1
00:00:05,423 --> 00:00:08,426
தி
ஸ்டீவன்சன்ஸ்
2
00:00:10,594 --> 00:00:13,389
{\an8}நான் மார்க்ரேவில் பயப்படுவேன்னு
நினைக்கவேயில்ல.
3
00:00:13,389 --> 00:00:15,307
இன்னும் ஏதும் தெரியலையா?
4
00:00:16,350 --> 00:00:17,768
உபயோகமா இல்ல.
5
00:00:18,853 --> 00:00:22,815
போய் தேடுன்னு சொல்றது எதுவும்
சரியான பாதையா தோணல.
6
00:00:23,733 --> 00:00:25,443
இத பத்தி ஃபின்லி கிட்ட பேசினியா?
7
00:00:26,485 --> 00:00:29,488
இருக்கும்போது என்ன பேச விட மாட்டேங்கறார்.
8
00:00:29,572 --> 00:00:32,408
ராஸ்கோ டீலை அறைந்த பிறகு
நான் அவரை பார்கவேயில்ல.
9
00:00:32,408 --> 00:00:34,660
நானும் பேக்கரும் தனியா இருக்கோம்.
10
00:00:34,744 --> 00:00:38,456
இன்னிக்கு பாலுக்கு ஃபோன்
செய்தேன். சார்லிக்கும்.
11
00:00:41,459 --> 00:00:42,918
அவங்க பதிலளிக்க மாட்டாங்க.
12
00:00:43,878 --> 00:00:46,839
ஒண்ணு ஓடிட்டாங்க இல்ல
இன்னும் மோசமா ஏதோ ஒண்ணு.
13
00:00:48,758 --> 00:00:51,177
நாமும் இங்கிருந்து போகணுமோன்னு தோணுது.
14
00:00:51,177 --> 00:00:54,346
நீங்க இதை கண்டுபிடிச்சா கூட,
திரு. க்ளைனர் இறந்திட்டதால,
15
00:00:54,430 --> 00:00:57,975
இந்த ஊர் அவர் வரதுக்கு முன்
இருந்தா மாதிரி திரும்ப ஆயிடும்.
16
00:00:58,642 --> 00:01:00,853
என் பெற்றோர் நாம டூபலோ வர விரும்புவாங்க.
17
00:01:00,853 --> 00:01:05,524
தெரியும். கூடிய சீக்கிரம் நமக்கு இலவசமா
குழந்தை பாத்துக்க ஆள் வேண்டியிருக்கும்.
18
00:01:07,318 --> 00:01:10,446
- எப்போ எல்லார்கிட்டயும் சொல்லலாம்?
- சீக்கிரம்.
19
00:01:34,094 --> 00:01:39,016
ரீச்சர்
20
00:01:47,358 --> 00:01:52,029
{\an8}அட்லான்டா, ஜார்ஜியா
21
00:01:54,949 --> 00:01:58,869
{\an8}என் பசங்க என்வை போனாங்க
எனக்கு கிடைத்தது இந்த மட்டமான டீ ஷர்ட்
22
00:01:58,953 --> 00:02:00,079
{\an8}டாக்சி.
23
00:02:00,830 --> 00:02:02,373
இங்கே! ஹை.
24
00:02:13,634 --> 00:02:16,095
ஜெர்மனி. புது சாகச பயணம். இல்ல?
25
00:02:16,095 --> 00:02:18,264
இது சாகச பயணம் இல்ல.
26
00:02:18,264 --> 00:02:22,434
- இது தண்டனை. ஜெர்மனி சுவாரஸ்யம் இல்ல.
- இந்த தடவை வித்தியாசமா இருக்கும்.
27
00:02:25,020 --> 00:02:27,565
என் பசங்கள பார். குழம்பி இருக்காங்க.
28
00:02:27,565 --> 00:02:31,485
நல்லவங்களுக்கு தண்டனை,
கெட்டவங்க விரும்பியத அடையறாங்க,
29
00:02:31,569 --> 00:02:33,070
உங்களுக்கு ஏன்னு புரியல.
30
00:02:33,070 --> 00:02:37,116
நான் சொல்வது
உங்களுக்கு இப்போ புரியாது,
31
00:02:37,116 --> 00:02:39,952
ஆனா ஒரு நாள் புரியலாம்.
32
00:02:40,995 --> 00:02:44,415
ஜோ, உலகின் எல்லா பிரச்சினையும்
நீ சரி செய்ய வேண்டாம்.
33
00:02:44,415 --> 00:02:46,625
சிலதை செய்தா போதும்.
34
00:02:46,709 --> 00:02:51,297
ரீச்சர், உன் வயது பசங்க மூணு பேரோட
பலம் உங்கிட்ட இருக்கு.
35
00:02:51,297 --> 00:02:53,507
அதை வெச்சுகிட்டு நீ என்ன செய்ய போறே?
36
00:02:57,261 --> 00:02:59,471
சரியானத செய்வே.
37
00:03:30,878 --> 00:03:32,004
நல்ல உடை.
38
00:03:32,004 --> 00:03:34,548
என் மத்த உடையில இரத்தமாயிடுச்சு.
39
00:03:34,632 --> 00:03:37,676
சிலது என்னோடது. கத்தி. துப்பாக்கி.
40
00:03:38,886 --> 00:03:39,887
நடு இடத்தில்.
41
00:03:48,062 --> 00:03:51,607
- அப்போ நியூ யார்கில் என்ன தெரிஞ்சது?
- எல்லாம் பேப்பர் பற்றியது.
42
00:03:51,607 --> 00:03:53,901
இங்க் சுலபம், ப்ளேட்ஸ் செய்ய முடியும்.
43
00:03:53,901 --> 00:03:56,737
சரியான கரன்சி பேப்பர்,
அதுல தான் விஷயம் இருக்கு.
44
00:03:56,737 --> 00:03:59,281
- மற்றும்?
- ஒரு இடத்தில தான் அந்த
45
00:03:59,365 --> 00:04:03,535
பேப்பர் செய்தாங்க, அதை ஜோ
கடுமையான பாதுகாப்பிலிட்டான். ஒருவேளை...
46
00:04:04,161 --> 00:04:06,789
- அப்படி இல்லாம இருந்தா தவிர.
- இல்லாம இருந்தா தவிர.
47
00:04:07,915 --> 00:04:11,210
ஜோக்கு தெரியாம உள்ள யாரோ
ஊழலானவங்க இருந்திருக்கலாம்.
48
00:04:11,210 --> 00:04:13,963
ஹப்பிள் கரன்சி மேளாலர், பணத்தை கையாளறவன்,
49
00:04:13,963 --> 00:04:17,800
சப்ளை செய்யற ஊழலானவன் கூட
வேலை செய்திருக்கலாம்.
50
00:04:17,800 --> 00:04:19,885
சரி. வேறு ஏதாவது?
51
00:04:19,969 --> 00:04:22,429
இன்னொரு வெனசுயேலா ஆளோட மோதினேன்.
52
00:04:22,513 --> 00:04:24,306
என்ன ஆச்சு?
53
00:04:24,390 --> 00:04:26,225
அவனை கொன்னேன்.
54
00:04:29,812 --> 00:04:33,023
ரிப்பேர் கடைக்கு கூட்டி போ.
பென்ட்லிய திரும்ப பெறணும்.
55
00:04:34,566 --> 00:04:38,946
நான் ஒரு இடம் முதல்ல போகணும்.
நீ காரிலேயே இருப்பது மேல்.
