1 00:00:07,000 --> 00:00:10,280 துரதிருஷ்டவசமாக, திரு சாங் இன்று நம்மோடு இல்லை. 2 00:00:10,480 --> 00:00:14,490 இதில் பார்க்கலாம், திரு. சாங் விருப்பத்தை இது விவரிக்கும். 3 00:00:14,690 --> 00:00:17,080 அப்போ இந்த ஆளு கெத்தா நுழைந்து, சாங்கை 4 00:00:17,280 --> 00:00:20,000 முழு அதிகாரம் தர கையெழுத்து போட வெச்சாங்கறியா? 5 00:00:20,200 --> 00:00:20,920 நான் நம்பலை. 6 00:00:21,120 --> 00:00:24,770 ரொம்ப வருஷமா என் தோழி மிலானி போதைக்கு அடிமையா இருக்காங்க. 7 00:00:27,770 --> 00:00:28,940 எனக்கு என்ன ஆச்சு? 8 00:00:29,440 --> 00:00:32,260 உனக்கு பீதி தாக்குதல், கிரேக். 9 00:00:32,460 --> 00:00:33,680 நம்ம பாஸ் சமூக விரோதி. 10 00:00:33,880 --> 00:00:34,720 பொய் சொன்னீங்க. 11 00:00:34,920 --> 00:00:38,480 - நாம நிஜமா நண்பர்களாக முடியுமா பார்த்தேன். - அப்புறம்? 12 00:00:38,680 --> 00:00:41,910 நெருக்கடியான நேரத்தில் உன்னை நான் நம்பமாட்டேன். 13 00:00:45,790 --> 00:00:47,110 ஃபிராங்க் ஃபுளோரஸ். 14 00:00:47,310 --> 00:00:50,550 எதால உருவானவன்னு தெரிஞ்சுக்க, ஃபிராங்க் ஃபுளோரஸை தேடு. 15 00:01:21,950 --> 00:01:24,480 - ஹாய். - திரு. சாங் வூ, ப்ளீஸ். 16 00:01:24,680 --> 00:01:27,120 - உங்களுக்கு முன்னேற்பாடு இருக்கா? - இல்லை. 17 00:01:27,960 --> 00:01:32,460 அது, சாங் முன்னேற்பாடு இல்லாம யாரையும் சந்திப்பதில்லன்ற கொள்கை வச்சிருக்கார். 18 00:01:33,420 --> 00:01:35,420 திரு. சாங் வூ, ப்ளீஸ். 19 00:01:37,470 --> 00:01:38,840 நான் சொன்ன மாதிரி... 20 00:01:39,470 --> 00:01:41,470 உங்களுக்கு முன்னேற்பாடு செய்யவா? 21 00:01:41,890 --> 00:01:44,270 அவர் ஃப்ரீயாகும் வரை காத்திருக்கேன். 22 00:02:45,240 --> 00:02:48,750 சார்? ஹாய். சரி, 10 நிமிஷம் தர்றதா சொல்றார். 23 00:03:13,020 --> 00:03:14,230 சரி, சரி. 24 00:03:17,110 --> 00:03:19,890 மதிய வணக்கம், திரு. சாங். என் பெயர்-- 25 00:03:20,090 --> 00:03:22,570 ஆங்கிலம். நான் சரியான ஆங்கிலம் பேசுவேன். 26 00:03:24,330 --> 00:03:26,790 என் பெயர் ரீஜஸ் பாடாஃப் 27 00:03:27,370 --> 00:03:30,920 உங்களுக்கு ஒரு பரிசு தர ரொம்ப தூரத்திலிருந்து வர்றேன். 28 00:03:31,540 --> 00:03:34,500 அதை வெளியே போகும் போது என் உதவியாளரிடம் கொடுங்க. 29 00:03:36,210 --> 00:03:39,590 துரதிருஷ்டவசமாக, இந்த பரிசு நீங்க 30 00:03:40,550 --> 00:03:42,050 செத்த பிறகுதான் கிடைக்கும். 31 00:03:42,680 --> 00:03:44,850 நான் செத்த பிறகு கிடைச்சு என்ன பலன்? 32 00:03:45,510 --> 00:03:49,060 இது அமரத்துவத்தை தரும் பரிசுன்னு நான் சொன்னால்? 33 00:03:56,480 --> 00:03:58,190 உங்க செஷன் நிறுத்தப்பட்டது 34 00:04:15,790 --> 00:04:18,380 த கன்சல்டன்ட் 35 00:04:31,480 --> 00:04:32,710 213 விநியோகங்கள் 36 00:04:32,910 --> 00:04:35,760 ஹேய், இந்த வார இறுதியில் என்னை ஏன் கூப்பிடலை? 37 00:04:35,950 --> 00:04:37,690 உனக்கு, 10 சேதிகள் அனுப்பினேன். 38 00:04:37,940 --> 00:04:39,880 என் ஃபோன் நம்பரை மாத்தினேன், 39 00:04:40,080 --> 00:04:42,890 என் கணக்குகள், பாஸ்வோர்ட்கள், பாதுகாப்பு கேள்விகள். 40 00:04:43,090 --> 00:04:45,510 அது சிகரெட்டா? ஒரு முறை இழுத்துட்டு தரலாமா? 41 00:04:45,710 --> 00:04:48,980 நம்மை பற்றிய கோப்புகள் வைத்திருக்கார். குட்டி அறையில் இருக்கு. 42 00:04:49,180 --> 00:04:53,410 என் பெற்றோரின் பெயர்கள், நான் எப்பவாவது போகும் ஜிம்மின் பெயர். 43 00:04:53,710 --> 00:04:55,080 எல்லாம் அவருக்கு தெரியும். 44 00:04:58,540 --> 00:05:02,840 பெறுநர் ஆன் சாங் வூ 45 00:05:15,140 --> 00:05:17,100 திரு. சாங் வூக்கான டெலிவரி. 