1 00:00:18,435 --> 00:00:22,147 தன் கணவரை திருப்பிக் கொடுத்த பெண் 2 00:00:23,482 --> 00:00:26,276 நிச்சயம், இந்தத் தலைப்பு, அந்த இடத்தைப் பற்றிய ஒரு குறிப்பு தான். 3 00:00:26,360 --> 00:00:28,237 ஆனால் இன்னும் குறிப்பாக, 4 00:00:28,820 --> 00:00:31,990 இது புலம்பெயர்ந்த பெண்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்கிறது, 5 00:00:32,073 --> 00:00:35,285 அவர்கள் நாட்டின் துணிகளின் மூலமாகச் சொல்லப்படும் குறிப்பு. 6 00:00:35,369 --> 00:00:38,705 இங்கே இருக்கும் என் அம்மாவைப் போன்ற... பெண்கள். 7 00:00:42,417 --> 00:00:43,877 இந்தத் துணிக்கு ஆதாரமான பொருட்களைப் பற்றி 8 00:00:43,961 --> 00:00:46,421 இன்னும் கொஞ்சம் சொல்கிறீர்களா? 9 00:00:46,505 --> 00:00:48,674 ஆம். உலகம் முழுவதிலும் இருந்து அவற்றை இறக்குமதி செய்தோம். 10 00:00:48,757 --> 00:00:49,800 இது எல்லாம் சுற்றிலும்... 11 00:00:49,883 --> 00:00:51,385 சரீனா மிஸ்ரா சமீபத்திய வேலைப்பாடுகள் 2021 12 00:01:00,644 --> 00:01:02,980 நீங்கள் சரீனாவுடனும், அவளது நண்பர்களுடனும் பேசியதைக் காட்டிலும், 13 00:01:03,063 --> 00:01:04,730 அந்த பாதுகாவலனுடன்தான் அதிக நேரம் பேசினீர்கள். 14 00:01:04,815 --> 00:01:08,151 அவர் பெயர் மோரீஸ், செனெகல்லில் இருந்து வந்திருக்கிறார். நல்ல மனிதர். 15 00:01:08,235 --> 00:01:10,320 உங்கள் நடத்தையால் வெட்கப்படுகிறேன். 16 00:01:12,030 --> 00:01:14,992 -எவ்வளவு நேரம் வைக்க வேண்டும்? ஐம்பது நொடிகள்? -45 வை. 17 00:01:18,287 --> 00:01:20,706 ஏன் பிரச்சினை செய்கிறாய்? 18 00:01:21,290 --> 00:01:23,166 நானல்ல, நீங்கள் தான் செய்கிறீர்கள். 19 00:01:24,626 --> 00:01:27,963 கடைசியில், ஒரு வழியாக நான் இந்த வீட்டை விட்டு வெளியே போய், ஏதாவது புதிய நபர்களை சந்தித்து, 20 00:01:28,046 --> 00:01:30,465 பேச விரும்பினேன், ஆனால் முடியவில்லை. 21 00:01:30,549 --> 00:01:33,802 முடியவில்லை! மாறாக, நீங்கள் விரும்பிய நேரத்தில், நாம் வீட்டிற்கு வந்துவிட்டோம், 22 00:01:33,886 --> 00:01:37,931 அதே பழைய பஞ்சாங்கம் தான். 23 00:01:38,015 --> 00:01:40,601 நீ என்னுடம் வந்திருக்க வேண்டாமே. டாக்ஸியிலேயே வீட்டிற்கு வந்திருக்கலாம். 24 00:01:43,645 --> 00:01:44,897 இதோ. எடுத்துக்கொள்ளுங்கள். 25 00:01:47,149 --> 00:01:48,567 இது சூடாக இல்லையென்றால் சொல்லுங்கள். 26 00:01:49,985 --> 00:01:55,657 நன்றாக இருக்கிறது. கடவுளே. ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்? 27 00:01:55,741 --> 00:01:58,243 இது அபத்தம். 28 00:01:59,828 --> 00:02:01,663 எனக்கு ஒரு முள் கரண்டி வேண்டும், அன்பே. 29 00:02:06,251 --> 00:02:10,172 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 30 00:02:12,090 --> 00:02:14,301 நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள், அனு. 31 00:02:14,384 --> 00:02:16,345 உன்னையும், விகாஸையும், 32 00:02:16,428 --> 00:02:18,805 கடவுள் நீண்ட ஆயுளைக் கொடுத்து ஆசீர்வதிப்பார்... 33 00:02:20,140 --> 00:02:21,308 அட, அனு, அழுகிறாயா? 34 00:02:21,391 --> 00:02:22,392 இல்லை. 35 00:02:23,101 --> 00:02:26,188 வயதாகிறதே என்று கவலைப்படாதே. நம் எல்லோருக்கும் தான் வயதாகிறது. 36 00:02:26,271 --> 00:02:28,065 -ஆமாம், ஆமாம். -நளினியைப் பார். 37 00:02:28,148 --> 00:02:31,360 எப்பொழுதும் அழகாக இருப்பாள், இப்போது பார்த்தால் சோர்வாக இருக்கிறாள். 38 00:02:31,443 --> 00:02:33,195 எனக்கு ரத்த சோகை இருப்பதாக டாக்டர் சொல்கிறார். 39 00:02:33,278 --> 00:02:37,449 இல்லை, இது விக் பற்றி. அவரோடு எனக்கு வெறுத்துவிட்டது. 40 00:02:39,284 --> 00:02:40,536 -விடு. -அடடா. 41 00:02:40,619 --> 00:02:42,454 -மனுவிடம் இந்த செயலிகள் இருக்கு. -என்னவென்று தெரியவில்லை... 42 00:02:42,538 --> 00:02:43,956 இப்படி சத்தமிடுகிறார். 43 00:02:44,039 --> 00:02:46,834 இல்லை, இல்லை, இல்லை. இந்த முறை உண்மையாகத் தான் சொல்கிறேன். 44 00:02:49,837 --> 00:02:55,050 கலைஞர்களுக்கான நிகழ்ச்சியில் போன வாரம், என் மகள் சரீனா, சுதந்திரமாக இருப்பதைப் பார்த்தேன். 45 00:02:55,634 --> 00:02:58,262 அதன் பின்னர், விக், ஒரு காரணமும் இல்லாமல் எங்களை வீட்டுக்கு அழைத்து விட்டார். 46 00:02:58,345 --> 00:03:00,013 அவருக்கு இரவு உணவு பறிமாறுகிறேன், இது... 