56
00:04:42,616 --> 00:04:46,620
திரு. க்ளைனருக்கு மார்க்ரேவில்
உறவு ரொம்ப இல்ல,
57
00:04:46,704 --> 00:04:48,872
அவர் மகனும், மருமகனும் தான்.
58
00:04:48,956 --> 00:04:52,459
ஆனா இந்த ஊர் முழுக்க குடும்பம்னு
நினைக்க விரும்பறேன்.
59
00:04:52,543 --> 00:04:56,171
அவர் நம்மை குடும்பம் போல அரவணைச்சார்.
60
00:04:56,255 --> 00:05:00,801
"நல்லவர் இறப்பார்,
யாரும் அதை லட்சியம் செய்வதில்லை.
61
00:05:01,927 --> 00:05:04,138
"சிரத்தையுள்ளவர் இறக்கிறார்,
62
00:05:04,972 --> 00:05:10,853
"யாருக்கும் புரிவதில்லை அவர்கள் தீமையில்
இருந்து காக்கபட எடுக்கப் படுகிறார்னு.
63
00:05:12,813 --> 00:05:16,442
"நேர்மையாக நடப்பவர்கள் சாந்தி அடைந்து
64
00:05:19,445 --> 00:05:22,573
"மரணத்தில் ஓய்வடைவார்கள்."
65
00:05:56,523 --> 00:06:00,027
- நீ என்ன செய்யறதா நினைக்கற?
- மரியாதை செலுத்தறேன்.
66
00:06:00,027 --> 00:06:02,654
நிஜமாகவா? நான் என்ன நினைக்கறேன் தெரியுமா?
67
00:06:04,031 --> 00:06:05,616
நீ அவரை கொன்னதா தோணுது.
68
00:06:07,659 --> 00:06:11,288
நீ அவரை கொன்னா மாதிரி
நான் உன்னை வெட்டி போட்டா எப்படி இருக்கும்?
69
00:06:15,584 --> 00:06:18,796
ஓண்ணு, நான் உன் மாமாவுக்கு
மரியாதை குடுக்கல ஏன்னா அவனுக்கு
70
00:06:18,796 --> 00:06:20,672
எப்பவுமே மரியாதை தந்தது இல்ல.
71
00:06:21,507 --> 00:06:23,884
ஆனா இந்த ஊர் மக்களுக்கு அவன் மேல மரியாதை,
72
00:06:23,884 --> 00:06:26,929
அதனால தலை துப்பறிவாளரா
மார்க்ரேவுக்கு மரியாதை தர்றேன்.
73
00:06:28,138 --> 00:06:34,103
ரெண்டு, அமுக்கி வாசி, இல்லன்னா ரெண்டு
க்ளைனர்கள் இங்க சமாதியாவார்கள்.
74
00:06:37,231 --> 00:06:38,899
அப்புறம் பார்க்கறேன், ஃபின்லி.
75
00:06:56,500 --> 00:06:58,043
அது நல்லா போச்சு இல்லையா.
76
00:06:58,877 --> 00:06:59,753
வாயை மூடு.
77
00:07:02,589 --> 00:07:04,258
போய் காரை எடுப்போம்.
78
00:07:10,556 --> 00:07:12,808
ராஸ்கோ உங்கூட தொடர்பு கொண்டாளா?
79
00:07:12,808 --> 00:07:15,561
இல்ல, ஆனா பிக்கார்ட்கிட்டேர்ந்து
தகவல் வரணும்.
80
00:07:27,156 --> 00:07:31,326
ஹே, பென்ட்லிகாரனே, மன்னிச்சுக்கோ,
நீ மதியம் திரும்பி வரணும்.
81
00:07:31,410 --> 00:07:33,954
இன்னும் இரண்டு ஜன்னல்களுக்கு கலர் போடல.
82
00:07:33,954 --> 00:07:34,955
பரவாயில்ல.
83
00:07:34,955 --> 00:07:36,582
வேலை முடிக்காம எடுத்துக்கறயா?
84
00:07:36,582 --> 00:07:39,501
ராக் ஸ்டார்களுக்குதான்
நாலு கலர் ஜன்னல்கள் தேவை.
85
00:07:39,585 --> 00:07:41,003
முழு பணத்தையும் தறேன்.
86
00:07:45,215 --> 00:07:47,885
உன் சௌகரியம்தான்.
சரி, நான் காரை கொண்டு வரேன்.
87
00:07:47,885 --> 00:07:50,888
டிம், அந்த எண்ணை கசிவு மேல மரத்தூள் போடு.
88
00:07:53,056 --> 00:07:56,268
கள்ள நோட்டை செலவழிக்கறதுல
உனக்கு சங்கடம் இல்ல.
89
00:07:56,268 --> 00:07:58,103
உனக்கு எதாவது வாங்கணுமா?
90
00:07:58,187 --> 00:08:00,814
ஜீன்ஸ், ஹால் & ஓட்ஸ்
கச்சேரிக்கு டிக்கட்டுகள்?
91
00:08:08,530 --> 00:08:10,282
இது கேப்டன் ஃபின்லி.
92
00:08:15,120 --> 00:08:17,206
பூனை கூளம்
93
00:08:21,919 --> 00:08:23,462
சரி, அங்க வறேன்.
94
00:08:27,758 --> 00:08:29,176
என்ன நடக்குது?
95
00:08:43,899 --> 00:08:46,193
இது பதிலளிக்குதுன்னு நினைக்கறேன்.
96
00:08:49,154 --> 00:08:50,656
எது?
97
00:08:50,656 --> 00:08:53,367
ஸ்டீவன்சன் கெட்டவனான்னு.
அவன் உடந்தையாகத்தான்
98
00:08:53,367 --> 00:08:55,661
இருக்கணும், மோரிசனோட கதி கிடைக்க.
99
00:08:55,661 --> 00:08:57,287
இது அதே இல்ல.
100
00:08:57,371 --> 00:09:00,374
மோரிசன் செத்தது மத்தவங்களுக்கு
ஒரு செய்தி குடுக்க.
101
00:09:01,416 --> 00:09:03,627
- இது வேற.
- எப்படி?
102
00:09:03,627 --> 00:09:06,255
ஒண்ணு, அவன் விரைகளை ஒண்ணும் செய்யல.
103
00:09:06,755 --> 00:09:09,216
- அதுதான் முதல்ல பார்த்தேன்.
- ரொம்ப சரி.
104
00:09:09,216 --> 00:09:12,970
ஸ்டீவன்சன் அதிர்ச்சி அடைய விரும்பல.
தெளிவா இருக்க விரும்பினாங்க.
105
00:09:12,970 --> 00:09:14,972
அவன பார்க்க வெச்சாங்க.
106
00:09:14,972 --> 00:09:16,598
அந்த டேப், கண்ணாடி...
107
00:09:16,682 --> 00:09:19,059
அவன் மனைவியை கண் முன்
சித்திரவதை செஞ்சாங்க.
108
00:09:19,059 --> 00:09:22,479
அவன் வேற எங்கேயும்
பார்க்க முடியாது. கடவுளே.
109
00:09:22,479 --> 00:09:24,648
இது தகவல் அறிய.
110
00:09:25,565 --> 00:09:27,693
அப்படினா, ஸ்டீவன்சன் உடந்தை இல்ல.
111
00:09:28,151 --> 00:09:30,946
டாசன் ட்ரக் கூரைல
இருந்த ஓட்டையை பார்த்து, நாம
112
00:09:30,946 --> 00:09:32,823
நெருங்குவதை உணர்ந்திருப்பான்.
