1 00:01:53,906 --> 00:01:56,408 மணிக்கணக்கில் காத்திருக்கிறேன். அவள் இரவு முழுவதும் அங்கேயே இருக்கிறாள். 2 00:01:56,491 --> 00:01:58,785 ஜன்னல் வழியாக பாருங்கள். சூரியன் உதிக்கிறது. 3 00:01:58,869 --> 00:02:00,829 மன்னிக்கவும். நீங்கள் உட்கார வேண்டும். 4 00:02:00,913 --> 00:02:02,915 சரி, டாக்டர் எங்கே? டாக்டர் எங்கே? 5 00:02:02,998 --> 00:02:05,626 -நான் அவரிடம் பேச வேண்டும். டாக்டர் எங்கே? -வந்துகொண்டிருக்கிறார். 6 00:02:05,709 --> 00:02:08,044 என் மகள் ஷாரனைப் பார்க்க அனுமதியுங்கள். 7 00:02:08,127 --> 00:02:10,047 நான் சில பதில்களைப் பெற விரும்புகிறேன், சரியா? 8 00:02:10,130 --> 00:02:12,007 தயவுசெய்து உட்காருங்கள். விரைவில் உங்களுக்கு உதவுவோம். 9 00:02:12,090 --> 00:02:14,343 உங்கள் மேற்பார்வையாளர் யார்? இது சரியில்லை. 10 00:02:14,426 --> 00:02:15,427 தீவிர சிகிச்சை பிரிவு 11 00:02:15,511 --> 00:02:17,513 -அவர் விரைவில் வருவார். -நான் அவரைப் பார்க்க வேண்டும். 12 00:02:17,596 --> 00:02:20,349 -மேடம், எனக்குப் புரிகிறது. -ஆம். நம்பமுடியவில்லை. 13 00:02:20,432 --> 00:02:22,142 சார், இது தடை செய்யப்பட்ட பகுதி. 14 00:02:42,538 --> 00:02:43,872 நீ வேண்டுமென்றே செய்கிறாயா? 15 00:02:45,415 --> 00:02:48,460 இங்கே இன்னும் நூறு நாற்காலிகள் உள்ளன. வேறு ஒன்றில் உட்கார். 16 00:02:49,378 --> 00:02:50,504 நான் ஏற்கனவே இதில் உட்கார்ந்திருக்கிறேன். 17 00:02:52,881 --> 00:02:56,301 போய்விடு. இது எதுவாக இருந்தாலும் என்னால் சமாளிக்க முடியாது. 18 00:02:56,385 --> 00:02:57,511 இல்லை, எனக்குப் புரிகிறது. 19 00:02:59,054 --> 00:03:00,180 காத்திருப்பது வேடிக்கையானது இல்லை. 20 00:03:01,431 --> 00:03:02,641 செவிலியர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள், 21 00:03:02,724 --> 00:03:04,935 அதோடு மருத்துவர்கள் காலை 7 மணி வரை தங்கள் சுற்றுக்கு வரமாட்டார்கள். 22 00:03:06,728 --> 00:03:07,729 ச்சே. 23 00:03:11,942 --> 00:03:13,110 யாருக்காக காத்திருக்கிறீர்கள்? 24 00:03:16,238 --> 00:03:17,239 என் மகளுக்காக. 25 00:03:19,533 --> 00:03:20,659 அவள் ஏன் இங்கே இருக்கிறாள்? 26 00:03:26,582 --> 00:03:28,125 உயிருக்கு ஆபத்தான காயங்கள்தான் முதலில் கவனிக்கப்படும். 27 00:03:28,208 --> 00:03:31,086 எனவே, உங்கள் மகளுக்கு நிபுணர் தேவைப்பட்டால், இங்கே சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். 28 00:03:32,421 --> 00:03:33,463 நீ மருத்துவரா? 29 00:03:33,547 --> 00:03:34,548 இல்லை, நான்... 30 00:03:40,971 --> 00:03:42,556 நானும் இதை அனுபவித்திருக்கிறேன். 31 00:03:44,099 --> 00:03:45,142 அது… 32 00:03:47,603 --> 00:03:48,979 தெரியாமல் இருப்பது கடினமானது. 33 00:03:50,314 --> 00:03:52,816 அவள் கடற்கரையில் இருந்திருக்கிறாள். கடற்கரையில் என்ன செய்து கொண்டிருந்திருப்பாள்? 34 00:03:55,068 --> 00:03:56,195 உங்கள் மகளா? 35 00:03:56,987 --> 00:03:58,322 அப்படித்தான் போலீசார் சொன்னார்கள். 36 00:03:59,281 --> 00:04:01,617 அந்த நாயை அவள் எங்கும் கூட்டிச்சென்றிருக்க முடியும். 37 00:04:01,700 --> 00:04:04,453 அது நள்ளிரவு. அப்புறம் என்ன? அவள் நீந்த சென்றிருப்பாளா? 38 00:04:06,205 --> 00:04:07,789 ஒருவேளை அவளுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். 39 00:04:09,708 --> 00:04:10,876 அதாவது, கடற்கரை. 40 00:04:12,377 --> 00:04:13,962 அவளுக்கு ஏன் அது தேவைப்பட்டிருக்கும்? 41 00:04:14,463 --> 00:04:16,673 யாரோ அவளை வெட்டி, அங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். 42 00:04:17,341 --> 00:04:18,341 நான் வருந்துகிறேன். 43 00:04:18,841 --> 00:04:20,594 வருந்தாதே. அவள் சாகப்போவதில்லை. 44 00:04:21,595 --> 00:04:23,639 ஹேய்! என்னை பார்த்து ஓடாதே. 45 00:04:23,722 --> 00:04:25,766 டாக்டர் எங்கே? சரி. டாக்டர் எங்கே? 46 00:04:25,849 --> 00:04:28,477 -வந்துகொண்டிருக்கிறார்... -வந்துகொண்டிருக்கிறாரா? 47 00:04:28,560 --> 00:04:30,437 -ரொம்ப நேரமாக இதைத்தான் சொல்கிறீர்கள். -நீங்கள் காத்திருக்க வேண்டும். 48 00:04:30,521 --> 00:04:33,232 -டாக்டர் எங்கே? -எனக்குத் தெரியும். நான்... 49 00:04:33,315 --> 00:04:36,527 டாக்டர் இங்கு வரும் வரை நான் நகர மாட்டேன். 50 00:04:36,610 --> 00:04:39,029 நான் நகர மாட்டேன். அதாவது, என்ன நடக்கிறது? 51 00:04:40,864 --> 00:04:43,617 ஐந்து மணி நேரமாக காத்திருக்கிறேன். அவருடைய பணிமாற்றம் எப்போது முடியும்? 52 00:05:31,999 --> 00:05:33,834 நீ எப்படி இங்கு வந்தாய், ஷாரன்? 53 00:05:34,501 --> 00:05:36,712 ஹேய். நீங்கள் இங்கே இருக்கக்கூடாது. 54 00:05:38,505 --> 00:05:39,756 தவறான அறைக்கு வந்துவிட்டேன். மன்னிக்கவும். 55 00:05:42,843 --> 00:05:45,012 வாருங்கள். போகலாம், இப்போதே! 56 00:06:18,295 --> 00:06:20,422 லாரன் பியூக்ஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 57 00:06:41,026 --> 00:06:44,321 1987 புல்ஸின் புள்ளிவிவரங்களுக்காக காத்திருக்கிறேன். அது ரோய்கோவிடம் உள்ளது. 58 00:06:53,330 --> 00:06:55,791 ஒன்று ப்ரோன்ஸ்வில்லில் கண்டுபிடிக்கப்பட்டது, மற்றொன்று எங்கல்வுட்டில். 59 00:06:55,874 --> 00:06:57,459 இருப்பதிலேயே வெகு தொலை பெர்வின். 60 00:06:57,543 --> 00:06:58,752 ஏழு பெண்கள் இருக்கிறார்கள். 61 00:06:58,836 --> 00:07:00,838 20 ஆண்டுகள் கால அளவில். 62 00:07:00,921 --> 00:07:02,548 அநேகமாக இன்னும் பலர் இருக்கலாம். 63 00:07:02,631 --> 00:07:04,216 உனக்கு தகவல் கொடுப்பவர் சிகாகோ போலீசாக இருக்கக்கூடாது. 64 00:07:04,299 --> 00:07:06,343 நான் இதுவரை அவர்களிடம் இதை சரிபார்க்கவில்லை. 65 00:07:06,426 --> 00:07:07,845 பிறகு எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய்? 66 00:07:10,472 --> 00:07:14,268 ஜூலியாவை கொலை செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு யாரோ அவளை அழைத்திருக்கிறான். 