46 00:05:19,570 --> 00:05:20,940 மன்னிக்கணும். 47 00:05:21,900 --> 00:05:25,030 ஒவ்வொரு முறை பெயரை கேட்குறப்போ, சின்ன முகம் மனதில் வருது. 48 00:05:30,740 --> 00:05:32,940 ஹில்டெக் கார்ப், ஞாபகமிருக்கா? 49 00:05:33,140 --> 00:05:34,940 - மாஸ்கோ செயற்கை மூட்டுகள். - ஆமா. 50 00:05:35,140 --> 00:05:36,520 ஆழமா ஆராய்ந்தேன். 51 00:05:36,720 --> 00:05:40,610 பாடாஃப் வர்றதுக்கு முன்னாடி, பின்னாடி எப்படி இருந்தாங்கனு பார்த்தேன். 52 00:05:40,810 --> 00:05:43,070 அவங்க வருடாந்தர வருமானம் $26 மில்லியன். 53 00:05:43,270 --> 00:05:45,240 இப்போ, அது $50 மில்லியனுக்கும் மேல. 54 00:05:45,440 --> 00:05:48,160 ஆறு மாசத்தில் அவங்க திறனை கூட்டிட்டார். 55 00:05:48,360 --> 00:05:51,430 அவர் வேலையில் சிறப்பா இருப்பது போல் இருக்கு. 56 00:05:52,850 --> 00:05:56,920 வேடிக்கையா, ரஷ்யாவின் உறுப்பு துண்டித்தல் பற்றி ஆராய்ச்சி செய்தேன். 57 00:05:57,120 --> 00:05:59,260 - இதுதான் உன் வார இறுதியா? - இன்றிரவு 58 00:05:59,450 --> 00:06:01,420 பிரார்த்தனை இருக்கு, இன்னும் இருக்கு. 59 00:06:01,620 --> 00:06:05,010 நாட்டில், ஆண்டுக்கு சுமார் 150,000 உறுப்பு துண்டித்தல் செய்றாங்க. 60 00:06:05,210 --> 00:06:08,350 திடீரென்று, நம் நண்பர் பாடாஃப் கை, கால் தொழிலில் இறங்குறார். 61 00:06:08,550 --> 00:06:11,200 இப்ப ஆண்டுக்கு 290,000 உறுப்பு துண்டித்தல் நடக்குது. 62 00:06:11,620 --> 00:06:12,850 சுமார் இரு மடங்கு. 63 00:06:13,050 --> 00:06:15,310 என்ன, திடீர்னு நிறைய விவசாயிகள் கலப்பைக்கு 64 00:06:15,510 --> 00:06:17,610 கீழே விழறாங்களா? அது புரியவே இல்லை. 65 00:06:17,810 --> 00:06:21,490 கணக்குகள் கூடுது. நாம அதுக்கான காரணங்களை புரிஞ்சுக்கணும். 66 00:06:21,690 --> 00:06:24,380 யுத்தம், கண்ணிவெடிகள், நோய்கள். 67 00:06:25,260 --> 00:06:26,870 சரி, இந்த படத்தை பாரு. 68 00:06:27,070 --> 00:06:28,200 இது மிலானி மோரோசோவ். 69 00:06:28,400 --> 00:06:31,250 விக்டர் கல்சர் என்ற ஆளோட நெருக்கமா வேலை செய்றாள். 70 00:06:31,440 --> 00:06:34,000 - சாங் மாதிரியே ஒப்பந்தம் போட்டார். - சரி. 71 00:06:34,200 --> 00:06:37,480 இந்த படம் எடுத்த மூணு மாசத்தில், கல்சர்... இறந்தார். 72 00:06:40,730 --> 00:06:42,170 - அழகா இருக்காள். - இப்பவும். 73 00:06:42,370 --> 00:06:46,740 ஆமா சில மேம்பாடுகள் இருக்கு. புது கை, புது கால், புது தாடை. 74 00:06:47,360 --> 00:06:50,510 நில்லு, நீ என்ன சொல்றேன்னா 75 00:06:50,710 --> 00:06:53,640 அவளின் பாதி உடலை வெட்ட வைத்தாரா? 76 00:06:53,840 --> 00:06:56,790 ஆமா, திரு. கல்சரின் நல்லதுக்காக. 77 00:07:16,930 --> 00:07:19,290 நிறைய வேலை இருக்கு, அதனால் சீக்கிரம். 78 00:07:19,490 --> 00:07:23,460 - என்ன விக்குறீங்க? - நிச்சயமா நான் விற்க வந்தவன் இல்லை. 79 00:07:23,660 --> 00:07:26,760 ஒரு ஆலோசகனா உங்களுக்கு என் சேவைகளை தர்றேன். 80 00:07:26,960 --> 00:07:30,110 எனக்கு ஆலோசகர் தேவையில்லை. சுத்தி பாருங்க, தாத்தா, 81 00:07:30,570 --> 00:07:31,820 பிரமாதமா இருக்கேன். 82 00:07:32,490 --> 00:07:35,160 அதுக்கு நேர்மாறாக, திரு. சாங். 83 00:07:36,200 --> 00:07:40,870 நான் காம்ப்வேரின் கணக்குகளை, லெட்ஜர்களை பார்த்தேன். 84 00:07:42,960 --> 00:07:46,670 இன்னும் நாலே மாசத்துக்கு தான் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியும். 85 00:07:50,840 --> 00:07:53,160 - நீங்க யாரு? - ரீஜஸ் பாடாஃப். 86 00:07:53,360 --> 00:07:56,330 அறிமுகம் செஞ்சப்பவே தெளிவா சொல்லிட்டேன். 