1 00:00:32,156 --> 00:00:34,451 -அப்படித்தான், பேபி! -ஆம்! என்னவொரு ஷாட்! அருமை, மார்ட்டி. 2 00:00:35,661 --> 00:00:37,037 அருமையான பேன்க் ஷாட். 3 00:00:37,120 --> 00:00:39,498 -அருமையான பேன்க் ஷாட். -இருங்கள். நண்பர்களே, ஒரு நிமிடம். 4 00:00:43,502 --> 00:00:44,711 வா, நண்பா! 5 00:00:45,212 --> 00:00:47,422 ஹலோ? ஆம். 6 00:00:52,636 --> 00:00:53,637 சரி. 7 00:00:54,429 --> 00:00:56,014 வாருங்கள். சீக்கிரம்! 8 00:00:56,098 --> 00:00:57,808 சரி, நன்றி. பை. 9 00:01:11,405 --> 00:01:14,324 -எதுவும் பிரச்சினையா? -இல்லை, என் அப்பா இறந்துவிட்டார். 10 00:01:14,408 --> 00:01:16,827 -சரி, விளையாடுங்கள். வாருங்கள். -உங்கள் அப்பா இறந்துவிட்டாரா? 11 00:01:16,910 --> 00:01:18,370 ஆம். விளையாடுங்கள். 12 00:01:18,453 --> 00:01:20,330 -என்ன சொல்கிறீர்கள்? உண்மையாக இறந்துவிட்டாரா? -இதோ. 13 00:01:27,588 --> 00:01:29,506 வொண்டரி மற்றும் ப்ளூம்பெர்கின் பாட்காஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது 14 00:01:39,433 --> 00:01:42,269 எனக்கு தாத்தா பாட்டி இல்லாததால் நான் குழந்தையாக இருக்கும்போது 15 00:01:42,352 --> 00:01:43,979 என் அப்பா தனது பெற்றோரை இழந்தார் எனத் தெரியும். 16 00:01:45,230 --> 00:01:51,486 அத்தைகள் சித்தப்பாக்கள் இல்லாததால் என் சிறுவயதில் அவர்களது உடன்பிறப்புகள் இறந்தது தெரியும். 17 00:01:52,487 --> 00:01:56,116 அவர் தனது மனைவியை இழந்தது என் இளம் வயதில்தான் தெரியும். 18 00:01:57,910 --> 00:02:02,831 அவர் தனது குழந்தையை இழந்தது நான் வளர்ந்த பிறகுதான் தெரியும். 19 00:02:03,957 --> 00:02:09,588 அவர் முகாமைவிட்டு வெளியேறி, இங்கே வந்து அனைத்தையும் இழந்தார். 20 00:02:10,214 --> 00:02:14,343 அவரது மனைவிக்கு துக்கம் அனுசரிக்க முடியாமல் என் அப்பாவுக்கு துக்கம் அனுசரிக்க முடியாது. 21 00:02:14,426 --> 00:02:17,221 என் சகோதரன் பருக்கிற்கு துக்கம் அனுசரிக்க வேண்டும். 22 00:02:21,600 --> 00:02:22,684 இவர் அற்புதமான மனிதர். 23 00:02:27,523 --> 00:02:28,524 ஒரு ஹீ... 24 00:02:31,527 --> 00:02:33,529 ஒரு ஹீரோ என்று கூட அழைக்கலாம். 25 00:02:34,571 --> 00:02:38,617 நான் வுல்ஃப்கேங் ஹெர்ஷ்காஃபின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் 26 00:02:38,700 --> 00:02:42,579 நன்றியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். 27 00:02:45,165 --> 00:02:47,584 டாக்டர் ஹெர்ஷ்காஃப், உங்கள் இழப்பிற்கு வருந்துகிறோம். 28 00:02:48,168 --> 00:02:50,587 உங்கள் பேச்சு அருமையாக இருந்தது. 29 00:02:51,463 --> 00:02:52,923 நன்றி. நன்றி. 30 00:02:53,006 --> 00:02:54,675 -வந்ததற்கு நன்றி. -ஆம். 31 00:02:54,758 --> 00:02:56,385 -வியாழக்கிழமை சந்திக்கலாமா? -நிச்சயமாக. 32 00:02:56,468 --> 00:03:00,472 விடுமுறை வருவதால் நான் ஒரு விஷயம் யோசித்தேன்... 33 00:03:00,556 --> 00:03:04,393 நீங்கள் நினைவுதின வாரயிறுதிக்கு ஹாம்ப்டன்ஸ் வீட்டுக்கு 34 00:03:04,476 --> 00:03:05,978 வருவீர்களா என யோசித்தேன். 35 00:03:06,603 --> 00:03:09,523 அட, இது கனிவாக உள்ளது, மார்ட்டி. நான்... 36 00:03:10,482 --> 00:03:13,235 நாங்கள் இப்போது பெரிய குடும்பமாகிவிட்டோம். உங்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை. 37 00:03:13,318 --> 00:03:17,531 குழந்தைகள் அங்கே வருவது எனக்கு மகிழ்ச்சிதான். அங்கு நீச்சல் குளம் உள்ளது. அவர்கள் நீந்தலாம். 38 00:03:18,031 --> 00:03:21,618 இருந்தாலும், இப்போது நான் ஒரு மகிழ்ச்சியான விருந்தினராக இருக்க மாட்டேன். 39 00:03:21,702 --> 00:03:26,832 சிலநேரம் ஷிவா முடிந்ததும் எல்லாம் சகஜமாக மாறுவது 40 00:03:26,915 --> 00:03:30,085 கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். 41 00:03:30,169 --> 00:03:31,170 நான்... 42 00:03:32,087 --> 00:03:37,718 நீங்கள் ஓய்வெடுக்கக்கூடிய, உங்களைப் பார்த்துக்கொள்ளக் கூடிய இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். 43 00:03:38,302 --> 00:03:39,636 கூடைப்பந்து கூட விளையாடலாம். 44 00:03:40,596 --> 00:03:42,389 மிகவும் பரிவுடன் பேசுகிறீர்கள், மார்ட்டி. 45 00:03:43,807 --> 00:03:45,267 நீ என்ன சொல்கிறாய், அன்பே? 46 00:03:45,350 --> 00:03:48,687 ஹாம்ப்டன்ஸ், நீச்சல்குளம். பெண்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும். 47 00:03:49,271 --> 00:03:51,273 நாம் சமைக்கலாம். நாம் ஓய்வெடுக்கலாம். 48 00:03:52,107 --> 00:03:54,860 அதாவது, இது உங்களுக்கு அற்புதமாக இருக்கும், டாக்டர் ஐக். 49 00:03:54,943 --> 00:03:57,362 நல்ல யோசனையாக தோன்றுகிறது. ஒரு வாரயிறுதி. 50 00:03:57,446 --> 00:03:59,990 மனைவியே சொல்லிவிட்டார். சரி வருகிறோம். 51 00:04:00,073 --> 00:04:01,575 அற்புதம். 52 00:04:01,658 --> 00:04:03,785 -நன்றி, மார்ட்டி. -நிச்சயமாக. 53 00:04:04,286 --> 00:04:05,996 -நன்றி, மார்ட்டி. -பரவாயில்லை. 54 00:04:06,079 --> 00:04:08,874 நீங்கள் எனக்கு செய்த உதவிகளுக்கு என்னால் முடிந்த சிறு உதவி. 55 00:04:23,013 --> 00:04:24,014 அற்புதம். 56 00:04:32,314 --> 00:04:33,440 ஹாய், மார்ட்டி. 57 00:04:33,524 --> 00:04:35,734 ஹாய், நண்பர்களே. ஹாய், குட்டீஸ். 58 00:04:35,817 --> 00:04:38,195 பைகளை விடுங்கள். வாருங்கள். நான் சுற்றிக் காட்டுகிறேன். 59 00:04:39,279 --> 00:04:42,199 -அட, இது மில்வொர்க் என நினைக்கிறேன். -ஓ, ஆம். 60 00:04:42,282 --> 00:04:44,117 -நன்றி. -மேலும் இந்த நாடிகாலியா. 61 00:04:44,910 --> 00:04:46,537 -அது ஒரு சொல் இல்லை. -இங்கே வாருங்கள். 62 00:04:46,620 --> 00:04:48,539 நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். சரியா? 63 00:04:49,164 --> 00:04:50,165 அற்புதம். 64 00:04:50,249 --> 00:04:51,875 உங்கள் வீடு போல சௌகரியமாக இருங்கள். 65 00:04:51,959 --> 00:04:53,585 உங்கள் இடம் அழகாக உள்ளது. 66 00:04:53,669 --> 00:04:56,755 ஆம், நம் மார்ட்டி வழக்கமான ஜே கேட்ஸ்பி. 67 00:04:57,756 --> 00:04:59,049 அது என்ன மரம்? 68 00:04:59,132 --> 00:05:01,677 அது ஒரு செர்ரி மரம். ஆம், நீண்ட காலமாக அது இங்கே உள்ளது. 69 00:05:01,760 --> 00:05:03,345 நீங்கள் எவ்வளவு காலமாக இங்கே உள்ளீர்கள், மார்ட்டி? 70 00:05:03,428 --> 00:05:05,556 இது எங்கள் குடும்பத்தில் 50களில் இருந்து உள்ளது. 71 00:05:05,639 --> 00:05:08,016 இந்த இடம் உங்களுக்குக் கிடைத்தது உங்கள் அதிர்ஷ்டம், மார்ட்டி. 72 00:05:08,100 --> 00:05:11,353 அனைவருக்கும் ஹாம்ப்டன்ஸில் வீடு பரம்பரைச் சொத்தாகக் கிடைப்பதில்லை. 73 00:05:11,436 --> 00:05:15,107 என் அப்பா எனக்குக் கொடுத்ததெல்லாம் என் வலது காதில் கேட்பதில் குறைபாடும் 74 00:05:15,190 --> 00:05:17,609 நிறைய பாலியஸ்டர் பேண்ட்களும்தான். 