47 00:03:00,514 --> 00:03:06,228 இது வழக்கமான தினசரி வேலை தான், மாட்டிக்கொண்ட மாதிரி இருக்கிறது. 48 00:03:06,311 --> 00:03:07,479 ஆமாம், ஆனால், இரண்டு பேர் ஒன்றாக மாட்டிக்கொள்வதற்கான 49 00:03:07,563 --> 00:03:10,566 ஒப்பந்தம் இல்லையென்றால், திருமணம் என்பதற்கு என்ன அர்த்தம்? 50 00:03:11,191 --> 00:03:12,651 ஆனால், எனக்கு அது தெரியுமா? 51 00:03:13,235 --> 00:03:16,196 எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாமல் நான் திருமணம் செய்து கொண்டேன். 52 00:03:16,280 --> 00:03:18,866 நான் அப்பொழுது மிகவும் சின்னப் பெண், அதிக முட்டாளாகவும் இருந்தேன். 53 00:03:18,949 --> 00:03:21,660 நாம் எல்லோரும் அப்படித்தானே இருந்தோம். 54 00:03:22,828 --> 00:03:24,204 சகித்துக்கொள்வதைத் தவிர, என்ன செய்ய முடியும்? 55 00:03:25,455 --> 00:03:26,915 சரி, ஆர்டர் செய்யலாமா? 56 00:03:26,999 --> 00:03:29,501 ஆனால், புஷ்பா, என்னால் முடியாது, நான் சகித்து வாழ விரும்பவில்லை. 57 00:03:29,585 --> 00:03:34,173 நான் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன், விக்... என்னை விட மறுக்கிறார். 58 00:03:34,256 --> 00:03:35,632 அட, எதிலிருந்து? 59 00:03:36,258 --> 00:03:38,427 நீ என்ன முக்கியமான விஷயத்தை இழந்து விட்டாய்? 60 00:03:46,059 --> 00:03:51,023 எனக்கு 60 வயதாகிறது, இப்போது வரை, அவருடைய தேவைகளைக் கவனிப்பது தான் என் வேலை. 61 00:03:51,690 --> 00:03:53,525 அவர் என்னுடைய தேவைகள் எதையும் கவனிப்பதில்லை. 62 00:03:54,902 --> 00:03:56,862 எனக்குத் தெரியும், இது இப்படி இருக்க வேண்டியதில்லை. 63 00:03:58,447 --> 00:04:00,282 நீ அவரைத் திருப்பிக் கொடுத்து விட முடியும். 64 00:04:02,075 --> 00:04:03,285 -என்ன? -உதயா, 65 00:04:03,368 --> 00:04:05,120 ஏன் முட்டாள்தனமாக பேசுகிறாய்? 66 00:04:05,204 --> 00:04:07,539 அமெரிக்காவில், நமக்கு கணவரைப் பிடிக்காவிட்டால், 67 00:04:07,623 --> 00:04:10,834 சுலபமாக அவரை மாற்றி விட்டு, புது கணவரை திருமணம் செய்துக்கொள்ளலாம். 68 00:04:11,793 --> 00:04:13,545 இல்லை. அது ஒத்து வராது. 69 00:04:13,629 --> 00:04:19,593 அனு, நீ சந்தோஷமாக இல்லாவிட்டால், நீயே உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள். 70 00:04:19,676 --> 00:04:21,053 சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷமா? 71 00:04:21,553 --> 00:04:23,639 இப்பொழுதெல்லாம், மக்கள் இதற்காக அதிகம் அலட்டிக்கொள்கிறார்கள். 72 00:04:24,139 --> 00:04:26,433 வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லை. 73 00:04:26,517 --> 00:04:28,560 கடினமான விஷயங்களையும் பொறுத்துப் போவது தான் வாழ்க்கை. 74 00:04:29,811 --> 00:04:31,980 நான் பசியால் மயங்கி விழுந்து விடுவதற்கு முன் 75 00:04:32,064 --> 00:04:33,607 நாம் கொஞ்சம் உணவு ஆர்டர் செய்யலாமா? 76 00:04:34,107 --> 00:04:37,653 என் வயிறு குரா, குரா என்று கத்துகிறது. 77 00:04:37,736 --> 00:04:40,155 இங்கே வர முடியுமா? நாங்கள் தயார். 78 00:04:40,239 --> 00:04:42,783 எல்லோருக்கும் நானே ஆர்டர் செய்துவிடட்டுமா? சீக்கிரம் வந்துவிடும். 79 00:05:38,755 --> 00:05:40,340 கணவருக்கான உத்தரவாதம் 80 00:05:42,384 --> 00:05:44,469 இன்று திருப்பிக் கொடுப்பதற்கு என்ன காரணம்? 81 00:05:45,554 --> 00:05:46,555 காரணமா? 82 00:05:46,638 --> 00:05:48,891 சொல்லுங்கள், மேடம். உங்கள் கணவரைத் திருப்பிக் கொடுப்பதற்கு என்ன காரணம்? 83 00:05:51,894 --> 00:05:53,145 எங்கிருந்து ஆரம்பிப்பது? 84 00:05:55,564 --> 00:06:00,068 சரி, முக்கியமான காரணம், என் வாழ்க்கையின் அடுத்த 20 வருடங்களை 85 00:06:00,152 --> 00:06:02,988 நினைத்துப் பார்க்கிறேன், கடவுள் ஆணையாக, நான் வேறு ஒன்றை எதிர்பார்க்கிறேன். 86 00:06:04,072 --> 00:06:09,786 என்னிடம் இருந்து. சும்மா சொல். என்னிடமிருந்து நீ வித்தியாசமாக எதிர்பார்க்கிறாய். 87 00:06:09,870 --> 00:06:13,916 எங்களிடமுள்ள காரணங்கள், “சரியாகப் பொருந்தவில்லை” “உற்பத்திக் கோளாறு”, “தாமதமாக வந்து சேர்ந்தது.” 88 00:06:13,999 --> 00:06:15,417 “வரும்போதே சேதமடைந்திருந்தது,” “பொருத்தமாக இல்லை.” 89 00:06:15,501 --> 00:06:17,377 “பொருத்தமாக இல்லை” என்று சொல்லலாம். 90 00:06:19,254 --> 00:06:20,255 இனிமேலும். 