1 00:00:43,500 --> 00:00:46,416 நீங்க என் வாசல் கதவை உடைச்சு வந்தீங்களா. 2 00:00:46,500 --> 00:00:49,041 புரியுது, உங்க புத்தி பேதலிச்சுடுச்சு. 3 00:00:49,166 --> 00:00:51,000 பில்லி, எப்படி இருக்க பாரு. 4 00:00:51,083 --> 00:00:52,625 -ஒரு நிமிஷம்... -என்னப்பா. 5 00:00:52,708 --> 00:00:53,916 இரவு, போதை வேற. 6 00:00:54,000 --> 00:00:57,416 முட்டாள்தனமா ஏதும் செய்யாம, வீட்டுல சகோதரனுக்கு காத்திருங்க. 7 00:00:57,500 --> 00:00:59,458 -ரெட், பெர்ரி எங்கே? -போதும்! 8 00:00:59,541 --> 00:01:02,291 வீடுசென்று அமைதி ஆகவும். மன்னிப்பு கூட கேட்கலை. 9 00:01:02,375 --> 00:01:04,333 -சாரி, திருமதி ஆபட். -நன்றி, பில்லி. 10 00:01:04,375 --> 00:01:06,500 லூக், உன் சகோதரனை பின்பற்று, 11 00:01:06,625 --> 00:01:09,541 பின் பேசுவோம், சரியா? குட் நைட், பார்த்துக்கோங்க. 12 00:01:25,708 --> 00:01:28,041 சரி, உங்கப்பா எங்கே? 13 00:01:42,958 --> 00:01:47,208 அவுட்டர் ரேஞ்ச் 14 00:03:35,416 --> 00:03:36,916 சட்டை போட்டு வரேன். 15 00:04:00,666 --> 00:04:02,208 காலில் என்ன ஆச்சு? 16 00:04:02,291 --> 00:04:03,708 அதை பத்தி கவலைப்படாத. 17 00:04:03,791 --> 00:04:05,625 -ரத்தம் வருது. -நான் நலம். 18 00:04:07,333 --> 00:04:09,291 சரி, அப்பா, சடலம் எங்கே? 19 00:04:09,375 --> 00:04:11,958 சொல்லாதீங்க. எனக்கு தெரிய வேண்டாம். 20 00:04:12,041 --> 00:04:14,250 எல்லாம் சொதப்பினா, நானும் மாட்டுவேன். 21 00:04:14,333 --> 00:04:16,708 அப்படி ஆனா நான் பழி ஏற்கிறேன். 22 00:04:16,750 --> 00:04:18,125 பெர்ரி, நிறுத்து. 23 00:04:18,250 --> 00:04:19,750 எல்லாரும் மாட்டி இருக்கோம். 24 00:04:24,208 --> 00:04:25,583 சரி, ராயல், 25 00:04:26,708 --> 00:04:30,166 எங்களுக்கு என்ன தெரியணும்னு நினைக்கறியோ, அதை சொல்லு. 26 00:04:33,666 --> 00:04:37,333 போயிடுச்சு. சடலம் போயாச்சு, அவ்வளவு தெரிஞ்சா போதும். 27 00:04:37,416 --> 00:04:39,208 -நம் நிலத்திலா? -போயாச்சு. 28 00:04:42,125 --> 00:04:43,166 அடுத்து என்ன? 29 00:04:43,250 --> 00:04:45,208 -வேலை, அதான் அடுத்து. -அப்பா... 30 00:04:45,291 --> 00:04:48,375 -எப்பவும் போல். -எதுவும் நடக்காதது போல் இருக்கவா? 31 00:04:48,458 --> 00:04:50,708 வேற ஏதாவது வழி இருக்கா? 32 00:04:50,791 --> 00:04:52,916 அந்த பொண்ணு நம்ம நிலத்துல இருக்கா. 33 00:04:53,000 --> 00:04:55,166 எந்த பொண்ணு? எந்த பொண்ணு, ராயல்? 34 00:04:55,250 --> 00:04:58,041 மேற்கு புல்வெளியில் ஒரு பொண்ணு முகாமிட்டிருக்கா. 35 00:04:58,125 --> 00:04:59,583 -எப்பலேர்ந்து? -சமீபமா. 36 00:04:59,666 --> 00:05:02,333 -போன வாரம். -கடவுளே! அவ பார்த்திருந்தா... 37 00:05:02,416 --> 00:05:03,916 -பார்க்கலை. -எப்படி தெரியும்? 38 00:05:04,000 --> 00:05:05,458 நீங்க என்னை நம்பணும். 39 00:05:05,541 --> 00:05:07,583 -இப்ப அங்க இருக்காளா? -பார்க்கறேன். 40 00:05:07,666 --> 00:05:09,833 உடனடியா அவளை வெளியேற்று. 