87 00:07:56,530 --> 00:08:00,180 உங்க கையிலுள்ள கருவியில் இதை குறிச்சுக்கோங்க. 88 00:08:07,190 --> 00:08:11,680 ஊழியர்களுக்கு அதிக பணம், தயாரிப்புக்கு குறைந்த மதிப்பு கொடுக்கறீங்க. 89 00:08:11,880 --> 00:08:16,200 ஆளுங்க, உங்க வயசு, இனம், அப்பாவித்தன்மையை பயன்படுத்திக்கறாங்க. 90 00:08:16,830 --> 00:08:19,160 வங்கிகள் இனி பணம் தராது. 91 00:08:20,040 --> 00:08:24,860 உங்க முதலீட்டாளர்களுக்கு இந்த பரிதாப நிலை தெரிந்தால், 92 00:08:25,060 --> 00:08:27,500 உங்களுக்கு பதிலா தகுதியான ஆளை மாத்துவாங்க. 93 00:08:27,920 --> 00:08:32,200 இது கேட்க சங்கடமா இருந்தாலும், உங்களுக்கு 94 00:08:32,400 --> 00:08:34,130 இதெல்லாம் உண்மைனு தெரியுமே. 95 00:08:36,090 --> 00:08:37,710 யாரும் இப்படி பேசமாட்டாங்க. 96 00:08:37,900 --> 00:08:40,420 மூன்று இரவுகளுக்கு முன், உங்க 19ஆவது மாடியில் 97 00:08:40,620 --> 00:08:43,690 அழுதபடி குதிக்கிறதுக்காக நின்னீங்க. 98 00:08:44,810 --> 00:08:47,940 திரு. சாங், உங்ககிட்ட என்னோட கேள்வி இதுதான். 99 00:08:48,940 --> 00:08:50,150 எதனால் அதை செய்யலை? 100 00:08:52,440 --> 00:08:53,640 அது எப்படி தெரியும்? 101 00:08:53,840 --> 00:08:56,770 அந்த விளிம்பில் உங்களை பிடித்து வைத்திருந்தது 102 00:08:56,970 --> 00:08:59,640 உங்களுக்கு சொந்தமானதெல்லாம் போகுமோ என்ற பயமே. 103 00:08:59,840 --> 00:09:01,830 அல்லது மறப்பார்கள் என்னும் அச்சம். 104 00:09:03,710 --> 00:09:05,750 திரு. சாங், வருத்தமா இருக்கீங்க. 105 00:09:06,000 --> 00:09:09,490 கொஞ்சம் வெளியே போறேன், நீங்க ஆசுவாசப்படுத்திக்கோங்க. 106 00:09:09,690 --> 00:09:10,460 இல்லை. 107 00:09:11,380 --> 00:09:12,380 இருங்க. 108 00:09:21,930 --> 00:09:24,960 - ரொம்ப கடுமையா உழைக்கிறேன். - பிரச்சினைகள் அதிகமாகுது. 109 00:09:25,160 --> 00:09:29,440 - சரியான கேமை நான் உருவாக்கணும். - ஆனா உங்க பிரார்த்தனைக்கு பலனில்லை. 110 00:09:30,770 --> 00:09:36,030 திரு. சாங், என் சேவையை பயன்படுத்துங்க, உங்க கவலைகள் தீரும். 111 00:09:41,540 --> 00:09:42,690 எப்போ ஆரம்பிப்பீங்க? 112 00:09:42,890 --> 00:09:45,620 துரதிருஷ்டவசமா, நீங்க போனதுக்கு அப்புறமா. 113 00:09:46,540 --> 00:09:49,400 - போறதா? - அதை தெளிவா சொல்லலையா? 114 00:09:49,600 --> 00:09:52,820 மன்னிக்கணும். இன்னைக்கு இது என் மூன்றாவது சந்திப்பு 115 00:09:53,020 --> 00:09:55,370 சில நேரங்களில் பேச்சுவார்த்தை குளறுபடி ஆகும். 116 00:09:55,570 --> 00:09:59,010 உங்க வாழ்க்கை முடிந்த பிறகுதான் என் ஒப்பந்தம் தொடங்கும். 117 00:10:48,230 --> 00:10:49,270 எனக்கு வேண்டாம். 118 00:10:49,600 --> 00:10:52,010 அவர் அறையில் பூட்டிக்கிட்டு வெளியே வரலை. 119 00:10:52,210 --> 00:10:54,300 பாடாஃப், ஃபிராங்க் ஃபுளோரஸ் பற்றி சொன்னாரா? 120 00:10:54,500 --> 00:10:56,510 அது "Z" அல்லது "S"-ல் முடியலாம். 121 00:10:56,710 --> 00:10:57,550 இல்லை. 122 00:10:57,750 --> 00:10:59,260 ரஷ்ய அழகி சொன்னது 123 00:10:59,460 --> 00:11:02,770 பாடாஃப் பற்றி தெரிஞ்சுக்க ஃபிராங்க் ஃபுளோரஸை தேடணும். 124 00:11:02,970 --> 00:11:04,520 இதை ஏன் முன்னாடியே சொல்லல? 125 00:11:04,720 --> 00:11:07,190 ஹௌ மெனி ஆஃப் மியில், "Z"- டோடு 32 இருக்கு, 126 00:11:07,390 --> 00:11:08,730 "S"-சோடு 1100 இருக்கு. 127 00:11:08,930 --> 00:11:13,110 அதை சுருக்க பார்க்கிறேன். ஃபிராங்க் ஃபுளோரஸ், ஊனம் பற்றி இல்லை. 128 00:11:13,310 --> 00:11:14,530 எந்த எழுத்துகளும். 