91 00:06:21,840 --> 00:06:23,675 சரி, என்னிடம் இதுவும் இருக்கிறது. 92 00:06:24,593 --> 00:06:27,971 உங்களுக்கு தேவையா என தெரியவில்லை... என்னவென்று சொல்வீர்கள், கணவருக்கான உத்திரவாதம் தானே? 93 00:06:28,055 --> 00:06:29,765 ஓ, ஆமாம். நன்றி. 94 00:06:30,933 --> 00:06:34,228 ஆஹா. முப்பத்தேழு வருடத் திருமண பந்தம். 95 00:06:34,728 --> 00:06:37,064 அது முடிந்துவிட்டது என்று தெரியும், ஆனாலும் அது ஒரு சாதனை தான், 96 00:06:37,147 --> 00:06:38,148 அதற்காக வாழ்த்துக்கள். 97 00:06:39,399 --> 00:06:40,442 நன்றி. 98 00:06:44,112 --> 00:06:46,823 சரி, என்னை இங்கே என்ன செய்வீர்கள்? 99 00:06:47,407 --> 00:06:51,203 சரி, திரு. விகாஸ், உங்களை, நாங்கள் திரும்ப எடுத்துக்கொள்வோம், 100 00:06:51,286 --> 00:06:56,124 வயது, குணம், வெற்றி பெற உதவும் குணங்கள், இவற்றின் அடிப்படையில் விலை மதிப்பிடுவோம்... 101 00:06:56,208 --> 00:06:57,251 சரி. 102 00:06:57,334 --> 00:07:01,296 என் திறன்களைப் பற்றி, என் மனைவி சொல்வதைக் கேட்காதீர்கள், எனக்கு நிறைய திறமைகள் உள்ளன, 103 00:07:01,380 --> 00:07:03,757 எனக்கு புவியியல் பற்றி நிறைய தெரியும், எனக்கு... 104 00:07:03,841 --> 00:07:06,760 அப்படியானால், மறு விற்பனைக்காக மீண்டும் உங்களை தயார் நிலையில் கொண்டு வருவதற்கு முன் 105 00:07:06,844 --> 00:07:09,847 நாங்கள் உங்களுடைய தோற்றத்தை மெருகூட்டி, தேவையான சீரமைப்பைச் செய்வோம். 106 00:07:10,556 --> 00:07:11,849 மீண்டும் தயார் நிலையிலா? 107 00:07:11,932 --> 00:07:14,393 இந்த இடத்தில், கணவர்கள் பகுதியில். 108 00:07:14,476 --> 00:07:16,979 கணவர்கள் 109 00:07:17,980 --> 00:07:21,650 சரி, அனு. வந்து, இது தான் எனக்கேற்ற இடம். 110 00:07:23,318 --> 00:07:26,446 சரி. நன்றி, விக். 111 00:07:26,530 --> 00:07:27,656 சரி, வந்து... 112 00:07:31,034 --> 00:07:33,245 திருப்பிக் கொடுக்கப்பட்டவர் 113 00:07:33,328 --> 00:07:34,329 சரி. 114 00:07:38,166 --> 00:07:39,585 என் பெயர் இப்ராஹிம். வரவேற்கிறேன். 115 00:07:39,668 --> 00:07:41,044 ஹே, என் பெயர் சால். 116 00:07:41,128 --> 00:07:42,504 என் பெயர் விகாஸ். 117 00:07:46,717 --> 00:07:49,511 நீங்கள் மாற்றிக்கொள்வதற்கு, கடைசியாக ஒரு எண்ணை எடுத்துக்கொள்ளலாம், 118 00:07:49,595 --> 00:07:51,513 பின்னர் அதிகாரபூர்வமாக இணைந்ததாக முடிவு செய்யப்படுவீர்கள். 119 00:07:51,597 --> 00:07:55,642 மாற்றிக்கொள்வதா? வேண்டாம், வேண்டாம். எனக்கு இன்னொரு கணவர் வேண்டாம். 120 00:07:56,393 --> 00:07:59,479 இதே மதிப்புள்ள அல்லது கொஞ்சம் குறைந்த மதிப்பில் உள்ள கணவரையோ, மனைவியையோ தான் 121 00:07:59,563 --> 00:08:01,398 இங்கே மாற்றிக்கொள்ள முடியும். 122 00:08:01,481 --> 00:08:03,358 ஆனால், நான் தேடிப் பார்த்ததில், ஒப்பந்த விதிமுறைகள் சொல்கின்றன... 123 00:08:03,442 --> 00:08:04,818 துரதிஷ்டவசமாக, 124 00:08:04,902 --> 00:08:08,363 1986க்கு முன் வாங்கப்பட்ட வெளிநாட்டு பொருட்களுக்கு இது பொருந்தாது. 125 00:08:21,710 --> 00:08:22,836 டிஷ்யூ வேண்டுமா? 126 00:08:23,879 --> 00:08:24,880 நன்றி. 127 00:08:31,094 --> 00:08:32,888 டிவி பார்க்க விரும்புகிறீர்களா? 128 00:08:33,388 --> 00:08:35,097 கண்டிப்பாக. உங்களுக்குப் பிடித்ததையே செய்யலாம். 129 00:08:36,390 --> 00:08:39,477 சரி. செய்திப் பார்க்கலாமா? 130 00:08:40,229 --> 00:08:41,522 செய்தி பார்ப்பது, சரியான முடிவு தான். 131 00:08:44,024 --> 00:08:46,193 அடுத்த வார ஆரம்பத்திற்குள், 132 00:08:46,276 --> 00:08:48,237 தங்களுக்கான காலக் கெடுவிற்கு முன்னதாகவே 133 00:08:48,320 --> 00:08:50,405 இரு தரப்பினரும், பேரம் பேசும் மேஜைக்கு வரவில்லை என்றால் 134 00:08:50,489 --> 00:08:52,741 ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் சரியாக இருக்காது. 135 00:08:52,824 --> 00:08:55,494 வேலை நிறுத்தம் செய்யும் ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் இன்று வருவார். 136 00:08:55,994 --> 00:09:00,123 ஒரு புது ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள, இந்தத் தரவரிசை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது... 137 00:09:15,347 --> 00:09:19,601 நான் விக்கைச் சந்திப்பதற்கு முன், ஒரு ஓவியராக ஆசைப்பட்டேன். 