113
00:09:32,823 --> 00:09:36,743
நாம எல்லாரும் காணலன்னு பக்கத்துல
இருக்கறவனை பிடிச்சிருக்காங்க.
114
00:09:36,827 --> 00:09:38,829
ஸ்டீவன்சனும் ஹப்பிளும் உறவுக்காரங்க.
115
00:09:38,829 --> 00:09:41,373
அவன், ராஸ்கோ, நம்மகிட்ட
பேசறதை கண்டாங்க.
116
00:09:41,373 --> 00:09:45,752
இவன் அவங்களோட வேலை செய்யறதா நினைச்சோம்,
அவங்க நம்மோட செய்யறதா நினைச்சாங்க.
117
00:09:45,836 --> 00:09:49,214
அவனையும் சேர்த்திருந்தா ரெண்டு பேரையும்
காப்பாத்தி இருக்கலாம்.
118
00:09:50,465 --> 00:09:51,341
மூணு.
119
00:09:54,011 --> 00:09:56,305
ஃபின்லி, ரீச்சர், ஒரு நிமிஷம்.
120
00:10:11,028 --> 00:10:12,070
என்ன வேணும்?
121
00:10:14,197 --> 00:10:15,574
உன்னை தூக்கிட்டேன்.
122
00:10:16,825 --> 00:10:17,909
என்ன காரணத்துனால?
123
00:10:17,993 --> 00:10:19,578
உன் வேலைத் திறன் போதாது.
124
00:10:19,578 --> 00:10:21,663
இன்னும் எத்தனை பேர் சாகணும்
125
00:10:21,747 --> 00:10:24,041
உன்னால முடியலன்னு நீ ஒத்துக்கும் முன்?
126
00:10:24,041 --> 00:10:27,252
என்னை அடிச்ச சின்ன பெண்
போலீஸை கூட பிடிச்சுக்க முடியல.
127
00:10:27,336 --> 00:10:29,254
இந்த ஊரில் ஏகப்பட்ட ஊழல் இருக்க,
128
00:10:29,338 --> 00:10:31,965
புதுசா அந்த போலீஸ்காரன் மீது பழியா?
129
00:10:32,049 --> 00:10:33,425
உனக்கு உதவி செய்யறேன்.
130
00:10:33,425 --> 00:10:35,844
உன் மேல இன்னும் பழி வரும் முன் போயிடு,
131
00:10:35,844 --> 00:10:38,972
அப்ப எங்கேயாவது காவல்காரனா
வேலை கிடைக்கும்.
132
00:10:39,056 --> 00:10:41,350
ஸ்டேஷனுக்கு போய் சாமானை மூட்டை கட்டு,
133
00:10:41,350 --> 00:10:44,394
துப்பாக்கியையும் பாட்ஜையும்
என் மேஜைல வெச்சுட்டு போ.
134
00:10:45,187 --> 00:10:47,689
நீ, ஒரு போலீஸ்காரன் இல்ல.
135
00:10:48,482 --> 00:10:51,485
குற்றம் நடந்த இடத்தை விட்டு போ,
இல்ல கைது செய்வேன்.
136
00:10:51,485 --> 00:10:54,905
ஒருவனை புதைச்சேன், இன்னொருவன்
சிதைந்திருப்பதை பார்த்தேன்,
137
00:10:54,905 --> 00:10:57,366
அவன் மனைவியும். என்னை சோதிக்காத.
138
00:10:57,366 --> 00:11:00,243
நான் வார்பர்டன் கௌன்டியை அழைக்கணும்,
139
00:11:00,327 --> 00:11:02,496
நிஜப் போலீஸை அனுப்ப சொல்லி.
140
00:11:06,500 --> 00:11:09,961
இன்னொரு கொலை செய்யாம அவன்
என்னை வெளிய அனுப்பிச்சுட்டான்.
141
00:11:10,045 --> 00:11:12,172
அத்தாட்சிகள் இனி நமக்கு கிடைக்காது.
142
00:11:12,172 --> 00:11:15,509
ஜாஸ்பர் கிட்டேர்ந்து எதாவது
கிடைக்குமோ என்னவோ.
143
00:11:15,509 --> 00:11:16,635
ஹே.
144
00:11:16,635 --> 00:11:19,513
ஸ்டீவன்சனுடைய பெற்றோர்களுக்கு சொல்லணும்.
145
00:11:19,513 --> 00:11:23,100
நான் போலீஸ்காரனா இல்லாம இருக்கலாம்
ஆனா எங்கிட்ட வேலை செஞ்சான்.
146
00:11:23,100 --> 00:11:25,018
நான் அவங்களை நேர்ல பார்த்து
147
00:11:25,102 --> 00:11:28,188
அவங்களோட மகனையும் மருமகளையும்
இழந்தாங்கன்னு சொல்லணும்.
148
00:11:28,188 --> 00:11:29,523
பேர குழந்தையையும்.
149
00:11:31,024 --> 00:11:31,983
ஆமா.
150
00:11:32,901 --> 00:11:36,029
நீ கோபமா இருக்கன்னு தெரியும். நானும்தான்.
151
00:11:36,947 --> 00:11:39,241
நான் இல்லாதப்ப மடத்தனமா
எதாவது செய்யாத.
152
00:11:39,241 --> 00:11:42,202
திட்டப்படி செய்.
ஹப்பிள் வீட்டில் கிடைக்கறதை பார்.
153
00:11:43,120 --> 00:11:44,037
செய்யறேன்.
154
00:11:44,121 --> 00:11:47,165
மார்க்ரேவ்ல இருக்கற கடைசி போலீஸை
சாப்பிட அழைக்க போறேன்.
155
00:11:56,550 --> 00:11:58,176
சாப்பாட்டை தொடவே இல்ல.
156
00:11:59,136 --> 00:12:00,804
பசியில்லை.
157
00:12:01,638 --> 00:12:03,682
ஸ்டீவன்ஸன் மரணம் கோபப்படுத்தலையா?
158
00:12:05,058 --> 00:12:07,477
என்ன பேசற நீ?
159
00:12:08,854 --> 00:12:11,523
அவனை சின்ன வயசுலேர்ந்து தெரியும்.
160
00:12:12,566 --> 00:12:15,944
பள்ளியில் அவன் மனைவி பாட்டு குழுக்கு
என் அத்தை ஆசிரியை, அது...
161
00:12:16,820 --> 00:12:17,821
என்ன?
162
00:12:19,656 --> 00:12:22,242
சும்மா அழறதுல பிரயோஜனம் இல்லை.
163
00:12:22,868 --> 00:12:27,038
அவங்களை கௌரவிக்கற வழி கொன்னவங்க யாருன்னு
கண்டுபிடிச்சு அவங்களை கொல்றது.
164
00:12:29,332 --> 00:12:33,170
அவன் ஜெயில்ல போட்ட யாரோ அவனை
கொன்னுட்டாங்கன்னு நம்பறியா?
165
00:12:33,170 --> 00:12:35,422
மோரிசன் சாவுக்கு டீல் சொல்றா மாதிரி?
166
00:12:36,798 --> 00:12:38,133
நீ நம்பலன்னு தோணுது.
167
00:12:38,133 --> 00:12:39,926
டீல் சொல்வது பேத்தல்.
168
00:12:41,136 --> 00:12:43,555
- அதை பையில் போட்டு தரவா?
- தயவு செய்து.
169
00:12:43,555 --> 00:12:45,265
பீச் பை, கண்ணு.
170
00:12:45,265 --> 00:12:46,683
உனக்கு, கண்ணே?