67 00:07:14,351 --> 00:07:15,644 அவள் அதை பதிவு செய்திருக்கிறாள். 68 00:07:17,312 --> 00:07:19,231 -டேப்புகள் என்னிடம் உள்ளன. இப்போது... -பொறு. 69 00:07:19,314 --> 00:07:21,191 அவை உன்னிடம் இருப்பது மாவட்ட வழக்கறிஞருக்குத் தெரியுமா? 70 00:07:21,275 --> 00:07:23,193 நாம் இப்போது ஆதாரங்களைத் திருடுகிறோமா? 71 00:07:23,277 --> 00:07:26,780 அதோடு எனக்குத் தகவல் தருபவர் ஜூலியாவின் பதிவுகளில் உள்ள குரலை அடையாளம் காண்கிறார். 72 00:07:27,447 --> 00:07:29,575 அதே ஆள்தான் அவளைத் தாக்கியிருக்கிறான். 73 00:07:30,075 --> 00:07:32,077 பொறு, உனக்கு தகவல் தருபவர் பாதிக்கப்பட்டவரா? 74 00:07:32,160 --> 00:07:33,912 அவள்தான் இந்த கொலைகள் பற்றி என்னிடம் சொன்னாள். 75 00:07:33,996 --> 00:07:37,165 அவள் இடம்பெற மறுத்து வருகிறாள். நாம் அவள் அடையாளத்தை இரகசியமாக வைத்திருந்தாலும். 76 00:07:37,249 --> 00:07:39,918 ஆபி, எனக்கு உயிர் பிழைத்தவர் தேவையில்லை. 77 00:07:40,919 --> 00:07:44,715 நான் தகவல் சேகரிக்கிறேன். கொலைகளை இணைக்கிறேன். நம்மிடம் இருப்பதை உறுதிப்படுத்துகிறேன். 78 00:07:44,798 --> 00:07:46,341 அந்தக் கோப்பை கொடு. நான் பார்க்கிறேன். 79 00:07:46,425 --> 00:07:49,094 -அவன் என்ன செய்திருக்கிறான் என்று பாருங்கள். -புரிகிறது. 80 00:07:49,178 --> 00:07:51,096 செய்தி அறிக்கையை முடியுங்கள். இதில் டேனுக்கு உதவுங்கள். 81 00:07:51,180 --> 00:07:52,514 நான் டேலியின் கருத்தரங்கை பார்த்துக்கொள்கிறேன். 82 00:07:52,598 --> 00:07:54,641 இல்லை. நாம் இப்போது அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. 83 00:07:54,725 --> 00:07:58,478 நாம் போகவில்லையென்றால், அவர் கவனிப்பார், அதற்காக நம்மை பிறகு தண்டிப்பார். 84 00:08:08,989 --> 00:08:11,366 இதோ. நான் சம்மர் பிரான்சிஸின் பின்னணியை எடுத்துவிட்டேன். 85 00:08:12,993 --> 00:08:15,662 எப்படிப் போனது? அட, அவர்கள் உங்களிடம் கடினமாக பேசினார்கள்? 86 00:08:15,746 --> 00:08:17,414 நன்றாக சென்றது. இன்னும் வேலை செய்ய வேண்டும். 87 00:08:18,290 --> 00:08:21,001 சரி, சம்மரின் கொலையை வெளியிட்டோம். ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டோம். 88 00:08:21,084 --> 00:08:22,252 மார்கஸ் நெகடிவ்களை எடுத்து, 89 00:08:22,336 --> 00:08:24,588 சம்மருக்கு உள்ளே இருந்ததைக் கண்டுபிடித்தான். 90 00:08:26,798 --> 00:08:28,842 -வேறு ஏதாவது இருக்கிறதா? -இதுதான். 91 00:08:31,470 --> 00:08:33,096 நீ இன்று காலை மார்கஸை அனுப்பினாயா? 92 00:08:33,847 --> 00:08:35,640 -எதற்கு? -அவன் கூட்டத்திற்கு வந்தான். 93 00:08:38,559 --> 00:08:39,686 நீங்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லையா? 94 00:08:41,188 --> 00:08:42,188 பாருங்கள். 95 00:08:42,731 --> 00:08:46,276 ஆட்லர் கோளரங்கத்தில் உள்ள ஊழியர்களின் லாக்கர் சாவி இது. 96 00:08:46,360 --> 00:08:49,112 அங்கு பணிபுரியும் ஒரு பெண் அதேபோன்ற ஒன்றை தொலைத்துவிட்டாள். 97 00:08:49,196 --> 00:08:50,572 இதையெல்லாம் எப்போது கண்டுபிடித்தாய்? 98 00:08:50,656 --> 00:08:53,283 நேற்று இரவு. உங்களை அழைத்தேன், ஆனால் நீங்கள் எடுக்கவில்லை. 99 00:08:53,825 --> 00:08:56,912 சம்மர் பிரான்சிஸ் 1972 இல் இறந்தாள். இந்த பெண் இப்போது அங்கு வேலை செய்கிறாளா? 100 00:08:56,995 --> 00:08:59,665 -ஆம், 2 வாரங்களுக்கு முன்பு தொலைத்திருக்கிறாள். -எனவே, இதுவும் அதுவும் ஒன்றல்ல. 101 00:09:03,877 --> 00:09:08,131 முதன்மை ஆதாரம் இல்லாத ஏழு கொலைகள் பற்றி நான் விசாரிக்க வேண்டும். 102 00:09:08,215 --> 00:09:10,759 நான் இன்னும் உங்களுக்கு உதவ முடியும். குடும்பங்களை சந்திக்கிறேன். 103 00:09:10,843 --> 00:09:13,220 கடந்த வாரம் யாரோ ஒருவள் தன் சாவியை தொலைக்கிறாள், 104 00:09:13,303 --> 00:09:15,973 அதை 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையுடன் இணைக்க முயற்சிக்கிறாய். 105 00:09:16,056 --> 00:09:17,641 அது எனக்கு எப்படி உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. 106 00:09:17,724 --> 00:09:22,104 உதவ விரும்புகிறாயா? மாட்ரிகலின் டேப்களை கொண்டுவர யாராவது தேவை. 107 00:09:26,316 --> 00:09:30,696 நீ உடனே போக வேண்டும், ஏனென்றால் வாரன் 3 மணிக்கு கடையை மூடிவிடுவார். 108 00:09:43,625 --> 00:09:44,668 ச்சே. 109 00:09:49,173 --> 00:09:51,300 -ஹேய். -ஹேய். 110 00:09:51,383 --> 00:09:52,885 அந்த பிரான்சிஸின் நெகடிவ்கள், பயனுள்ளதாக இருந்தனவா? 111 00:09:53,844 --> 00:09:55,679 நாங்கள் வேறு திசையில் செல்கிறோம். 112 00:09:56,180 --> 00:09:59,558 இது பெரிய செய்திக்கட்டுரை. அநேகமாக அது பல திசைகளில் செல்லக்கூடும். 113 00:10:01,310 --> 00:10:03,562 இன்று காலை கூட்டம் அதைப் பற்றியதா? 114 00:10:05,939 --> 00:10:07,774 உன்னால் போக முடியவில்லை. நம்மில் ஒருவர் போக வேண்டும் என நினைத்தேன். 115 00:10:11,904 --> 00:10:12,905 எங்கு போகிறாய்? 116 00:10:14,114 --> 00:10:16,241 நான் சவுத் லூப்பில் டேப்களை வாங்கப் போகிறேன். 117 00:10:16,325 --> 00:10:18,035 -மாட்ரிகலின் பதிவுகளா? -ஆம். 118 00:10:18,118 --> 00:10:19,244 நானும் வருகிறேன். 119 00:10:22,497 --> 00:10:24,208 ஆபி காலை பேசியதை உன்னிடம் சொல்கிறேன். 120 00:10:26,210 --> 00:10:27,419 சரி. 121 00:10:37,930 --> 00:10:39,348 புகைப்படத்தில் அந்த சாவிக் கொத்து, 122 00:10:39,431 --> 00:10:42,601 வேறு ஏதாவது செய்தியிலிருந்து கலந்திருக்காது என்பதில் உறுதியாக இருக்கிறாயா? 123 00:10:43,143 --> 00:10:46,647 நீ கொடுத்த சம்மர் பிரான்சிஸின் நெகடிவ்களில் இருந்துதான் நான் அதை அச்சிட்டேன். 124 00:10:53,946 --> 00:10:55,405 ஹேய். நீ என்ன செய்கிறாய்? 125 00:10:55,906 --> 00:10:58,450 அந்த பெண்களின் படங்களை என் மனதிலிருந்து அகற்ற முயற்சிக்கிறேன். 126 00:10:58,534 --> 00:10:59,826 அதை அழகான ஒன்றைவைத்து மாற்றுகிறேன். 127 00:11:03,247 --> 00:11:04,414 ஆம், மீண்டும் செய். 128 00:11:07,084 --> 00:11:09,336 நீதான் என் அழகி. 