138 00:09:20,936 --> 00:09:22,521 அதனால் தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். 139 00:09:24,022 --> 00:09:28,569 ரொம்ப சந்தோஷம். நீங்கள் அலட்டக் கொள்ளாத பெண் என்பது தெரியும் தானே? 140 00:09:34,491 --> 00:09:37,953 நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்பது தான் உங்களுடைய ஆசையா? 141 00:09:38,036 --> 00:09:40,038 இல்லை. இல்லவே இல்லை. 142 00:09:40,122 --> 00:09:41,707 சொல்கிறேன். 143 00:09:41,790 --> 00:09:45,252 பகல் நேர முகாமில் ஆலோசகராகவும், ஐஸ் கிரீம் ஸ்கூப்பராகவும் இருந்திருக்கிறேன். 144 00:09:45,752 --> 00:09:48,547 ஸியர்ஸில் உள்ள சாமான்கள் அறையில் வேலை பார்த்தேன். 145 00:09:49,423 --> 00:09:50,924 எனக்கு ஸியர்ஸ் ரொம்பப் பிடிக்கும். 146 00:09:52,301 --> 00:09:54,178 கல்லூரியில், பல்லாயிரம் விஷயங்கள் செய்தேன். 147 00:09:54,261 --> 00:09:58,432 வளாகச் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தேன். கோஸ்டா ரீக்காவில் ஜிப் லைனில் வேலை செய்தேன். 148 00:09:58,515 --> 00:09:59,683 பெரிய கதை. 149 00:10:01,852 --> 00:10:05,480 அலுவலக நாற்காலிகளைச் சரிசெய்வதில் கோடைக் காலத்தைக் கழித்தேன். இன்னும் பெரிய கதை. 150 00:10:05,564 --> 00:10:07,191 மாடலிங் செய்தேன். 151 00:10:07,691 --> 00:10:08,901 நீங்கள் மாடலா? 152 00:10:09,568 --> 00:10:10,569 சுருக்கமாகச் சொன்னால், ஆமாம். 153 00:10:11,486 --> 00:10:14,031 ஃபேஷன் மாடல் மாதிரியா? 154 00:10:29,880 --> 00:10:31,381 முயற்சி செய்யுங்கள், அனு. உங்களால் முடியும். 155 00:10:31,465 --> 00:10:33,926 இல்லை, என்னால் முடியவில்லை. இது சுத்த மோசமாக இருக்கிறது. 156 00:10:34,009 --> 00:10:35,594 அது முழுவதும் மோசமாக இருக்காது. 157 00:10:36,512 --> 00:10:38,847 இதோ, நான் வந்து பார்க்கிறேன். 158 00:10:45,562 --> 00:10:50,400 அருமை. அருமை. உண்மையிலேயே அருமையாக இருக்கு. 159 00:10:50,484 --> 00:10:52,778 ஆமாம். நீங்கள் “உண்மையிலேயே அருமை” என்று சொல்வது, 160 00:10:52,861 --> 00:10:54,279 பொய் என்று எனக்குத் தெரியும். 161 00:10:54,363 --> 00:10:58,492 உண்மை தான். இது ஒரு அற்புதமான முதல் முயற்சி. உற்சாகம் தருகிறது. 162 00:10:59,535 --> 00:11:02,329 ஆமாம், நீங்கள் பார்க்கும் கோணம் எல்லாம் விளையாடு தான், இல்லையா? 163 00:11:02,412 --> 00:11:04,873 உங்களுடைய பரிமாணங்கள் மிகச் சரியானவை. 164 00:11:06,375 --> 00:11:08,961 -பரவாயில்லை, நிதானமாக இருங்கள். -நிதானமாகத் தான் இருக்கிறேன். 165 00:11:09,044 --> 00:11:11,463 உண்மையாகவா? நீங்கள் எப்பொழுதும் பிஸியாகவே இருந்தீர்கள். 166 00:11:13,549 --> 00:11:15,801 இது வேடிக்கை தான், என் அம்மா கூட இப்படித்தான் இருப்பார்கள். 167 00:11:21,098 --> 00:11:22,766 என்னைப் பார்த்தால் உங்கள் அம்மா ஞாபகம் வருகிறதா? 168 00:11:23,767 --> 00:11:26,311 கொஞ்சம், ஆனால், சஞ்சலப்படுத்தும் விதத்தில் இல்லை. 169 00:11:31,692 --> 00:11:36,238 “எனக்கு, உடற்பயிற்சி என்பது உடல் சம்பந்தப்பட்டது என்பதை விட, அது ஒரு சிகிச்சை.” 170 00:11:37,114 --> 00:11:38,782 மிஷல் ஒபாமா சொன்னது. 171 00:11:39,992 --> 00:11:42,536 வந்து, நல்ல வடிவம் பெறத் தான் நான் எப்போதும் விரும்புவேன். 172 00:11:44,204 --> 00:11:48,709 “நாம் உடற்பயிற்சி செய்யாவிட்டால், ஒரு கட்டத்தில், மனதளவில் உடைந்து விடுவோம்.” 173 00:11:50,544 --> 00:11:53,547 பராக் ஒபாமா தான் சொன்னார். நாம் போகலாம்! 174 00:11:55,507 --> 00:11:56,925 வாருங்கள், உங்களால் செய்ய முடியும்! 175 00:11:59,219 --> 00:12:01,346 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு! 176 00:12:01,430 --> 00:12:05,017 குத்துங்கள், முழங்காலால் குத்துங்கள். 177 00:12:05,100 --> 00:12:07,895 முடிவெடு, உறுதிகொள், வெற்றி பெறு. 178 00:12:08,562 --> 00:12:11,356 முடிவெடு, உறுதிகொள், வெற்றி பெறு. 179 00:12:12,441 --> 00:12:16,820 ஞாபகமிருக்கட்டும், யார் காத்திருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நல்ல விஷயங்கள் வந்து சேரும். 180 00:12:20,741 --> 00:12:22,701 -உங்களால் முடியும்! நகருங்கள்! -தெரியும். 181 00:12:22,784 --> 00:12:24,244 குத்துங்கள், குத்துங்கள்! 182 00:12:24,328 --> 00:12:25,871 ...அருமையாக இருந்தது, 183 00:12:26,371 --> 00:12:30,292 விக் சமையலறையில் இருந்து நகர்ந்த ஒரே இடம் லே-ஸி-பாய் தான். 