171
00:12:46,683 --> 00:12:48,643
- நான்--
- பை தவிர எது வேணாலும்.
172
00:12:48,727 --> 00:12:51,313
ஆஃபிசர் பேக்கர் கடைசி
துண்டை ஆர்டர் செய்தார்.
173
00:12:51,313 --> 00:12:53,398
தூங்கினா, தோற்ப, ரீச்சர்.
174
00:12:53,482 --> 00:12:55,984
இந்த மாநிலத்திலியே இங்க தான்
சிறந்த பீச் பை.
175
00:12:55,984 --> 00:12:57,694
கேள்விப்பட்டேன்.
176
00:12:57,694 --> 00:12:59,696
எனக்கு எதுவும் வேண்டாம், நன்றி.
177
00:13:00,739 --> 00:13:02,908
டீல் சொல்வது சரியில்லையென்றால்
178
00:13:02,908 --> 00:13:05,827
யாரு எல்லாரையும் வெட்டி
சாய்க்கிறாங்கன்னு நினைக்கிற?
179
00:13:05,911 --> 00:13:09,164
- என் கிட்ட ஏன் சொல்லற?
- இரண்டாவது கேள்வி முதல்ல.
180
00:13:12,918 --> 00:13:15,212
இங்க உன்னை மட்டும்தான் நம்ப முடியும்.
181
00:13:15,212 --> 00:13:18,215
அது என்னவோ சரி. ஏன் அப்படி சொல்ற?
182
00:13:18,215 --> 00:13:22,552
மோரிசன், க்ளைனர், ஸ்டீவன்சன்
திகிலூட்டும் விதத்தில் கொல்லப்பட்டாங்க.
183
00:13:22,636 --> 00:13:26,640
யாரோ செய்தி அனுப்பறாங்க.
காரியத்த கெடுத்தா இதான் ஆகும்னு.
184
00:13:26,640 --> 00:13:28,934
ராஸ்கோவயும் கொல்ல முயற்சித்தாங்க.
185
00:13:28,934 --> 00:13:33,104
யாரை துரத்தல தெரியுமா? உன்னை மட்டுமே.
186
00:13:33,188 --> 00:13:35,148
அப்படின்னா நீ சம்பந்தபடல.
187
00:13:36,233 --> 00:13:37,817
ஆனா நீ இருக்கலாம்.
188
00:13:37,901 --> 00:13:41,071
இதெல்லாம், நீ வந்ததும்தான் ஆரம்பித்தில்ல?
189
00:13:41,071 --> 00:13:42,906
நாம் ஏன் உன்னை நம்பணும்?
190
00:13:42,906 --> 00:13:45,367
அது முதல் கேள்விக்கு கொண்டு போகுது.
191
00:13:45,367 --> 00:13:49,829
யார் எல்லாரையும் கொல்றாங்க? நான் க்ளைனர்
கொலை போது மெம்ஃபிஸ்ல இருந்தேன்,
192
00:13:49,913 --> 00:13:53,458
ஸ்டீவன்சன் கொலை போது நியூ யார்க்ல,
ராஸ்கோவை துரத்துகையில் அலபாமால,
193
00:13:53,542 --> 00:13:55,669
ஜாப்லிங், அண்ணன்,
செத்தப்ப ஃப்ளாரிடால.
194
00:13:55,669 --> 00:13:58,380
பஸ் கம்பெனியும் எஃப்ஏஏ பதிவுகளும்
உறுதி செஞ்சுது.
195
00:13:58,380 --> 00:14:01,299
என் இருப்புகள் பொய் சொல்லல.
நீயே கேட்டு தெரிஞ்சுக்க.
196
00:14:03,009 --> 00:14:06,721
செஞ்சுட்டேன். வெளி ஆளுங்க மேல
எப்பவுமே கண் வெப்பேன்.
197
00:14:07,764 --> 00:14:08,640
அப்படியா?
198
00:14:09,933 --> 00:14:13,311
நான் மட்டும்தான் இங்க வெளி ஆள்
இல்லன்னு நமக்கு தெரியும்.
199
00:14:16,606 --> 00:14:18,608
உன் நண்பன் ஃபின்லி பத்தி பேசற.
200
00:14:19,234 --> 00:14:20,777
அவன் என் நண்பன் இல்ல.
201
00:14:21,778 --> 00:14:24,489
ஜோவை கொன்னவனை கண்டு பிடிக்க
அவன உபயோகிக்கறேன்.
202
00:14:25,073 --> 00:14:28,952
ஆனா நான் கெட்ட போலீஸை பத்தி
யோசிக்க ஆரம்பிச்சேன்.
203
00:14:28,952 --> 00:14:32,872
நீ நல்லவன். கொலைகள் ஆரம்பிச்ச
பின்தான் டீல் தலைவன் ஆனான்.
204
00:14:32,956 --> 00:14:34,499
பாக்கி ஃபின்லி ஒண்ணுதான்.
205
00:14:34,583 --> 00:14:37,419
இந்த கொலைகள் நடக்கையில்
அவன் மார்க்ரேவ்ல இருந்தான்.
206
00:14:37,419 --> 00:14:41,172
ஒவ்வொரு முறை நான் ஊருக்கு போய்,
அவன் தனியா இருந்தா, யாரோ சாகறாங்க.
207
00:14:43,717 --> 00:14:45,343
என்ன சொல்ற பேக்கர்.
208
00:14:45,427 --> 00:14:49,431
ஸ்டேஷனுக்குள்ள வந்ததுமே உங்க ரெண்டு
பேருக்குமுள்ள பகை தெரிஞ்சுது.
209
00:14:49,431 --> 00:14:52,100
ஃபின்லிகிட்ட எதோ சரியில்லை.
நீ அதை உணர்ந்த.
210
00:14:55,270 --> 00:14:56,646
ரொம்ப சரி.
211
00:14:57,731 --> 00:15:01,776
ஒரு கொண்டு போகும் பார்சல்,
ஒரு துண்டு தேவாமிர்தம்.
212
00:15:02,861 --> 00:15:06,197
- வேற எதாவது வேணும்னா சொல்.
- நன்றி.
213
00:15:07,157 --> 00:15:09,826
ஃபின்லிதான் இதை செய்யறான்.
நான் நிரூபிக்கறேன்.
214
00:15:09,826 --> 00:15:13,788
யோசிச்சு பார். ஹப்பிளோட ஃபோன் எண்ணை என்
அண்ணன் ஷுல கண்டுபிடிச்சான்,
215
00:15:13,872 --> 00:15:16,499
அப்புறம் ஹப்பிள் பயந்து
கொலைக்கு ஒத்துக்கறானா?
216
00:15:16,583 --> 00:15:18,251
அபத்தமா தோணுது.
217
00:15:20,128 --> 00:15:24,007
ஜோவை கொன்னதுக்கு ஹப்பிள் மேல பழி
போட ஃபின்லிக்கு காரணம் இருக்கணும்.
218
00:15:24,007 --> 00:15:26,593
இன்னிக்கு ஹப்பிள் வீட்டுக்குள்ள போக போறேன்
219
00:15:27,677 --> 00:15:30,305
எல்லாத்தையும் புரட்டி பார்க்கப் போறேன்
220
00:15:30,305 --> 00:15:34,184
ஹப்பிளையும் ஃபின்லியையும் இணைக்கிறது
என்னன்னு கண்டிபிடிக்கற வரை.
221
00:15:36,019 --> 00:15:37,020
நல்லது.
222
00:15:38,313 --> 00:15:41,816
எதாவது கிடைச்சுதுன்னா நேரா
எங்கிட்ட கொண்டு வா.