75 00:05:18,777 --> 00:05:21,113 நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? 76 00:05:22,239 --> 00:05:24,741 என் தொழிலில் என்னிடம் அதிகமாக கேட்கப்படாத கேள்வி. 77 00:05:24,825 --> 00:05:25,826 கண்டிப்பாக. 78 00:05:27,119 --> 00:05:28,120 நன்றி. 79 00:05:28,829 --> 00:05:29,830 நன்றி, நண்பா. 80 00:05:30,414 --> 00:05:33,208 நீங்கள் தூங்குகிறீர்களா அல்லது வாக்கிங் போகிறீர்களா? 81 00:05:33,292 --> 00:05:34,751 இல்லையெனில் சாப்பிடுகிறீர்களா? 82 00:05:34,835 --> 00:05:38,630 என்னை உங்கள் உபசரிப்பாளராக நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேவையை நிறைவேற்றவே இங்கிருக்கிறேன். 83 00:05:38,714 --> 00:05:40,215 மிகவும் கனிவாக உள்ளீர்கள், மார்ட்டி. 84 00:05:40,299 --> 00:05:43,969 மிகவும் கனிவானது மற்றும் தேவையற்றது. நாங்கள்... இங்கு இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. 85 00:05:45,095 --> 00:05:48,473 நாம்... வந்துவிட்டோம். 86 00:05:48,557 --> 00:05:51,435 தயாராக இருங்கள். இதுதான் சமையலறை. 87 00:05:52,644 --> 00:05:56,398 அற்புதம். நாங்கள் கால இயந்திரத்திற்குள் நுழைந்துவிட்டோமா, என்ன? 88 00:05:56,481 --> 00:05:58,108 இது மீண்டும் 1952ம் ஆண்டா? 89 00:05:58,192 --> 00:05:59,193 ஐக். 90 00:05:59,276 --> 00:06:01,361 வேடிக்கைக்காக சொன்னேன். எங்களுக்கு இடையில் இப்படித்தான். 91 00:06:01,445 --> 00:06:05,490 இதில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் பிஸியாக இருக்கிறேன். 92 00:06:05,574 --> 00:06:07,242 புரிகிறது. அது பணி மிகுதியாக இருக்கலாம். 93 00:06:09,369 --> 00:06:10,495 இதுதான் உங்கள் அம்மாவா? 94 00:06:10,579 --> 00:06:13,081 -அவர் அழகாக இருக்கிறார். -ஆம். 95 00:06:13,665 --> 00:06:15,209 -உங்கள் அப்பாவும்தான். -ஆம். 96 00:06:15,292 --> 00:06:17,169 அவர் உங்களைப் போலவே உள்ளார். 97 00:06:17,252 --> 00:06:18,629 நீங்கள் அவர்களை கண்டிப்பாக மிஸ் செய்வீர்கள். 98 00:06:18,712 --> 00:06:21,465 -அம்மா, எனக்கு பேகல் கிடைக்குமா? -அடக் கடவுளே. 99 00:06:22,049 --> 00:06:23,759 அவர்கள் அழகான ஜோடி, மார்ட்டி. 100 00:06:28,472 --> 00:06:31,517 நான் சொல்வதைக் கேளுங்கள். இது கேட்பதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். 101 00:06:32,893 --> 00:06:35,354 நீங்கள் கடந்தகாலத்தில் வாழ்வதன் மூலம் அவர்களைப் பெருமைப்படுத்தவில்லை. 102 00:06:35,437 --> 00:06:38,023 நான் இப்போதுதான் என் அப்பாவை புதைத்தேன். என்ன சொல்கிறேன் என எனக்குத் தெரியும். 103 00:06:38,106 --> 00:06:39,107 எனக்குத் தெரிகிறது. 104 00:06:39,191 --> 00:06:44,571 அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்கள், மார்ட்டி, இந்த இடம்... ஒரு அருங்காட்சியகம். 105 00:06:44,655 --> 00:06:48,408 நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புவார்கள். வாழ்க்கையை ரசிக்க விரும்புவார்கள். 106 00:06:48,492 --> 00:06:49,493 -சரியா? -நிச்சயமாக. 107 00:06:49,576 --> 00:06:51,078 நீங்கள் அவற்றிலிருந்து விடுபட வேண்டும். 108 00:06:52,454 --> 00:06:55,666 உங்களுக்காக இல்லையென்றால், அவர்களுக்காக செய்யுங்கள். 109 00:07:02,631 --> 00:07:04,842 வாருங்கள். சாப்பிடுவோம். 110 00:07:04,925 --> 00:07:08,387 சரி. இதுதான் பிரதான படுக்கையறை. 111 00:07:08,470 --> 00:07:10,097 எவ்வளவு அழகாக உள்ளது. 112 00:07:10,639 --> 00:07:12,015 அற்புதம்! இந்தக் காட்சியைப் பாருங்கள். 113 00:07:12,099 --> 00:07:13,976 ஆஹா, எனக்கு அமெரிக்கானாவைப் பிடித்துள்ளது. 114 00:07:14,059 --> 00:07:16,144 -எங்கள் பொருட்களை எங்கே வைப்பது? -அது உங்கள் முடிவு. 115 00:07:16,228 --> 00:07:19,606 இந்த வீட்டில் இரண்டு படுக்கையறைகள் உள்ளன, கெஸ்ட்ஹவுஸில் ஒரு படுக்கையறை உள்ளன. 116 00:07:19,690 --> 00:07:21,358 கெஸ்ட்ஹவுஸா? அருமை. 117 00:07:22,234 --> 00:07:24,611 ஒன்று சொல்லவா? நீங்கள் ஏன் இங்கு தங்கக்கூடாது? 118 00:07:24,695 --> 00:07:28,282 என்ன? இல்லை, அது கிறுக்குத்தனம். உன்னை இந்தப் படுக்கையறையிலிருந்து விரட்ட மாட்டோம். 119 00:07:28,365 --> 00:07:30,117 -எனக்காக. -கண்டிப்பாக முடியாது. 120 00:07:30,200 --> 00:07:34,204 மார்ட்டி, அது அபத்தம். நாங்கள் விருந்தினர் அறையில் ஒடுங்கிக்கொள்கிறோம். 121 00:07:34,288 --> 00:07:39,209 இது சரியாக உள்ளது. நீங்கள் இங்கே இருப்பீர்கள். குழந்தைகள் எதிரே இருப்பார்கள். இது நல்லது. 122 00:07:39,293 --> 00:07:41,211 நான் இந்த வாரயிறுதியில் கெஸ்ட்ஹவுஸில் தூங்கிக்கொள்கிறேன். 123 00:07:41,295 --> 00:07:42,296 உண்மையாகவா? 124 00:07:43,130 --> 00:07:47,259 உண்மையில், இது மோசமான யோசனை இல்லை. நம் பெண்கள் சீக்கிரமாகவே எழுந்துவிடுவார்கள். 125 00:07:47,342 --> 00:07:48,468 உண்மைதான். 126 00:07:49,052 --> 00:07:50,762 சரி. எனில் இது தீர்மானிக்கப்பட்டது. 127 00:08:21,543 --> 00:08:23,378 நான்ஸி 128 00:09:07,422 --> 00:09:08,423 ஓ, இல்லை! 129 00:09:09,258 --> 00:09:13,595 என்னை கடல் மிருகங்கள் தாக்குகின்றன! காப்பாற்றுங்கள்! 130 00:09:13,679 --> 00:09:16,682 நீங்கள் தப்பிக்க முடிந்தால், உங்களுக்காக ஐஸ்டு காஃபி செய்துள்ளேன். 131 00:09:16,765 --> 00:09:18,725 -அவற்றின் கைகள் நீளமாக உள்ளன! -உங்களை பிடிக்க போகிறேன். 132 00:09:25,399 --> 00:09:26,608 நன்றாக இருக்கிறதா? 133 00:09:27,317 --> 00:09:28,485 ஆம், நன்றாக இருக்கிறது. 134 00:09:30,988 --> 00:09:33,407 வீட்டில் இருப்பது போலுள்ளது, இல்லையா, அன்பே? 135 00:09:34,324 --> 00:09:35,617 சரியாக உள்ளது. 136 00:09:35,701 --> 00:09:37,452 மார்ட்டி மிகவும் பெருந்தன்மையானவர். 137 00:09:39,872 --> 00:09:41,290 அவர்தான் நம்மை அழைத்தார். 138 00:09:41,915 --> 00:09:44,877 -ஆம்! சிறப்பாக குதித்தாய். -நாம் இங்கிருக்க அவர் விரும்புகிறார். 139 00:09:44,960 --> 00:09:47,546 நீ விருந்தோம்பலை நன்றியுடன் ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 140 00:09:47,629 --> 00:09:50,591 அதாவது, அதுதான் விருந்தினருக்கான அழகு. 141 00:09:50,674 --> 00:09:52,634 இல்லை, அவர் மிகவும் கனிவாக உள்ளார். அவ்வளவுதான். 142 00:09:52,718 --> 00:09:56,471 நாம் அவருக்கு உதவுகிறோம். அவர்... 143 00:09:57,556 --> 00:10:00,934 இந்தப் பழைய வீட்டில் அவர் தனியாக மகிழ்ச்சியாக இருக்கிறார் என நினைக்கிறாயா? 144 00:10:01,018 --> 00:10:03,228 நான் அவரைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை, புரிகிறதா? 