129 00:11:14,730 --> 00:11:17,340 வெள்ளி இரவு பார்ட்டி எப்படி முடிந்ததுனு சொல்லலை. 130 00:11:20,300 --> 00:11:24,460 யாரு பாஸுன்னு அவர் கொஞ்சம் சாகசமா காட்டினார். 131 00:11:24,650 --> 00:11:26,350 பேட்டி என்ன நினைச்சாள்? 132 00:11:27,600 --> 00:11:29,840 - எல்லாத்தையும் சொல்லல. - ஏன்? 133 00:11:30,030 --> 00:11:32,500 நான் வேலையை தவிர்க்க இப்படி செய்வதா நினைப்பா. 134 00:11:32,700 --> 00:11:34,800 - அப்படி செய்றியா? - இல்லை. இந்த ஆளு... 135 00:11:35,000 --> 00:11:37,690 - நாம நினைக்கிற மாதிரி ஆளு இல்லை. - டெனீஸ் டிலிலோ! 136 00:11:41,530 --> 00:11:43,910 டெனீஸ் டிலிலோ. 137 00:11:47,700 --> 00:11:49,910 இப்போ, உங்களில் ஒருவர் டெனீஸ் டிலிலோ. 138 00:11:54,840 --> 00:11:56,090 அருமை. 139 00:11:57,170 --> 00:11:59,050 பரிச்சயமான பெயரா இருக்கே? 140 00:12:14,730 --> 00:12:15,730 உள்ளே வரலாம். 141 00:12:19,900 --> 00:12:21,430 - திரு. பாடாஃப்? - என்ன. 142 00:12:21,630 --> 00:12:25,450 - டெனிஸை தேடுறீங்களா? - டிலிலோ. 143 00:12:25,820 --> 00:12:30,940 இங்கே இருக்கா. ஒவ்வொரு மாசமும் $5,256.70 144 00:12:31,140 --> 00:12:34,460 அவ வெளியீடு ஒன்றுமே இல்லை. 145 00:12:34,790 --> 00:12:36,280 அவங்க ஆவியா? 146 00:12:36,480 --> 00:12:39,240 ஜனவரி முதல் டெனீஸ்க்கு உடம்பு சரியில்லை. 147 00:12:39,440 --> 00:12:40,780 விடாமல் சம்பளம் கொடுத்தாரா? 148 00:12:40,980 --> 00:12:43,660 பாரபட்ச வழக்கை தவிர்ப்பதுக்காக, ஆமா. 149 00:12:43,860 --> 00:12:45,680 - என்ன பிரச்சினை? - மன அழுத்தம். 150 00:12:48,680 --> 00:12:51,810 - டெய்ஸி ஹோய்ட்? - ஒவ்வாமைகள். 151 00:12:54,350 --> 00:12:57,190 - டிலன் காரெட்டி? - ரகசிய மன ஆரோக்கிய பிரச்சினை. 152 00:13:01,780 --> 00:13:03,720 செத்தவங்களை பற்றி தப்பா பேச விரும்பல 153 00:13:03,920 --> 00:13:06,430 ஆனா சாங்குக்கு சிறந்த தொழில் தலைமை திறன் இல்லை. 154 00:13:06,630 --> 00:13:10,100 படைப்பு ரீதியாகதான் அவரின் ஆளுமை இருந்தது, 155 00:13:10,300 --> 00:13:12,080 அவருக்கு 20 வயதுதான். 156 00:13:13,160 --> 00:13:16,190 நான் நினைத்ததை விட சூழ்நிலை ரொம்ப மோசமா இருக்கு. 157 00:13:16,390 --> 00:13:20,700 உடனே நாம செலவுகளை குறைக்காட்டி, ஆறு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது. 158 00:13:20,900 --> 00:13:22,070 ஆறு வாரமா? 159 00:13:22,270 --> 00:13:25,590 எல்லா செலவுகளையும் குறைத்தால், இரண்டு மாசம் போகலாம். 160 00:13:30,850 --> 00:13:33,130 ஹேய், எதுக்கு பாரம் அதிகம்னு நினைக்கிற? 161 00:13:33,320 --> 00:13:35,420 மூணு கழுதை புலியா ஒரு பெரிய ஆண் கொரிலாவா? 162 00:13:35,620 --> 00:13:37,880 இது தயாராக எவ்ளோ காலமாகும்? 163 00:13:38,080 --> 00:13:39,970 இதை யாரும் சரியா சந்தைப்படுத்தலை. 164 00:13:40,160 --> 00:13:42,590 - அப்படி செய்தால்? - மூணு மாசங்கள். 165 00:13:42,790 --> 00:13:45,570 சரி, வார இறுதிகளில் நீ வேலை செய்ய விரும்புவ. 166 00:13:45,950 --> 00:13:48,930 ஆறு வாரங்கள் இருக்கு, யாருக்கும் சம்பளம் கிடைக்காது. 167 00:13:49,130 --> 00:13:52,690 நில்லு. என்ன? ஆறு வாரத்தில் மூடப் போவதா பாடாஃப் சொன்னாரா? 168 00:13:52,890 --> 00:13:53,600 இப்போதான். 169 00:13:53,800 --> 00:13:56,400 அவர் சொல்லும் எதையும் நம்பமாட்டேன். 170 00:13:56,600 --> 00:13:58,710 உனக்கு தெரியலையா? இது இன்னொரு சோதனை. 171 00:14:00,670 --> 00:14:03,920 ஹே ரௌல்.அப்ஸ்கர்ட் ஜங்கிள் மாதிரி நம்மகிட்ட என்ன இருக்கு? 172 00:14:04,340 --> 00:14:07,080 அது அடிப்படையில் கேட்சி கியூபி, ஆனா விண்ணில் இல்ல. 173 00:14:07,280 --> 00:14:10,660 அந்த பழசை புதுப்பிக்க எவ்ளோ நேரம் எடுக்கும்? 