223
00:15:41,900 --> 00:15:43,360
அதே மாதிரி நீயும்.
224
00:15:44,027 --> 00:15:45,403
எங்க இருப்பேன்னு தெரியும்.
225
00:15:46,738 --> 00:15:47,864
கண்டிப்பா.
226
00:16:30,782 --> 00:16:31,783
வேட்டைக்கு போறயா?
227
00:16:32,659 --> 00:16:34,869
- ஆமா.
- வேற எதாவது வேணுமா?
228
00:16:34,953 --> 00:16:38,581
- மான் சத்தமிடும் சாதனங்கள் இன்று வருது.
- மான் வேட்டை இல்ல.
229
00:16:40,250 --> 00:16:42,168
அந்த ப்ளாக்ஜாக்ல ஒண்ணு குடு.
230
00:17:45,523 --> 00:17:47,108
{\an8}கண்காணிப்புகளும் எச்சரிக்கைகளும்
கடும் புயல் கண்காணிப்பு
231
00:17:47,192 --> 00:17:48,735
{\an8}...அட்லான்டிக் புயல் காலம்.
232
00:17:48,735 --> 00:17:52,030
{\an8}இந்த வருடம் இதுவரை அமைதியா இருந்தாலும்,
233
00:17:52,030 --> 00:17:54,115
அந்த நிலை மாறலாம்.
234
00:17:54,199 --> 00:17:58,161
ஹரிகேன் ஹன்டர் விமானங்கள் இரண்டு
தனி வேலைகளில் பயணிக்கின்றன...
235
00:18:43,915 --> 00:18:48,461
{\an8}டூபலோ, மிசிசிப்பி
236
00:19:36,593 --> 00:19:40,346
திரு மற்றும் திருமதி ஸ்டீவன்சன்,
நான் ஆஸ்கர் ஃபின்லி.
237
00:19:41,514 --> 00:19:43,016
உங்க மகனோட வேலை செய்தேன்.
238
00:20:35,735 --> 00:20:40,239
திடீர் வெள்ள அறிவிப்பு லக்ரேஞ்ச்,
கேரல்டன், மான்செஸ்டர், மார்க்ரேவ்,
239
00:20:40,323 --> 00:20:44,285
பீச்ட்ரீ நகரம், வுட்லண்ட், க்ரீன்வில்
மற்றும் செபுலனுக்கு இருக்கு.
240
00:20:44,369 --> 00:20:46,829
க்ரேடர் மேகன் இன்னும்
எச்சரிக்கையில் உள்ளது,
241
00:20:46,913 --> 00:20:51,459
ஆனால் அது மழை ஒரு மணிக்கு மூன்று இன்ச்
என்ற கணக்கில் பெய்வதால் மாறலாம்.
242
00:21:20,655 --> 00:21:22,198
...நகர் புறங்களில்.
243
00:21:22,198 --> 00:21:26,160
சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
வருவததாக அறிக்கைகள் வந்துள்ளன.
244
00:21:26,244 --> 00:21:29,038
இருட்டில் போகும் போது அதை
கவனத்தில் வைக்கவும்.
245
00:21:29,122 --> 00:21:34,002
இந்த அடித்துகொண்டு போகும் தண்ணீரில்
ஆழம் அறிவது கடினம்...
246
00:21:58,192 --> 00:22:03,031
வார்பர்டன் கௌன்டியிலிருந்து அடித்தளத்தில்
தேங்கி உள்ள நீரை வீடியோ அனுப்பியுள்ளார்.
247
00:22:03,031 --> 00:22:05,783
சம்ப் பம்பால் சமாளிக்க
முடியவில்லை என்கிறார்...
248
00:22:54,707 --> 00:22:56,501
அவனுக்கு என்ன வேணும்னு போய் பார்.
249
00:23:21,192 --> 00:23:24,278
உள்ளே இருங்கள். மின்னல் ஆபத்தானது.
250
00:23:24,362 --> 00:23:28,741
பாதுகாப்பான இடங்களானது வீடுகள், வேலை
செய்யும் இடம் மற்றும் வண்டிகள்,
251
00:23:28,825 --> 00:23:30,868
ஜன்னல் மூடப்பட்டு இருக்கும்வரை.
252
00:23:30,952 --> 00:23:33,496
வெளியில் மாட்டி கொண்டீர்களானால்,
253
00:23:33,496 --> 00:23:37,625
உயரமான இடங்களை தவிர்க்கவும்,
தனி மரத்தின் அடியில் நிற்காதீர்கள்...
254
00:23:57,228 --> 00:23:59,105
திடீர் வெள்ள எச்சரிக்கை
255
00:23:59,105 --> 00:24:02,275
லக்ரேஞ்ச், டக்ளஸ்வில்,
கேரல்டன், மான்செஸ்டர்,
256
00:24:02,275 --> 00:24:05,361
மார்க்ரேவ், பீச்ட்ரீ நகரம்,
வுட்லண்ட், ஃப்ராங்க்லின்,
257
00:24:05,361 --> 00:24:08,281
ஜங்க்ஷன் நகரம், யூனியன்,
வெஸ்டன், ஹாமில்டன்,
258
00:24:08,281 --> 00:24:12,535
ஆர்சர்ட் ஹில், க்ரீன்வில் மற்றும்
செபுலன், க்ரேடர் மேகனுக்கும் உள்ளது.
259
00:24:12,535 --> 00:24:16,455
இப்போ ஐ-75க்கு கிழக்கே உள்ள இடங்களை
இந்த பட்டியலில் சேர்க்கிறோம்.
260
00:28:00,846 --> 00:28:04,850
ஜாப்லிங்ஸ் கராஜ்
க்ரேயின் க்ளைனர் ஃபைல்
261
00:28:08,687 --> 00:28:13,234
{\an8}அட்லான்டா, ஜார்ஜியா
262
00:28:21,867 --> 00:28:22,910
ரீச்சர்.
263
00:28:22,910 --> 00:28:24,495
புரிந்துகொண்டேன்.
264
00:28:24,495 --> 00:28:27,248
எப்படி பணத்தை
தயாரிக்கிறாங்கன்னு புரிஞ்சது.
265
00:28:27,248 --> 00:28:28,999
என்ன? எப்படி?
266
00:28:29,083 --> 00:28:32,294
கொலம்பியா பேராசிரியை, எல்லாமே
பேப்பரை பொறுத்ததுன்னார்.
267
00:28:32,378 --> 00:28:35,798
ஜோக்கு அவங்களுக்கு எப்படி பேப்பர்
கிடைத்ததுன்னு தெரியல.
268
00:28:35,798 --> 00:28:39,051
நான் நிறைய பயணம் செய்து,
நிறைய வித பணம் கையாண்டிருக்கேன்.
269
00:28:39,135 --> 00:28:41,887
யுஎஸ் நோட்டுகளில் என்ன விசேஷம் தெரியுமா?
270
00:28:41,971 --> 00:28:43,764
எல்லா நோட்டும் ஒரே அளவு.
271
00:28:43,848 --> 00:28:47,601
டாலர் நோட்டில் உள்ள இங்கை ப்ளீச்
செய்துவிட்டால், வேணுங்கற பணமா
272
00:28:47,685 --> 00:28:49,311
அதில் அச்சடிக்கலாம்.
273
00:28:49,395 --> 00:28:51,355
ஹப்பிள் சிறப்பா கரன்சி கையாளறவன்.