145 00:10:03,312 --> 00:10:04,438 இல்லை, அவர் தனியாக உள்ளார், பான். 146 00:10:05,147 --> 00:10:07,149 தனிமைக்கு ஏற்ற சிகிச்சை என்ன? 147 00:10:07,232 --> 00:10:08,692 உன்னை தூக்கிப்போட்டு கொண்டே இருப்பேன். 148 00:10:08,775 --> 00:10:13,197 நண்பர்கள். நண்பர்கள்தான் சிறந்த சிகிச்சை. அவரைப் பார். 149 00:10:14,990 --> 00:10:17,075 -எனது முறை, எனது முறை! -தூக்கிப் போடு! 150 00:10:17,784 --> 00:10:19,203 அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். 151 00:10:19,786 --> 00:10:21,914 பல மாதங்களுக்குப் பிறகு அவர் சிரிக்கிறார். 152 00:10:22,748 --> 00:10:26,460 எனக்கு மார்ட்டியை நினைத்துக் கவலையில்லை. உங்களை நினைத்துதான் கவலை. 153 00:10:27,794 --> 00:10:28,962 நான் நன்றாக இருக்கிறேன். 154 00:10:29,046 --> 00:10:30,214 சரி, பசங்களா. 155 00:10:33,967 --> 00:10:36,887 -இல்லை, கூடாது. கூடாது. உள்ளே வாருங்கள்! -இல்லை, கூடாது. 156 00:10:43,018 --> 00:10:44,019 அது என்ன? 157 00:10:44,978 --> 00:10:47,814 -இசையா? -அவர்கள் பார்ட்டி செய்கின்றனரா? 158 00:10:47,898 --> 00:10:50,442 இல்லை, அது ஷேர்-ஹவுஸ். 159 00:10:50,526 --> 00:10:53,612 என் அண்டைவீட்டுக்காரர் அடமானத்தைச் சமாளிக்க கோடையில் வாடகைக்கு விடுவார். 160 00:10:55,531 --> 00:10:57,908 அன்பே, போகாதீர்கள். 161 00:10:59,993 --> 00:11:01,119 அன்பே, வேண்டாம். 162 00:11:12,464 --> 00:11:14,591 பணக்கார முட்டாள்கள். அவர்கள் சொந்த இடம் போல நடந்துகொள்கின்றனர். 163 00:11:14,675 --> 00:11:17,845 அவர்கள் நம்மைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். 164 00:11:17,928 --> 00:11:20,556 எனக்கு அந்த இசை பிடித்துள்ளது. 165 00:11:20,639 --> 00:11:22,558 அவர்களை புறக்கணியுங்கள். நான் அதை தான் செய்வேன். 166 00:11:24,434 --> 00:11:26,687 இல்லை, ஒன்று சொல்லவா? வாருங்கள், மார்ட்டி. ஊருக்குள் செல்வோம். 167 00:11:26,770 --> 00:11:29,022 -சில பொருட்கள் வாங்குவோம். -என்ன பொருட்கள்? 168 00:11:29,106 --> 00:11:32,943 கொஞ்சம் ஒயின். இறைச்சி. மிஸைல் லான்ச்சர். வேடிக்கைக்காக சொன்னேன். 169 00:11:33,026 --> 00:11:34,111 -உண்மையாகவா? -ஆம். 170 00:11:34,194 --> 00:11:35,863 நீங்கள் ஓய்வெடுக்க விரும்பவில்லையா? 171 00:11:35,946 --> 00:11:38,782 இல்லை! இல்லை, எப்படிச் செய்ய வேண்டும் என இவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன். 172 00:11:39,283 --> 00:11:41,577 -வாருங்கள். -சரி. சரி. 173 00:11:42,244 --> 00:11:44,705 -இந்தாருங்கள், பசங்களா. -நீண்ட நேரம் ஆக்காதீர்கள். 174 00:11:49,835 --> 00:11:50,836 ஹாய், கென். 175 00:11:50,919 --> 00:11:52,880 ஹேய், மார்ட்டி. 176 00:11:53,380 --> 00:11:58,135 ஹாய், எலீஸ். என் நண்பரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இது ஐக். 177 00:11:58,218 --> 00:11:59,303 டாக்டர் ஐக் ஹெர்ஷ்காஃப். 178 00:11:59,386 --> 00:12:01,680 டாக்டர். ஐக். மகிழ்ச்சி. 179 00:12:01,763 --> 00:12:03,348 இப்போதுதான் பீச் கிளப்புக்குக் கிளம்புகிறோம். 180 00:12:03,432 --> 00:12:05,767 கென் ஆர்வத்தில் ஒரு கட்டுமரம் கட்டமரான். 181 00:12:05,851 --> 00:12:10,272 அதை எப்படி ஓட்டுவது எனக் கற்றுக்கொள்வேன் என நினைக்கிறேன். அடுத்து, ஃபிரான்ஸ். 182 00:12:10,355 --> 00:12:12,399 -இனிய தினமாக இருக்கட்டும். -பை பை. 183 00:12:12,482 --> 00:12:15,611 ஆம், அது கென். அவர்தான் பலருக்கு நிதி ஆலோசகர். 184 00:12:15,694 --> 00:12:19,114 -ராய் ஷைடருக்கு நினைக்கிறேன். ஆம். -அவர் ராய் ஷைடருடன் வேலை செய்கிறாரா? 185 00:12:19,198 --> 00:12:21,700 ம்ம். கடைசியாக அவரைப் பார்த்தபோது அவருடன் இருந்தார். 186 00:12:21,783 --> 00:12:24,661 ஆம், கென்னிடம் அமெரிக்க ஒப்பனுக்கான டிக்கெட்டுகள் இருக்கும். பாக்ஸோ என்னவோ. 187 00:12:24,745 --> 00:12:26,455 அதில் எனக்கு ஆர்வமில்லை. 188 00:12:31,460 --> 00:12:32,461 ராய் ஷ்ரைடர். 189 00:12:36,381 --> 00:12:37,925 கென் எவ்வளவு காலமாக இங்கு வசிக்கிறார்? 190 00:12:38,008 --> 00:12:40,010 அவர்கள்தான் “பரம்பரைப் பணக்காரர்கள்." 191 00:12:40,093 --> 00:12:41,094 எவ்வளவு பரம்பரை? 192 00:12:41,178 --> 00:12:43,555 எனக்குத் தெரியாது. டச்சுக் காலம்? 193 00:12:45,390 --> 00:12:48,185 இதோ, உங்களுக்கு இது தேவை. உங்கள் கண்கள் சிவக்கின்றன. 194 00:12:48,268 --> 00:12:51,897 கடல் மிருகங்கள், யுத்தத்திற்குத் தயார்! 195 00:12:51,980 --> 00:12:54,525 -அன்பே. நாங்கள் வந்துவிட்டோம். -யேய்! 196 00:12:55,108 --> 00:12:56,485 இது மாலை மதுவுக்கான நேரம், நினைக்கிறேன். 197 00:12:56,568 --> 00:12:59,029 -உங்களைப் பாருங்கள். -ஆம். 198 00:12:59,613 --> 00:13:00,781 நான் கடைக்குப் போனேன். 199 00:13:00,864 --> 00:13:03,116 -அற்புதமாக உள்ளீர்கள். -அற்புதமாக உணர்கிறேன். 200 00:13:06,537 --> 00:13:08,539 அம்மா அப்பா முத்தமிடுகின்றனர். 201 00:13:19,424 --> 00:13:21,051 பார்ட்டியைத் தொடங்குவோம். 202 00:13:21,134 --> 00:13:22,386 சரி. 203 00:13:43,282 --> 00:13:46,159 என்னிடம் முன்னேற்றம் இருப்பதாக உணர்கிறேன். 204 00:13:47,911 --> 00:13:49,538 ஆம். 205 00:13:50,330 --> 00:13:54,293 நீங்கள் ஒரு நபராக அற்புதமாக முன்னேறியுள்ளீர்கள். 206 00:13:54,877 --> 00:13:55,961 நீங்கள் இப்போது அதையே உங்கள் 207 00:13:56,044 --> 00:13:57,880 -சுற்றுச்சூழலுக்கும் செய்ய வேண்டும். -என்ன சொல்கிறீர்கள்? 208 00:13:57,963 --> 00:14:00,215 உங்கள் வீடு உங்கள் தனித்தன்மையின் பிரதிபலிப்பாகும். 209 00:14:00,299 --> 00:14:02,426 நீங்கள் உங்களிடம் சௌகரியமாக மாறும்போது, 210 00:14:02,509 --> 00:14:05,846 நீங்கள் இன்னும் உண்மையாகவும், பிறரை ஏற்கும்படியும் மாறும்போது, 211 00:14:05,929 --> 00:14:07,598 அதையே உங்கள் வீட்டிற்கும் செய்ய வேண்டும். 212 00:14:07,681 --> 00:14:08,891 என் அபார்ட்மெண்ட்டா? 213 00:14:08,974 --> 00:14:12,019 இல்லை, நான் ஹாம்ப்டன்ஸில் இருக்கும் உங்கள் வீட்டைப் பற்றி கூறுகிறேன். 214 00:14:12,603 --> 00:14:15,063 ஒன்று சொல்லவா? நீங்கள் விரும்பும்படி அதை மாற்றுங்கள். 215 00:14:15,147 --> 00:14:18,317 பிறர் இருக்க விரும்பும்படி. திறந்துள்ள, அனைவரையும் ஏற்கும்படி மாற்றுங்கள். 216 00:14:19,359 --> 00:14:20,402 எனக்குத் தெரியவில்லை. 217 00:14:20,485 --> 00:14:23,447 கொஞ்சம் கற்பனை மற்றும் வேலையுடன், 218 00:14:23,530 --> 00:14:24,823 அந்த இடம் அற்புதமாக மாறும், 219 00:14:24,907 --> 00:14:27,117 நீங்கள் இப்போது இருப்பதன் பிரதிபலிப்பாக மாறும். 