174 00:14:10,860 --> 00:14:11,910 அதிகமா கிராஃபிக்ஸ். 175 00:14:12,110 --> 00:14:15,210 அதில் கலை அம்சம் சேர்த்தா, நாளைக்கே முதல் கட்டம் தயாராகும். 176 00:14:15,410 --> 00:14:16,730 இன்றிரவே முடிப்போம். 177 00:14:17,560 --> 00:14:19,340 அதை வைத்து காம்ப்வேரை காக்கலாமா? 178 00:14:19,540 --> 00:14:23,900 சுவாரஸ்ய தகவல், மூணு கழுதை புலிக்கும் ஒரு பெரிய ஆண் கொரிலாவுக்கும் ஒரே கனம். 179 00:14:25,490 --> 00:14:26,740 கடவுளே. 180 00:14:34,040 --> 00:14:37,710 பிங் பாங் மேஜையை ஏலத்தில் எடுத்தேன். பணமா கொடுக்க சொன்னாங்க. 181 00:14:49,880 --> 00:14:52,050 ஆயுள் காப்பீடு இருக்கு, இல்லையா? 182 00:14:53,180 --> 00:14:55,970 - நிச்சயமா இருக்கு. - இதில் என்ன வித்யாசம்? 183 00:14:57,390 --> 00:14:59,840 எதிர்பாராமல் நீங்க இறந்தால், 184 00:15:00,040 --> 00:15:04,230 நீங்க உருவாக்கியதை பாதுகாக்க என்ன செஞ்சிருக்கீங்க? 185 00:15:07,190 --> 00:15:09,320 - எதுவுமில்லை. - சரி, இதுதான் நேரம். 186 00:15:10,450 --> 00:15:14,430 என் வழிகாட்டுதலில், திரு. சாங், மக்கள் உங்களை ஆராதிப்பாங்க. 187 00:15:14,630 --> 00:15:16,910 ஒரு நாள், உங்களை வணங்குவாங்க. 188 00:15:22,210 --> 00:15:23,650 இதை என் அணியிடம் காட்டணும். 189 00:15:23,850 --> 00:15:27,280 உங்க அணிதான் உங்களின் இந்த நிலைமைக்கு காரணம். 190 00:15:27,480 --> 00:15:31,660 எப்போ இருந்து ஆன் சாங் வூ தன் பேச்சை கேட்க மறுத்தார்? 191 00:15:31,860 --> 00:15:34,260 நீங்க உள்பட யார் சொல்வதையும் கேட்கமாட்டேன். 192 00:15:36,510 --> 00:15:40,640 இந்த குறுகிய வாழ்க்கையில் நிறைய சாதிச்சிட்டீங்க. 193 00:15:41,850 --> 00:15:44,770 சாகும் போது எவ்ளோ சாதிப்பீங்கனு யோசிங்க. 194 00:16:35,660 --> 00:16:39,790 - கிரேக். அவர் பூட்டுகளை மாற்றினார். - என்ன? 195 00:16:41,290 --> 00:16:45,400 ஆவணங்களின் அறை. ஃபிராங்க் ஃபுளோரஸ் பற்றிய ஆவணத்தை பார்க்க தேடினேன். 196 00:16:45,600 --> 00:16:47,240 இப்பவும் அவர் சாவி இருக்கா? 197 00:16:47,440 --> 00:16:50,860 சனிக்கிழமை நிஜ சாவி மாதிரி வேற செஞ்சு அவர் மேஜையில் வைத்தேன். 198 00:16:51,060 --> 00:16:54,030 நான்சி ட்ரூ இதிலிருந்து கத்துக்கிட்டது என்ன? 199 00:16:54,230 --> 00:16:56,500 - யாரோ இருந்தாங்கனு அவருக்கு தெரியும்? - ஆமா. 200 00:16:56,690 --> 00:16:59,080 என்னை ஏமாத்தின மாதிரி உன்னையும் ஏமாத்துறார். 201 00:16:59,280 --> 00:17:01,350 உங்க இருவருக்குள் என்ன நடந்தது? 202 00:17:02,520 --> 00:17:05,340 சொன்னேனே, நிறைய குடிச்சிட்டு, வீட்டுக்கு போனேன். 203 00:17:05,540 --> 00:17:07,920 சரி, அவரை ஹாட் யோகா வகுப்பு கூட்டி போய் 204 00:17:08,120 --> 00:17:11,440 பிறகு காப்பி குடிச்சோம், உனக்கு ஆர்வம் கிடையாதா? 205 00:17:13,860 --> 00:17:17,100 எனக்கு பிடிக்காத ஒன்றை செய்ய வைக்கப் பார்த்தார். 206 00:17:17,300 --> 00:17:22,040 பாலியல் ரீதியா எதுவும் இல்லை. கொஞ்சம், மோசமான விஷயம். 207 00:17:24,040 --> 00:17:26,020 - அதை செஞ்சியா? - என்ன? 208 00:17:26,220 --> 00:17:28,000 அவர் கேட்ட விஷயத்தை. 209 00:17:29,880 --> 00:17:30,880 இல்லை. 210 00:17:32,670 --> 00:17:33,590 உனக்கு நல்லது. 211 00:17:35,130 --> 00:17:36,180 நன்றி. 212 00:17:48,060 --> 00:17:48,980 வாங்க. 213 00:17:51,820 --> 00:17:52,820 திரு. பாடாஃப்? 214 00:17:56,610 --> 00:18:01,580 - இது முக்கியமா? - இது அரை மில்லியன் டாலர்கள். 