129 00:11:11,839 --> 00:11:13,090 அது பிடித்திருக்கிறது. 130 00:11:13,173 --> 00:11:14,842 நேரம் ஒதுக்கியதற்கு பாராட்டுகிறேன். நன்றி. 131 00:11:15,759 --> 00:11:17,010 அது லோவரின் சகோதரியா? 132 00:11:17,094 --> 00:11:20,347 நார்த்வேஸ்ட் பல்கலைக்கழக ஆளிடம் பேசினாயா? 133 00:11:20,430 --> 00:11:24,309 ஆம், வெட்டுக்கள் மத அல்லது மதத்திற்கு எதிரானதாக இருக்கலாம் என்று சொன்னார், 134 00:11:24,393 --> 00:11:27,479 அல்லது சிலுவையுடன் சம்பந்தப்பட்ட சில மோசமான நினைவு என்று. 135 00:11:27,563 --> 00:11:29,356 பாதிக்கப்பட்டவர்களுக்குள் பொருட்களை விட்டுச் செல்வது பற்றி? 136 00:11:29,439 --> 00:11:30,440 அதற்கு என்ன பொருள்? 137 00:11:30,524 --> 00:11:33,694 அவரிடம் தொடர்புபடுத்தும் எதுவும் இல்லை, அவருடைய மேற்கோளை நாம் சேர்க்க முடியாது. 138 00:11:33,777 --> 00:11:35,821 ஹேய், கேத்தரின் மூரின் வழக்கில் பணியாற்றிய புலனாய்வாளர், 139 00:11:35,904 --> 00:11:38,031 ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார். 140 00:11:38,115 --> 00:11:40,617 -அவர் சிலரை அழைப்பார். -ஆனால் அசல் குறிப்புகளைப் பகிர்வாரா? 141 00:11:40,701 --> 00:11:42,327 நான் கேட்கலாம். இல்லை என்று சொல்வார். 142 00:11:43,036 --> 00:11:44,454 -ட்ரிப்யூனில் இருந்து மேட்டி அழைத்தார். -யார்? 143 00:11:44,538 --> 00:11:46,164 மேட்டி ஸ்பியர்ஸ், அவர்களுடைய புதிய நகர பதிப்பாசிரியர். 144 00:11:46,248 --> 00:11:48,041 நீ சாட்சிகளுக்கான அறையில் இருந்ததை கேள்விப்பட்டிருக்கிறான். 145 00:11:48,625 --> 00:11:49,626 அவர்களுக்கு எப்படி தெரிந்தது? 146 00:11:51,420 --> 00:11:53,964 ஓய்வு பெற்ற புலனாய்வாளரிடம் மற்ற பெண்களின் பெயர்களைக் கொடுத்தாயா? 147 00:11:55,549 --> 00:11:56,550 அடச்சே. 148 00:11:57,301 --> 00:11:59,469 எனவே, நீ கண்டுபிடித்த அதே பாதிக்கப்பட்டவர்களின் பெயர் அவர்களிடமும் உள்ளன. 149 00:12:02,639 --> 00:12:03,807 இன்றிரவு அச்சிடலாம். 150 00:12:07,227 --> 00:12:08,228 கேளுங்கள்… 151 00:12:09,313 --> 00:12:10,522 எல்லா தகவல்களும் இல்லாத ஒன்றை. 152 00:12:11,023 --> 00:12:14,193 பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 2 பத்திகள், இன்னும் நிறைய இருக்கிறது என்று சொல்வோம். 153 00:12:14,276 --> 00:12:16,904 உங்கள் ஆதாரம் இல்லாமல், இது தற்செயலான கொலைகள் போல தெரிகிறது. 154 00:12:16,987 --> 00:12:18,488 அவர்களை இணைக்க வேறு வழிகள் உள்ளன. 155 00:12:19,198 --> 00:12:20,490 அவன் பெண்களை எப்படி தேர்ந்தெடுத்தான், 156 00:12:20,574 --> 00:12:23,076 அவர்களுக்கு பொதுவானது என்ன, அவர்களுக்குள் விட்டுச்சென்ற பொருட்கள். 157 00:12:23,702 --> 00:12:24,745 அந்த இணைப்புகளை என்னால் கண்டுபிடிக்க முடியும். 158 00:12:26,246 --> 00:12:29,291 நீ ஓய்வு பெற்ற புலனாய்வாளரை மீண்டும் அழைத்து 159 00:12:29,374 --> 00:12:31,335 குறைந்த பட்சம் அவரது வழக்கு விவரங்களை உறுதி செய். 160 00:12:31,418 --> 00:12:33,837 காவல்துறையின் கருத்தொன்று ஏதாவது தேவை. 161 00:12:36,548 --> 00:12:38,926 கப்பல் துறையில் எங்களை சந்தி. அங்கே பார்க்கலாம். 162 00:12:41,094 --> 00:12:42,346 அது இங்கேதான் இருக்க வேண்டும். 163 00:12:47,601 --> 00:12:48,936 இவருடைய பரிவர்த்தனை என்ன? 164 00:12:58,445 --> 00:12:59,530 பின்பக்கம் வாருங்கள். 165 00:13:05,786 --> 00:13:07,538 ஹாய். டேன் உன்னை அனுப்பினானா? 166 00:13:08,121 --> 00:13:10,874 -ஆம். நாங்கள் சன்-டைம்ஸை சேர்ந்தவர்கள். -அதுதான் வெளியீடுகள். 167 00:13:10,958 --> 00:13:13,544 இரைச்சலில் இருந்து தனிமைப்படுத்தக்கூடிய எல்லாம் அறிக்கையில் உள்ளன. 168 00:13:16,922 --> 00:13:18,632 இவைதானா? நன்றி. 169 00:13:26,139 --> 00:13:28,809 சரி. இது இரைச்சல்களை கொண்டது. 170 00:13:28,892 --> 00:13:31,395 -இதை ஒலிக்கவிட முடியுமா? -சரி. மணிக் கணக்கில் கட்டணம் வசூலிக்கிறேன். 171 00:13:32,396 --> 00:13:33,480 டேன் அதற்கு பணம் கொடுப்பார். 172 00:13:34,231 --> 00:13:35,232 ஆம். நன்றி. 173 00:13:40,779 --> 00:13:41,780 தரம் மோசமானது. 174 00:13:42,698 --> 00:13:44,950 அழைப்புகளைப் பதிவு செய்ய பதிலளிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாள். 175 00:13:48,704 --> 00:13:51,373 ஆகஸ்ட் 13. 3:03 pm. 176 00:13:51,957 --> 00:13:52,958 ஹலோ? 177 00:13:53,709 --> 00:13:55,919 முதல் இரண்டு நாட்களுக்கு, எல்லாமே உடனே துண்டிக்கப்பட்ட அழைப்புகள்தான். 178 00:13:56,003 --> 00:13:57,004 ஹலோ? 179 00:13:58,338 --> 00:14:00,799 -அதை கேட்டீர்களா? -ஆம். சூறாவளி எச்சரிக்கை. 180 00:14:00,883 --> 00:14:02,509 வான்வழித் தாக்குதல் சைரன்கள் போல தெரிகிறது. 181 00:14:03,385 --> 00:14:04,511 நீ எங்கு சேவை செய்தாய்? 182 00:14:05,262 --> 00:14:07,055 1வது குதிரைப்படை. ஷாவ் பள்ளத்தாக்கு. 183 00:14:09,183 --> 00:14:12,060 1990. அது ப்ளைன்ஃபீல்ட் சூறாவளியாக இருந்திருக்க வேண்டும், இல்லையா? 184 00:14:13,020 --> 00:14:14,771 நான் அதை படமெடுக்க சென்றபோது நீ மிகவும் கோபப்பட்டாய். 185 00:14:18,275 --> 00:14:20,819 அந்த சூறாவளி எச்சரிக்கைகள், அவை நகரம் முழுவதும் ஒலித்தன. 186 00:14:20,903 --> 00:14:22,362 எனவே, அவன் எங்கும் இருந்திருக்கலாம். 187 00:14:22,446 --> 00:14:23,447 அதில் இருந்ததை எடுத்தேன். 188 00:14:23,530 --> 00:14:24,907 ஹலோ? 189 00:14:25,407 --> 00:14:26,533 நான் போலீஸை அழைத்தேன். 190 00:14:28,452 --> 00:14:30,204 அவர்கள் 18 நிமிடங்களில் அங்கு வருவார்கள். 191 00:14:31,330 --> 00:14:32,456 அவர்கள் வந்துவிட்டார்கள். 192 00:14:32,539 --> 00:14:33,999 -இல்லை, இன்னும் இல்லை. -அது அவனா? 193 00:14:35,918 --> 00:14:38,045 -ஆம். -அதாவது, நான்… 194 00:14:38,754 --> 00:14:40,464 அவர்கள் வரும்போது நான் ஏற்கனவே உன்னோடு இருப்பேன். 195 00:14:41,673 --> 00:14:43,258 அவன் முதல் முறை அழைத்ததை ஒலிக்க விட முடியுமா? 