220 00:14:27,201 --> 00:14:28,952 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 221 00:14:29,036 --> 00:14:34,458 நகரத்தில் உள்ள மக்கள் வந்து பார்த்துவிட்டு 222 00:14:35,751 --> 00:14:37,211 “அற்புதம்” என்று சொல்லும் இடமாக. 223 00:14:39,671 --> 00:14:43,300 ஏனெனில் நீங்கள் அதற்குத் தகுதியானவர், மார்ட்டி. நீங்கள் தகுதியானவர். 224 00:14:43,383 --> 00:14:45,344 சொல்லுங்கள். “நான் அதற்குத் தகுதியானவன்." 225 00:14:47,638 --> 00:14:48,639 நான் அதற்குத் தகுதியானவன். 226 00:14:48,722 --> 00:14:50,724 -மீண்டும். -மீண்டுமா? 227 00:14:53,101 --> 00:14:54,102 நான் அதற்குத் தகுதியானவன். 228 00:14:54,186 --> 00:14:55,187 மீண்டும். 229 00:14:56,271 --> 00:14:58,524 -“நான் அதற்குத் தகுதியானவன்.” மீண்டும். -நான் அதற்குத் தகுதியானவன். 230 00:15:02,194 --> 00:15:04,029 -நான் அதற்குத் தகுதியானவன். -நான் அதற்குத் தகுதியானவன். 231 00:15:04,530 --> 00:15:05,822 நன்றாக உள்ளதல்லவா? 232 00:15:10,661 --> 00:15:13,247 -இதைப் பாருங்கள். அருகில் இருக்கும் வீடு... -என்ன? 233 00:15:13,330 --> 00:15:15,457 -அந்த முட்டாள்களின் கூடாரம்? -ஆம். 234 00:15:15,541 --> 00:15:17,334 -அது விற்பனைக்கு உள்ளது. -சரி. 235 00:15:17,417 --> 00:15:19,336 -நீங்கள் அதை வாங்க வேண்டும். -என்ன? 236 00:15:19,419 --> 00:15:22,381 -நீங்கள் அதை வாங்க வேண்டும். -என்னிடம் ஏற்கனவே ஒரு வீடு உள்ளது. 237 00:15:22,464 --> 00:15:25,342 ஆம், அது உங்கள் பெற்றோரின் வீடு, உங்களுக்கு ஒரு வீடு வேண்டாமா? 238 00:15:25,425 --> 00:15:26,885 உண்மையில் வேண்டாம். 239 00:15:26,969 --> 00:15:29,680 அதுதானே அனைவருக்குமான கனவு இல்லையா? தனி வலை. 240 00:15:29,763 --> 00:15:31,223 உங்கள் வீட்டை விற்றுவிட்டு அந்த வீட்டை வாங்குங்கள். 241 00:15:31,306 --> 00:15:32,808 -எனக்கு அது வேண்டாம். -மார்ட்டி, மன்னிக்கவும். 242 00:15:32,891 --> 00:15:35,060 -சற்று பேசலாமா? -புரூஸ். நாங்க... அவர் மீட்டிங்கில் இருக்கிறார். 243 00:15:35,143 --> 00:15:37,855 என்னிடம் இந்த மாதத்திற்கான கணக்குகள் உள்ளன, நீங்கள் அதைப் பார்க்க வேண்டும். 244 00:15:37,938 --> 00:15:40,983 -அருமை. வெளியில் வையுங்கள். -சரி. நன்றி, புரூஸ். 245 00:15:41,817 --> 00:15:42,818 நாங்கள் பார்க்கிறோம். 246 00:15:43,527 --> 00:15:47,656 அது இன்னும் சிறப்பான வீடு. பெரியது. அதில் அற்புதமான நீச்சல்குளம் உள்ளது. 247 00:15:48,240 --> 00:15:49,491 என்னுடையதே எனக்குப் பிடித்துள்ளது. 248 00:15:52,786 --> 00:15:54,705 நிச்சயமாக. சரி. 249 00:15:55,330 --> 00:15:56,498 அது ஒரு பரிந்துரைதான். 250 00:15:57,541 --> 00:15:58,917 நான் எனது அலுவலகத்திற்குச் செல்கிறேன். 251 00:16:01,795 --> 00:16:04,590 ஆனால் அதைப் புதுப்பிப்பதற்கான யோசனை அருமையானது. 252 00:16:04,673 --> 00:16:05,674 உண்மையாகவா? 253 00:16:05,757 --> 00:16:09,845 கண்டிப்பாக. நாம் அதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். 254 00:16:09,928 --> 00:16:13,265 நான் தயார். எனக்கு அதை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. 255 00:16:13,348 --> 00:16:16,351 உங்களுக்கு வேண்டுமெனில் நான் காட்டுகிறேன். 256 00:16:16,435 --> 00:16:17,644 நிச்சயமாக. 257 00:16:18,270 --> 00:16:20,480 நீங்களும் குழந்தைகளும் இந்த வாரயிறுதியும் வருகிறீர்களா? 258 00:16:20,564 --> 00:16:23,859 ஓ, இல்லை. நீங்கள் தனியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 259 00:16:23,942 --> 00:16:26,987 ஆனால் தனியாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது. வாருங்கள். 260 00:16:27,487 --> 00:16:29,740 தயவுசெய்து. நாம் குறைந்தது இதைத் தொடங்கலாம். 261 00:16:29,823 --> 00:16:33,535 நீங்கள் இன்னொரு வாரயிறுதியில் கெஸ்ட்ஹவுஸில் கழிப்பது பரவாயில்லையா? 262 00:16:35,370 --> 00:16:37,581 உங்களுக்கு அங்கே பிடித்துள்ளது என நினைக்கிறேன். 263 00:16:38,415 --> 00:16:39,416 பரவாயில்லை. 264 00:16:43,712 --> 00:16:44,713 அருமை. 265 00:16:46,757 --> 00:16:47,883 நான் உன்னைத் துரத்தப் போகிறேன். 266 00:16:48,926 --> 00:16:50,552 ஆம், சரி. 267 00:16:55,265 --> 00:16:58,519 இது எவ்வளவு புதுமையாக இருக்கிறது எனப் பார்த்தீர்களா? 268 00:16:58,602 --> 00:16:59,686 இது புதிய தொடக்கம் போல உள்ளது. 269 00:17:00,187 --> 00:17:01,188 ஆம். 270 00:17:01,855 --> 00:17:03,815 இதை நான் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 271 00:17:04,358 --> 00:17:06,068 நிச்சயமாக. 272 00:17:07,194 --> 00:17:08,362 உங்கள் விருப்பம். 273 00:17:11,906 --> 00:17:14,660 ஹேய், கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கலாம். 274 00:17:49,820 --> 00:17:51,280 என் ஆணுறுப்பில் பட்டுவிட்டது. 275 00:17:51,363 --> 00:17:54,366 ஐக், ஐக், அது தவறானது. 276 00:17:56,743 --> 00:17:58,537 நீங்கள் தனித்துவமானவர். 277 00:17:58,620 --> 00:18:00,873 -நீங்கள்தான் தொடங்கினீர்கள். -நீங்கள் வேடிக்கையானவர். 278 00:18:01,623 --> 00:18:04,084 ஹேய், நான் ஒன்று யோசித்தேன். 279 00:18:05,627 --> 00:18:08,589 இந்த வீட்டை விற்பதற்குப் பதிலாக, 280 00:18:08,672 --> 00:18:11,758 அடுத்த வீட்டையும் வாங்கி இரண்டையும் சேர்த்தால் என்ன? 281 00:18:12,384 --> 00:18:16,221 நீங்கள்... 282 00:18:17,472 --> 00:18:20,684 அதில் அழகான டென்னிஸ் மைதானம், 283 00:18:20,767 --> 00:18:23,687 அதற்கு அருகில் ஒரு கூடைப்பந்தாட்ட மைதானம் வைத்தால் என்ன? 284 00:18:24,188 --> 00:18:25,731 உங்களுக்கு உட்காருவதற்கான இடம் உள்ளது. 285 00:18:25,814 --> 00:18:27,983 -சரி. -அதற்குப் பின்னால் ஒரு பார். 286 00:18:28,066 --> 00:18:29,401 பெரிய நீச்சல் குளம் உள்ளது. 287 00:18:29,484 --> 00:18:33,447 இதைப் பாருங்கள். அதில் மினியேச்சர் கோல்ஃப் கோர்ஸுக்கான இடம் உள்ளது. 288 00:18:34,364 --> 00:18:35,616 -ம்ம்-ஹ்ம்ம். -ஆம். 289 00:18:35,699 --> 00:18:38,118 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த இடத்தைச் சரிசெய்வதுதான். 290 00:18:38,202 --> 00:18:44,249 அந்த மரத்தை வெட்டினால், ஒரே இரவில் உங்கள் சொத்தில் 250,000 டாலர் மதிப்பைக் கூட்டிவிடலாம். 291 00:18:44,833 --> 00:18:47,920 மரம் அகற்றும் எனது கிளையண்ட் ஒருவர் உள்ளார். நீங்கள் அவரிடம் பேச வேண்டும். 292 00:18:48,003 --> 00:18:50,964 நான் அந்த மரத்தை வெட்ட மாட்டேன். எப்போதும். 293 00:18:51,048 --> 00:18:52,508 என்ன? என்ன சொல்கிறீர்கள்? 294 00:18:52,591 --> 00:18:55,511 என் பெற்றோர் இந்த வீட்டை வாங்கும்போது அந்த மரத்தை நட்டனர். 295 00:18:56,845 --> 00:18:59,556 ஃபிலிஸும் நானும் சிறுவயதில் அதில் ஏறிவிளையாடுவோம். 