215 00:18:03,870 --> 00:18:06,520 இது நிறுவன சொத்தா இல்லையான்னு தெரியலை, 216 00:18:06,720 --> 00:18:10,110 - ஆனா போன வருஷம், சாங் படகு வாங்கினார். - அது முங்கியது. 217 00:18:10,310 --> 00:18:12,650 ஆமா. காசோலை எழுதும் போது அது அவருக்கு தெரியாது. 218 00:18:12,850 --> 00:18:17,340 அதை மறுபடி இயக்க முடியுமான்னு தெரியாது, ஆனா கொஞ்சமாவது பணம் கிடைக்கும். 219 00:18:18,430 --> 00:18:22,060 திரு. சாங் உணர்ச்சிகரமானவர். உணர்ச்சிகரமானவரை வேகமா ஏமாத்தலாம். 220 00:18:22,970 --> 00:18:25,640 இலெய்ன், நீ உணர்ச்சிகரமானவளா? 221 00:18:26,890 --> 00:18:29,850 திரு. பாடாஃப், அதை அப்புறமா சொல்றேன். 222 00:18:34,570 --> 00:18:36,600 அப்ஸ்கர்ட் ஜங்கிள் 223 00:18:36,790 --> 00:18:38,310 ரௌல், இன்னும் முடியலையா? 224 00:18:38,500 --> 00:18:39,680 ஆமாம், முடியப் போகுது. 225 00:18:39,880 --> 00:18:42,060 நிஜமா இதை காட்டப் போறீங்களா? 226 00:18:42,260 --> 00:18:44,200 என்னை நம்பு, இது நல்லா இருக்குப்பா. 227 00:19:10,020 --> 00:19:11,020 வாங்க. 228 00:19:13,110 --> 00:19:16,730 திரு. பாடாஃப், இப்ப பேசலாமா? 229 00:19:18,240 --> 00:19:20,780 நம் எல்லார் நேரமும் சீக்கிரம் தீரப் போகுது. 230 00:19:22,120 --> 00:19:27,120 ஆமா. பிரச்சினையில் இருக்கோம்னு கேள்விப்பட்டேன். 231 00:19:28,040 --> 00:19:30,190 அதுக்கு உதவும் ஒன்று என்கிட்ட இருக்கு. 232 00:19:30,390 --> 00:19:31,830 இன்னொரு மூழ்கின படகா? 233 00:19:32,920 --> 00:19:35,450 உங்களுக்கு பிடிச்ச அப்ஸ்கர்ட் ஜங்கிள் கேம். 234 00:19:35,650 --> 00:19:39,870 நம் எல்லா ஆட்களும் கவனம் செலுத்தினா, இந்த மாச கடைசிக்குள் வெளியிடலாம். 235 00:19:40,070 --> 00:19:43,220 சரியாக அறிமுகம் செய்தால், வேகமா சம்பாதிக்கலாம். 236 00:19:44,470 --> 00:19:46,620 - இப்பவேவா? - உங்களுக்கு செய்து காட்டறோம். 237 00:19:46,820 --> 00:19:48,770 இது புதுப்பித்தது, ஆனா அடிப்படை நல்லது. 238 00:19:51,520 --> 00:19:55,010 ஒண்ணு தெரியுமா? உங்க ஃபோனில் கூட அதை சேர்க்கலாம். 239 00:19:55,210 --> 00:19:59,010 நீங்க எப்போ வேணா அதை பார்க்கலாம். குளிக்கும் போது, கழிவறையில். 240 00:19:59,210 --> 00:20:02,030 ஒரு லோக்கல் சர்வரும், "கோ" பொத்தானும் போதும். 241 00:20:09,830 --> 00:20:12,620 கிரேக், நம்ம வெள்ளிக்கிழமை பார்ட்டி பிடிச்சது. 242 00:20:13,170 --> 00:20:14,830 அழைத்ததுக்கு நன்றி. 243 00:20:17,250 --> 00:20:18,110 எப்போதும். 244 00:20:18,310 --> 00:20:22,990 இடையே நடந்த சம்பவங்கள் உன்னை பதட்டமாக்கலை என்று நம்பறேன். 245 00:20:23,190 --> 00:20:26,330 எனக்கா? இல்ல, இல்ல. வெறும் வயிற்றில் கொஞ்சம் அதிகமாச்சு. 246 00:20:26,530 --> 00:20:27,810 அதுதான் விஷயமா? 247 00:20:31,230 --> 00:20:33,550 உங்க தோழியை பார்க்க முடிஞ்சதா? 248 00:20:33,740 --> 00:20:36,720 மிலானிக்கு சந்தோஷ முடிவு இல்லையோன்னு தோணுது. 249 00:20:36,910 --> 00:20:41,530 தொடர்ச்சியா கஷ்டப்படறாள் என்பதை உன்னால் நம்ப முடியாது. 250 00:20:41,990 --> 00:20:42,990 யோசிக்க முடியுது. 251 00:20:43,780 --> 00:20:46,910 சிடபுள்யூ என்ற சிகப்பு பொத்தான். நீங்க தயார். 252 00:20:47,450 --> 00:20:50,950 - குறுக்கு வழியில் போகலாமா? - அதுதான் எப்பவும் சிறந்தது. 253 00:21:19,270 --> 00:21:22,470 முன் பணம் கிடையாது. லாபத்தில் பங்கும் இல்லை. 254 00:21:22,670 --> 00:21:24,760 உங்களுக்கு சம்பளமும் இல்லை. 255 00:21:24,960 --> 00:21:26,560 - உங்களுக்கு என்ன பலன்? - ப்ளீஸ். 256 00:21:26,760 --> 00:21:29,830 திரு. சாங், என்னை பற்றிய கவலை வேணாம். 257 00:21:30,120 --> 00:21:31,700 போதுமான வெகுமதி இருக்கு. 