 00:40:05,153 நானா இருந்தா நொறுங்கிப் போயிருப்பேன். 399 00:40:07,906 --> 00:40:11,034 என்னைவிட நொறுங்கிப் போக வேண்டியவங்க இருக்காங்க. 400 00:40:20,293 --> 00:40:24,339 நீ, லாரென், லூசி, எல்லாம் 401 00:40:25,465 --> 00:40:26,967 எங்க குடும்பத்தோட அங்கம். 402 00:40:29,594 --> 00:40:32,264 ஆக, நாளை நீ பிழைச்சு வந்தா, 403 00:40:33,598 --> 00:40:34,975 இங்க திரும்ப வர வேணாம். 404 00:40:35,851 --> 00:40:38,103 பழி வாங்க இறக்க, உனக்கு மகிழ்ச்சி. 405 00:40:38,979 --> 00:40:42,232 ஆனா உன் நண்பர்களை அதில் சேர்த்திருக்கவே கூடாது. 406 00:41:08,675 --> 00:41:12,762 நவாஹாஸ் 407 00:42:29,547 --> 00:42:30,674 அலெஹான்த்ரோ. 408 00:42:40,016 --> 00:42:42,769 மரணக் குழிக்கு நாலு அடியாட்கள் வர்றாங்க. 409 00:42:42,852 --> 00:42:43,812 15 மீட்டர். 410 00:42:46,147 --> 00:42:47,232 10 மீட்டர். 411 00:42:48,400 --> 00:42:49,567 5 மீட்டர். 412 00:43:05,917 --> 00:43:07,502 -தயார்! -கிளம்பு. 413 00:43:19,639 --> 00:43:20,724 நொறுக்கு அதை! 414 00:43:39,993 --> 00:43:41,077 ஐயோ! 415 00:43:42,370 --> 00:43:43,330 சுவர்! 416 00:44:06,770 --> 00:44:07,687 அடச்சே! 417 00:44:07,812 --> 00:44:10,482 கட்டடம் ரெண்டில் அடிபணிய வைக்க சுடு. இப்போ! 418 00:44:20,367 --> 00:44:24,162 -யார் அது. அவன் நம்ம ஆளா? -குண்டு நிரப்பறேன். 419 00:44:24,245 --> 00:44:26,289 -இல்ல. -எவ்ளோ நேரம் வேணும்? 420 00:44:26,748 --> 00:44:27,791 பத்து நொடிகள். 421 00:44:34,381 --> 00:44:35,632 -தயார். -கிளம்பறோம். 422 00:45:01,491 --> 00:45:02,617 பென்? 423 00:45:05,328 --> 00:45:06,579 வழி விட்டு விலகுங்க! 424 00:45:22,637 --> 00:45:24,806 பசங்களை மறைக்கிறேன். போ! 425 00:45:41,114 --> 00:45:43,450 அது நவாஹாஸ்! நான் பாத்துக்கறேன். தடு அவனை. 426 00:45:47,287 --> 00:45:48,913 நீல பிக் அப். அதைச் சுடு! 427 00:45:51,458 --> 00:45:52,709 -கிளம்பு. -கிளம்பறோம். 428 00:46:08,641 --> 00:46:09,642 வாங்க. 429 00:46:13,271 --> 00:46:14,272 சகோதரா, நலம்தானே? 430 00:46:14,606 --> 00:46:16,316 -ஐயோ, ஆம்! -இங்கயே இரு. 431 00:46:39,130 --> 00:46:40,173 ஒழி! 432 00:47:33,560 --> 00:47:35,645 கீழே போடு. 433 00:48:20,231 --> 00:48:21,316 நான் யார்னு தெரியுதா? 434 00:48:24,527 --> 00:48:25,987 நாசமா போ, கடற்படை வீரனே. 435 00:48:33,911 --> 00:48:35,580 அந்த பறவை சரியாயிடுமா, அப்பா? 436 00:48:50,428 --> 00:48:53,222 வேணாம்! வேணாம்! வேணாம்! 437 00:49:48,444 --> 00:49:49,487 நட. 438 00:50:42,874 --> 00:50:44,167 என்னை மன்னி, ப்ரையன். 439 00:50:48,045 --> 00:50:52,592 என் தப்பு. உண்மையிலேயே நீங்க இங்க வருவீங்கனே நினைக்கல. 440 00:50:52,842 --> 00:50:55,970 எனக்கு... அவங்க வருவாங்கன்னு தெரியாது. 441 00:51:00,433 --> 00:51:04,270 நீ 17 வயதா இருக்கும்போது அம்மா சொல்லுவாங்க, தெரியுமா, 442 00:51:05,480 --> 00:51:10,193 "உன் பலம் எதையும் அவளுக்கு தராதே, ஆற்றலை உறிஞ்சிடுவா" என்று. 443 00:51:12,028 --> 00:51:15,823 உன்னைப் பத்தி கவலைப் படுவதை விடணும்னு எப்பவோ உறுதி செய்துட்டேன். 444 00:51:17,408 --> 00:51:21,454 ஆம். நீயும் ஒரு பொன்முடியாளை மணக்கமாட்டேன்னு உறுதி தந்தாயே, 445 00:51:21,537 --> 00:51:24,749 ஆக, நாம் பரஸ்பரம் ஏமாத்திக்கிடோம், அவ்ளோதான். 446 00:51:31,881 --> 00:51:37,261 தெரியுமா, நாங்க இன்றிரவு திரும்பணும். நீ வேணும்னா தங்கலாம். 447 00:51:40,765 --> 00:51:42,141 நான் உனக்கு உகந்தவளல்ல. 448 00:51:44,560 --> 00:51:46,979 -எனக்குத் தெரியும். -நான் ஒரு முட்டாள். 