296 00:18:59,640 --> 00:19:01,475 பிறகு அவளது குழந்தைகள் ஏறி விளையாடினர். 297 00:19:01,558 --> 00:19:05,020 என் அம்மா அந்த மரத்திடம் பேசுவார். 298 00:19:06,146 --> 00:19:10,025 அவர் தினமும் காலை எழுந்து அதனிடம், “குட் மார்னிங், மரமே” என்று கூறுவார். 299 00:19:11,443 --> 00:19:12,653 அவருக்கு அந்த மரத்தைப் பிடிக்கும். 300 00:19:13,779 --> 00:19:16,990 விசித்திரமாக இருக்கும். எனக்கு அந்த மரத்தைப் பிடிக்கும். 301 00:19:19,826 --> 00:19:23,121 உங்கள் அம்மா அந்த மரத்துடன் பேசினார். அது பதிலளித்ததா? 302 00:19:23,205 --> 00:19:25,165 எனக்குத் தெரியவில்லை. இருக்கலாம். 303 00:19:28,502 --> 00:19:29,503 ஹேய். 304 00:19:29,586 --> 00:19:30,587 ஹேய், என்ன? 305 00:19:31,630 --> 00:19:32,881 வாருங்கள். பெயிண்ட் அடிக்கலாம். 306 00:19:38,762 --> 00:19:44,184 நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் அப்பாவைப் பற்றி பேசலாம். 307 00:19:45,310 --> 00:19:46,395 அது கனிவானது. 308 00:19:47,229 --> 00:19:52,317 ஆனால், “நான் நன்றாக இருக்கிறேன்." 309 00:19:53,569 --> 00:19:57,114 அதாவது, நீங்கள் எப்போதும் சொல்வீர்கள், “நன்றாக இல்லையெனில் பரவாயில்லை” என்று. 310 00:19:57,197 --> 00:19:58,907 நீங்கள் அவரை மிஸ் செய்கிறீர்கள். 311 00:19:58,991 --> 00:20:05,622 கேளுங்கள், மார்ட்டி. நமக்குள் மட்டும், அவர் சிறப்பான அப்பா இல்லை. 312 00:20:06,456 --> 00:20:09,334 அவர் சிறந்த மனிதர், சிறந்த அப்பா இல்லை. 313 00:20:10,586 --> 00:20:12,087 -நான் வருந்துகிறேன். -வேண்டாம். 314 00:20:14,882 --> 00:20:16,091 நான் அதை ஏற்கவில்லை, 315 00:20:16,675 --> 00:20:19,595 ஏனெனில் அவர் என்னை முழுமையாக நேசித்தார் என்று எனக்குத் தெரியும். 316 00:20:19,678 --> 00:20:20,679 கண்டிப்பாக. 317 00:20:20,762 --> 00:20:23,265 அவரது அன்பை அவருக்குக் காட்டத் தெரியவில்லை. 318 00:20:23,348 --> 00:20:26,268 என்னால் அவரை மன்னிக்க முடியும். 319 00:20:31,273 --> 00:20:33,025 கடவுளே, எனக்கு இங்கே பிடித்துள்ளது, மார்ட்டி. 320 00:20:33,525 --> 00:20:35,485 நீங்கள் நாளை கிளம்ப வேண்டாம் என விரும்புகிறேன். 321 00:20:35,986 --> 00:20:37,070 நானும்தான். 322 00:20:37,779 --> 00:20:42,242 இயற்கையானது என் வாழ்க்கை மீண்டும் மதிப்பிடச் செய்கிறது. 323 00:20:42,910 --> 00:20:45,287 நான் படைப்பாளியாக இருக்க உதவுகிறது. 324 00:20:46,997 --> 00:20:48,916 நான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். 325 00:20:49,583 --> 00:20:51,293 -அற்புதம். -அற்புதம்தான். 326 00:20:51,376 --> 00:20:57,299 நான் மற்றவற்றுக்கு இடைவேளைவிட்டு அதில் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். 327 00:20:59,551 --> 00:21:00,677 எனக்கு இடைவேளை தேவை. 328 00:21:01,845 --> 00:21:03,347 நான் தனிமையாக இருக்க வேண்டும். 329 00:21:06,308 --> 00:21:08,310 தனிமையாகவா? எதிலிருந்து? 330 00:21:08,393 --> 00:21:10,020 எல்லாவற்றிலிருந்தும், புரிகிறதா? 331 00:21:13,065 --> 00:21:18,612 நான் எங்காவது கொஞ்ச நாள் சென்று, உட்கார்ந்து எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. 332 00:21:18,695 --> 00:21:20,948 உண்மையாகவா? எங்கே? 333 00:21:21,031 --> 00:21:26,203 எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஜெருசலேம். எனக்கு அங்கே பிடிக்கும். 334 00:21:27,412 --> 00:21:29,289 அது என்னை அழைப்பது போல உள்ளது. 335 00:21:30,165 --> 00:21:33,293 நான் விரும்புகிற இன்னொரு விஷயமான, அலியாவைச் செய்ய முடியும். 336 00:21:33,377 --> 00:21:36,213 என்ன சொல்கிறீர்கள்... மன்னிக்கவும்... இது எல்லாம்... 337 00:21:37,047 --> 00:21:41,510 பாருங்கள், நீங்கள் இதைச் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ள விரும்புவது சரி, 338 00:21:41,593 --> 00:21:42,761 ஆனால் ஜெருசலேமா? 339 00:21:42,845 --> 00:21:46,807 உங்களுக்குத் தேவையான அனைத்தும் இங்கே இருக்கும்போது அங்கே செல்வது கிறுக்குத்தனமாகத் தெரிகிறது. 340 00:21:46,890 --> 00:21:49,268 இங்கேயா? ஆனால், இது உங்கள் இடம், மார்ட்டி. 341 00:21:49,351 --> 00:21:51,562 இது நம்முடையது. நாம் ஒரு குடும்பம், நினைவிருக்கிறதா? 342 00:21:51,645 --> 00:21:54,398 இல்லை. நான் உங்கள் வழியில் குறுக்கிடுவது போல உணர விரும்பவில்லை. 343 00:21:54,481 --> 00:21:56,066 இல்லை. கண்டிப்பாக இல்லை. 344 00:21:56,149 --> 00:21:59,236 ஏனெனில் நான் உங்கள் வழியைத் தடுப்பது போல உணர்கிறேன். 345 00:21:59,319 --> 00:22:00,946 எப்படி நீங்கள் அதை சொல்லலாம்? அது எனக்கு கௌரவம். 346 00:22:01,029 --> 00:22:03,532 நான் ஆதரவான சூழலில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 347 00:22:03,615 --> 00:22:05,659 இங்கே மிகவும் ஆதரவாக இருக்கும். 348 00:22:05,742 --> 00:22:08,036 அந்தக் கதையை எழுதுவதில் உதவ நான் விரும்புகிறேன். 349 00:22:08,120 --> 00:22:11,665 உங்கள் மனதை நீங்கள் தெளிவாக்கலாம், உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரலாம். 350 00:22:11,748 --> 00:22:12,958 இது இருவருக்கும் பலனளிக்கும். 351 00:22:15,919 --> 00:22:16,920 எனக்குத் தெரியவில்லை. 352 00:22:20,716 --> 00:22:22,593 நான் இதைப் பற்றி யோசிக்க வேண்டும், மார்ட்டி 353 00:22:26,722 --> 00:22:28,265 தயவுசெய்து இருங்கள். 354 00:22:38,692 --> 00:22:39,693 சரி. 355 00:22:41,195 --> 00:22:43,572 பானியையும் குழந்தைகளையும் நாளை ஊருக்கு அனுப்பிவிட்டு, 356 00:22:43,655 --> 00:22:44,740 வேலையைத் தொடங்குவோம். 357 00:22:45,490 --> 00:22:47,242 சரி. நல்லது. 358 00:22:50,704 --> 00:22:51,705 நன்றி. 359 00:22:54,917 --> 00:22:57,544 குட்பை, எனதருமை கடல் மிருகங்களே. 360 00:22:57,628 --> 00:23:00,088 -பை, மார்ட்டி மாமா. -பை மார்ட்டி மாமா. 361 00:23:00,172 --> 00:23:01,965 மார்ட்டி, அவரைத் தவறாக வழிநடத்தாதீர்கள். 362 00:23:02,049 --> 00:23:03,467 என்னால் உறுதியாகக் கூறமுடியாது. 363 00:23:04,301 --> 00:23:05,302 -பை. -பை. 364 00:23:06,136 --> 00:23:08,931 இரண்டு வாரங்களில்... உங்களைச் சந்திக்க வேண்டுமா? 365 00:23:09,014 --> 00:23:10,766 பார்ப்போம். 366 00:23:11,475 --> 00:23:13,769 நான் எனது கிளையண்ட்களுக்கு நான் ஓய்வில் இருப்பது தெரியும், அதனால்... 367 00:23:13,852 --> 00:23:15,812 -சரி. -முதல் வரைவு முடிந்ததும் நீங்கள் 368 00:23:15,896 --> 00:23:17,814 கண்டிப்பாக இங்கே வரலாம். இல்லையா, மார்ட்டி? 369 00:23:17,898 --> 00:23:18,899 கண்டிப்பாக. 370 00:23:18,982 --> 00:23:21,443 சரி, வேடிக்கையாக இருங்கள். 