258 00:21:33,660 --> 00:21:35,080 எனக்கென்ன நஷ்டம் இதில்? 259 00:21:45,090 --> 00:21:49,330 - நம்ம வேலை முடிந்தது. - எனக்கு ஒரு டாலர் கூட செலவாகவில்லை. 260 00:21:49,530 --> 00:21:53,850 சார், நீங்க ஒரு டாலரையும் வீணாக்கக் கூடாது. 261 00:21:55,480 --> 00:21:58,420 இனி நாம் ஒருவருக்கொருவர் பார்த்துக்க மாட்டோம். 262 00:21:58,620 --> 00:21:59,760 பார்க்க மாட்டோம். 263 00:21:59,960 --> 00:22:04,280 ஆனா உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி, இரண்டு வாரத்தில் திரும்ப வர்றேன். 264 00:22:05,650 --> 00:22:07,530 - இரண்டு வாரமா? - வேலையை தொடங்க. 265 00:22:08,240 --> 00:22:09,660 நிறைய வேலை இருக்கு. 266 00:22:11,280 --> 00:22:13,900 - ஆனா நீங்க சொன்னீங்க... - சீக்கிரமா தொடங்கலாம். 267 00:22:14,100 --> 00:22:17,580 ஆனா நிஜமா அது உங்களோட முடிவு. 268 00:22:19,880 --> 00:22:25,160 ஒருமுறை என் வாடிக்கையாளர் ஒருவர் தன் நாசிகளில் கூரான பென்சிலை வைத்து 269 00:22:25,360 --> 00:22:29,220 தன் முகத்தை இறக்கி ரொம்ப வீரியமா மேஜையில் இடித்தார். 270 00:22:30,140 --> 00:22:32,970 ரொம்ப புதுமையானது. ரொம்ப தைரியமானது. 271 00:22:35,930 --> 00:22:38,980 உங்களுக்கு பென்சில்கள் பயன்படும்னு தோணலை. 272 00:22:40,400 --> 00:22:42,320 நான் சாகப் போறதில்லை. 273 00:22:48,610 --> 00:22:51,820 அதை நான் ரொம்ப தெளிவா சொல்லிட்டேன். 274 00:22:52,120 --> 00:22:55,060 என் குறுக்கீடு இல்லாமல், இன்னும் சில மாதங்களில், 275 00:22:55,260 --> 00:22:58,770 காம்ப்வேர் இருக்காது, எந்த திரு. சாங்கும் தொடரமாட்டார். 276 00:22:58,970 --> 00:23:01,420 இப்போ செய்யாட்டி எப்பவும் செய்ய முடியாது. 277 00:23:04,800 --> 00:23:06,510 வேற ஒரு வழி இருக்கும். 278 00:23:07,470 --> 00:23:08,530 எதை வேணாலும் செய்வேன். 279 00:23:08,730 --> 00:23:12,750 வாங்க, வாங்க, திரு. சாங். இது முடிவல்ல. 280 00:23:12,950 --> 00:23:14,210 இது ஒரு தொடக்கம். 281 00:23:14,410 --> 00:23:18,020 ஒப்பந்தம் போட்டாச்சு, உங்க சொத்தும் பாதுகாப்பாச்சு. 282 00:23:19,230 --> 00:23:21,440 இப்போ எதுவும் உங்களை தடுக்க முடியாது. 283 00:23:24,020 --> 00:23:28,570 உங்களுக்காக நான் ஏற்பாடுகளை செய்யவா? 284 00:23:30,320 --> 00:23:31,260 ஏற்பாடுகள்? 285 00:23:31,460 --> 00:23:34,910 93% வாடிக்கையாளர்கள் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. 286 00:23:36,120 --> 00:23:38,540 உங்களுக்காக ஏற்பாடு செய்யவா? 287 00:23:47,550 --> 00:23:52,240 இந்த சேவைக்கு சிறு நிர்வாக கட்டணம் வாங்குவேன். 288 00:23:52,440 --> 00:23:55,050 எனக்கு அது கொஞ்சம் நேரம் எடுக்கும். 289 00:23:57,600 --> 00:24:00,590 - எவ்வளவு? - உங்க கணக்குகள் குழப்பத்தில் இருக்கு, 290 00:24:00,780 --> 00:24:03,300 உங்ககிட்ட பணம் கேட்பது சங்கோஜமா இருக்கு. 291 00:24:03,500 --> 00:24:08,280 ஆனா வேறு வகையில் அதை நீங்க செலுத்தலாம்? 292 00:24:11,150 --> 00:24:13,070 - கிறிஸ்துவின் உடல். - ஆமென். 293 00:24:18,120 --> 00:24:19,450 கிறிஸ்துவின் உடல். 294 00:24:41,430 --> 00:24:44,590 - ஏய். - ஏய், நீ குட்பை சொல்லாம போயிட்ட. 295 00:24:44,790 --> 00:24:47,400 நீ பிஸியா இருந்த. 6:00 மணிக்கு கிளம்பினேன். 296 00:24:47,860 --> 00:24:49,050 வீட்டுக்கு போயிட்டியா? 297 00:24:49,250 --> 00:24:52,860 டின்னருக்கு வந்திருக்கேன். வெள்ளிகிழமை டேட்டை மாத்திட்டேன். 298 00:24:53,490 --> 00:24:54,430 அங்க எப்படி போகுது? 299 00:24:54,630 --> 00:24:58,350 உனக்கு பிடிக்காட்டி, "பைனாப்பிள்"ன்னு சொல்லு. 