184 00:12:33,086 --> 00:12:34,630 ராவுல், நான் சொல்வது கேட்கிறதா? 185 00:12:35,672 --> 00:12:39,092 அனு, உங்களுடைய சப்பாத்தியில் வெண்ணெய் அதிகம் இருக்கிறது என்று தோன்றவில்லையா? 186 00:12:48,352 --> 00:12:50,229 நீ என்னிடம் கேட்டிருக்க வேண்டும். 187 00:12:50,312 --> 00:12:53,982 யாரெல்லாம் உருப்படாதவர்கள் என்று உன்னிடம் சொல்லியிருப்பேன். 188 00:12:54,066 --> 00:12:57,110 இங்கிருக்கும் அந்த பாவப்பட்ட ஆளை பார்க்கிறாயா, அனு? 189 00:12:57,736 --> 00:12:58,946 பேஸ் பால் தொப்பி போட்டுக்கொண்டிருக்கும் அவனை? 190 00:12:59,029 --> 00:13:03,909 ஆமாம். நன்றாக இல்லை. விலையை நான்கு மடங்கு குறைத்திருக்கிறான். 191 00:13:03,992 --> 00:13:05,285 இல்லை. 192 00:13:06,912 --> 00:13:08,580 இதுவரை யாரும் உங்களை வாங்கவில்லையா? 193 00:13:08,664 --> 00:13:11,917 இது வரைக்கும் யாரும் வாங்கவில்லை, சும்மா பார்த்துச் சென்றனர். 194 00:13:13,210 --> 00:13:15,712 ஆனால் அதைப் பார்க்க எனக்கு நேரம் கிடைத்திருக்கிறது, நான்... 195 00:13:16,213 --> 00:13:19,383 இங்கும் அங்கும் நான் சில மாற்றங்களை செய்ய வேண்டும். 196 00:13:21,176 --> 00:13:22,261 ஓ, அப்படியா? 197 00:13:23,470 --> 00:13:27,933 ஆமாம். நான் சாலுடனும், இப்ராஹிமுடனும் நிறைய பேசுகிறேன். 198 00:13:28,517 --> 00:13:31,395 தொழில் முறையில், இப்ராஹிம் ஒரு குடும்ப மனநல மருத்துவர். 199 00:13:31,895 --> 00:13:34,565 நான் எங்கு தவறு செய்தேன் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்... 200 00:13:35,357 --> 00:13:38,527 என்னை திருப்பித் தரும் போது நீ சொன்னது சரியாக இருக்கலாம். 201 00:13:38,610 --> 00:13:41,864 நாம் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமில்லை போலும். 202 00:13:42,364 --> 00:13:45,492 நான் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது, 203 00:13:46,577 --> 00:13:48,912 ஆனால், செய்யவில்லை. 204 00:13:48,996 --> 00:13:51,915 நான் என்னைப் பற்றியே நிறைய கற்றுக்கொள்கிறேன். 205 00:13:51,999 --> 00:13:56,044 சந்தோஷத்தை தவறான இடத்தில் தேடி இருக்கிறேன் என்பது புரிகிறது. 206 00:13:58,297 --> 00:14:00,883 -அப்படியா? -ஆமாம். நான் உள்முகமாக பார்க்க வேண்டும். 207 00:14:00,966 --> 00:14:02,926 நான் எப்படிப்பட்டவள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். 208 00:14:03,010 --> 00:14:06,013 தனியாக இருப்பது தான், எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. 209 00:14:07,848 --> 00:14:14,313 சரி, சரி. ஒருவேளை இது நல்லதுக்காக இருக்கலாம். 210 00:14:16,190 --> 00:14:17,774 அதற்கு வாழ்த்துக்கள். 211 00:14:19,067 --> 00:14:20,360 நன்றி, விக். 212 00:14:22,446 --> 00:14:26,575 நான் கிளம்புகிறேன். நான்... 213 00:14:27,743 --> 00:14:30,162 -அடுத்த வாரம் வந்து உங்களைப் பார்க்கிறேன். -சரி. 214 00:14:30,746 --> 00:14:32,206 -சரி. -நல்லது. 215 00:14:32,289 --> 00:14:34,082 -பை. -சரி, பை. 216 00:14:51,600 --> 00:14:53,602 தனிமையான பயணம் இத்தாலியில் 217 00:14:56,230 --> 00:14:58,315 வெர்னாஸா. 218 00:15:01,568 --> 00:15:05,364 பொக்கா டெல்லா வெரித்தா. 219 00:15:06,448 --> 00:15:07,658 சாவ் பெல்லா. 220 00:15:09,368 --> 00:15:11,995 ஸ்பகெட்டி கார்போனாரா. 221 00:15:25,843 --> 00:15:29,471 என்னுடைய இனிமையான, நீல நிற வீட்டிற்கு வரவேற்கிறேன். 222 00:15:29,555 --> 00:15:33,642 இந்த முன் தோட்டத்தைப் பற்றி தான் சொல்கிறேன் 223 00:15:33,725 --> 00:15:36,395 இதை பல லட்சம் தடவை நீங்கள் பார்த்திருக்கலாம். 224 00:15:36,478 --> 00:15:38,272 அதாவது, சும்மா பார்த்தீர்கள். 225 00:15:38,355 --> 00:15:39,565 ஹாய், அனு! 226 00:15:39,648 --> 00:15:41,441 இதோ, இதை கொஞ்சம் பிடிக்கிறீர்களா? 227 00:15:41,525 --> 00:15:42,734 எங்கே போய்விட்டாய், அனு? 228 00:15:42,818 --> 00:15:45,529 -ஹாய். -நீ நலமா? 229 00:15:45,612 --> 00:15:48,198 நீ கீழே விழுந்தது போல தெரிந்தது. 230 00:15:48,282 --> 00:15:53,245 ஹே, நான் இப்போது... ஆஹா! கடையில் பேரம் பேசி வாங்கினேன். 231 00:15:53,871 --> 00:15:56,415 உண்மையில், அவர் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. 