371 00:23:21,527 --> 00:23:23,278 நாங்கள் வேடிக்கையாக இல்லை. வேலை செய்கிறோம். 372 00:23:23,362 --> 00:23:24,947 சரி, அதைத்தான் கூறினேன். 373 00:23:28,534 --> 00:23:30,035 -பை, பசங்களா. -பை, அப்பா. 374 00:23:30,118 --> 00:23:31,286 உங்களை இப்போதே மிஸ் செய்கிறேன். 375 00:23:32,037 --> 00:23:34,373 ஹேய், கடுமையாக வேலை செய்யாதீர்கள், சரியா? 376 00:23:34,456 --> 00:23:36,708 ஏனெனில் அதுபோன்ற சமயங்களில் எப்படி நடந்துகொள்வீர்கள் எனத் தெரியும். 377 00:23:37,209 --> 00:23:39,670 -என்னிடமே சிகிச்சையாளராக நடிக்காதே. -சும்மா கூறினேன். 378 00:23:39,753 --> 00:23:43,173 நீங்கள் நன்றாக இருப்பதாகக் கூறுகிறீர்கள், ஆனால் அப்படி இருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. 379 00:24:02,109 --> 00:24:03,110 மார்ட்டி. 380 00:24:04,444 --> 00:24:05,612 என்ன? எதுவும் பிரச்சினையா? 381 00:24:05,696 --> 00:24:07,614 இல்லை. இது எழுந்திருக்க வேண்டிய நேரம். 382 00:24:07,698 --> 00:24:09,700 என்ன? நேரம் என்ன? 383 00:24:10,701 --> 00:24:11,827 வேலையைத் தொடங்குவதற்கான நேரம். 384 00:24:15,539 --> 00:24:17,541 சரி. 385 00:24:17,624 --> 00:24:22,462 அவன் கதவைத் தட்டினான், மெதுவாகக் கதவை அவளது அறைப் பக்கம் தள்ளினான். 386 00:24:24,882 --> 00:24:28,427 அவள் அங்கு கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள், 387 00:24:28,510 --> 00:24:32,306 தன் உதடுகளில் லிப்ஸ்டிக்கை மெதுவாகப் பூசிக்கொண்டிருந்தாள். 388 00:24:33,849 --> 00:24:36,727 டஸ்ட்டி பின்க். பரீஷியனாக இருக்கலாம். 389 00:24:36,810 --> 00:24:37,978 “பரீஷியனாக. 390 00:24:39,646 --> 00:24:41,690 -இருக்கலாம்.” -“நீ சொன்னது சரிதான்” என்றான். 391 00:24:41,773 --> 00:24:44,776 “நீ கூறியது போலவே பிணம் அங்கு கிடந்தது. 392 00:24:45,527 --> 00:24:49,364 பாலத்திற்குக் கீழே. இடது காலில் ஒரு ப்ரோக்.” 393 00:24:49,448 --> 00:24:53,994 “இடது காலில் ஒரு ப்ரோக்.” 394 00:24:54,077 --> 00:24:58,040 “ஆனால் நீ அவனைக் கொல்லவில்லை.” “உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டாள். 395 00:24:59,041 --> 00:25:01,418 நானும் அதையேதான் கேட்கவிருந்தேன். 396 00:25:04,129 --> 00:25:05,172 அவன்... 397 00:25:06,882 --> 00:25:10,469 இல்லை, இல்லை, இல்லை. அது அடிக்கட்டும். 398 00:25:10,552 --> 00:25:13,305 -இல்லை, எடுப்பதுதான் நல்லது. -தொடர்ச்சியாக போவதை நிறுத்த வேண்டாம். 399 00:25:14,640 --> 00:25:17,851 -ஹலோ. -ஹேய், மார்ட்டி. நான் புரூஸ். எப்படி இருக்கிறீரகள்? 400 00:25:17,935 --> 00:25:20,938 -நன்றாக இருக்கிறேன். நன்றி, புரூஸ். -அடக் கடவுளே. 401 00:25:22,064 --> 00:25:23,357 நாம் ஏஎஃப்சி பற்றி பேசலாமா? 402 00:25:23,440 --> 00:25:25,359 -இப்போது முடியாது. வேலையில் இருக்கிறோம். -இப்போது முடியாது, புரூஸ். 403 00:25:25,442 --> 00:25:26,693 நாம் விரைவில் பேசுவோம். 404 00:25:26,777 --> 00:25:27,945 -நிச்சயமாக. -சரி, ஆனா... மார்ட்டி... 405 00:25:30,239 --> 00:25:32,449 -மன்னிக்கவும், ஐக். -எங்கே விட்டோம்? 406 00:25:34,743 --> 00:25:35,744 கவனம். 407 00:25:41,041 --> 00:25:42,751 யூத வாரம் 408 00:26:17,369 --> 00:26:18,495 பிறகு திடீரென்று... 409 00:26:24,960 --> 00:26:26,795 இருங்கள். நான்... ஒன்று சொல்லவா? 410 00:26:31,466 --> 00:26:34,553 மார்ட்டி! ஹேய், மார்ட்டி! இங்கே வாருங்கள். வந்து என் புதிய நண்பர்களைச் சந்தியுங்கள். 411 00:26:36,221 --> 00:26:38,765 அவருக்கு புதிய ஆஃபர் கொடுத்தேன். சரியானதைச் செய்யுங்கள். இருக்கட்டும். 412 00:26:40,392 --> 00:26:43,312 மார்ட்டி! இங்கே வாருங்கள். நீங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும். 413 00:26:43,395 --> 00:26:48,483 இது மார்க்கஸ், ப்ராக், கிங்ஸ்லீ மற்றும் லென்னாக்ஸ். 414 00:26:48,567 --> 00:26:51,028 இவர்களது எல்லாப் பெயர்களும் கடைசிப் பெயர்கள். வேடிக்கையாக உள்ளது. 415 00:26:51,612 --> 00:26:53,030 ஹாய், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 416 00:26:53,113 --> 00:26:54,323 -ஹேய், மார்ட்டி. -ஹேய், மார்ட்டி. 417 00:26:55,157 --> 00:26:58,076 இவர்கள்தான் சிறந்தவர்கள். இவர்கள் வாரத்திற்கு 75 மணிநேரம் உழைக்கின்றனர், 418 00:26:58,160 --> 00:27:00,162 இப்போது அவர்களுக்குத் தேவையான ஓய்வை எடுக்கின்றனர். 419 00:27:00,245 --> 00:27:02,039 -சரிதானே? -கண்டிப்பாக! 420 00:27:03,290 --> 00:27:04,499 இந்த இடம் எப்படி இருக்கிறது? 421 00:27:05,375 --> 00:27:07,461 இது அருமையான இடம். ஆம். 422 00:27:07,544 --> 00:27:10,380 அந்த பார்பிகியூவைப் பார்த்தீர்களா? அது உங்கள் வீட்டைவிடப் பெரியது. 423 00:27:10,464 --> 00:27:12,049 மிகப் பெரியது. ஆம். 424 00:27:12,549 --> 00:27:14,343 இந்த நீச்சல் குளம் எப்படி இருக்கிறது? 425 00:27:14,426 --> 00:27:16,845 சிறுநீரக வடிவம். சிறப்பாகத்தான் இருக்கும். 426 00:27:16,929 --> 00:27:21,016 நீங்கள் ஆடைகளைக் கழட்டிவிட்டு குதியுங்கள். எந்த ஆடையுமின்றி. என்ன? வாருங்கள்! 427 00:27:21,099 --> 00:27:24,645 குதியுங்கள்! குதியுங்கள்! 428 00:27:24,728 --> 00:27:26,688 நான் மிகவும் வியர்வையாக இருக்கிறேன். 429 00:27:26,772 --> 00:27:28,065 -வியர்வையா? -வாங்க, மார்ட்டி. 430 00:27:28,148 --> 00:27:29,983 -குதியுங்கள். -என் வியர்வை குளத்தில் இருக்க விரும்ப மாட்டீர்கள். 431 00:27:30,067 --> 00:27:31,193 -குதியுங்கள். -உள்ளே வாங்க, மார்ட்டி. 432 00:27:31,276 --> 00:27:33,070 எனக்கும் விருப்பமாக உள்ளது, நான்... 433 00:27:33,153 --> 00:27:36,365 மிகவும் பிஸியாக இருக்கிறேன், நான் சென்று அதைத் தொடர வேண்டும். 434 00:27:36,448 --> 00:27:38,784 -மார்ட்டி. -உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 435 00:27:38,867 --> 00:27:41,495 -ஆம். -இப்போதுதான் வந்தீர்கள். பாருங்கள், மார்ட்டி! 436 00:27:42,204 --> 00:27:43,622 மார்ட்டி, வாருங்கள்! 437 00:27:44,206 --> 00:27:46,083 மகிழ்ச்சித் திருடர். 438 00:27:46,166 --> 00:27:49,962 மன்னிக்கவும், நண்பர்களே. நான் எனது தனிப்பட்ட நரகத்திற்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். 439 00:27:51,588 --> 00:27:53,757 இருந்தாலும், விடுமுறையில் வெளியே இருப்பது நன்றாக இருந்தது. 440 00:27:59,346 --> 00:28:03,767 அது கிடக்கட்டும், கொஞ்சம் இசையின் ஒலியைக் குறைத்தால் நன்றாக இருக்கும். 441 00:28:03,851 --> 00:28:06,854 எனக்குப் பிடித்துள்ளது, மார்ட்டிதான் முசுடாக இருக்கிறார் என நினைக்கிறேன். 442 00:28:06,937 --> 00:28:08,188 பரிதாபமான மார்ட்டி! 443 00:28:09,523 --> 00:28:10,524 குட் பை. 