196 00:14:44,468 --> 00:14:46,929 -நிச்சயமாக. -ஒவ்வொரு கணமும் உன்னுடன் இருக்கிறேன். நான்... 197 00:14:49,264 --> 00:14:50,265 ஹலோ? 198 00:14:50,974 --> 00:14:54,228 ஹலோ? ஏன் நீ இப்படி செய்கிறாய்? 199 00:14:56,522 --> 00:14:57,981 எப்படி நீ இதை செய்கிறாய்? 200 00:14:58,065 --> 00:14:59,816 அதன் பிறகு நிறைய சுவாசிக்கும் ஒலி. 201 00:14:59,900 --> 00:15:02,319 -எது எதிரொலிக்கிறது? -இணைப்பின் ஒலியாக இருக்கலாம். 202 00:15:02,402 --> 00:15:05,906 நெட்வொர்கில் இடைஞ்சல் இருந்தால் அது ஏற்படும். வயரிங்கில் தண்ணீர் சேதம் அதை ஏற்படுத்த முடியும். 203 00:15:06,406 --> 00:15:08,200 இதோ, உங்களுக்காக இரண்டையும் பிரிக்கிறேன். 204 00:15:09,409 --> 00:15:10,661 இதோ முதல் ஒன்று. 205 00:15:12,913 --> 00:15:14,831 ஹலோ? 206 00:15:16,083 --> 00:15:17,376 ஏன் நீ இப்படி செய்கிறாய்? 207 00:15:18,293 --> 00:15:19,878 எப்படி நீ இதை செய்கிறாய்? 208 00:15:23,507 --> 00:15:24,675 இப்போது, இதோ எதிரொலி. 209 00:15:25,843 --> 00:15:27,928 ஹலோ? 210 00:15:28,762 --> 00:15:31,723 ஏன் நீ இப்படி செய்கிறாய்? எப்படி நீ இதை செய்கிறாய்? 211 00:15:33,350 --> 00:15:35,477 வித்தியாசமாக இருக்கிறது. அவள் அதே போல ஒலிக்கவில்லை. 212 00:15:35,561 --> 00:15:37,563 முதலில் பதிவு செய்யப்பட்டதைப் போல வடிகட்டப்பட்டது. 213 00:15:37,646 --> 00:15:39,231 இரண்டாவது நேரடியாக இணைப்பில் அவளுடைய குரல். 214 00:15:40,899 --> 00:15:44,862 அவள் சொல்லும் முன்பே அவன் அவளின் பதிவை ஒலிக்க செய்கிறானா? 215 00:15:45,362 --> 00:15:47,489 மீண்டும் அவற்றை அருகருகே ஒலிக்க விடுகிறேன். 216 00:15:49,950 --> 00:15:52,202 ஹலோ? 217 00:15:53,328 --> 00:15:54,872 ஏன் நீ இப்படி செய்கிறாய்? 218 00:15:56,123 --> 00:15:57,875 எப்படி நீ இதை செய்கிறாய்? 219 00:16:53,388 --> 00:16:54,848 என்ன இது? என்ன... 220 00:16:54,932 --> 00:16:56,099 எடுத்துக்கொள்! எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்! 221 00:16:56,683 --> 00:16:58,810 -நீ ஏன் இங்கு இருக்கிறாய்? -நான் இங்கு வசிக்கின்றேன். என்ன இது? 222 00:16:58,894 --> 00:17:00,437 நீ ஏன் இங்கு இருக்கிறாய்? 223 00:17:01,188 --> 00:17:02,189 நான் இங்கு வசிக்கின்றேன். 224 00:17:02,814 --> 00:17:04,775 உனக்கு என்ன வேண்டும்? எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். 225 00:17:07,444 --> 00:17:08,904 -ஷாரன் எங்கே? -யார்? 226 00:17:10,489 --> 00:17:11,656 நீ இங்கு எவ்வளவு காலமாக வசிக்கிறாய்? 227 00:17:11,740 --> 00:17:13,200 -என்ன? -எவ்வளவு காலமாக? 228 00:17:13,282 --> 00:17:14,826 தெரியவில்லை, நான்கு வருடங்கள் இருக்கலாம். 229 00:17:14,910 --> 00:17:18,454 இல்லை, ஷாரன் இங்கே வசிக்கிறாள். எனக்குத் தெரியும். எங்கே அவள்? 230 00:17:19,665 --> 00:17:24,044 எனக்குத் தெரியாது. ஷாரனை எனக்குத் தெரியாது! அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாது. 231 00:17:24,752 --> 00:17:25,796 உனக்கு முன் இங்கு வாழ்ந்தவர் யார்? 232 00:17:25,878 --> 00:17:28,632 -என்ன? -உனக்கு முன்பு, இங்கு வாழ்ந்தவர் யார்? 233 00:17:28,715 --> 00:17:31,760 வயதான ஒருவர். இன்னும் அவருக்கு அஞ்சல் வருகிறது. அதை அனுப்ப இடமில்லை. 234 00:17:31,844 --> 00:17:33,095 அவர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். உனக்கு அது வேண்டுமா? 235 00:17:33,178 --> 00:17:34,179 வாயை மூடு! 236 00:17:52,072 --> 00:17:53,657 இது உடைந்தால், நீ இறந்துவிடுவாய். 237 00:18:30,903 --> 00:18:31,904 ஹேய், நீ நலமா? 238 00:18:32,779 --> 00:18:34,156 நீ அதைக் கேட்டாய், இல்லையா? 239 00:18:34,239 --> 00:18:35,449 என்ன கேட்டேன் என்று தெரியவில்லை. 240 00:18:36,366 --> 00:18:40,370 அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவனுக்குத் தெரியும். முன்பே அவன் பதிவு செய்திருக்கிறான். 241 00:18:41,872 --> 00:18:44,249 அப்படி எந்த அழைப்பும் உறுதியாக உனக்கு வரவில்லையா? 242 00:18:47,753 --> 00:18:49,087 அது என்னவென்று எனக்குத் தெரியாது. 243 00:18:51,006 --> 00:18:52,841 நான் ட்ரிப்யூனில் வேலை செய்ய தொடங்கியிருந்தேன். 244 00:18:53,800 --> 00:18:55,802 அது உனக்கு அப்படி நடந்ததற்கு பல வருடங்களுக்கு முன்பு இல்லையா? 245 00:18:55,886 --> 00:18:56,887 ஆம். 246 00:18:56,970 --> 00:18:59,598 அந்த அலுவலகத்தில் ஒரு சில அழைப்புகள் வரும்… 247 00:18:59,681 --> 00:19:00,682 அப்புறம் என்ன? 248 00:19:06,563 --> 00:19:09,483 -நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. -எதை? 249 00:19:09,566 --> 00:19:10,984 என்னிடம் கேள்விகளை கேட்பது. அது... 250 00:19:11,068 --> 00:19:14,154 நீ என்ன பேசுகிறாய்? என்னிடம்தான் நீ முதலி சொல்லியிருக்க வேண்டும். 251 00:19:14,238 --> 00:19:17,074 உனக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நான் ஒரு கூட்டத்துக்கு செல்ல விரும்பவில்லை. 252 00:19:18,408 --> 00:19:19,826 வேறு எப்போதாவது அழைப்பு வந்ததா? 253 00:19:25,457 --> 00:19:27,960 நான் இதை இப்படி கற்பனை செய்யவில்லை. 254 00:19:29,461 --> 00:19:30,587 நீ என்ன எதிர்பார்த்தாய்? 255 00:19:31,255 --> 00:19:33,757 அதாவது, இந்த இடம் இரண்டாவது வீடு போன்றது என்று சொன்னாய். 256 00:19:34,508 --> 00:19:35,676 இது மிகவும் பெரிய ஒன்று. 257 00:19:36,593 --> 00:19:38,512 ஆம், கூட்டம் இருந்தால் சிறியதாக தோன்றும். 258 00:19:39,012 --> 00:19:40,973 உன் அம்மா உன்னை இங்கு சுற்றித்திரிய அனுமதிப்பாரா? 259 00:19:41,557 --> 00:19:45,018 அவர் வாரத்திற்கு மூன்று முறை பின்னிரவு 2 மணி நிகழ்ச்சியில் பாடுவார், 260 00:19:46,270 --> 00:19:49,773 அவரால் குழந்தை பராமரிப்பாளருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. எனவே, அப்படித்தான். 261 00:20:04,371 --> 00:20:06,248 ஹேய், நீ என்ன தேடுகிறாய்? 262 00:20:10,627 --> 00:20:11,628 கிர்பி? 263 00:20:14,548 --> 00:20:15,841 நீ என்ன செய்கிறாய்? 