232 00:15:56,498 --> 00:16:00,794 விலை மிகவும் மலிவாக இருந்ததால், என்னால் வாங்காமல் இருக்க முடியவில்லை. 233 00:16:00,878 --> 00:16:01,962 இது சங்கடமாக இருக்குமா? 234 00:16:02,045 --> 00:16:04,882 இல்லை, இல்லை. எந்த சங்கடமும் இருக்காது. 235 00:16:04,965 --> 00:16:07,342 சரி, சரி. 236 00:16:07,843 --> 00:16:10,804 ஆம், நான் அப்படி நினைக்கவில்லை, ஏனென்றால், நீ தானே அவரை திருப்பிக் கொடுத்தாய். 237 00:16:11,305 --> 00:16:12,306 ஆமாம், ஆமாம். வந்து... 238 00:16:12,389 --> 00:16:14,433 -ஆமாம். -சரி. 239 00:16:14,516 --> 00:16:15,934 நீ அவரை திருப்பிக் கொடுத்தாய். 240 00:16:17,060 --> 00:16:18,687 நான் அவரை வாங்கிவிட்டேன். 241 00:16:22,649 --> 00:16:25,235 ஆக, இந்த முன்புற தோற்றம் சிறப்பாக இல்லை. 242 00:16:25,319 --> 00:16:27,112 நாம் பின்புறம் பார்க்க வேண்டும் 243 00:16:27,196 --> 00:16:29,948 ஏனென்றால் அங்கே நல்ல விஷயங்கள் நடக்கின்றன. 244 00:16:30,449 --> 00:16:31,575 உள்ளே வாருங்கள். 245 00:16:41,752 --> 00:16:45,047 -சரி, சரி. -நல்லது. 246 00:16:47,966 --> 00:16:49,885 ஹாய், அனு. 247 00:16:50,385 --> 00:16:52,387 நீ இங்கே என்ன செய்கிறாய்? 248 00:16:52,471 --> 00:16:53,472 ஹாய், பார்பரா. 249 00:16:53,555 --> 00:16:56,225 நான் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தேன் 250 00:16:56,308 --> 00:17:02,147 அங்கிருந்த விக்கின் பழைய உடைகளை கொடுத்து விட்டுப் போக வந்தேன். 251 00:17:02,231 --> 00:17:04,733 அது மிகவும் இனிமையான விஷயம். 252 00:17:04,816 --> 00:17:07,152 இது சற்று கனமாக இருக்கிறது. 253 00:17:07,236 --> 00:17:08,819 நான் உள்ளே வந்து வைக்கலாமா. 254 00:17:08,904 --> 00:17:11,365 சரி. வேண்டாம். அவருக்கு இது தேவைப்படாது. 255 00:17:12,115 --> 00:17:13,784 -வேண்டாமா? -வேண்டாம். தேவையில்லை. 256 00:17:13,867 --> 00:17:16,078 விகாஸிற்காக புது உடைகள் வாங்கிவிட்டேன். 257 00:17:16,662 --> 00:17:17,663 விகாஸ்? 258 00:17:17,746 --> 00:17:18,872 -பார்பி? -என்ன? 259 00:17:18,955 --> 00:17:21,500 -எல்லாம் நன்றாக இருக்கிறதா? -வூ! அழகாக இருக்கிறீர்கள். 260 00:17:24,044 --> 00:17:25,045 ஹலோ, அனு. 261 00:17:25,628 --> 00:17:27,506 அவர் அழகு இல்லையா? 262 00:17:30,008 --> 00:17:31,677 ஆமாம், என்ன தெரியுமா? 263 00:17:32,302 --> 00:17:37,099 அறிவிக்கப்படாத விருந்தினர்களுக்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை. 264 00:17:37,182 --> 00:17:38,183 என்ன சொல்கிறாய்? 265 00:17:38,267 --> 00:17:40,227 இந்த புது வாழ்க்கைக்குத் தயாராக 266 00:17:40,310 --> 00:17:43,689 எங்களுக்கு இன்னும் சற்று காலம் தேவைப்படுகிறது. 267 00:17:45,315 --> 00:17:47,526 நீ ஒப்புக்கொள்வாய் என்று தெரியும். பை-பை. 268 00:18:01,707 --> 00:18:04,835 அம்மா, எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? 269 00:18:04,918 --> 00:18:09,089 நிறைய விஷயங்கள் செய்கிறேன், சாரு செல்லமே. 270 00:18:09,756 --> 00:18:11,675 சொல்கிறேன். சொல்கிறேன். 271 00:18:11,758 --> 00:18:15,053 நான் தோட்ட வேலை செய்கிறேன்... 272 00:18:15,137 --> 00:18:16,471 சரி, அடுத்த வார்த்தைகள், 273 00:18:16,555 --> 00:18:19,183 “எனக்கு இருவர் தங்கும் அறை வேண்டும்.” 274 00:18:19,266 --> 00:18:20,267 சரி. 275 00:18:20,350 --> 00:18:22,394 ஜெ வொட்ரைஸ் உனே சாம்பரே போர் டியெஸ். 276 00:18:22,477 --> 00:18:23,478 புரிந்ததா? 277 00:18:23,562 --> 00:18:29,818 ஜெ வொட்ரைஸ் உனே சாம்பரே போர் டியெஸ். 278 00:18:29,902 --> 00:18:32,905 அருமை. நாம் அருமையாக முயற்சித்தோம். 279 00:18:36,617 --> 00:18:39,161 ...புத்தகம் படிக்கிறேன்... 280 00:18:48,378 --> 00:18:50,547 பறவைகளை ரசிக்கிறேன்... 281 00:18:59,056 --> 00:19:01,016 உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். 282 00:19:01,099 --> 00:19:03,268 எப்பொழுதாவது நாம் இரண்டு ஜோடிகளாக டேட்டிங் போகலாம். 283 00:19:03,352 --> 00:19:05,729 நான் முயற்சிக்கிறேன். மெல்ல மெல்லமாக. 284 00:19:06,396 --> 00:19:07,689 நீங்கள் தயாரானதும் போகலாம். 285 00:19:08,190 --> 00:19:10,567 அங்கே இருக்கும் ஒரு சுஷி உணவகம் உங்களுக்கு பிடிக்கலாம். 