444 00:28:11,108 --> 00:28:12,192 எனக்கு பானம் ஊற்று. 445 00:28:12,276 --> 00:28:14,611 என்னவொரு அருவருப்பான ஆட்கள். 446 00:28:15,112 --> 00:28:18,574 -அவர்களா? -பணக்காரத் திமிர் பிடித்தவர்கள். 447 00:28:18,657 --> 00:28:19,783 என்னால் அவர்களை சகிக்க முடியாது. 448 00:28:19,867 --> 00:28:23,287 நல்ல விஷயம் என்னவெனில், அதன் உரிமையாளர் மோசமான விவாகரத்துச் சிக்கலில் உள்ளார். 449 00:28:23,370 --> 00:28:24,371 -ஓ, கடவுளே. -ஆம். 450 00:28:24,454 --> 00:28:26,290 அவர் இதை விரைவாக விற்க வேண்டும். 451 00:28:26,373 --> 00:28:29,376 நீங்கள் குறைவான விலை சொன்னாலே, அவர் ஏற்றுக்கொள்வார். 452 00:28:29,459 --> 00:28:30,460 பாப் பாவம். 453 00:28:30,544 --> 00:28:32,129 நீங்கள் உங்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டை அழைக்கணும். 454 00:28:33,380 --> 00:28:34,882 -எனக்குத் தெரியவில்லை. -நீங்கள் பைத்தியமா? 455 00:28:34,965 --> 00:28:36,842 தெற்கு ஹாம்ப்டனில் உங்களிடம்தான் சிறந்த வீடு இருக்கும். 456 00:28:39,011 --> 00:28:40,846 இது அந்த மரம் பற்றியதுதானே? 457 00:29:07,789 --> 00:29:10,042 -இடதுபக்கம் திரும்புங்கள். -இது சாகசமாக உள்ளது. 458 00:29:10,709 --> 00:29:12,211 ஆம். 459 00:29:12,294 --> 00:29:14,546 -சரி, நேராக. -சரி. நேராகத்தான் போகிறேன். 460 00:29:14,630 --> 00:29:16,882 -நீங்கள் வலதுபக்கம் திரும்ப வேண்டும். இப்போது... -இப்போதா? 461 00:29:17,716 --> 00:29:19,510 -எனக்கு மயக்கம் வருகிறது. -எங்கே இருக்கிறீர்கள் எனத் தெரியுமா? 462 00:29:19,593 --> 00:29:21,220 என்னால் கணிக்க முடியவில்லை. 463 00:29:21,303 --> 00:29:24,932 -சரி, இப்போது. நில்லுங்கள். நான்... -சரி. என்ன? 464 00:29:25,015 --> 00:29:26,266 -சரி. -சரி. 465 00:29:27,351 --> 00:29:29,269 சரி, கண்களைத் திறங்கள். 466 00:29:31,980 --> 00:29:36,818 ஆம், இனி நீங்கள் அந்த ப்ளூபெர்ரி நிறச் சுவரைப் பார்க்க வேண்டாம். 467 00:29:36,902 --> 00:29:39,112 -இனி வேண்டாம். -இனி வேண்டாம். 468 00:29:39,821 --> 00:29:41,365 சுவரில் ஓட்டைகளாக உள்ளன. 469 00:29:41,448 --> 00:29:42,574 சரிசெய்துவிடுவோம். 470 00:29:43,200 --> 00:29:45,702 -இது ஒரு... எனக்கு ஒரு காட்சி தெரிந்தது. -ஆம். 471 00:29:45,786 --> 00:29:48,497 அந்த மோனோக்ரோமாடிக் பைத்தியக்காரத்தனம் எல்லாம். 472 00:29:48,580 --> 00:29:53,085 இது தெரியுமா? இங்குதான் எனக்கும் ஃபிலிஸுக்கும் என் பெற்றோர் உயரத்தை அளப்பார்கள். 473 00:29:53,168 --> 00:29:54,753 ஓ, கடவுளே. 474 00:29:55,337 --> 00:29:58,173 அதை நினைக்கவே வேடிக்கையாக உள்ளதல்லவா? நான் இந்த உயரம்தான் இருந்தேன். 475 00:29:58,257 --> 00:30:01,802 அடக் கடவுளே. ஒரு கோடையில் ஃபிலிஸ் மிகவும் உயரமாக இருந்தாள் என்று 476 00:30:01,885 --> 00:30:04,054 -நான் பொறாமைப்பட்டேன். -அவர்கள் இறந்துவிட்டனர். 477 00:30:05,556 --> 00:30:08,642 -என்ன? -மார்ட்டி, நீ அவர்களை விட வேண்டும். 478 00:30:08,725 --> 00:30:12,271 இந்த வீடு கண்டிப்பாக அருங்காட்சியகம் இல்லை. இது ஒரு சமாதி. 479 00:30:14,314 --> 00:30:16,149 சில நேரம் உங்கள் மனநிலையை முன்னேற்ற நான் முயல்கிறேன், ஆனால் 480 00:30:16,233 --> 00:30:18,861 நீங்கள் முயல்வதில்லை எனத் தோன்றுகிறது? என்ன சொல்கிறேன் எனப் புரிகிறதா? 481 00:30:18,944 --> 00:30:22,990 என்னை மன்னிக்கவும். நான் இன்னும் முயல்கிறேன். 482 00:30:24,366 --> 00:30:25,450 என்னிடம் கோபப்படாதீர்கள். 483 00:30:25,534 --> 00:30:27,703 நான் கோபப்படவில்லை. நான்... 484 00:30:29,037 --> 00:30:30,455 மார்ட்டி, அமைதி. 485 00:30:31,832 --> 00:30:34,126 மூச்சுவிடுங்கள். உங்கள் இதயத்திற்கு நல்லதில்லை. 486 00:30:36,336 --> 00:30:40,007 இது சரியாகிவிடும். இது முடியவில்லை. இது சரியாகிவிடும். 487 00:30:40,090 --> 00:30:41,175 -என்னை நம்புங்கள். -சரி. 488 00:30:58,692 --> 00:31:01,945 நான் இப்போதுதான் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டுடன் பேசினேன். 489 00:31:02,029 --> 00:31:04,156 -உண்மையாகவா? என்ன சொன்னார்? -கெட்ட செய்தி. 490 00:31:04,239 --> 00:31:05,616 என்ன சொல்கிறீர்கள்? 491 00:31:05,699 --> 00:31:08,452 எந்தச் சூழலிலும் அந்த வீட்டை யாரும் வாங்கக்கூடாது என்கிறார். 492 00:31:08,535 --> 00:31:10,913 அதற்கு அண்டர்பின்னிங் தேவை, பிறகு செப்டிக் டேங்க் வேலை செய்ததே இல்லையாம். 493 00:31:11,413 --> 00:31:12,539 அவர் ஏன் அப்படிச் சொல்கிறார்? 494 00:31:14,082 --> 00:31:16,126 உங்களுக்குத் தெரிகிறதா? அவரே இந்த வீட்டை வாங்க நினைக்கிறார். 495 00:31:16,210 --> 00:31:19,880 ஓ, இல்லை. அவர் எங்கள் பழைய குடும்ப நண்பர். அவர் என்னை எச்சரிக்கிறார். 496 00:31:19,963 --> 00:31:23,383 கிறுக்குத்தனம். நீங்கள் தங்கச் சுரங்கத்தில் இருப்பது அவருக்குத் தெரியும், அதை அடைய விரும்புகிறார். 497 00:31:23,467 --> 00:31:24,676 எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான்... 498 00:31:25,552 --> 00:31:26,678 அவர் பொய் சொல்கிறார், மார்ட்டி. 499 00:31:26,762 --> 00:31:29,389 நாம் விரைவாக நடவடிக்கை எடுக்கணும். நீங்கள் மரத்தை அகற்றுபவருக்கு கார் செய்தீர்களா? 500 00:31:30,390 --> 00:31:31,475 இல்லை. 501 00:31:31,558 --> 00:31:32,559 ஏன்? 502 00:31:34,645 --> 00:31:36,522 உங்களுக்கும் அந்த மரத்திற்கும் அப்படி என்ன உள்ளது? 503 00:31:37,022 --> 00:31:40,776 எனக்குத் தெரியவில்லை. அதற்கு உணர்வுப்பூர்வமான மதிப்பு உள்ளது என நினைக்கிறேன். 504 00:31:40,859 --> 00:31:43,445 உணர்வுப்பூர்வமான... இந்த மரம் உங்களை வளர்த்ததா? 505 00:31:44,530 --> 00:31:45,364 இல்லை. 506 00:31:45,447 --> 00:31:49,368 இல்லையா? இந்த மரம் உங்கள் டயபரை மாற்றியதா? உங்களுக்குச் சமைத்துக் கொடுத்ததா? 507 00:31:49,451 --> 00:31:50,702 இது உங்கள் பள்ளிக்குப் பணம் செலுத்தியதா? 508 00:31:51,286 --> 00:31:53,497 நான் அதைச் சொல்ல வரவில்லை. 509 00:31:53,580 --> 00:31:56,250 என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் இந்த மரத்தை நேசிக்கிறீர்களா? 510 00:31:57,167 --> 00:31:59,211 சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் யாரையும் நேசித்தது இல்லை என்றீர்கள், 511 00:31:59,294 --> 00:32:01,797 ஆனால் மரத்தை நேசித்ததை என்னிடம் கூறவில்லை. 512 00:32:01,880 --> 00:32:02,881 அது எனக்குப் பிடித்த மரம். 513 00:32:02,965 --> 00:32:05,300 பிடிக்குமா? எவ்வளவு பிடிக்குமா? பாலியல் ரீதியாகவா? 514 00:32:06,260 --> 00:32:09,388 ஏனெனில் நீங்கள் இந்த மரத்துடன் உடலுறவு கொள்ள விரும்புவது போல எனக்குக் கேட்கிறது. 515 00:32:10,806 --> 00:32:12,140 இந்த மரத்துடன் உறவு கொள்ள விரும்பவில்லை. 516 00:32:14,434 --> 00:32:15,435 நான் விளையாட்டிற்குக் கூறினேன். 517 00:32:21,275 --> 00:32:25,571 இந்த மரத்துடன் உங்களுக்குத்தான் ஏதோ பிரச்சினை உள்ளது என்று நினைக்கிறேன். 518 00:32:26,154 --> 00:32:29,074 நான் மரத்தை வெட்ட விரும்பவில்லை என்று கூறினேன், ஆனால் நீங்கள் விடவில்லை. 519 00:32:29,157 --> 00:32:32,786 ஏதோ காரணத்திற்காக நீங்கள் இந்த மரத்தை வெறுப்பதாகத் தோன்றுகிறது. 520 00:32:36,623 --> 00:32:39,668 நோயாளிகள் டாக்டருக்கு சிகிச்சை பார்க்கிறார்களா? 521 00:32:40,377 --> 00:32:42,254 நீங்கள் என்னை மனரீதியாக ஆய்வுசெய்கிறீர்களா? 522 00:32:42,337 --> 00:32:44,631 இல்லை. இல்லை. எனக்குப் புரியவில்லை... 523 00:32:44,715 --> 00:32:46,133 இல்லை, உங்களுக்குப் புரியவில்லை, மார்ட்டி. 524 00:32:47,301 --> 00:32:48,802 ஆனால் என்னால் உதவ முடியும். 525 00:32:50,012 --> 00:32:54,016 இந்த மரத்துடனான உங்கள் உணர்ச்சிகள் ஆரோக்கியமானவை அல்ல. 526 00:32:55,726 --> 00:32:57,519 இது உங்கள் அம்மாவுடன் தொடர்புடையது. 527 00:32:57,603 --> 00:33:00,230 உங்கள் அம்மா உங்களை ஆரோக்கியமான முறையில் நேசிக்கவில்லை, 528 00:33:00,314 --> 00:33:03,525 அதுதான் உங்கள் சிக்கலுக்கான மூலக் காரணம். 529 00:33:03,609 --> 00:33:08,947 ஒரு ஏமாற்றுபவன் இதுதான் உங்கள் அம்மாவின் உடல் என்று கூறலாம். 530 00:33:09,031 --> 00:33:13,577 உங்கள் மீதான அவரது முறையற்ற ஆசையின் பெரிய நினைவுச் சின்னம். 531 00:33:14,161 --> 00:33:15,495 -அது... -ஆம். 532 00:33:15,579 --> 00:33:18,874 அல்லது உங்களை மீண்டும் உள்ளிழுக்க முயலும் அவரது பிறப்புறுப்பு. 533 00:33:20,000 --> 00:33:21,835 உங்கள் அம்மா உங்களை வளர விடவில்லை, 534 00:33:21,919 --> 00:33:26,173 இப்போது அவர் உங்களை உணர்வுப்பூர்வமாகவும் பாலியல்ரீதியாகவும் வளராமல் விட்டுச் சென்றுள்ளார். 535 00:33:26,256 --> 00:33:27,966 அது ஒரு மோசமான சோகம்! 536 00:33:28,050 --> 00:33:29,510 நிறுத்துங்கள். 537 00:33:30,093 --> 00:33:32,471 எனக்குத் தெரியும், மார்ட்டி. இது கடினமானது. 538 00:33:32,554 --> 00:33:36,099 உண்மை கசக்கும், ஆனால் இதுதான் நீங்கள் குணமடைய ஒரே வழி. 539 00:33:38,769 --> 00:33:42,606 நான் உங்களைச் சரியாக நேசிக்கிறேன். உங்களைக் காயப்படுத்த மாட்டேன். 540 00:33:43,106 --> 00:33:47,027 இந்த மரம் போல நீங்கள் மலர்வது என் பொறுப்பு. 541 00:33:49,696 --> 00:33:50,697 சரி. 542 00:33:57,829 --> 00:33:59,248 எனக்குத் தெரியும். 543 00:34:03,544 --> 00:34:04,795 என்ன செய்யப் போகிறீர்கள்? 544 00:34:11,301 --> 00:34:12,302 எனக்குத் தெரியவில்லை. 545 00:34:14,972 --> 00:34:18,516 எப்போதுமா? நாம் உங்கள் இதயத்திலும் ஆன்மாவிலும் உள்சென்று பார்த்தோம் என்று நினைத்தேன். 546 00:34:18,600 --> 00:34:20,101 நாம் புரிதலை அடைந்தோம் என்று நினைத்தேன். 547 00:34:22,187 --> 00:34:24,231 -நான் எனது நேரத்தை வீணடிக்கிறேனா? -இல்லை. கண்டிப்பாக இல்லை. 548 00:34:24,313 --> 00:34:26,275 தெரியுமா? ஒருவேளை நான் மோசமான சிகிச்சையாளராக இருக்கலாம். 549 00:34:26,358 --> 00:34:27,650 இல்லை. இல்லை. 550 00:34:27,734 --> 00:34:29,695 இல்லை, நான் மோசமாக சிகிச்சையாளர் என்று நினைக்கிறேன், 551 00:34:29,777 --> 00:34:31,947 ஏனெனில் நீங்கள் இன்னும் அதைவிடவே இல்லை. 552 00:34:33,699 --> 00:34:35,826 -நான் இதை விடவேண்டும் என நினைக்கிறேன். -இல்லை. 553 00:34:35,909 --> 00:34:37,244 ஆம். சிறப்பான யோசனை. 554 00:34:37,327 --> 00:34:39,871 நான் உங்களையும் உங்கள் சிகிச்சையையும் கைவிடுகிறேன். 555 00:34:40,455 --> 00:34:42,331 இல்லை, பரவாயில்லை. கவலை வேண்டாம். 556 00:34:42,416 --> 00:34:45,335 நான் என் பைகளை எடுத்து வைக்கிறேன், உங்கள் வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன். 557 00:36:26,895 --> 00:36:28,689 ஒரு வருடத்திற்குப் பிறகு 558 00:36:40,033 --> 00:36:42,452 பேர்ல் ஏன் இங்கிருக்கிறாள்? இவர் அவளது தந்தை இல்லை. 559 00:36:42,536 --> 00:36:44,788 ஆம், ஆனால் அவளை வளர்த்திருக்கிறார், அவள் அவரை நேசிக்கிறாள். 560 00:36:45,289 --> 00:36:46,373 வுல்ஃப்கேங் ஹெர்ஷ்காஃப் 1907-1990 561 00:36:46,456 --> 00:36:48,458 என்னிடம் கண்ணீர் இல்லையென நினைக்கிறேன். 562 00:36:48,542 --> 00:36:50,043 மனம் விட்டு அழுவது நல்லது. 563 00:36:50,794 --> 00:36:52,421 வுல்ஃப் என்ன சொல்வார்? 564 00:36:53,046 --> 00:36:55,716 அவர் “அம்மா மீண்டும் கசிகிறார்” என்று கூறுவார். 565 00:36:56,466 --> 00:37:01,388 அல்லது “நீங்கள் இருவரும் தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமெடுக்கும் வரை அழப் போகிறீர்கள்” என்பார். 566 00:37:07,102 --> 00:37:08,270 எப்படி இருக்கிறாய்? 567 00:37:08,353 --> 00:37:09,688 நன்றாக இருக்கிறேன், அம்மா. 568 00:37:09,771 --> 00:37:11,356 இது உனக்குக் கடினமாக இருக்கும் எனத் தெரியும். 569 00:37:11,440 --> 00:37:13,108 இல்லை. சுலபமாகத்தான் உள்ளது. 570 00:37:14,526 --> 00:37:16,737 -ஐக். -இல்லை. இனி அவரை மகிழ்விக்க முயல வேண்டியதில்லை. 571 00:37:16,820 --> 00:37:18,822 அன்பைக் காட்டத் தெரியாதவரை சந்தோஷப்படுத்த முயல வேண்டியதில்லை. 572 00:37:18,906 --> 00:37:20,240 செல்லமே, சொல்வதைக் கேள். 573 00:37:20,324 --> 00:37:21,700 இது நல்ல விஷயம்தான். 574 00:37:21,783 --> 00:37:24,119 அவர் அதிகமாக எதிர்பார்த்தார். 575 00:37:25,829 --> 00:37:27,080 போதவில்லை. 576 00:37:27,664 --> 00:37:32,669 பருக்கை இழந்த பிறகு, அவருக்கு இன்னொரு மகனை நேசிக்கும் தைரியம் வரவில்லை. 577 00:37:32,753 --> 00:37:35,172 அது உனக்குப் புரிகிறது அல்லவா? 578 00:37:38,008 --> 00:37:39,009 இல்லை. 579 00:37:59,071 --> 00:38:01,573 என்னிடம் ஒரு செய்தி உள்ளது. 580 00:38:02,366 --> 00:38:04,409 விற்பனை ஒருவழியாக முடிந்தது. 581 00:38:07,162 --> 00:38:08,956 இரண்டு இடங்களும் இப்போது என்னுடையது. 582 00:38:11,416 --> 00:38:12,835 வாழ்த்துகள். 583 00:38:12,918 --> 00:38:16,588 அந்த வேலியைப் பிரிக்க கான்ட்ராக்ட்டரை அழைத்துள்ளேன். 584 00:38:16,672 --> 00:38:17,881 இல்லை, இப்போதே அதைச் செய்வோம். 585 00:38:18,549 --> 00:38:19,800 இதைச் செய்து முடிப்போம். 586 00:38:54,126 --> 00:38:55,294 அடக் கடவுளே. 587 00:39:01,592 --> 00:39:02,593 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 588 00:39:06,889 --> 00:39:08,473 நாம் ஒரு பார்ட்டி நடத்த வேண்டும். 589 00:39:09,683 --> 00:39:11,226 புதிய வீட்டிற்கு அழைப்பதற்கான பார்ட்டி. 590 00:41:16,810 --> 00:41:18,812 நரேஷ் குமார் ராமலிங்கம்