264 00:20:15,924 --> 00:20:18,010 அது இன்னும் இங்கே இருக்க வேண்டும். மற்ற எல்லாம் இருக்கின்றன. 265 00:20:26,685 --> 00:20:28,228 இது என்ன சேர்க்கிறது என்று புரியவில்லை. 266 00:20:28,312 --> 00:20:30,230 இது நயத்தைச் சேர்க்கிறது. 267 00:20:30,314 --> 00:20:32,608 கடவுளே, இது அனுபவமற்றவர்களின் நிகழ்ச்சி அல்ல. 268 00:20:32,691 --> 00:20:33,692 ஹேய், அம்மா. 269 00:20:33,775 --> 00:20:34,776 -ஹேய், ஷாரன். -ஹேய். 270 00:20:34,860 --> 00:20:37,070 என் தொண்டை வறண்டு விட்டது. ஏன் இவ்வளவு குளிராக இருக்கிறது? 271 00:20:37,154 --> 00:20:39,072 உங்களுக்கு ஒரு தெளிவான மாதிரி இசை தேவை. கூட்டம் இல்லாமல். 272 00:20:41,867 --> 00:20:43,285 என் தொண்டை கிழியப் போகிறது. 273 00:20:44,077 --> 00:20:45,537 நன்றி, செல்லம். 274 00:20:49,374 --> 00:20:51,001 யார் அதைச் செய்தது? 275 00:20:52,002 --> 00:20:54,838 ஷாரன் மறைந்துவிட்டாள் புகை போல 276 00:20:54,922 --> 00:20:56,548 இந்தப் பாடலைப் போல அவர்களும் மறைந்துவிட்டார்கள். 277 00:20:57,424 --> 00:20:58,425 என்ன? 278 00:20:58,509 --> 00:21:01,345 லியோனார்ட் கோஹன். நான் உங்களுக்காக எப்போதும் ஒலிக்க செய்வேனே. 279 00:21:03,680 --> 00:21:05,224 உனக்கு இரகசிய அபிமானி இருக்கலாம். 280 00:21:05,724 --> 00:21:07,100 அதை நினைத்து மிகவும் பெருமைப்படாதே. 281 00:21:07,601 --> 00:21:09,144 உங்களை வெறுப்பூட்டியது எது? 282 00:21:11,188 --> 00:21:14,107 டச் அண்ட் கோவில் உள்ள வீயிடம் டாமி ஒரு டேப்பை கொடுத்திருக்கிறான். 283 00:21:15,067 --> 00:21:17,277 எனவே, அதாவது, அவர்கள் அதிகம் பணம் கொடுக்கவில்லை... 284 00:21:17,361 --> 00:21:20,864 ஆனால் அவர்கள் விளம்பரம் மற்றும் விநியோகத்துக்கு பணம் தரப் போகிறார்கள்... 285 00:21:21,823 --> 00:21:23,367 ஆம், லாபம் 50-50 பங்காக பிரிக்கப்படும். 286 00:21:23,825 --> 00:21:26,203 அது நன்றாக இருக்கும். நான் தங்க வேண்டுமா? 287 00:21:27,246 --> 00:21:30,541 உன் அலுவலக பணி வழக்கத்தை சீர்குலைக்க நான் விரும்பவில்லை. 288 00:21:30,624 --> 00:21:32,292 அப்படி சொல்லாதீர்கள். 289 00:21:32,960 --> 00:21:34,253 அது ஒரு செய்தித்தாள். அது... 290 00:21:34,336 --> 00:21:35,796 இந்த பையன். 291 00:21:35,879 --> 00:21:40,300 அவன் தனது வாழ்நாளில் பாதி இசைத்திருக்கிறான், இருந்தாலும் டிலே பெடலை மிதிக்கத் தெரியவில்லை! 292 00:21:41,260 --> 00:21:43,971 -உங்களால் செய்ய முடியுமா? -ஆம், முடியும். 293 00:21:44,471 --> 00:21:45,639 ஷாரன்... 294 00:21:45,722 --> 00:21:50,227 ஷாரன், தெரியும் கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர் பதவிகளுக்கு போவது கடினம், ஆனால்... 295 00:21:50,310 --> 00:21:52,062 நான் ஏன் சைபீரியாவில் இருப்பது போல் சத்தம் கேட்கிறது? 296 00:21:52,145 --> 00:21:53,355 "மான்ஸ்டர் ரிவெர்ப்" என்று சொன்னீர்கள். 297 00:21:53,438 --> 00:21:55,941 ஆம். பெரிது, செவிக்கு புலப்படாத அளவுக்கு இல்லை. 298 00:21:56,942 --> 00:21:58,610 பதிலளிக்கிறாயா? மூடப்பட்டுவிட்டது என்று சொல். 299 00:21:59,194 --> 00:22:01,697 -இனி அது என் வேலை இல்லை. -நான் என் வேலையைச் செய்ய முயற்சிக்கிறேன்... 300 00:22:01,780 --> 00:22:04,741 நீ சவுண்ட் மிக்ஸில் பின்தங்கியிருக்கலாம் அல்லது நெருக்கமாகவும் இருக்கலாம். 301 00:22:04,825 --> 00:22:07,244 -என் மைக்கை அணைத்து விடு. -இரண்டையும் செய்ய முடியாது. 302 00:22:07,327 --> 00:22:09,162 -என் மைக்கை அணை. -இரண்டையும் செய்ய முடியாது. 303 00:22:09,246 --> 00:22:11,164 ஹேய். சிட்ஸ். இப்போது மூடப்பட்டுள்ளோம். 304 00:22:11,248 --> 00:22:12,791 கடவுளே. உங்கள் இசையின் அளவை குறையுங்கள். 305 00:22:18,714 --> 00:22:20,382 என்ன நடக்கிறது? 306 00:22:20,883 --> 00:22:22,342 என்ன நடக்கிறது? 307 00:22:24,636 --> 00:22:27,181 ஆம். ஆம். இன்னும் கொஞ்சம். இன்னும் கொஞ்சம்! 308 00:22:28,265 --> 00:22:29,266 என்ன? 309 00:22:31,977 --> 00:22:33,061 நான் சொன்னேனே. 310 00:22:33,145 --> 00:22:35,314 ஷாரன்! இங்கே வா. 311 00:22:35,397 --> 00:22:36,982 நான் சொன்னேனே. 312 00:22:37,065 --> 00:22:40,319 ஷாரன்! இங்கே வா. இன்னொரு ஆம்ப்ளிஃபையரை கொண்டு வா. 313 00:22:55,751 --> 00:22:59,546 நானும் ஜூலியாவைப் போலத்தான். அவன் இங்கே இருந்திருக்கிறான். 314 00:23:03,133 --> 00:23:06,136 முதன்முதலில் அழைப்புகள் வந்தபோது, ரேச்சலிடம் சொல்லவில்லையா? 315 00:23:07,888 --> 00:23:11,433 நான் என்ன சொல்லியிருப்பேன்? அது பைத்தியம் போல தோற்றமளித்திருக்கும். 316 00:23:12,017 --> 00:23:16,396 பிறகு அழைப்புகள் நின்றுவிட்டன. ஆனால் அவன் நிற்கவில்லை. காத்திருந்தான். 317 00:23:19,816 --> 00:23:21,401 அது அவன்தான் என்பதை ஒருபோதும் உணரவில்லை. 318 00:23:26,406 --> 00:23:28,075 கேத்தரின் தனியாக வெளியே போகமாட்டாள். 319 00:23:28,158 --> 00:23:29,952 எப்போதும் கதவை பூட்டியே வைத்திருப்பாள். 320 00:23:30,035 --> 00:23:33,247 ஒரு மணி நேரத்திற்கு 20 வீட்டு கதவுகளைத் தட்டினோம். பெரிய பகுதியில் பிரச்சாரம் செய்தோம். 321 00:23:33,747 --> 00:23:35,415 இது மேயர் வாஷிங்டனின் முதல் பிரச்சாரம், இல்லையா? 322 00:23:35,499 --> 00:23:36,333 ஆம். 323 00:23:36,416 --> 00:23:39,419 அவள் அரசியலில் ஈடுபட்டாளா? அவள் பிரச்சாரத்திற்கு தன்னார்வத் தொண்டு செய்தாளா? 324 00:23:40,587 --> 00:23:42,840 இல்லை. ஆனி மற்ற விஷயங்களில் அக்கறை காட்டினாள். 325 00:23:42,923 --> 00:23:45,259 அவள் குடும்பத்தைப் பற்றி. என்னைப் பற்றி. அவளைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி. 326 00:23:45,884 --> 00:23:47,761 மார்கோட் ஒரு நல்ல பையனை காதலித்தாள். 327 00:23:47,845 --> 00:23:49,471 அவன் 13 கார்பெண்டர்ஸ் லோக்கலில் இருந்தான். 328 00:23:49,555 --> 00:23:51,557 அவள் தனியாக வசிக்கவில்லை? 329 00:23:51,640 --> 00:23:54,393 இல்லை. அவர்கள் இருவர் மற்றும் ஒரு சிறுமி. 