449 00:51:50,107 --> 00:51:51,192 நீ முட்டாள்தான். 450 00:51:52,276 --> 00:51:53,444 உன்னை நேசிக்கிறேன். 451 00:51:58,157 --> 00:52:01,661 பார்க்க அற்புதம். அடேங்கப்பா! 452 00:52:02,954 --> 00:52:03,955 ஹலோ? 453 00:52:04,288 --> 00:52:05,873 நியூபெல்லம் மருந்து நிறுவனம். 454 00:52:06,123 --> 00:52:09,168 ஸ்டீவ் ஹார்ன் பெரும்பான்மை பங்கை முன்னே வாங்கினான். 455 00:52:09,252 --> 00:52:12,588 எல்லாத்தையும் ஊக்க மருந்துக்கானதா ஆக்கினான். முதன்மை 456 00:52:13,756 --> 00:52:15,383 பாதுகாப்பு துறை ஒப்பந்தக்காரன். 457 00:52:16,509 --> 00:52:19,011 ஆறு கிளைகளுக்கும் வினியோகமாகும் மருந்துகள். 458 00:52:19,303 --> 00:52:23,891 முக்கியமானது? இன்னும் கொஞ்ச நாள்ல நியூபெல்லம் முழுவதையுமே 7000 கோடிக்கு மேல் 459 00:52:23,975 --> 00:52:25,560 விற்கப் போறாங்களாம். 460 00:52:29,689 --> 00:52:32,358 -கேட்டி? -நன்றி. 461 00:52:32,859 --> 00:52:34,527 ஆயிரம் நன்றி சொல்லணும் நீ. 462 00:52:40,616 --> 00:52:41,659 எல்லாம் நலம்தானே? 463 00:52:42,118 --> 00:52:45,246 அது விளம்பரம். கொஞ்சம் மார்கரிட்டாஸ் குடிக்கிறீங்களா? 464 00:52:45,413 --> 00:52:46,539 வேணாம், நன்றி. 465 00:52:47,748 --> 00:52:51,002 -எனக்கு ஒண்ணு. நன்றி. -சரி. இதோ வந்துடறேன். 466 00:52:51,294 --> 00:52:52,336 சரி. 467 00:53:00,261 --> 00:53:02,513 நியூபெல்லம் தலைவர் ராணுவ மாற்றத்தை பேசுகிறார் 468 00:53:52,480 --> 00:53:53,731 நீ சொன்னது சரிதான் போல. 469 00:53:55,191 --> 00:53:56,776 நான் எப்பவுமே சரிதான், ஜூனியர். 470 00:53:59,362 --> 00:54:01,864 ஹேய் மேக். ஆம். அவ கிளம்பறா. 471 00:54:04,033 --> 00:54:07,161 ரீஸர். ஸ்டீவ் ஹார்ன் பத்தி கண்ட எல்லாம் இதில் இருக்கு. 472 00:54:09,038 --> 00:54:11,415 குறிப்பா உனக்கு என்ன செய்தான்னு தெரியணும். 473 00:54:16,963 --> 00:54:18,214 நீ வரலன்றது நிச்சயம்தானா? 474 00:54:18,297 --> 00:54:20,967 ஆசைதான், ஆதரவு நடவடிக்கை அதிகாரி இப்பவே, சரியா 475 00:54:21,050 --> 00:54:23,052 வர்றதில்லையேனு கேள்வி கேட்கிறார். 476 00:54:23,219 --> 00:54:25,096 உன்னை எப்பவோ நீக்கியிருப்பேன். 477 00:54:25,179 --> 00:54:28,432 நிஜத்திலே, உன் பின்னாலிருப்பவர்களை பார்த்துக் கொள்ளணும். 478 00:54:44,407 --> 00:54:45,533 இதோ வர்றேன். 479 00:54:51,414 --> 00:54:54,875 விமானத்தில் செலவுக்கு பணம் இருக்கு. தேடலுக்கு பங்களிப்பு. 480 00:54:54,959 --> 00:54:58,212 மார்கோ, நீங்க எற்கனவே நிறைய செய்துட்டீங்க. நன்றி. 481 00:55:07,763 --> 00:55:10,558 இந்தப் பண்ணையில் இது நல்ல வேட்டையாடியது. 482 00:55:10,641 --> 00:55:12,643 இது இங்கதான் இருக்கணும். 483 00:55:13,477 --> 00:55:17,690 இது உன் அப்பாவோடது. நான் ஏத்துக்க முடியாது. 484 00:55:18,983 --> 00:55:21,527 நான் திரும்ப வரும் வரை வைத்திருங்களேன். 485 00:55:29,702 --> 00:55:30,745 ஜேம்ஸ். 486 00:55:39,378 --> 00:55:40,796 அன்டோனியா. 487 00:55:43,299 --> 00:55:45,468 -பாவொலா. -ஜேம்ஸ். 488 00:55:46,969 --> 00:55:48,971 -நீ அவங்கள பார்த்துக்க. -கண்டிப்பா. 489 00:56:01,776 --> 00:56:03,194 இந்தா. இன்னொண்ணு. 490 00:57:28,112 --> 00:57:32,658 ஆர்டூரோ மோரெனோவின் அன்பார்ந்த நினைவில் 1980-2022 491 00:59:14,969 --> 00:59:16,971 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 492 00:59:17,054 --> 00:59:19,056 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா