1 00:00:06,000 --> 00:00:09,990 அலுவலக மேலாளர் பிரிவில் உனக்கு இடம் வேண்டாமா? 2 00:00:10,190 --> 00:00:12,410 தகுதியின் அடிப்படையில் அறை கிடைக்கணும். 3 00:00:12,610 --> 00:00:15,200 அட. ஏன் அப்ஸ்கர்ட் ஜங்கிள் செய்யலை? 4 00:00:15,400 --> 00:00:16,120 அது முடிஞ்சது. 5 00:00:16,320 --> 00:00:17,040 காம்ப்வேர் கேம்ஸ் திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி 6 00:00:17,240 --> 00:00:19,120 முடியும் வரை வேலை செய்ய வைத்தார். 7 00:00:19,320 --> 00:00:22,590 அப்படி ஒருத்தர் இல்லை. ரீஜஸ் பாடாஃப் பற்றி ஒரு மண்ணும் இல்லை. 8 00:00:22,790 --> 00:00:25,050 - எப்படி உறவு வைத்தார்? - அவரது வாய். 9 00:00:25,250 --> 00:00:27,270 - வேற யாரு பார்த்தது? - நானும் இலெய்னும். 10 00:00:28,320 --> 00:00:30,090 மறுபடியும் சுத்துறீங்களா? 11 00:00:30,290 --> 00:00:32,390 கிரேக், இது வருத்தமானதுனு தெரியும், 12 00:00:32,590 --> 00:00:34,220 ஆனா அவர் உன்னை கொல்லப் பார்க்கலை. 13 00:00:34,420 --> 00:00:37,310 - பேட்டி எப்படி இருக்கா? - நான் பொமோனா போனது தெரிஞ்சிடுச்சு. 14 00:00:37,510 --> 00:00:39,560 கிரேக் நல்லா இருக்கணும். 15 00:00:39,760 --> 00:00:40,600 3 நாள் காய்ச்சல். 16 00:00:40,800 --> 00:00:42,230 அவனுக்காக ஏன் பொய் சொல்றே? 17 00:00:42,430 --> 00:00:43,860 நில்லு, நில்லு. செல்லம்? 18 00:00:44,060 --> 00:00:44,770 ரீஜஸ் புகைப்படம் வந்துள்ளது 19 00:00:44,970 --> 00:00:47,880 - நான் ஏதாவது செஞ்சேனா? - தெரியலை, கிரேக். செஞ்சியா? 20 00:00:54,130 --> 00:00:56,830 என்ன செய்யற? என்ன குடிக்கற? 21 00:00:57,030 --> 00:00:58,220 இதோ தொடங்கியாச்சு. 22 00:01:03,270 --> 00:01:05,640 மன்னிக்கணும். இடிச்சேனா? 23 00:01:07,230 --> 00:01:08,800 நீதான் புது உதவியாளரா? 24 00:01:09,000 --> 00:01:11,570 சரி தானே? உன் பெயர் தெரியும். இரு, சொல்லாதே. 25 00:01:12,400 --> 00:01:14,050 - ஹுசைன்? - இலெய்ன். 26 00:01:14,250 --> 00:01:17,350 - இலெய்ன்! - நான் சாங்குக்கு வேலை தொடங்கினேன். 27 00:01:17,550 --> 00:01:20,810 இதுவரை அந்த தலைக்கனம் பிடிச்சவனை எப்படி சமாளிக்கிற? 28 00:01:21,010 --> 00:01:22,230 - சாங்கா? - ஆமா. 29 00:01:22,430 --> 00:01:24,110 அவர் பரவாயில்ல. 30 00:01:24,300 --> 00:01:28,820 - இன்றிரவு இருப்பார்னு நினைச்சேன். - இல்லை, இதுக்கெல்லாம் வரமாட்டார். 31 00:01:29,020 --> 00:01:32,420 அப்படி வந்தால்... நாங்க வரமாட்டோம். 32 00:01:37,010 --> 00:01:38,220 இன்னொரு ஷாட். 33 00:01:42,350 --> 00:01:47,190 - எனக்கு எட்டு நிமிஷம் இருக்கு. - அது போதும்ன்னு தோணுதா? 34 00:01:49,060 --> 00:01:50,060 எதுக்கு? 35 00:01:51,400 --> 00:01:53,110 உன்னோடு வர என்னை சம்மதிக்க வைக்க. 36 00:02:02,830 --> 00:02:04,540 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 37 00:02:22,140 --> 00:02:24,720 த கன்சல்டன்ட் 38 00:02:48,790 --> 00:02:49,770 தொடங்கு. 39 00:02:49,970 --> 00:02:52,860 எந்த காம்ப்வேர் கேம் ஆடினாலும் ஆயிரம் இலவச நாணயங்கள். 40 00:02:53,060 --> 00:02:55,950 அதை முதலில் முடிப்பவங்களுக்கு இலவசமான சஃபாரி வழங்கலாம். 41 00:02:56,150 --> 00:02:57,410 கேமுக்கு அடிமையாகி 42 00:02:57,610 --> 00:03:00,620 சிகிச்சை பெறுவதா பிரபலங்களை ட்வீட் செய்ய வைக்கலாம். 43 00:03:00,820 --> 00:03:03,620 இலவச பரிசுகள், டி-ஷர்ட்டுகள்... 44 00:03:03,820 --> 00:03:06,250 நல்லா ஆடுறவங்களை இணையத்தில் அம்பலப்படுத்தலாம். 45 00:03:06,450 --> 00:03:09,840 திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸியை தடை செய்யச் சொல்லி 46 00:03:10,040 --> 00:03:13,190 மிருக பாதுகாப்பு போராளிகளை போராட வைக்கலாம். 47 00:03:15,440 --> 00:03:18,440 ஒரு யானையை ஜுவிலிருந்து தப்பிக்க வைக்கலாமா? 48 00:03:29,160 --> 00:03:30,960 இலெய்னோடது ரொம்ப பிடிச்சது. 49 00:03:48,560 --> 00:03:50,680 பொமோனாவில் என்ன இருக்கு? பேட்டி 50 00:04:52,120 --> 00:04:54,830 பாடாஃப், டேனா நீங்க பார்க்க விரும்புவதா சொன்னா. 51 00:04:58,250 --> 00:05:03,050 இலெய்ன், உன் யோசனையை பத்தி சிந்திக்கிறேன். 52 00:05:05,760 --> 00:05:07,850 எந்த யோசனை? 53 00:05:08,260 --> 00:05:13,080 ஜூவிலிருந்து தப்பிக்கும் யானை. நகரில் ஆவேசமா ஓடுவது. 54 00:05:13,280 --> 00:05:17,000 அதுதிரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸிக்கு அதிக கவனத்தை கொடுக்கும். 55 00:05:17,200 --> 00:05:18,380 நிச்சயமா இருக்கும். 56 00:05:18,580 --> 00:05:21,320 அப்படி செய்ய முடியாதது வருத்தமானது. 57 00:05:27,280 --> 00:05:30,990 அது ஒரு யோசனை, திரு. பாடாஃப். 58 00:05:32,330 --> 00:05:34,000 எல்லையில்லா சிந்தனை. 59 00:05:34,620 --> 00:05:38,820 இந்த கேம் வியாபார ரீதியா ஜெயிப்பது அவசியம், இல்லையா? 60 00:05:39,020 --> 00:05:43,300 நிச்சயமா, அதுக்குதான் நாங்க எல்லாம் இவ்ளோ கஷ்டப்படுறோம். 61 00:05:45,840 --> 00:05:47,680 இலெய்ன், உன்னோடது நல்ல யோசனை. 62 00:05:49,300 --> 00:05:51,510 இப்போ உன்னை செய்யச் சொல்றேன். 63 00:05:54,430 --> 00:05:58,560 எல்ஏ நகர்புறத்தில் காட்டு யானையை கட்டவிழ்த்து விடணுமா? 64 00:06:02,440 --> 00:06:05,680 அதுக்கு எதிராக சட்டங்கள் இருக்கும். 65 00:06:05,880 --> 00:06:06,860 சந்தேகமே இல்லை. 66 00:06:07,450 --> 00:06:09,620 நெறிமுறை பரிசீலனை உள்ளன. 67 00:06:10,490 --> 00:06:13,830 ஆனா அந்த ஆபத்தை ஏற்கலாம். இல்லையா? 68 00:06:18,040 --> 00:06:22,070 அது எவ்ளோ சாத்தியம்ன்னு பார்க்கிறேன்... 69 00:06:22,270 --> 00:06:24,380 காம்ப்வேருக்கு தலைவர் தேவை. 70 00:06:25,260 --> 00:06:28,220 திரு. சாங்கின் பொறுப்புகளை ஏற்பதுக்கு. 71 00:06:33,100 --> 00:06:35,520 இலெய்ன், நான் எப்பவும் இங்க இருக்கமாட்டேன். 72 00:06:37,140 --> 00:06:38,890 நான் ஒரு ஆலோசகர். 73 00:06:43,150 --> 00:06:46,360 விலங்கு தொடர்பானவங்களை தெரியுமா? 74 00:06:46,900 --> 00:06:51,060 கோடையில் நாய்களை நடக்க கூட்டிப் போகும் பெண்ணை டேட் செய்தேன். 75 00:06:51,260 --> 00:06:53,180 மழை காலத்தில் வித்தியாசமா வாசனை வரும். 76 00:06:53,380 --> 00:06:56,230 இந்த கேமை பிரபலமாக்க விளம்பரப்படுத்தணும். 77 00:06:56,430 --> 00:06:59,270 "ஃபிளாஷ் மாப்"னு சொன்னா, நான் மயங்கிடுவேன். 78 00:06:59,470 --> 00:07:02,690 ஊருக்கு நடுவில் ஒரு காட்டு யானையை அவிழ்த்து விட சொல்றார். 79 00:07:02,890 --> 00:07:04,670 என்ன? இது யாரோட மோசமான யோசனை? 80 00:07:05,340 --> 00:07:06,570 எனக்கு ஞாபகம் இல்லை. 81 00:07:06,770 --> 00:07:09,030 எங்கும் கக்கா போகும், கார்கள் சேதமாகும். 82 00:07:09,230 --> 00:07:10,620 அது என் மேஜைக்கு வந்தது. 83 00:07:10,820 --> 00:07:13,200 நிஜமா அதை செய்ய நினைக்கலை, சரியா? 84 00:07:13,400 --> 00:07:15,930 ஏன்? எனக்கு முடியாதுனு தோணுதா? 85 00:07:19,600 --> 00:07:20,690 இதை எடுக்கணும். 86 00:07:24,940 --> 00:07:26,780 பேட்டி, எங்க இருக்க? 87 00:07:31,320 --> 00:07:32,610 ஏதாவது சொல்லு. 88 00:07:36,990 --> 00:07:39,120 நாம பேசலாமா? நான் சொல்றேன். 89 00:07:41,080 --> 00:07:44,330 ஆமாம், பொமோனா போனேன், ஆனா அது அப்படி இல்லை. 90 00:07:45,790 --> 00:07:48,590 உன்கிட்ட பொய் சொல்லியிருக்க கூடாது. சொதப்பிட்டேன். 91 00:07:49,090 --> 00:07:50,340 நிஜமா மன்னிச்சுக்கோ. 92 00:07:54,340 --> 00:07:55,600 பேட்டி? 93 00:07:57,100 --> 00:07:58,220 பேட்டி? 94 00:08:00,980 --> 00:08:01,890 பேட்டி? 95 00:08:07,690 --> 00:08:11,240 - நீ நலமா? - ஒத்துக்கிட்டேன். அதுதான் மிச்சமிருக்கு. 96 00:08:32,090 --> 00:08:33,590 - ஹேய். - ஹேய். 97 00:08:34,300 --> 00:08:37,300 எப்பவும் தொடர்பில் இருப்போம்னு நினைச்சேன். 98 00:08:43,480 --> 00:08:44,520 சரி. 99 00:08:45,060 --> 00:08:46,840 லெமனேட் கூட ஒரு பாட் தாய், 100 00:08:47,040 --> 00:08:50,860 செம்பருத்தி சேர்த்த சைவ மஞ்சள் குழம்பு ஒன்று. 101 00:08:52,070 --> 00:08:55,450 - அதை சரியா சொல்றேனா? செம்-பருத்தி? - அதை மேஜையில் வை. 102 00:08:59,080 --> 00:09:00,620 யாராவது வர்றாங்களா? 103 00:09:01,450 --> 00:09:02,290 இல்லை. 104 00:09:11,170 --> 00:09:13,570 யானையை பற்றிய தகவல் இருக்கு. 105 00:09:13,770 --> 00:09:16,260 - மதியம் சாப்பிட்டியா? - இல்லை. 106 00:09:21,430 --> 00:09:23,730 - நான் கொடுக்கலை. - சரி. 107 00:09:33,940 --> 00:09:34,990 உன் யானை பற்றி? 108 00:09:35,610 --> 00:09:39,680 ஜம்போ என்ற பெயரில் 35 வயது பெண் யானை ஒரு பயணிக்கும் சர்க்கசில் இருக்கு. 109 00:09:39,880 --> 00:09:43,770 இங்கே அதுக்கு அனுமதி இல்லை, ஆனா சின்ன ஊர்களில் நடத்துறாங்க. 110 00:09:43,970 --> 00:09:48,710 எனக்கு தோணுச்சு, லாரியில் அவளை ஏற்றியதும், இந்த பக்கமா மாற்றி கொண்டு வரலாம். 111 00:09:50,380 --> 00:09:52,200 - அது திருட்டா? - விடுதலை. 112 00:09:52,400 --> 00:09:55,820 நமக்கு சாதகமா, அது ஜம்போவின் நல்லதுக்குன்னு சொல்லலாம். 113 00:09:56,020 --> 00:10:00,700 அவளை கொண்டு வந்து, கொண்டு போக ஒருத்தரை ஏற்பாடு செய்வதுதான் கொஞ்சம் குழப்பமானது. 114 00:10:00,900 --> 00:10:03,720 அதுக்காக, எனக்கு ஒரு தொகை வேணும். 115 00:10:04,390 --> 00:10:06,000 - எவ்வளவு? - இதுவரை தெரியாது, 116 00:10:06,200 --> 00:10:10,860 ஆனா மதியம் ஒருத்தரை சந்திக்கிறேன், அவரிடம் இந்த யோசனையை சொல்றேன். 117 00:10:11,270 --> 00:10:13,900 - அவரை நம்பலாமா? - சில ரீதிகளில். 118 00:10:16,280 --> 00:10:18,950 ஒளிவுமறைவில்லாமல், என் முன்னாள் காதலன். 119 00:10:21,370 --> 00:10:22,740 ஏன் பிரிஞ்ச? 120 00:10:25,450 --> 00:10:30,880 என் வேலைக்கு ஏற்காத விஷயங்களை செய்தான். 121 00:10:31,840 --> 00:10:35,260 பட்ரீஸ் பணத்துக்காக எதுவும் செய்ற ஆளு. 122 00:10:36,260 --> 00:10:39,030 அந்த வேலையை அவனால் மட்டும்தான் செய்ய முடியும். 123 00:10:39,230 --> 00:10:41,430 சரி, அவனை சந்திக்க ஆவலா இருக்கேன். 124 00:10:42,470 --> 00:10:44,810 நான் செய்யப் போறதா நினைச்சேன். 125 00:10:46,100 --> 00:10:46,930 நீதான் செய்ற. 126 00:10:48,690 --> 00:10:51,560 அப்போ, ஒரு தொகையை சொல்லி, என்கிட்ட விடுங்க. 127 00:10:55,480 --> 00:10:56,780 $20,000. 128 00:11:07,910 --> 00:11:11,330 தெரியாத அழைப்பாளர் 129 00:11:13,250 --> 00:11:15,590 - ஹலோ? - ஹாய், இது கிரேகா? 130 00:11:16,630 --> 00:11:18,450 ஆமா. யாரு இது? 131 00:11:18,650 --> 00:11:20,880 டாக்டர் கிராண்ட். பேட்டியோட வேல செய்றேன். 132 00:11:22,090 --> 00:11:22,930 ஆமாம். 133 00:11:25,060 --> 00:11:26,250 எப்படி இருக்கீங்க? 134 00:11:26,450 --> 00:11:30,380 அவளை ஃபோனில் கூப்பிட்டேன், ஆனா பதில் வரவில்லை. 135 00:11:30,580 --> 00:11:34,090 வெள்ளிகிழமை உடம்பு முடியாம வரலை, ஆனா இன்று வருவதா சொன்னா. 136 00:11:34,290 --> 00:11:36,590 இப்போ பரவுற காய்ச்சல் வந்திருக்கு. 137 00:11:36,790 --> 00:11:39,050 கூப்பிட மறந்து தூங்கியிருக்கலாம். 138 00:11:39,250 --> 00:11:41,470 - நல்லா இருந்தால் சரி. - நல்லா இருப்பாள். 139 00:11:41,670 --> 00:11:43,770 சரியாகும் போது கூப்பிட சொல்றேன். 140 00:11:43,970 --> 00:11:45,370 - நன்றி, கிரேக். - நிச்சயமா. 141 00:11:59,970 --> 00:12:02,260 உன் பாஸ் கூப்பிட்டார். கவலைப்படறார். 142 00:12:13,020 --> 00:12:15,230 போய் முட்டிக்கோ பேட்டி 143 00:12:48,640 --> 00:12:49,720 ஹாய். 144 00:12:51,220 --> 00:12:52,730 வந்ததுக்கு நன்றி. 145 00:12:53,560 --> 00:12:55,350 - எப்படி இருக்க? - நலம். 146 00:12:56,350 --> 00:12:57,270 அருமை. 147 00:12:59,230 --> 00:13:01,090 என் அறைக்கு வாயேன்? 148 00:13:01,290 --> 00:13:05,280 - உனக்கு அறை இருக்கா? - ஆமா, நிறைய மாற்றங்கள். 149 00:13:17,250 --> 00:13:19,570 இங்க நீ ஆரம்பிச்சது ஞாபகமிருக்கு. 150 00:13:19,770 --> 00:13:24,010 - உதவியாளரா இருந்த? - இப்போ படைப்பு தொடர்பாளர். 151 00:13:25,220 --> 00:13:27,620 உன் பாஸை சுட்டுட்டாங்களாமே? 152 00:13:27,820 --> 00:13:28,890 சாங். 153 00:13:29,800 --> 00:13:31,100 அது பெரிய கதை. 154 00:13:32,310 --> 00:13:34,140 இப்போ புது நிர்வாகம் வந்திருக்கு. 155 00:13:37,650 --> 00:13:38,860 அப்போ... 156 00:13:40,770 --> 00:13:41,980 எதுக்கு கூப்பிட்ட? 157 00:13:43,190 --> 00:13:45,680 உனக்கு ஒரு வேலை இருக்கு. 158 00:13:45,880 --> 00:13:46,910 அலுவலக வேலையா? 159 00:13:47,660 --> 00:13:49,700 வேணாம். நன்றி. 160 00:13:49,950 --> 00:13:54,370 உன் திறமைகளுக்கு ஏத்த மாதிரி சிலதை யோசிக்கிறேன். 161 00:13:55,250 --> 00:14:00,320 அப்போ நீ பொய் சொல்லலை, ஆனா பொய்க்கு மேல பொய் சொன்ன. 162 00:14:00,520 --> 00:14:03,300 ஆமா. இப்போ எனக்கு தெரியவே தெரியாது. 163 00:14:07,510 --> 00:14:10,510 என்ன... உன் நிலைமை என்ன? 164 00:14:10,970 --> 00:14:14,430 நிறைய பேர் நேரடியா வந்து லெஸ்பியனானு கேட்பாங்க. 165 00:14:22,520 --> 00:14:24,360 இங்க எவ்ளோ காலமா இருக்க? 166 00:14:24,900 --> 00:14:28,410 அது, பார்ப்போம். இரண்டு வாரமா இருக்கேன், 167 00:14:29,450 --> 00:14:32,810 அப்புறம் அந்த பையன் பாஸை சுட்டான். 168 00:14:33,010 --> 00:14:36,270 குறைவான கெட்டமீன் டோஸில் இருந்தேன், நேரம் போனது நினைவில்ல, 169 00:14:36,470 --> 00:14:39,080 இப்போ திரும்ப வந்துட்டேன். 170 00:14:43,040 --> 00:14:45,090 மொத்தமா ஒரு மாசம் இருக்கும். 171 00:14:47,130 --> 00:14:48,220 அது ரொம்ப அதிகமா? 172 00:14:50,050 --> 00:14:51,260 எதுக்கு ரொம்ப அதிகம்? 173 00:14:52,140 --> 00:14:55,520 புது பெண்ணை மடக்குவதில் உனக்கு ஒரு இதுன்னு கேள்விப்பட்டேன். 174 00:15:04,070 --> 00:15:07,470 - நான் யானை திருடணுமா? - மோசமான சூழ்நிலைல வாழுது. 175 00:15:07,670 --> 00:15:12,060 - அதுக்கு நல்ல வாழ்க்கை கொடுப்போம். - எப்போ இருந்து விலங்குகளை நேசிக்கிற? 176 00:15:12,260 --> 00:15:14,950 சரி. உன்கிட்ட உண்மையை சொல்லிடறேன். 177 00:15:16,450 --> 00:15:18,580 இது எனக்கு நிஜமா நல்லா இருக்கும். 178 00:15:19,040 --> 00:15:22,210 எனக்கு உயர்வு கிடைக்கும், நிறைய பணம் கிடைக்கும். 179 00:15:23,290 --> 00:15:25,420 நான் நல்லா இருக்கணும், இல்லையா? 180 00:15:28,840 --> 00:15:31,910 யானைகள் பெரியது. நாம சொல்றதை அவைகள் செய்யாது. 181 00:15:32,110 --> 00:15:34,250 இப்பவே அவளை ஏற்றியிருப்பாங்க. 182 00:15:34,450 --> 00:15:38,580 வண்டியை எடுத்து நீ 280 மைல்கள் போய், கூண்டை 183 00:15:38,780 --> 00:15:40,100 திறந்தால் போதும். 184 00:15:43,480 --> 00:15:44,630 எவ்வளவு? 185 00:15:44,830 --> 00:15:47,430 - $30,000 கேட்கிறான். - $20,000தான் பட்ஜெட். 186 00:15:47,630 --> 00:15:51,280 உதவிக்கு இரண்டு பேர் தேவைப்படும், அவங்களுக்கு பணம் கொடுக்கணுமாம். 187 00:15:55,240 --> 00:15:56,080 உட்கார். 188 00:16:07,130 --> 00:16:09,010 இருவரும் எப்படி சந்திச்சீங்க? 189 00:16:09,840 --> 00:16:13,120 அதுக்கும் பட்ஜெட்டுக்கும் என்ன தொடர்புனு தெரியலை. 190 00:16:13,320 --> 00:16:17,310 ஒருத்தரை பற்றி முழுசா தெரியாமல் பேச்சுவார்த்தை நடத்தாதே. 191 00:16:24,650 --> 00:16:27,720 சலுகை பிரிவில் இருவரும் வரிசையில் இருந்தோம். 192 00:16:27,920 --> 00:16:29,150 டாட்ஜர்ஸ் விளையாட்டு. 193 00:16:30,400 --> 00:16:31,860 அழகா இருந்தான். 194 00:16:39,080 --> 00:16:40,410 மதுவும் ஒரு காரணம்? 195 00:16:42,040 --> 00:16:46,920 முக்கியமா இல்ல, ஆனா உதவியது. 196 00:16:48,750 --> 00:16:51,090 நாலரை மாசங்கள் டேட் செஞ்சோம். 197 00:16:52,550 --> 00:16:53,380 அது... 198 00:16:55,510 --> 00:16:56,340 உற்சாகமானது. 199 00:16:57,050 --> 00:16:57,890 சரி. 200 00:16:58,970 --> 00:17:01,810 எப்போ கூப்பிடுவான் அல்லது வருவான்னு தெரியாது... 201 00:17:03,810 --> 00:17:06,480 செஞ்சா, அப்போ முட்டாள்தனமா சந்தோஷப்படுவேன். 202 00:17:09,320 --> 00:17:11,320 என்னை 100 முறை அழ வைத்தான். 203 00:17:16,610 --> 00:17:18,370 பட்ரீஸ் என்னோட பெரிய தவறு. 204 00:17:20,370 --> 00:17:23,040 வெளிப்படையா, நம்ம எல்லாருக்கும் ஒன்று தேவை. 205 00:17:31,000 --> 00:17:34,880 நன்றி, இலெய்ன், என்கிட்ட வெளிப்படையா இருந்ததுக்கு. 206 00:17:37,470 --> 00:17:41,390 - அப்போ $30,000 நமக்கு பரவாயில்லையா? - இல்ல, $20,000க்கு முடிக்கணும். 207 00:17:42,020 --> 00:17:45,310 ஆனா இப்போ அவனிடம் எப்படி பேசறதுன்னு உனக்கு தெரியணும். 208 00:18:40,620 --> 00:18:43,490 நான் எதிர்பார்த்த இடத்தில் நீ இல்லை. 209 00:18:44,620 --> 00:18:48,190 இங்க வேலை பார்த்தா, புகை பிடித்து, நாள் முழுக்க கேம் ஆடுவேன். 210 00:18:48,390 --> 00:18:50,500 ஆமாம். அது நீ மட்டும் அல்ல. 211 00:18:52,290 --> 00:18:55,860 பாரு, $20,000 வரை தான் ஏற்பாடு செய்ய முடியும். 212 00:18:56,060 --> 00:18:58,740 உன்கிட்ட யானை இல்லைன்னு நினைக்கிறேன். 213 00:18:58,940 --> 00:19:01,390 பட்ரீஸ், இதை விட்டுட்டு போகக் கூடாது. 214 00:19:04,140 --> 00:19:05,140 உனக்கு தோணுதா? 215 00:19:07,520 --> 00:19:11,550 நான் செஞ்ச பெரிய தவறு, உன்னை மாத்த முடியும்னு நினைச்சதுதான். 216 00:19:11,750 --> 00:19:12,610 சாதுவாக்க பார்த்தது. 217 00:19:13,520 --> 00:19:15,050 இளமையா அப்பாவியா இருந்தேன். 218 00:19:15,250 --> 00:19:18,260 ஜிம்முக்கு போவதும், கூட்டாளிகளோட சுத்துறதும்தான் செஞ்ச. 219 00:19:18,460 --> 00:19:22,820 இப்போ எனக்கு புரியுது, $20,000 உன் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும். 220 00:19:25,790 --> 00:19:28,230 - இதை எப்போ செய்யணும்? - வியாழக்கிழமை. 221 00:19:28,430 --> 00:19:30,070 ஒரு திட்டம் போடுறேன். 222 00:19:30,260 --> 00:19:33,280 நான் சொல்ற இடத்தில், சொல்ற நேரத்தில் இருந்தா போதும். 223 00:19:33,480 --> 00:19:35,420 பட்ரீஸ், உன்னால செய்ய முடியுமா? 224 00:19:39,510 --> 00:19:42,390 - டேனா, வங்கிக்கு போறேன். - சரி, திரு. பி. 225 00:20:17,300 --> 00:20:19,210 கிரேக், என்ன செஞ்சிட்டு இருக்க? 226 00:20:19,670 --> 00:20:20,720 ஒன்றுமில்லை. 227 00:20:24,680 --> 00:20:26,720 திரு. சாங்கின் அடுத்த சாகசம். 228 00:20:39,400 --> 00:20:40,650 அச்சச்சோ. 229 00:20:50,910 --> 00:20:53,860 என் ரத்த சர்க்கரை கூடுது அல்லது குறையுது. 230 00:20:54,060 --> 00:20:55,920 இப்போ எனக்கு தெரியறதே இல்லை. 231 00:20:56,830 --> 00:21:00,050 அது... தீனினால இருக்கும். 232 00:21:00,880 --> 00:21:03,630 வேலை நேரத்தில் போதையில் இருந்ததுக்கு என்னை நீக்குவியா? 233 00:21:04,220 --> 00:21:05,790 கிரேக், நான் உன் பாஸ் இல்லை. 234 00:21:05,990 --> 00:21:08,680 ஏய், ஒரு வாரம் காத்திரு. எது வேணாலும் நடக்கலாம். 235 00:21:14,140 --> 00:21:17,710 வந்தது உன் முன்னாள் காதலனா? அவன் பெயர் என்ன? 236 00:21:17,910 --> 00:21:18,860 பாட்ரிக்? 237 00:21:19,730 --> 00:21:22,440 - பட்ரீஸ். - பட்ரீஸ். 238 00:21:23,110 --> 00:21:25,280 இப்போ நீங்க மதிய உணவு சாப்பிடுறீங்க. 239 00:21:27,240 --> 00:21:29,280 நாங்க பேசுறோம். 240 00:21:31,660 --> 00:21:33,900 நீ மறுபடியும் இளம் வயது பொண்ணு மாதிரி 241 00:21:34,100 --> 00:21:37,630 அலுவலகத்தில் இரண்டு மாசம் பதுங்கி அழ மாட்டியே? 242 00:21:39,040 --> 00:21:41,860 - அப்படி செய்யலை. - ஹேய், எப்பவும் தோணும்... 243 00:21:42,060 --> 00:21:43,880 கண்டுபிடிச்சாரா? 244 00:21:44,880 --> 00:21:45,930 தெரியுமா? 245 00:21:49,470 --> 00:21:53,040 உனக்கும், பேட்டிக்கும் விஷயங்கள் கடினமா இருப்பது வருந்தமே, 246 00:21:53,240 --> 00:21:55,140 ஆனா அதை அலுவலகம் கொண்டு வராதே. 247 00:22:07,660 --> 00:22:08,990 திரு. பாடாஃப். 248 00:22:10,240 --> 00:22:11,660 ...ஆயிரம். 249 00:22:12,910 --> 00:22:14,160 அவ்வளவுதானா? 250 00:22:17,420 --> 00:22:20,110 - $10,000. - $20,000னு சொன்னோம். 251 00:22:20,310 --> 00:22:23,360 பாதி இப்போ, பாதி யானை இடத்துக்கு வந்த பிறகு. 252 00:22:23,560 --> 00:22:26,740 அப்படி சொல்லலை. இன்று மாலை பட்ரீஸ் வருவான். 253 00:22:26,940 --> 00:22:29,950 - $20,000 எதிர்பார்க்கிறான். - ஆனா, பட்ரீஸ் பற்றி நீ 254 00:22:30,150 --> 00:22:33,370 சொன்னதை வைத்து, அவனை நம்ப முடியாதுனு தோணுது. 255 00:22:33,570 --> 00:22:34,810 பட்ரீஸை தெரியும். 256 00:22:35,180 --> 00:22:36,840 அவ்ளோதான் அவனை அழுத்த முடியும். 257 00:22:37,030 --> 00:22:39,420 பாதி பணத்தை அவன் ஏத்துக்கமாட்டான். 258 00:22:39,620 --> 00:22:42,400 அப்போ அவனுக்கு நீ வேற உதவிகள் செய்யணும். 259 00:22:44,730 --> 00:22:45,720 மன்னிக்கணும்? 260 00:22:45,920 --> 00:22:47,820 அவனோட உனக்கு பின்னணி இருக்கு. 261 00:22:48,240 --> 00:22:51,520 முன்பு உடல் ரீதியான ஈர்ப்போடு இருந்தீங்க. 262 00:22:51,720 --> 00:22:53,330 அந்த உணர்வுகள் இப்பவும் இருக்கா? 263 00:22:55,080 --> 00:22:58,820 திரு. பாடாஃப், அடுத்து நீங்க சொல்லப் போவதை 264 00:22:59,010 --> 00:23:00,790 கவனமா சொல்லுங்க. 265 00:23:01,670 --> 00:23:02,790 நிச்சயமா. 266 00:23:03,710 --> 00:23:05,880 நானாக இருந்தால், உறவு வெச்சுப்பேன். 267 00:23:07,050 --> 00:23:10,130 ஆனா நீதான் இங்கே பாஸ்ன்னு எனக்கு நீ ஞாபகப்படுத்துற. 268 00:23:12,140 --> 00:23:13,390 அப்படி வேலை செய்யல. 269 00:23:14,470 --> 00:23:17,210 அப்போ, சரி, வேற வழியை பற்றி யோசிக்கணுமா? 270 00:23:17,410 --> 00:23:19,140 அலாரத்தை கொண்டு வரவா? 271 00:23:19,600 --> 00:23:22,900 என்னை கேவலப்படுத்திக்காம தேவையானதை பெற எனக்கு தெரியும். 272 00:23:24,230 --> 00:23:26,530 திரு. சாங்கின் பணத்தின் உதவியோடு. 273 00:23:33,120 --> 00:23:35,980 அது அவரோட நிஜ பெயரில்லை. உனக்கு அது தெரியுமா? 274 00:23:36,180 --> 00:23:37,770 இப்பவும் வேலை பற்றி பேசுறியா? 275 00:23:37,970 --> 00:23:40,150 உன் பாஸை தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லையா? 276 00:23:40,350 --> 00:23:44,440 அவர் மேல் போர் குற்றங்கள் இருக்கலாம். எஃப்பிஐ தேடும் புள்ளியா இருக்கலாம். 277 00:23:44,640 --> 00:23:46,340 என் மான்ட்டி மாமா போல் இருக்கார். 278 00:23:49,010 --> 00:23:50,680 - சியர்ஸ். - சியர்ஸ். 279 00:23:53,470 --> 00:23:55,080 எங்க இருக்கார் தெரியுமா? 280 00:23:55,280 --> 00:23:57,180 - உன் மான்ட்டி மாமாவா? - பாடாஃப். 281 00:23:58,640 --> 00:24:00,710 தெரியாது. வீட்டுக்கே போறதில்ல. 282 00:24:00,910 --> 00:24:02,960 சரி. எங்காவது தங்கியிருப்பார். 283 00:24:03,160 --> 00:24:04,860 எப்பவும் சட்டை சுத்தமா இருக்கும். 284 00:24:05,860 --> 00:24:07,650 நல்ல வாசமும் இருக்கும். 285 00:24:09,530 --> 00:24:11,200 அது உண்மை. 286 00:24:35,930 --> 00:24:37,140 டேட் இருக்கா? 287 00:24:40,520 --> 00:24:42,020 வாடிக்கையாளர் சந்திப்பு. 288 00:24:43,190 --> 00:24:46,690 ஒரு அறிவுரை, ரொம்ப கஷ்டப்படாதே. 289 00:25:07,590 --> 00:25:09,920 - இனிய இரவு, இலெய்ன். - இனிய இரவு. 290 00:25:22,480 --> 00:25:24,040 உணவு சொல்லப் போறியா இல்லையா? 291 00:25:24,240 --> 00:25:26,550 ஹில்ஸ்ல அவருக்கு இடம் இருக்கு போல. 292 00:25:26,750 --> 00:25:30,090 இது தெரியுதா? தினமும் ஒரே வழியில் போய் வர்றார். 293 00:25:30,290 --> 00:25:32,510 பாஸ் ஃபோனை கண்காணிக்கிறியா? 294 00:25:32,710 --> 00:25:35,660 அதில் மென்பொருள் போட்டிருக்கேன். அவருக்கு தெரியாது. 295 00:25:41,450 --> 00:25:44,210 நீ அதிகமா யாரையும் கூட்டி போனதில்லை, தானே? 296 00:26:04,480 --> 00:26:05,600 ஒரு மணி நேரம் தாமதம். 297 00:26:13,400 --> 00:26:14,610 நீ மட்டுமே இருக்கியா? 298 00:26:15,610 --> 00:26:16,610 தனியா இருக்கோம். 299 00:26:16,990 --> 00:26:18,410 உனக்கு பணம் கிடைச்சதா? 300 00:26:19,200 --> 00:26:22,120 ஒரு நிமிஷம் உக்காரு. பேசுவோம். 301 00:26:24,040 --> 00:26:25,410 சகோதரி எப்படி இருக்கா? 302 00:26:26,410 --> 00:26:27,770 எனக்கு அவளை பிடிக்கும். 303 00:26:27,970 --> 00:26:29,830 இன்னொரு குழந்தை பிறக்கப் போகுது. 304 00:26:31,670 --> 00:26:32,800 அப்போ நீ? 305 00:26:34,670 --> 00:26:36,840 வேற யாராவது இருக்காங்களா? 306 00:26:38,010 --> 00:26:39,640 பிரத்தியேகமா யாருமில்ல. 307 00:26:40,590 --> 00:26:43,510 - உனக்கு? - போற போக்கில் போறேன். 308 00:26:47,100 --> 00:26:48,810 இதுதான்னு தோணுது? 309 00:26:53,230 --> 00:26:54,430 $10,000 இருக்கு. 310 00:26:54,630 --> 00:26:57,740 ஜம்போ ஊரில் வந்ததும் மீதி $10,000 கிடைக்கும். 311 00:26:59,360 --> 00:27:01,200 செல்லம், என்னை ஏமாத்துறியா? 312 00:27:08,710 --> 00:27:09,980 எங்க இருக்கோம்? 313 00:27:10,180 --> 00:27:12,920 தெரியல. உன்னை போல மேப்பை பார்க்கறேன். 314 00:27:13,420 --> 00:27:16,240 - இங்க ஒண்ணுமில்ல. - இரு. ஓரமா நிறுத்து. 315 00:27:16,440 --> 00:27:17,740 - இங்கயே? - ஆமா. ஆமா. 316 00:27:17,940 --> 00:27:18,840 சரி. 317 00:27:29,600 --> 00:27:30,690 இதுதான். 318 00:27:31,940 --> 00:27:34,110 தினமும் இங்கதான் வர்றார். 319 00:27:34,400 --> 00:27:36,190 என்ன கருமம் இது? எங்க இருக்கோம்? 320 00:27:38,110 --> 00:27:39,150 நண்பா. 321 00:27:48,910 --> 00:27:51,580 இது என் குடியிருப்பு அளவுக்குதான் இருக்கு. 322 00:28:17,480 --> 00:28:18,690 என்ன கண்றாவி? 323 00:28:21,570 --> 00:28:25,830 அந்த அயோக்கியன் இவ்ளோ தூரம் மலம் கழிக்க வர்றானா! 324 00:28:26,450 --> 00:28:27,280 என்ன? 325 00:28:27,740 --> 00:28:28,740 என்ன கருமம்... 326 00:28:46,300 --> 00:28:48,710 முழு 20,000 வேணும்ன்னு உன் பாஸிடம் சொல் 327 00:28:48,910 --> 00:28:50,170 இல்லாட்டி இது நடக்காது. 328 00:28:50,370 --> 00:28:53,710 அது தேவையில்லை. அதை முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இருக்கு. 329 00:28:53,910 --> 00:28:56,190 நான் பிரிந்ததில் கோபமா இருக்க போல. 330 00:28:56,980 --> 00:28:58,610 எனக்கு வேற மாதிரி தோணுது. 331 00:29:07,030 --> 00:29:09,700 பாரு, பட்ரீஸ். 332 00:29:15,080 --> 00:29:18,340 கேளு, நீ அந்த பணத்தை எடுத்துப்ப, 333 00:29:18,790 --> 00:29:21,920 நான் சொன்ன மாதிரி அந்த வேலையை முடிப்ப. 334 00:29:22,800 --> 00:29:24,630 இது எனக்கு ஏன் தெரியும்னு தெரியுமா? 335 00:29:25,800 --> 00:29:27,600 ஏன்னா என்னை நம்பற. 336 00:29:28,680 --> 00:29:30,010 உன்கிட்ட பொய் சொன்னதில்ல. 337 00:29:31,640 --> 00:29:33,230 உன்னை ஏமாத்தினதில்ல. 338 00:29:35,900 --> 00:29:37,150 நாம ஒத்துக்கலாமா? 339 00:29:44,490 --> 00:29:46,610 குடிக்க ஏதாவது எடுத்துட்டு பேசலாம். 340 00:29:48,320 --> 00:29:49,450 என்னாகும் பார்ப்போம். 341 00:29:54,620 --> 00:29:56,370 நீ என்னை தவிர்த்ததில்லை. 342 00:29:58,040 --> 00:30:00,090 அந்த யானை எவ்ளோ முக்கியம்னு தெரியுது. 343 00:30:01,960 --> 00:30:05,220 ஒரு பானம், நான் வாங்குறேன். 344 00:30:43,960 --> 00:30:45,010 என்ன? 345 00:30:46,420 --> 00:30:47,880 உடம்பு சரியில்லை. 346 00:30:50,590 --> 00:30:52,560 நீ எவ்ளோ குடிச்ச? 347 00:30:52,970 --> 00:30:55,810 தெரியலை. மூணு அல்லது ஐந்து. 348 00:30:57,140 --> 00:30:58,480 அவ்ளோ தேவைப்படலை. 349 00:31:02,020 --> 00:31:04,070 அவள் திரும்ப வருவாள்னு தோணலை. 350 00:31:05,150 --> 00:31:06,860 அதை பற்றி என்ன தோணுது? 351 00:31:08,280 --> 00:31:09,450 இப்போ... 352 00:31:11,320 --> 00:31:12,620 எல்லாம் தொலையட்டும். 353 00:31:13,120 --> 00:31:15,480 கல்யாணம் போகட்டும், இயேசு போகட்டும். 354 00:31:15,680 --> 00:31:18,540 "மத்தவங்களுக்காக மாறுவது" தொலையட்டும். 355 00:31:19,870 --> 00:31:22,000 எல்லாம் தொலையட்டும். 356 00:31:24,920 --> 00:31:27,870 வாந்தி எடுக்கும் முன் ஒரு பாத்திரம் வை, தூங்க பாரு. 357 00:31:28,070 --> 00:31:29,740 ஹேய், நில்லு. இலெய்ன், நில்லு. 358 00:31:29,940 --> 00:31:33,100 கேட்க மறந்துட்டேன். அந்த யானை கிடைச்சதா? 359 00:31:36,560 --> 00:31:38,830 வெள்ளிக்கிழமை காலையில் முதல் விஷயம், 360 00:31:39,030 --> 00:31:42,770 நம் விளம்பர பலகைக்கு கீழே 4ஆவது தெருவில் ஜம்போ நடக்கும். 361 00:31:43,770 --> 00:31:45,610 அதை எப்படி செஞ்ச? 362 00:31:48,400 --> 00:31:50,900 தேவைப்பட்டா வற்புறுத்த முடியும். 363 00:31:54,620 --> 00:31:55,530 இனிய இரவு. 364 00:31:58,620 --> 00:31:59,540 இனிய இரவு. 365 00:32:50,880 --> 00:32:51,920 இடைவேளை. 366 00:33:49,610 --> 00:33:51,550 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 367 00:33:51,750 --> 00:33:53,690 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்