274
00:28:51,439 --> 00:28:54,191
அவன் க்ளைனருக்கு $1 நோட்டு
சப்ளை ஏற்பாடு செய்தான்
275
00:28:54,275 --> 00:28:57,111
நோட்டு புழங்கும்
கள்ள தொழில்கள் கிட்டேயிருந்து.
276
00:28:57,111 --> 00:29:01,657
ஊதியக்கடன்கள், காசினோ, குடியேறிய
சுற்றங்களின் தேசிய வர்த்தக சங்கிலிகள்.
277
00:29:01,657 --> 00:29:05,453
மார்க்ரேவிற்கு எல்லா இடங்களிலிருந்தும்
ஓரு டாலர் நோட் வரும்.
278
00:29:05,453 --> 00:29:09,582
ஒரு டாலர் காணாம போனா கூட உன் கைய
வெட்டுவேன், சவுதி அரேபியாவ போல.
279
00:29:09,582 --> 00:29:12,918
க்ளைனர் பேப்பர நாசம் செய்யாம
இங்க் எடுக்க ஏதாவது ப்ளீச்
280
00:29:13,002 --> 00:29:14,587
உண்டாக்கியிருக்கணும்.
281
00:29:14,587 --> 00:29:18,090
இந்த செயல்முறையிலிருந்து வந்த
கழிவு செஸ்டர அழிச்சுது.
282
00:29:18,174 --> 00:29:20,259
இபிஏ ஏஜென்ட கொன்னது இப்போ புரியுது.
283
00:29:20,259 --> 00:29:23,512
ஒரு கள்ள நோட் அடிக்கிற இயக்கம் காக்க
இத நியாயப்படுத்தலாம்.
284
00:29:23,596 --> 00:29:26,474
க்ளைனர் இன்னொரு விதமா
காத்தான். மாட்டு தீவனம்.
285
00:29:27,641 --> 00:29:29,143
கிண்டல் செய்யற.
286
00:29:29,143 --> 00:29:32,396
எண்ணை கசிவை துடைக்க பூனை கூளத்தை
உபயோகிப்பது ஏன் தெரியுமா?
287
00:29:32,480 --> 00:29:34,398
அதில் டயடோமசியஸ் எர்த் இருக்கு.
288
00:29:34,482 --> 00:29:39,195
அது உறிந்து உறைய வைக்கும் பொருள்,
பூச்சிகொல்லிலேர்ந்து பூல் ஃபில்டர் வரை...
289
00:29:39,195 --> 00:29:41,739
- மாட்டு தீவனம். -அதேதான்.
290
00:29:41,739 --> 00:29:45,117
எக்கச்சக்கமா டிஇ வாங்கினா,
எல்லாருக்கும் சந்தேகம் வரும்.
291
00:29:45,201 --> 00:29:48,245
மாட்டுக்கு தீவனம் வாங்கினா
லட்சியம் செய்யமாட்டாங்க.
292
00:29:48,329 --> 00:29:52,291
ரசாயன கழிவை சரியா சுத்தம் செய்ய
அதை அரைக்கணும்.
293
00:29:52,291 --> 00:29:55,294
ஆற்றில போட்டது கிட்டதட்ட மாட்ட வைத்ததால...
294
00:29:55,294 --> 00:29:58,589
பொய்யை விற்க போதுமான மாடுகள்
உள்ள புல்வெளி கீழ் புதைப்பது,
295
00:29:58,589 --> 00:30:00,966
ஆனா மாநில ஆய்வாளர்களை
அது ஈர்க்கக்கூடாது.
296
00:30:01,050 --> 00:30:04,762
வண்டி வண்டியா வாங்கினான்,
அவனோட இயக்கம் பிரமாண்டமா இருக்கணும்.
297
00:30:04,762 --> 00:30:09,642
பணம் அல்லது மிரட்டலால கட்டுப்படுத்தி
டஜன் கணக்குல ஆட்கள் வெச்சிருப்பான்.
298
00:30:09,642 --> 00:30:12,811
நோட்டு கழுவினதும், காய வெச்சு,
அச்சடிப்பாங்க.
299
00:30:12,895 --> 00:30:15,231
ஒரு பக்கம், அப்புறம் மறு பக்கம்.
300
00:30:15,940 --> 00:30:18,984
1990க்கு முன் இருந்த நூறுகளின்
பழைய பதிவ உபயோகிச்சாங்க,
301
00:30:19,068 --> 00:30:22,947
இந்த காலத்தில் இருக்கும் காந்த பட்டை
செய்யாமல் இருப்பதற்காக.
302
00:30:22,947 --> 00:30:27,618
புது நூறுகள பழசா ஆக்கறாங்க, யாரும் அத
சந்தேகபடாம இருப்பதற்காக.
303
00:30:27,618 --> 00:30:30,496
ஃப்ளாரிடாவிற்கு பின்
அது ட்ரக்கில் போகிறது,
304
00:30:30,496 --> 00:30:33,415
தன் கடைசி பயணமான வெனசுயேலா போவதற்காக.
305
00:30:33,499 --> 00:30:37,503
இது வெறும் கோட்பாடுதான்.
ஃபெட்ஸ் கிட்ட எடுத்து போக, ஆதாரம் தேவை.
306
00:30:37,503 --> 00:30:40,548
உன் பாக்கெட்டில் இருக்கும் சில்லறை
நூறுகள் போதாது.
307
00:30:40,548 --> 00:30:44,718
களைனர் நிறுவனத்தோட இணைக்க
அந்த பொய் பணம் தேவை.
308
00:30:44,802 --> 00:30:48,055
ஜாப்லிங்ஸ் கராஜை ஜோ தன் பட்டியலில்
காரணமா வெச்சான்.
309
00:30:48,055 --> 00:30:50,849
அவன் வீட்டில் எங்கேயோ பணம் இருக்கணும்.
310
00:30:50,933 --> 00:30:54,144
ஜாப்லிங் மனைவி கராஜ காண்பிச்சா.
பெட்டிகளில் எதுவும் இல்ல.
311
00:30:54,228 --> 00:30:57,773
- நான் திரும்ப போய், அத பிரிச்சு தேடறேன்.
- ஃபின்லிய கூட்டி போ.
312
00:30:57,773 --> 00:31:00,192
செய்யறேன். உன் தரப்பில எப்படி இருக்கு?
313
00:31:00,276 --> 00:31:02,486
கொஞ்சம் பதட்டம் இருந்தது.
314
00:31:02,570 --> 00:31:03,946
- நல்லா இருக்கியா? -ஆம்.
315
00:31:03,946 --> 00:31:07,157
ஆம் இப்போ. பிக்கார்ட் வீட்டில் இருக்கோம்.
316
00:31:07,241 --> 00:31:10,244
சார்லியும் பசங்களும் தூங்கறாங்க.
நான் முதல் காவல்.
317
00:31:10,244 --> 00:31:13,414
பிக்கார்ட் எனக்கு பதிலா வர நேரம்.
318
00:31:13,414 --> 00:31:16,292
ஓய்வெடு. நான் ஃபின்லி கிட்ட சொல்லறேன்.
319
00:31:17,209 --> 00:31:18,460
முதலில் எனக்கு செய்தியா?
320
00:31:19,878 --> 00:31:21,046
ஆம்.
321
00:31:21,130 --> 00:31:23,340
நான் வந்து...
322
00:31:25,217 --> 00:31:26,969
நானும் பேச முடியாம ஏங்கறேன்.
323
00:31:28,512 --> 00:31:29,972
நல்லிரவு ராஸ்கோ.