300 00:24:58,550 --> 00:25:02,080 பில் கேட்டுட்டு, பாத்ரூம் போயிட்டான். 301 00:25:02,960 --> 00:25:05,080 சிக்மா ஆண். பணம் நீ தர எதிர்பார்க்கறான். 302 00:25:05,500 --> 00:25:06,820 அது மாதிரி ஆளுங்க செம. 303 00:25:07,020 --> 00:25:07,940 உனக்கு என்ன வேணும்? 304 00:25:08,140 --> 00:25:11,610 திரு. லட்சத்தில் ஒருத்தர், ஃபிராங்க் ஃபுளோரஸை தேடிட்டேன். 305 00:25:11,810 --> 00:25:14,370 - அல்லது அவரின் நம்பர் தெரியும். - எப்படி? 306 00:25:14,570 --> 00:25:17,160 பாடாஃப் ஃபோனில் வேவு மென்பொருள் போட்டிருக்கேன். 307 00:25:17,360 --> 00:25:18,500 அவருக்கு அது தெரியாது. 308 00:25:18,700 --> 00:25:20,420 அவர் டெமோவை பார்க்க ஆரம்பிச்சதும், 309 00:25:20,610 --> 00:25:23,170 அவர் போனின் தொடர்பு கோப்பை எடுத்தேன், பிரமாதம், 310 00:25:23,370 --> 00:25:27,090 திரு. ஃபுளோரஸ் வந்தது. சமீப கால தொடர்பில்ல, ஆனா நம்பர் கிடைத்தது. 311 00:25:27,290 --> 00:25:28,800 - அவர கூப்பிட்டியா? - இதுவரை இல்ல. 312 00:25:29,000 --> 00:25:31,930 கூப்பிடலாம். பெண் குரலா இருந்தால் மென்மையா இருக்கும். 313 00:25:32,130 --> 00:25:35,470 அவரை பற்றி நமக்கு எதுவும் தெரியாது, அவரை பயப்படுத்த வேணாம். 314 00:25:35,670 --> 00:25:39,280 அவரின் தகவலை அனுப்பு, நாளைக்கு கூப்பிடுறேன். 315 00:25:40,910 --> 00:25:44,690 - நன்றி. - ஏய், நாம செய்றது சரிதான், இல்லையா? 316 00:25:44,890 --> 00:25:46,150 அவரை ரகசியமா தொடருவது? 317 00:25:46,350 --> 00:25:48,190 அவரின் தகவலைதான் சரிபார்க்கிறோம், 318 00:25:48,390 --> 00:25:51,840 அவர் உண்மையானவர் என்றால், காம்ப்வேருக்கு பாடாஃப் சரியான ஆள். 319 00:25:52,800 --> 00:25:55,910 அவரை நியமித்து சாங் எடுத்தது நல்ல தொழில் ரீதியான முடிவு. 320 00:25:56,110 --> 00:25:58,010 அவருக்கு தெரியாது, இல்லையா? 321 00:25:59,890 --> 00:26:01,100 பைனாப்பிள். 322 00:26:02,640 --> 00:26:03,600 ஹாய். 323 00:27:51,920 --> 00:27:52,960 மெதுவாக. 324 00:29:16,670 --> 00:29:20,070 ஹேய்! ஹேய்! அவரை கூப்பிட்டியா? 325 00:29:20,270 --> 00:29:23,950 - நான் யாரு? உன் உதவியாளர் இல்லை. - நீ என் படைப்பு தொடர்பாளர். 326 00:29:24,150 --> 00:29:27,290 ஃபிராங்குக்கு பொமோனாவில் நகை கடை இருக்கு, அவ்ளோதான். 327 00:29:27,490 --> 00:29:28,870 பாடாஃப்க்கு எப்படி தெரியும்? 328 00:29:29,070 --> 00:29:33,420 ஃபோனில் அவரிடம் அதை கேட்கலை. நாம அங்க அவரை நேரில் பார்த்து கேட்கணும். 329 00:29:33,620 --> 00:29:36,210 இந்த வார இறுதியில் செய்ய முடியாது. சர்ச் போணும். 330 00:29:36,410 --> 00:29:39,720 - இதை தனியா செய்யமாட்டேன். - சரி. வேற ஏதாவது யோசிக்கிறேன். 331 00:29:39,920 --> 00:29:41,130 கடவுள் மன்னிப்பார்தானே? 332 00:29:41,330 --> 00:29:45,470 நேற்றிரவு அவர் அலுவலகத்தில் எல்லாருக்கும் டெமோ லிங்க் அனுப்பினது தெரியுமா? 333 00:29:45,670 --> 00:29:49,350 - அருமை. நீ கடுமையா உழைச்ச. - அந்த பதிப்பில் வேவு மென்பொருள் இருக்கு. 334 00:29:49,550 --> 00:29:51,990 முழிச்சப்போ எல்லா கருவிகளிலும் நுழைய முடியுது. 335 00:29:52,750 --> 00:29:53,860 அப்போ அதை அழித்திடு. 336 00:29:54,050 --> 00:29:57,710 கடவுளே, உனக்கு சைபர் குற்றம் பற்றி நிறைய தெரிஞ்சிருக்கு. 337 00:30:27,280 --> 00:30:30,120 திரு. சாங் இந்த புயலை கடக்க நமக்கு உதவுவார். 338 00:31:40,560 --> 00:31:42,510 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 339 00:31:42,700 --> 00:31:44,650 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்