330 00:23:54,935 --> 00:23:57,062 போனி, பெட்டி, அது போன்ற ஒரு பெயர்தான். 331 00:23:57,145 --> 00:23:58,355 அவளுக்கு ஒரு மகள் இருந்தாளா? 332 00:23:58,438 --> 00:24:00,357 கெரேன் குழந்தைகளைப் பற்றி பேசியதில்லை. 333 00:24:01,066 --> 00:24:05,487 அவள் இசை படித்துக் கொண்டிருந்தாள், ஆனால் நான் நோய்வாய்ப்பட்டபோது செவிலிப் பணிக்கு மாறினாள். 334 00:24:08,448 --> 00:24:11,827 அவள் ப்ராவிடன்ட் மருத்துவமனையில் வேலை செய்தாளா? 335 00:24:11,910 --> 00:24:12,911 ஆம். 336 00:24:12,995 --> 00:24:16,999 தன் ரியல் எஸ்டேட் உரிமத்தை 1985 இல் பெற்றாளா? 337 00:24:17,082 --> 00:24:18,458 ஆம், அவள் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு. 338 00:24:18,542 --> 00:24:20,377 ஆம். தெற்கு சிகாகோவில் ஏதேனும் இடங்களைக் காட்டினாளா? 339 00:24:20,460 --> 00:24:21,545 இல்லை. நாங்கள் ஆண்டர்சன்வில்லில் இருந்தோம். 340 00:24:21,628 --> 00:24:23,797 நாங்கள் முழு கோடைகாலத்தையும் தெற்குப் பகுதியில் பிரசாரம் செய்தோம். 341 00:24:23,881 --> 00:24:28,177 எந்த சுற்றுப்புறங்களில்? ஒருவேளை எங்கல்வுட்? ப்ரோன்ஸ்வில்லா? 342 00:24:28,260 --> 00:24:29,845 இல்லை, வெறும் உட்லான் மட்டும். 343 00:24:29,928 --> 00:24:31,680 உங்களை கவனிப்பதற்கும் மருத்துவமனைக்கும் இடையில், 344 00:24:31,763 --> 00:24:33,849 அவளுக்கு அதிக நேரம் இருந்திருக்காது, இல்லையா? 345 00:24:33,932 --> 00:24:36,768 அவள் கவலைப்படவில்லை. அவளுக்கு வீட்டில் இருப்பது பிடிக்கும். 346 00:24:36,852 --> 00:24:38,729 அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அது நினைவிருக்கிறது. 347 00:24:38,812 --> 00:24:40,814 அப்போது இது பெரிய சர்ச்சையாக ஆனது. 348 00:24:40,898 --> 00:24:43,650 மற்ற பெண்கள் யாராவது அதற்கு முன்வந்தார்களா? 349 00:24:43,734 --> 00:24:45,694 -மன்னிக்கவும். அவர்களை எனக்குத் தெரியாது. -எனக்குத் தெரியாது. 350 00:24:45,777 --> 00:24:48,864 ஒருவேளை அவள் அவர்களை தேவாலயம், பார், கிளப்பில் சந்தித்தாளா? 351 00:24:49,990 --> 00:24:52,201 இந்தப் பெண்களில் யாரையாவது அவளுக்குத் தெரியுமா? 352 00:24:52,284 --> 00:24:53,493 …இந்தப் பெண்களில் யாரையாவது தொடர்புகொண்டாளா? 353 00:24:53,577 --> 00:24:54,828 இந்தப் பெண்களில் யாரையாவது? 354 00:24:54,912 --> 00:24:56,038 இந்தப் பெண்களில் யாரையாவது தெரியுமா? 355 00:24:56,622 --> 00:24:58,373 எனக்குப் புரியவில்லை. உங்கள் கதை எதைப் பற்றியது? 356 00:25:13,555 --> 00:25:15,474 நீங்கள் கென்வுட்டில் சம்மருடன் வாசித்தீர்களா? 357 00:25:16,350 --> 00:25:18,727 நான் சமூக பொருளாதார படிநிலையில் கீழிருந்து மேலே வந்தேன் என்று கேட்கிறீர்களா? 358 00:25:19,228 --> 00:25:21,897 நான் அவதூறு வழக்குகளுக்கான வழக்கறிஞர், அதோடு இது அமெரிக்கா. 359 00:25:23,857 --> 00:25:25,901 அப்படித்தான் சந்தித்தீர்கள்? சட்ட பள்ளியில்? 360 00:25:26,401 --> 00:25:28,737 நாங்கள் பார்ட்டியில் சந்தித்தோம். எங்களுடைய 20 வயதில். 361 00:25:30,364 --> 00:25:33,534 அந்த வயதில் உங்கள் அறைத்தோழியை இழப்பது கடினமாக இருந்திருக்க வேண்டும். 362 00:25:34,243 --> 00:25:36,870 அறைத்தோழியா? அப்படித்தான் போலீஸார் சொன்னார்களா? 363 00:25:40,666 --> 00:25:41,959 எல்லாவற்றையும் தவறவிடுகிறார்கள், இல்லையா? 364 00:25:44,461 --> 00:25:49,758 உங்களில் யாராவது இந்த பெண்களை சந்தித்திருக்கிறீர்களா? 365 00:25:50,259 --> 00:25:52,427 சம்மர் பிரான்சிஸ் - வில்லி ரோஸ் மார்கோட் ஸெல் - ஜூலியா மாட்ரிகல் 366 00:25:52,886 --> 00:25:54,596 தெரியவில்லை. ஒருவேளை அவள் சந்தித்திருக்கலாம். 367 00:25:55,097 --> 00:25:57,599 அது நடக்கும் முன்பே சம்மர் நிறைய மாறிவிட்டாள். 368 00:25:59,017 --> 00:26:00,227 எப்படி? 369 00:26:00,310 --> 00:26:02,271 அமைதியானவளாக, விலகியிருந்தாள். 370 00:26:02,855 --> 00:26:04,022 ஏனென்று தெரியுமா? 371 00:26:04,773 --> 00:26:09,278 அவள் வேறொருவரை காதலிக்கிறாள் என்று நினைத்தேன், ஆனால் நான் கேட்கவில்லை. 372 00:26:09,361 --> 00:26:12,364 நான் கேள்விகளை கேட்டால் அவள் என்னைவிட்டு பிரிந்துவிடுவாள் என்று எண்ணினேன். 373 00:26:13,115 --> 00:26:18,245 ஆனால் அவள் பெயர் அல்லது சென்ற இடம் போன்ற எதுவும் சொல்லவில்லையா? 374 00:26:18,328 --> 00:26:19,454 அந்த மாதிரி ஏதாவது. 375 00:26:21,415 --> 00:26:23,667 நாம் என்ன தவறு செய்தோம் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். 376 00:26:23,750 --> 00:26:26,170 தவறான பார்ட்டிகளுக்கு சென்றதா, தவறான நபர்களை அறிந்ததா. 377 00:26:26,253 --> 00:26:27,504 நிறைய இருந்தன. 378 00:26:27,588 --> 00:26:30,632 ஆனால் அது எந்த அர்த்தத்தையும் தரவில்லை. 379 00:26:34,303 --> 00:26:35,304 சில புகைப்படங்களை வைத்திருந்தேன். 380 00:26:36,388 --> 00:26:38,724 அவள் எவ்வளவு அழகாக இருந்தாள் என்பதை நீங்களே பார்க்கலாம். 381 00:26:48,650 --> 00:26:51,320 நாங்கள் சௌகாடக்கில் ஓரிரு கோடைகாலங்களைக் கழித்தோம். 382 00:26:52,446 --> 00:26:57,701 ஆம். சில வாட்டர்கலர் ஓவிய வகுப்புகளுக்கு சென்றோம். சுற்றித் திரிந்தோம். 383 00:26:57,784 --> 00:26:59,661 அவளுக்கு அது கென்வுட்டை விட அதிகம் பிடித்திருந்தது. 384 00:27:01,705 --> 00:27:02,789 நான் இவற்றைப் பார்க்கலாமா… 385 00:27:12,299 --> 00:27:14,218 அவளுடைய பிறந்தநாள் ஒன்றுக்கு அவளுடைய பாட்டி அதைக் கொடுத்தார். 386 00:27:19,723 --> 00:27:21,183 -என்ன தவறு? -ஒரு நொடி கொடுங்கள். 387 00:27:33,779 --> 00:27:34,905 இது சம்மருடையதா? 388 00:27:36,782 --> 00:27:39,826 ஆம். ஆம், இது தொகுப்பின் ஒரு பகுதி. இது எங்கு கிடைத்தது? 389 00:27:40,994 --> 00:27:43,872 இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா? சம்மருக்கு? 390 00:27:45,290 --> 00:27:47,459 நான் அப்படி நினைக்கவில்லை. ஏன்? 391 00:27:52,840 --> 00:27:54,883 சிட்ஸின் விஷயத்தைப் பற்றி டேனிடம் சொல்லப் போகிறாயா? 