324
00:31:33,601 --> 00:31:34,810
எல்லாம் சரியா?
325
00:31:36,437 --> 00:31:37,771
அதைவிட மேல்.
326
00:31:37,855 --> 00:31:41,066
ரீச்சர் எல்லாத்தையும்
பிட்டு பிட்டு வெச்சிட்டான்.
327
00:31:50,075 --> 00:31:51,160
ரீச்சர்.
328
00:31:51,160 --> 00:31:54,788
பீட் ஜாப்லிங் வீட்டுக்கு வா.
இதுக்கு முடிவு கட்ட போறோம்.
329
00:31:57,499 --> 00:31:58,917
ஒரு நிமிஷம் இரு.
330
00:32:03,881 --> 00:32:05,799
- பிரச்சினை.
- என்ன மாதிரி?
331
00:32:05,883 --> 00:32:06,884
மூன்று அடியாட்கள்.
332
00:32:06,884 --> 00:32:10,638
ஒருத்தன் மோட்டல் ஆஃபிஸை நோக்கி,
என் ரூமை கண்டுபிடிக்க போல.
333
00:32:10,638 --> 00:32:12,765
அது நேரம் ஆகாது. மத்த இருவர்?
334
00:32:13,807 --> 00:32:17,519
வாசல்ல அச்சுறுத்தலா நிக்கறாங்க.
எப்படி என்னை கண்டு பிடிச்சாங்க?
335
00:32:17,603 --> 00:32:20,773
டீல்க்கு உன்னை பிடிக்காது ஆனா
உன்னை பத்தி தெரியும்.
336
00:32:20,773 --> 00:32:23,400
இறந்த போலீஸின் பெற்றோரை
நேரில சந்திக்கிறவன்.
337
00:32:23,484 --> 00:32:25,319
நான் பொய் பெயரில் பதிவு செஞ்சேன்.
338
00:32:25,319 --> 00:32:28,072
காரை வாசலில் நிறுத்தலன்னு சொல்லு.
339
00:32:32,743 --> 00:32:33,702
நிச்சயமா இல்லை.
340
00:32:33,786 --> 00:32:35,204
சரி. கவனமா கேள்.
341
00:32:35,204 --> 00:32:38,082
"உன்னை எடுக்க போறாங்க" ன்னு
சொல்லப் போறையா?
342
00:32:38,082 --> 00:32:41,835
நான் சொன்னத செய்யாட்டா அவங்க உன்ன
கொல்வாங்கன்னு சொல்லும் நேரம்.
343
00:32:41,919 --> 00:32:43,379
துப்பாக்கி இருக்கா?
344
00:32:46,340 --> 00:32:49,885
ஆம், என் பேக்-அப் கன்.
.32 ஸ்நப் நோஸ்.
345
00:32:49,885 --> 00:32:52,388
கத்துவத விட கொஞ்சம் மேல். ரொம்ப கொஞ்சம்.
346
00:32:52,388 --> 00:32:54,098
சரி, என்ன பார்க்கறனு சொல்லு.
347
00:32:57,309 --> 00:33:00,020
பிரச்சினையில் இருக்கேன்.
வாசல் வழி போக முடியாது.
348
00:33:00,104 --> 00:33:02,690
உன் வழிய உண்டாக்கு.
டிவி சத்தத்தை பெரிசாக்கு.
349
00:33:04,817 --> 00:33:06,318
{\an8}காவென்டிஷ், துப்பாக்கிய கீழ போடு.
350
00:33:07,653 --> 00:33:10,989
- கடைசி யுனிட் எவ்வளவு பக்கத்தில் இருக்கு?
- ஒரு ரூம் தள்ளி.
351
00:33:11,073 --> 00:33:13,784
சரி. மோட்டல் எப்படி
கட்டியிருக்காங்கன்னு சொல்.
352
00:33:13,784 --> 00:33:18,414
மலிவு வாடகை. ஒரு அடுக்கு.
60, 70களில் கட்டினது.
353
00:33:18,414 --> 00:33:21,667
மட்டமான ஷீட் ராக். 24 அங்குல
இடைவெளில ஸ்டட்கள்.
354
00:33:21,667 --> 00:33:24,086
- சின்ன கத்தியிருக்கா?
- நான் என்ன சாரணனா?
355
00:33:24,086 --> 00:33:27,172
சரி. பீரோவிலிருந்து அந்த கம்பிய எடு.
356
00:33:27,256 --> 00:33:28,924
அவன் சட்டத்தின் பக்கமிருப்பவன்.
357
00:33:28,924 --> 00:33:31,385
இந்த ஏமாற்றுகாரன் கோல்பியை
ஆக்ரமிக்க இருந்தான்.
358
00:33:31,385 --> 00:33:34,471
-எல்லா கொலைகளையும் ஒப்பு கொண்டான்.
- நாங்க ஒட்டு கேட்டோம்.
359
00:33:38,475 --> 00:33:39,935
இதை வேகமா செய்யணும்.
360
00:33:39,935 --> 00:33:42,896
- கூல் எயிட் விளம்பரம் பார்த்திருக்கே?
- கிண்டலா.
361
00:33:45,524 --> 00:33:46,817
நன்றி.
362
00:33:46,817 --> 00:33:48,610
இந்தாங்க, டாக்.
363
00:33:48,694 --> 00:33:49,987
நான் அவங்கள கட்டும் போது.
364
00:33:49,987 --> 00:33:54,074
அவங்க ஏதாவது செய்வாங்கன்னு
நம்பறேன், அதுவும் இவன்.
365
00:33:57,035 --> 00:33:59,288
- என்ன இழவு?
- நான் போலீஸ். 911 கூப்பிடு.
366
00:34:10,591 --> 00:34:13,510
நினைவிருக்கட்டும், பசங்களா,
நான் இன்னும் சிறையில் இல்லை.
367
00:34:13,594 --> 00:34:16,513
வாயை மூடு. வாய் அசைக்கிறதும்
ஒரு அசைவுதான்.
368
00:34:38,410 --> 00:34:40,204
டயர்கள சுட்டான்! ஓடு!
369
00:34:47,127 --> 00:34:48,462
உதவிக்கு நன்றி.
370
00:34:48,462 --> 00:34:51,757
எப்பவும் ஃபின்லி.
ஜாப்லிங் வீட்டுல சந்திப்போம்.
371
00:34:51,757 --> 00:34:53,509
காலைக்குள் வறேன்.
372
00:35:00,724 --> 00:35:01,809
அப்படியா.
373
00:35:03,143 --> 00:35:04,269
நன்றி சீஃப்.
374
00:35:05,729 --> 00:35:09,107
எனக்கு தெரிஞ்சவரை, அது எரியும்போது
யாரும் உள்ள இல்ல.
375
00:35:09,191 --> 00:35:11,568
ஜூடி இரண்டு நாள் முன் ஊரை விட்டு போனாளாம்.
376
00:35:11,652 --> 00:35:13,362
சீஃப் தீ வைப்புன்னு நினைக்கிறார்.
377
00:35:13,362 --> 00:35:16,573
என்னை அடிக்க வந்த
நேரத்தில் ஆரம்பித்திருக்கலாம்.
378
00:35:16,657 --> 00:35:18,033
தடயங்கள சுத்தம் செய்யறாங்க.
379
00:35:18,033 --> 00:35:20,410
மாட்ட வைக்கிற எதுவும் இப்போ போச்சு.
380
00:35:20,494 --> 00:35:24,164
நேற்று இரவு ஹப்பிள் வீட்டில்
நடந்ததுக்கு பின் கலங்கிட்டாங்க.