286 00:19:13,320 --> 00:19:16,073 -அடக் கடவுளே. அம்மா, நீங்கள் நலம் தானே? -நான்... திரும்ப அழைக்கிறேன். 287 00:19:16,156 --> 00:19:20,410 ஹே. ஐய்யையோ. ஓ. பார்பரா, நீ நலமா? 288 00:19:20,494 --> 00:19:23,330 மன்னிக்கவும். உன்னை நான் கவனிக்கவில்லை. 289 00:19:23,413 --> 00:19:26,917 எப்படி என்னை கவனிக்காமல் இருந்தாய், அனு? ரியர் வியூ கண்ணாடி இல்லையா? 290 00:19:27,000 --> 00:19:28,377 நான் கவனம் சிதறிவிட்டேன். 291 00:19:28,460 --> 00:19:31,171 நான் இப்போது தான் ஓட்டிப் பழகுகிறேன், 292 00:19:31,255 --> 00:19:34,258 ஏனென்றால் நாங்கள் ஒன்றாக இருந்த போது விக் தான் வண்டி ஓட்டுவார். 293 00:19:34,341 --> 00:19:37,135 சரி. சரி. சரி. 294 00:19:37,219 --> 00:19:39,096 பார், உன்னை வீட்டிற்குள்ளே அழைத்துப் போகிறேன். 295 00:19:39,179 --> 00:19:42,724 உனக்கது பிடிக்கும், இல்லையா? பரவாயில்லை, வேண்டாம். எனக்கு ஒன்றுமில்லை. 296 00:19:43,433 --> 00:19:45,519 வேண்டாம்! எனக்கு ஒன்றுமில்லை. நன்றி. 297 00:19:46,478 --> 00:19:49,523 அடச்சே! கடவுளே, சே. 298 00:19:50,107 --> 00:19:52,818 விகாஸ்! கொஞ்சம் உதவி செய்யுங்கள், அன்பே. 299 00:20:45,579 --> 00:20:48,248 -அனு தான் இப்படி செய்தாள். -சரி, வா. 300 00:20:49,666 --> 00:20:50,667 சரி. 301 00:20:50,751 --> 00:20:53,378 -கை போடவா? நன்றி. சரி. -சரி. சரி, வா. 302 00:20:54,421 --> 00:20:55,631 பிடித்துக் கொண்டாயா? 303 00:20:55,714 --> 00:20:58,383 -சரி, என் மீது சாய்ந்துகொள். -என்ன வேடிக்கை இது? 304 00:21:06,266 --> 00:21:07,392 நாசமாய் போ. 305 00:21:41,468 --> 00:21:43,720 எங்கள் அற்புதமான விருந்தினர்களுக்கு நன்றி, 306 00:21:43,804 --> 00:21:45,597 மற்றும் வீட்டில் பார்ப்பவர்களுக்கும் நன்றி. 307 00:21:55,232 --> 00:21:57,401 -ஹே, கிளார்க். -அனு. 308 00:21:57,901 --> 00:21:59,611 சரியாக, காதலர் தினத்தில் வந்திருக்கிறாய். 309 00:21:59,695 --> 00:22:01,947 கணவர்கள் விற்பனையில் பெரிய சலுகைகள். 310 00:22:02,030 --> 00:22:03,448 இல்லை, வேண்டாம். 311 00:22:07,452 --> 00:22:08,453 விக்? 312 00:22:10,664 --> 00:22:11,957 என்ன நடந்தது? 313 00:22:12,040 --> 00:22:16,795 பார்பரா என்னை திருப்பி கொடுத்து விட்டாள். மண வாழ்க்கை அவளுக்கு ஒத்து வராதாம். 314 00:22:19,006 --> 00:22:22,217 இன்னும் அவள் கொடுத்த ஜாக்கெட்டை கதாநாயகன் போல அணிந்திருக்கிறாய். 315 00:22:22,301 --> 00:22:25,804 எனக்கு நிறைய உதவி தேவை, எனவே... 316 00:22:26,972 --> 00:22:29,474 இல்லை, வேண்டாம். என் விலையைப் பார்க்காதே. 317 00:22:29,558 --> 00:22:31,935 இல்லை, விக். இது மிகவும் மலிவு! 318 00:22:32,436 --> 00:22:37,107 நான் இரண்டு முறை திரும்ப கொடுக்கப்பட்டதால், இப்போது “பேர விலையில்” இருக்கிறேன். 319 00:22:39,943 --> 00:22:41,778 வந்து, உட்கார். இங்கே. 320 00:22:45,032 --> 00:22:46,909 ஹே, சில்லென்று ஏதாவது குடிக்கிறாயா? 321 00:22:56,710 --> 00:22:58,629 அவளுக்காக ஏன் மாறினீர்கள்? 322 00:23:00,547 --> 00:23:01,632 என்ன? 323 00:23:01,715 --> 00:23:04,885 முப்பத்தியேழு வருடங்களாக உங்களுக்காக எல்லாம் செய்தேன், ஆனால் நீங்கள் எதுவும்... 324 00:23:05,636 --> 00:23:06,637 செய்யவில்லை. 325 00:23:07,721 --> 00:23:11,850 பார்பராவோடு வாழ போய், திடீரென்று ரொம்பவும் உதவும் ஜானி போல ஆகிவிட்டீர்கள். 326 00:23:11,934 --> 00:23:15,854 “இங்கே பார், பார்பராவுக்காக சமைக்கிறேன், சுத்தம் செய்கிறேன், 327 00:23:15,938 --> 00:23:19,358 பார்பராவின் ஒல்லியான, நரைக்கும்... தலைமுடியை வாரி விடுகிறேன்.” 328 00:23:19,441 --> 00:23:23,111 -ஆக, நீ... எங்களை கண்காணித்தாயா? -சும்மா இருங்கள். 329 00:23:23,195 --> 00:23:26,156 நான் ஒன்றும் ஜேம்ஸ் பாண்ட் இல்லை, பைப் பிடித்து ஏறி வருவதற்கு. 330 00:23:26,782 --> 00:23:29,243 -ஜேம்ஸ் பாண்ட் அப்படி செய்ய மாட்டார். -நான் சொல்வது உங்களுக்குப் புரியும். 331 00:23:34,790 --> 00:23:38,001 நமக்கு கல்யாணமான புதுசில், நான் ஒன்றை சரி செய்வேன், 332 00:23:38,085 --> 00:23:41,255 அதைப் பார்த்து நீ, “ஏன்... அப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்பாய். 333 00:23:41,880 --> 00:23:43,715 உனக்கு வேண்டிய வகையில் 334 00:23:43,799 --> 00:23:46,385 நான் எதையும் செய்யாததால், அது தவறாகவே இருந்தது. 335 00:23:46,468 --> 00:23:49,555 நான் செய்வது எதுவும் உனக்கு சரியாக இல்லாததால், நான் முயற்சி செய்வதையே 336 00:23:50,764 --> 00:23:51,890 நிறுத்திவிட்டேன். 337 00:23:58,355 --> 00:24:03,318 இவ்வளவு வருடங்களும், நீங்கள் தான் பிரச்சனை என்று நினைத்து... 338 00:24:05,112 --> 00:24:07,114 நான் தனிமையாக இருந்து விட்டேன். 339 00:24:09,032 --> 00:24:12,828 நானும் நல்லவளில்லை என்று புரிந்துக் கொண்டேன். 340 00:24:14,913 --> 00:24:17,624 இல்லை. நீ அப்படி இல்லை. 341 00:24:22,713 --> 00:24:25,174 ஆக பல வழிகளில் நாம் ஒருவரை ஒருவர் மதிக்கவில்லை. 342 00:24:30,721 --> 00:24:31,889 மன்னித்துவிடுங்கள். 343 00:24:46,486 --> 00:24:48,363 சரி, அடுத்தது என்ன? நீ... 344 00:24:49,114 --> 00:24:51,116 நீ இப்ரஹிம்மை வாங்க வந்தாயா? 345 00:24:51,742 --> 00:24:53,452 இல்லை, இனி நான் வாங்கப் போவதில்லை. 346 00:24:54,328 --> 00:24:56,288 நீ தனிமையில் இருக்கப் போகிறாயா? 347 00:24:57,206 --> 00:24:58,290 தெரியவில்லை. 348 00:25:08,175 --> 00:25:09,468 நமக்கு என்ன நடந்தது? 349 00:25:12,137 --> 00:25:15,182 சுபிட்சமான ஊருக்கு வர, நாம் கடுமையாக உழைத்தோம். 350 00:25:15,265 --> 00:25:19,603 இப்போது நிறைய பொருட்கள் இருக்கும் கடையில் இருக்கிறோம் 351 00:25:19,686 --> 00:25:22,272 இருந்தாலும் நம்மிடம் ஒன்றும் இல்லை. 352 00:25:22,356 --> 00:25:24,608 இல்லை, அப்படி இல்லை. 353 00:25:25,359 --> 00:25:27,861 ஒவ்வொரு வருடமும் சில மணி நேரங்களாவது நம்மை வந்து பார்த்து விட்டுப் போகும் 354 00:25:27,945 --> 00:25:30,155 கல்யாணமாகாத மகள், சரீனா இருக்கிறாள். 355 00:25:41,250 --> 00:25:43,585 உங்களை நான் திரும்ப வாங்கினால், அது மாறுபாடாக இருக்க வேண்டும். 356 00:25:43,669 --> 00:25:46,004 பழையபடி இருக்கக் கூடாது. 357 00:25:49,216 --> 00:25:50,217 நிச்சயமாக. 358 00:25:50,884 --> 00:25:52,594 எனக்கு பரபரப்பான வாழ்க்கை வேண்டும். 359 00:25:53,637 --> 00:25:55,097 அதன் அர்த்தம் என்னவென்று தெரியாது, 360 00:25:55,180 --> 00:25:58,684 அதை எப்படி பெறுவது என்றும் தெரியாது, ஆனால் எனக்கு அது வேண்டும். 361 00:25:59,184 --> 00:26:01,311 நீங்கள் என்னை அதிலிருந்து தடுக்கக் கூடாது. 362 00:26:01,395 --> 00:26:05,148 எனக்கும் தான். எஞ்சியிருக்கும் வாழ்க்கையில்... ஒரு நாற்காலியில் அமர எனக்கும் ஆசை இல்லை. 363 00:26:05,232 --> 00:26:09,069 இல்லை, உண்மையாகச் சொல்கிறேன், விக். ஒரு உல்லாச கப்பல் பயணம் போவது பற்றி மட்டும் சொல்லவில்லை. 364 00:26:09,152 --> 00:26:11,154 எந்த உல்லாச கப்பல் பயணமும் தேவையில்லை. அவை மோசம். 365 00:26:13,240 --> 00:26:15,909 என்ன, திடீரென்று கெட்ட வார்த்தை பேசுகிறீர்கள்? 366 00:26:18,370 --> 00:26:19,746 நான் ஒரு புது மனிதன். 367 00:26:29,464 --> 00:26:30,465 இல்லை. 368 00:26:34,344 --> 00:26:35,554 நீ என்னை வாங்க வேண்டாம். 369 00:26:37,639 --> 00:26:40,309 நான் “பேர விலை.” உனக்கு வேறு சிறப்பானவர் வேண்டும். 370 00:26:56,241 --> 00:26:58,243 -வண்டியில் ஏறுங்கள். -ஏன்? 371 00:26:58,327 --> 00:27:01,580 -ஏறுங்கள். -நான் சொன்னேனே. நீ என்னை வாங்க வேண்டாம். 372 00:27:01,663 --> 00:27:04,291 ஆமாம், நான் உங்களை வாங்கப் போவதில்லை, திருடப் போகிறேன். 373 00:27:04,833 --> 00:27:07,461 இந்த மதிப்பு, அந்த மதிப்பு. எல்லாம் அபத்தம். 374 00:27:07,544 --> 00:27:09,588 வாருங்கள். யாரும் பார்ப்பதற்கு முன், இதில் ஏறுங்கள். 375 00:27:10,631 --> 00:27:14,384 சரி, நீ என்ன செய்கிறாய்? உன் வாழ்நாளில் நீ எதுவுமே திருடியதே கிடையாதே. 376 00:27:14,468 --> 00:27:16,220 ஆமாம், சரி தான். 377 00:27:16,303 --> 00:27:19,556 சரி, நீ என்னைத் திரும்ப கொடுக்க விரும்பினால் என்ன செய்வது? உன்னிடம் ரசீது இருக்காதே. 378 00:27:20,933 --> 00:27:22,351 நான் உங்களை திரும்ப கொடுக்கவே மாட்டேன். 379 00:27:26,021 --> 00:27:27,731 சரி, போ. போ. 380 00:27:29,024 --> 00:27:30,025 போ. 381 00:27:44,581 --> 00:27:47,376 பிக்$சேவ் 382 00:27:48,085 --> 00:27:49,378 போ, போ. 383 00:28:02,266 --> 00:28:04,226 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 384 00:29:08,248 --> 00:29:10,250 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்