392 00:27:56,051 --> 00:27:57,052 நான் சொல்ல வேண்டும் என நீ நினைக்கவில்லையா? 393 00:27:58,220 --> 00:28:01,139 இல்லை, நினைக்கவில்லை. இது அவனது நான்காவது பத்தியில் சில வார்த்தைகளாக முடிந்துவிடும். 394 00:28:02,891 --> 00:28:04,643 ஹேய். இரவு முழுவதும் வேலை செய்கிறீர்களா? 395 00:28:04,726 --> 00:28:06,436 ஆம், டேனின் கொடூர கொலைகளைப் பற்றி வெளியிட்டிருக்கிறோம் 396 00:28:07,020 --> 00:28:08,897 -இன்றிரவா? -கிர்பி, பொறு. 397 00:28:09,690 --> 00:28:11,525 ச்சே. எனக்கு அவள் நூறு செய்தி துணுக்குகளை எடுக்க வேண்டும். 398 00:28:11,608 --> 00:28:13,485 எப்படி உடனே பிரசுரிக்கப் போகிறீர்கள்? 399 00:28:13,569 --> 00:28:16,780 நீ எங்கே போனாய்? ஆறு மணி நேரமாக காணவில்லை. இங்கே வா. 400 00:28:20,868 --> 00:28:23,579 எனவே, இது… 401 00:28:25,873 --> 00:28:27,374 சம்மர் பிரான்சிஸுக்கு சொந்தமானது. 402 00:28:30,502 --> 00:28:33,630 இது மார்கோட் ஸெல்லுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. 403 00:28:41,889 --> 00:28:44,308 ஒருவரிடமிருந்து கண்ணாடியை எடுத்து மற்றோருவருக்குள் வைத்திருக்கிறான். 404 00:28:44,808 --> 00:28:47,352 இந்தப் பெண்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது. 405 00:28:47,978 --> 00:28:50,022 அவர்களுக்குள் பொதுவான எதுவும் இல்லை. 406 00:28:50,105 --> 00:28:51,773 அவன்தான் அவர்களை இணைப்பவன். 407 00:28:54,902 --> 00:28:57,196 வில்லி ரோஸுக்குள் ஒரு ஊசி இருந்தது. 408 00:29:00,908 --> 00:29:06,079 நான் பார்க்கிறேன். இது ஒரு செவிலியரின் ஊசி. 409 00:29:07,956 --> 00:29:09,374 கெரேன் பிராவிடன்ட் மருத்துவமனையில் பணிபுரிந்தாள். 410 00:29:09,958 --> 00:29:12,044 அவன் அதை கெரேனிடமிருந்து எடுத்து, வில்லிக்குள் வைத்திருக்கிறான். 411 00:29:14,254 --> 00:29:15,464 கெரேனுக்குள் என்ன இருந்தது? 412 00:29:16,381 --> 00:29:17,424 …மௌனமே மிகச் சத்தமாக உள்ளது 413 00:29:18,967 --> 00:29:21,261 கேத்தரின் மூர். அவள் யாருடைய பிரச்சாரத்தில் வேலை செய்தாள்? 414 00:29:22,179 --> 00:29:23,597 ஹரோல்ட் வாஷிங்டன். 415 00:29:24,640 --> 00:29:26,433 -ஹேய், ஜிம்மி. -என்ன? 416 00:29:26,517 --> 00:29:28,352 ஹரோல்ட் வாஷிங்டனின் பிரச்சார முழக்கம் என்ன? 417 00:29:29,520 --> 00:29:30,687 "மௌனமே மிகச் சத்தமாக உள்ளது." 418 00:29:35,317 --> 00:29:37,402 இது, இது கேத்தரின். 419 00:29:37,986 --> 00:29:39,947 ஜூலியா. அவள் ஒரு சமூக சேவகி. 420 00:29:40,030 --> 00:29:43,116 வேறு ஏதேனும் அடையாளங்கள் அல்லது அது போன்ற ஏதாவது இருந்ததா? 421 00:29:43,617 --> 00:29:44,701 கத்தோலிக்கர், சரியா? 422 00:29:45,744 --> 00:29:47,621 பாதுகாப்பான யூகம். அவள் ஜெபர்சன் பூங்காவைச் சேர்ந்தவள். 423 00:29:47,704 --> 00:29:50,499 பக்தி அட்டை அவளுடையதாக இருக்கலாம். ஆனி லோவருக்குள் காணப்பட்டது. 424 00:29:54,211 --> 00:29:58,298 ஆனி 85 இலும் ஜூலியா 90 இலும் கொல்லப்பட்டனர். 425 00:29:58,382 --> 00:30:01,385 எனவே, அப்போது அவன் ஆனியிடமிருந்து எடுத்திருக்க வேண்டும். 426 00:30:01,468 --> 00:30:04,346 ஆனால் அவன் ஐந்து ஆண்டுகளுக்கு ஜூலியாவைக் கொல்லவில்லை. 427 00:30:06,431 --> 00:30:08,016 அவ்வளவு நேரமும் என்ன செய்து கொண்டிருந்திருப்பான்? 428 00:30:08,517 --> 00:30:09,852 சமூக சேவகர் ஜூலியா மாட்ரிகல், 24, காணவில்லை 429 00:30:09,935 --> 00:30:11,979 எங்களை கண்காணித்திருக்கிறான், சில நேரங்களில் பல ஆண்டுகளாக. 430 00:30:12,062 --> 00:30:14,022 அவன் அங்கு இருப்பது எங்களுக்குத் தெரியாது, அவன் விரும்பும் வரை. 431 00:30:14,106 --> 00:30:15,524 எப்படி யாரும் அவனைப் பிடிக்கவில்லை? 432 00:30:15,607 --> 00:30:18,777 ஏனென்றால் சீரற்ற முறையில் கொலையாளிகளை தேர்ந்தெடுத்தான். விலகியே இருந்திருக்கிறான். 433 00:30:18,861 --> 00:30:21,947 இருந்தாலும், அவன் நெருங்கியிருக்கிறான். எங்களைப் பற்றி அறிந்திருக்கிறான். 434 00:30:22,531 --> 00:30:24,950 -என்ன அறிந்திருக்கிறான்? -நம்மிடம் இருப்பதைக் கொண்டு வெளியிட வேண்டும். 435 00:30:25,033 --> 00:30:27,828 நாம் ஜூலியாவுடன் தொடங்க வேண்டும். அவள்தான் நாம் இதுவரை அறிந்தவள். 436 00:30:32,416 --> 00:30:36,128 என்னை வைத்து தொடங்க வேண்டும். நான் உங்களுக்கு நேரடி சாட்சியத்தை தருகிறேன். 437 00:30:36,211 --> 00:30:39,006 எனது போலீஸ் அறிக்கை, மருத்துவமனை படங்கள், தேவையான எல்லாவற்றையும் நீங்கள் பெறலாம். 438 00:30:41,717 --> 00:30:44,720 அதையெல்லாவற்றையும் சேர்த்தால் நீ யார் என்பதை எங்களால் மறைக்க முடியாது. 439 00:30:44,803 --> 00:30:45,804 எனக்குத் தெரியும். 440 00:30:48,140 --> 00:30:51,894 நிச்சயமாகவா? நம்மிடம் இருப்பதைக் கொண்டு நம்மால் வெளியிட முடியும். 441 00:30:52,561 --> 00:30:57,024 நான்தான் சிறந்த செய்தி. இதைத்தான் நான் இதற்கு விரும்புகிறேன். 442 00:30:58,901 --> 00:31:00,402 பவெலின் நீதிமன்ற விசாரணை முடிவடைகிறது. 443 00:31:00,485 --> 00:31:03,488 காவல்துறையினர் கருத்து தெரிவிக்க நாம் ஒரு வாய்பளிக்க வேண்டும். 444 00:31:11,121 --> 00:31:12,414 போகலாம், டேன். 445 00:31:29,223 --> 00:31:33,060 போகலாம். பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு முன் நாம் அங்கு செல்ல வேண்டும். 446 00:31:39,316 --> 00:31:40,317 என்ன? 447 00:31:40,400 --> 00:31:42,819 சாவி. கோளரங்கத்தில் இருந்து. 448 00:31:42,903 --> 00:31:45,405 அதை தொலைத்த பெண்ணிடம் பேச வேண்டும். இதையெல்லாம் அவளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 449 00:31:45,489 --> 00:31:46,823 இன்னும் அவளுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறாயா? 450 00:31:47,699 --> 00:31:49,535 அவன் அவளது சாவியை எடுத்திருக்கிறான். சம்பந்தம் இருக்க வேண்டும். 451 00:31:52,621 --> 00:31:56,124 இதை எடுத்துக்கொள், அவள் பார்க்க விரும்பினால். 452 00:31:56,208 --> 00:31:57,209 சரி. 453 00:32:28,949 --> 00:32:29,950 ஹலோ? 454 00:32:30,450 --> 00:32:33,412 ஹாய், நான் கிர்பி மஸ்ராச்சி. நீ தொலைத்த சாவி பற்றி கேட்டவள். 455 00:32:33,912 --> 00:32:35,873 சரி. நீ ஏன் இங்கு இருக்கிறாய்? 456 00:32:37,291 --> 00:32:40,586 உன் சாவி, கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணிடம் கிடைத்தது. 457 00:32:41,587 --> 00:32:43,881 நான் உனக்கு காட்டிய புகைப்படம் குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்டது. 458 00:33:00,397 --> 00:33:01,899 என்னை அனுமதித்ததற்கு நன்றி. 459 00:33:10,616 --> 00:33:14,536 எனக்கு ஒருபோதும் உடனே துண்டிக்கப்பட்ட, வித்தியாசமான அழைப்புகள், எதுவும் வந்ததில்லை. 460 00:33:14,620 --> 00:33:17,915 -ஆண்டுகளுக்கு முன்பு கூட இல்லையா? -ஒருபோதும். இவை எதுவும் எனக்கு நடக்கவில்லை. 461 00:33:19,082 --> 00:33:20,292 மீண்டும் சிந்திக்க முயற்சி செய். 462 00:33:20,375 --> 00:33:23,712 அதாவது, என் ஜன்னலுக்கு வெளியே யாராவது பலமாக சுவாசித்தால், எனக்குத் தெரிந்துவிடும். 463 00:33:24,296 --> 00:33:27,633 அப்படியில்லை. நான் அதே நபரால் தாக்கப்பட்டேன். 464 00:33:33,722 --> 00:33:34,973 நான் வருந்துகிறேன். 465 00:33:35,766 --> 00:33:39,019 பல வருடங்களாக என்னை கண்காணித்திருக்கிறான். எனக்கு தெரியவில்லை. 466 00:33:39,811 --> 00:33:41,522 நான் நீ இல்லை. 467 00:33:42,189 --> 00:33:46,151 பிறகு ஏன் உன் சாவி ஒரு இறந்த பெண்ணுக்குள் இருந்தது? 468 00:33:47,986 --> 00:33:50,614 ஆனால் இந்த புகைப்படம் 20 ஆண்டுகளுக்கு முந்தையது என்றாய். 469 00:33:54,076 --> 00:33:56,245 அவை கடந்த ஆண்டு செய்யப்பட்டவை என்று உறுதியாக தெரியுமா? 470 00:33:56,328 --> 00:33:59,831 ஆம். ஹப்பிள், வியாழனின் முதல் படத்தைத் அனுப்பியது. 471 00:33:59,915 --> 00:34:00,958 நாங்கள் ஒரு கண்காட்சியை நடத்தினோம். 472 00:34:02,334 --> 00:34:04,086 பார், நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய் என்று தெரியவில்லை. 473 00:34:04,169 --> 00:34:09,507 நண்பர்கள், குடும்பத்தினருடன் இரு. தனியாக வெளியே போகாதே. ஒரு கத்தியை வைத்துக்கொள். 474 00:34:13,971 --> 00:34:15,472 மன்னிக்கவும். நான் போக வேண்டும். 475 00:34:18,016 --> 00:34:20,185 -நள்ளிரவு நிகழ்ச்சியை நடத்துகிறேன், எனவே... -நிச்சயமாக. 476 00:34:32,489 --> 00:34:34,032 இன்றிரவு எங்களால் எதையும் பார்க்க முடியாது. 477 00:34:34,699 --> 00:34:36,827 அந்த சாவியை நீ எப்படி தொலைத்தாய் என்பதை நீ கண்டுபிடிக்க வேண்டும். 478 00:34:39,121 --> 00:34:40,121 இன்னும் என்னுடையது இருக்கிறது. 479 00:34:43,250 --> 00:34:47,462 அவன் மற்ற பெண்களுக்குள் எதையோ விட்டுச் சென்றிருக்கிறான். உனக்குள் என்ன இருந்தது? 480 00:34:48,630 --> 00:34:49,672 ஒரு தீப்பெட்டி. 481 00:34:51,216 --> 00:34:52,217 அது யாருடையது? 482 00:34:53,510 --> 00:34:54,636 எனக்குத் தெரியாது. 483 00:34:55,469 --> 00:34:57,264 அது இல்லாத ஒரு பாரை சேர்ந்தது. 484 00:34:59,892 --> 00:35:02,186 ஒன்று இன்னும் நடக்கவில்லை என்பதால் அது நடக்காது என்று அர்த்தமல்ல. 485 00:35:02,811 --> 00:35:05,856 எப்பொழுதும் எதையாவது அர்த்தப்படுத்துவதற்கு முன்பு சில முறை பார்க்க வேண்டும். 486 00:35:05,939 --> 00:35:08,901 நீ எல்லாவற்றையும் கண்டுபிடித்தால், என்னை அழை. 487 00:35:23,790 --> 00:35:25,751 -சிவப்பு பானத்தை எடுத்துக்கொள்ளட்டுமா? -ஐந்து டாலர். 488 00:35:48,815 --> 00:35:50,067 உயிர்பிழைத்தவர் தனது கதையைச் சொல்கிறார் 489 00:35:50,150 --> 00:35:51,860 சிகாகோ சன் டைம்ஸ், 20 ஆண்டுகளில் எட்டுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் 490 00:35:53,570 --> 00:35:54,821 சிகாகோ கொலையாளியின் மறக்கப்பட்ட பெண்கள் 491 00:36:32,150 --> 00:36:34,486 லாண்ட்ரிலேண்ட் 492 00:37:44,181 --> 00:37:46,350 பீ ஹேப்பி பார் 493 00:37:50,979 --> 00:37:52,481 நீ சரியாகத் தெரியவில்லை. 494 00:37:56,485 --> 00:37:57,778 உன் தலைமுடிக்கு என்ன ஆனது? 495 00:37:59,863 --> 00:38:04,535 உன் இடத்துக்கு போனேன். அங்கு வேறு யாரோ ஒருவன் வசிக்கிறான். 496 00:38:06,453 --> 00:38:07,913 -நீ யாரென்று தெரியவில்லை... -எப்பொழுது வேறு வீட்டுக்கு போனாய்? 497 00:38:13,710 --> 00:38:14,962 உனக்கு ஜின்னியைத் தெரியாது. 498 00:38:16,255 --> 00:38:18,382 உனக்குத் தெரியாது என்று எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. 499 00:38:20,717 --> 00:38:21,927 அவளை எப்படி கண்டுபிடித்தாய்? 500 00:38:23,303 --> 00:38:24,513 அல்லது அவள் உன்னை கண்டுபிடித்தாளா? 501 00:38:25,514 --> 00:38:28,058 ஆம், ஒருவேளை அப்படியிருக்கலாம், ஏனென்றால் அவள் உன்னை விட புத்திசாலி. 502 00:38:28,725 --> 00:38:30,727 நிறுத்து. அங்கேயே நில். 503 00:38:30,811 --> 00:38:34,648 நீ வித்தியாசமாய் தோற்றமளிக்கிறாய். உன்னை இப்படி எனக்குப் பிடிக்கவில்லை. 504 00:38:42,990 --> 00:38:44,116 என்னை உனக்கு நினைவிருக்கிறதா… 505 00:38:46,577 --> 00:38:47,578 எல்ட்ரிட்ஜ் தெருவில் இருந்து? 506 00:38:51,206 --> 00:38:52,875 நீ எனக்கு குதிரை பொம்மையைக் கொடுத்தாய். 507 00:38:53,458 --> 00:38:56,420 பெகாசஸ். இறக்கைகள் இருந்தன. குதிரைகளுக்கு குளம்புகளும் வால்களும்தான் இருக்கும். 508 00:38:57,212 --> 00:38:58,213 நான்... 509 00:39:01,133 --> 00:39:02,551 நீ அப்படியே தோற்றமளிக்கிறாய். 510 00:39:04,595 --> 00:39:05,971 நீ வித்தியாசமாகத் தெரிகிறாய். 511 00:39:08,932 --> 00:39:10,142 உன்னிடம் விட்டு சென்றது போல் எதுவும் இல்லை. 512 00:39:11,602 --> 00:39:14,479 உன்னைக் கொன்றேன். நீ இங்கே இருக்கக்கூடாது. 513 00:39:22,988 --> 00:39:24,156 நீ அதைச் செய்தாயா? 514 00:39:31,371 --> 00:39:34,333 இது நடக்க முடியாது. இது இங்கே நடக்க முடியாது. 515 00:39:42,132 --> 00:39:43,175 யார் நீ? 516 00:40:13,497 --> 00:40:16,500 பீ ஹேப்பி பார் 517 00:40:22,631 --> 00:40:23,590 பிரையன் லேஷின் நினைவாக 518 00:41:44,630 --> 00:41:46,632 வசனத் தமிழாக்கம் அருண்குமார்