381
00:35:24,248 --> 00:35:25,415
என்ன ஆச்சு?
382
00:35:25,499 --> 00:35:28,001
டாசன் க்ளைனர் மற்றும் நாலு பேரை கொன்னேன்.
383
00:35:29,586 --> 00:35:32,089
சரி. இப்போ நமக்கு எதுவும் கிடைக்கல.
384
00:35:32,089 --> 00:35:35,551
நல்ல வேளை திருமதி ஜாப்லிங் இங்க இருக்கல.
385
00:35:36,093 --> 00:35:37,678
அவள் திருமதி ஜாப்லிங் இல்ல.
386
00:35:38,929 --> 00:35:41,181
ஜூடி பீட்டின் கடைசி பெயரை எடுத்துக்கல.
387
00:35:41,932 --> 00:35:45,769
ஜோ எப்படி ஜாப்லிங்ஸ் கராஜ்
எழுதினான் பார். எஸ்க்கு பின் அபோஸ்ட்ரோபி.
388
00:35:45,853 --> 00:35:47,271
பன்மை உடைமை.
389
00:35:47,271 --> 00:35:50,232
ஜோக்கு தேவையானது
இரண்டு ஜாப்லிங் உள்ள வீடு.
390
00:35:50,232 --> 00:35:51,483
அவன் பெற்றோர் வீடு.
391
00:35:51,567 --> 00:35:54,736
- நான் சொன்னேன்...
- விவரங்கள் முக்கியம். வா, போலாம்.
392
00:35:56,697 --> 00:35:59,950
பீட் இங்க ஓளிச்சு வெச்சான்னு
நினைச்சா, நீங்க தேடலாம்.
393
00:35:59,950 --> 00:36:03,996
- எடுத்தத எடுத்த இடத்தில் வையுங்க.
- செய்வோம் மேடம். நன்றி.
394
00:36:07,416 --> 00:36:10,919
போன தடவை வந்த போது என் மகன்
இறந்திட்டான்னு உங்களுக்கு தெரியுமா?
395
00:36:11,003 --> 00:36:12,129
ஆம், மேடம்.
396
00:36:13,130 --> 00:36:14,214
எனக்கு தெரியும்.
397
00:36:15,257 --> 00:36:16,800
ஏன் எங்ககிட்ட சொல்லல?
398
00:36:18,719 --> 00:36:20,387
நீங்க நல்லவங்களா தெரிஞ்சீங்க.
399
00:36:21,763 --> 00:36:23,181
எனக்கு மனசு வரல்ல.
400
00:36:33,609 --> 00:36:36,737
இந்த குழப்பத்தில நாம் எப்படி
எதை கண்டுபிடிப்போம்?
401
00:36:36,737 --> 00:36:39,823
அதான் ஜாப்லிங் இங்க ஒளிக்க காரணம்.
402
00:36:39,907 --> 00:36:41,283
குப்பையோட கலந்திட்டா,
403
00:36:41,283 --> 00:36:43,827
எதுவும் கண்டுபிடிக்க முடியாது.
404
00:36:45,621 --> 00:36:47,831
இப்படித்தான் துப்பாக்கிகளை ஒளிப்பேன்.
405
00:36:47,915 --> 00:36:50,167
பெற்றோருக்கு பசங்க செய்வது தெரியாது.
406
00:36:51,543 --> 00:36:53,712
நாம என்ன தேடறோம்னு நமக்கு தெரியும்.
407
00:36:53,712 --> 00:36:56,757
அவன் வீட்டில் ராஸ்கோவும் நானும்
பார்த்த பெட்டிகள்.
408
00:36:59,134 --> 00:37:00,969
{\an8}க்ளைனர்
இண்டஸ்ட்ரீஸ்
409
00:37:03,305 --> 00:37:04,348
{\an8}இது மாதிரியா?
410
00:37:21,073 --> 00:37:24,952
பிக்கார்டை கூப்பிடு. நாம் ஜாகுவார்
விட்ட பண்ணையில் சந்திக்க சொல்லு.
411
00:37:24,952 --> 00:37:29,331
க்ளைனர் ஃபௌண்டேஷன் மற்றும்
டீலை பிடிக்க தேவையான எல்லாம் இதுதான்.
412
00:37:29,331 --> 00:37:31,959
இத பென்ட்லியில் ஏத்திட்டு
உன்னை சந்திக்கிறேன்.
413
00:37:31,959 --> 00:37:33,669
பிடிச்சிட்டோம் இல்ல?
414
00:37:34,503 --> 00:37:35,712
நிச்சயமா.
415
00:37:42,594 --> 00:37:44,429
மார்க்ரேவ்
10 மைல்கள்
416
00:37:46,056 --> 00:37:47,015
நீக்லி.
417
00:37:47,933 --> 00:37:51,436
இபிஏ ஏஜென்ட் வில்க்ஸை கொன்னவன்
பத்தி தகவல் கிடைச்சது.
418
00:37:51,520 --> 00:37:52,354
சொல்லு.
419
00:37:52,354 --> 00:37:54,690
எஃப்பிஐ ஆளு நிட்மோவோட வழக்கு இது.
420
00:37:54,690 --> 00:37:57,484
- கிட்டதட்ட பார்க்காம மூடினவனா?
- ஆம்.
421
00:37:57,484 --> 00:37:59,820
தப்பா போன திருடு என்றான்.
422
00:37:59,820 --> 00:38:01,363
நிட்மோ பத்தி நோண்டினேன்.
423
00:38:01,363 --> 00:38:05,784
-விலை உயர்ந்த வீடு, கார் வெச்சிருந்தான்.
- மோரிசன், ஜாப்லிங் மாதிரி.
424
00:38:05,784 --> 00:38:07,953
வருமானத்தை மீறிய வசதி.
425
00:38:07,953 --> 00:38:10,247
அவனோட ஐடி பாட்ஜ் நகல் கிடைச்சது.
426
00:38:10,247 --> 00:38:14,167
6'3', 220 பவுண்ட்,
பொன்னிற முடி, நீல கண்கள்.
427
00:38:14,251 --> 00:38:16,586
அவனை "வைகிங்" ன்னு கூப்பிடறது புரியுது.
428
00:38:17,337 --> 00:38:20,424
இபிஏ ஏஜென்டை கொன்னவனோட புனை பெயர்.
429
00:38:20,424 --> 00:38:21,842
இது முன்னேற்றம்,
430
00:38:21,842 --> 00:38:24,428
ஆனா நிட்மோ பத்தி கடந்த காலத்தில் பேசற.
431
00:38:24,428 --> 00:38:26,888
ஏன்னா மூணு வருஷம் முன் கான்சரில் இறந்தான்.
432
00:38:26,972 --> 00:38:30,517
ஆனா அவன் பழைய சகா இன்னும் எஃப்பிஐல
இருக்கான். அவனை கேட்கலாம்.
433
00:38:30,517 --> 00:38:33,270
அவன் அட்லான்டாவின் ஆஃபிசில்
இருக்கான். பெயர்...
434
00:38:34,563 --> 00:38:35,439
பிக்கார்ட்.
435
00:38:37,065 --> 00:38:39,943
- எப்படி அது தெரியும்?
- அதிர்ஷ்ட ஊகம்.
436
00:38:42,863 --> 00:38:44,072
போகணும், நீக்லி.
437
00:40:31,513 --> 00:40:33,515
வசனங்கள் மொழிபெயர்ப்பு
சோபனா சுந்தர்
438
00:40:33,515 --> 00:40:35,600
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்