41 00:05:09,916 --> 00:05:13,458 இருங்க, அவ ஏதாவது பார்த்தாளானு தெரியணும், அவளிடம் பேசணும்... 42 00:05:13,541 --> 00:05:15,541 நான் அவளை பாத்துக்கறேன். 43 00:05:15,625 --> 00:05:17,125 ஆம், நீ தான் பாத்துக்கணும். 44 00:05:17,208 --> 00:05:18,625 வேற ஏதாவது தடயம்? 45 00:05:18,708 --> 00:05:20,583 -எது போல? -உன் சட்டை. 46 00:05:20,666 --> 00:05:23,166 என் சட்டை எங்க தெரியலனு சொன்னேன். 47 00:05:23,250 --> 00:05:25,333 -உறுதியா? -அப்படின்னா? 48 00:05:25,416 --> 00:05:26,916 தந்தையிடம் அப்படி பேசாதே. 49 00:05:27,000 --> 00:05:31,083 நாம் அனைவரும் முழுசா இதில் இறங்க, எல்லாம் எல்லாருக்கும் தெரியணும். 50 00:05:31,166 --> 00:05:32,875 என்ன பேசறீங்க? 51 00:05:35,291 --> 00:05:36,833 உங்க காலில் ரத்தம் வருது. 52 00:05:39,291 --> 00:05:42,583 -ஒண்ணும் இல்லை, கண்ணு. -அவர் காலில் என்ன ரத்தம்? 53 00:05:43,958 --> 00:05:46,000 ஏமி, ஒரு நிமிஷம் தரயா? 54 00:05:46,083 --> 00:05:47,125 பாரு, கண்ணு... 55 00:05:47,208 --> 00:05:49,875 ஸ்கூலுக்கு போகும் முன் நான் காலை உணவருந்தணும். 56 00:05:58,291 --> 00:05:59,375 கடவுளே. 57 00:06:02,666 --> 00:06:03,833 லூக்கா பில்லியா? 58 00:06:06,083 --> 00:06:07,041 உன்னை சுட்டது. 59 00:06:10,625 --> 00:06:11,583 லூக். 60 00:06:14,666 --> 00:06:16,750 ஆனா அவன் உன்னை பார்க்கலைனு சொல்ற? 61 00:06:16,833 --> 00:06:18,500 தெரியலை. என் அதிர்ஷ்டம். 62 00:06:19,541 --> 00:06:21,125 இருட்டில் ஒரு முறை சுட்டான். 63 00:06:27,541 --> 00:06:29,916 இதற்கு நமக்கு மன்னிப்பு உண்டா? 64 00:06:31,791 --> 00:06:33,375 புரிஞ்சுக்க பார்க்கிறேன். 65 00:06:39,375 --> 00:06:41,416 ஜாய்க்கு ஓட்டு போடு அமெலியா கவுன்ட்டி 66 00:06:41,500 --> 00:06:43,125 ரோஸ், கண்ணு, காலை உணவருந்து. 67 00:06:43,291 --> 00:06:44,916 யாரு அழைச்சுட்டே இருக்கறது? 68 00:06:45,000 --> 00:06:47,541 லூக் டில்லெர்சன், ட்ரெவர் கிடைச்சானானு கேக்க. 69 00:06:49,666 --> 00:06:51,458 என் எண்ணை தந்திருக்க கூடாது. 70 00:07:04,083 --> 00:07:05,125 அருமை, ஃப்ரெட்! 71 00:07:05,208 --> 00:07:06,416 க்ளீன் கட் முடி திருத்தம் 72 00:07:12,500 --> 00:07:14,041 அய்யோ, செம்ம சூடு. 73 00:07:28,833 --> 00:07:29,666 ஷெரிஃப் 74 00:07:29,750 --> 00:07:31,125 ஹேய், ரெட், நலமா? 75 00:07:31,208 --> 00:07:32,333 ஷெரிஃப் ஜாய். 76 00:07:38,166 --> 00:07:39,000 டி 77 00:07:39,500 --> 00:07:41,541 சே. இங்கே வா. 78 00:07:45,750 --> 00:07:46,833 இது பக்கிள். 79 00:07:47,000 --> 00:07:51,125 ட்ரெவருடையது. அவனை கடைசியா பார்த்த அன்று பாருக்கு பின் கிடைச்சுது. 80 00:07:51,208 --> 00:07:53,625 -சரி. அது எப்போ? -ஞாயிறு. 81 00:07:55,708 --> 00:07:57,583 இதை வெச்சு என்ன செய்யணும்? 82 00:07:57,666 --> 00:08:01,458 விசாரணை செய். பாருங்க, அதில் ரத்தம் இருக்கு. 83 00:08:01,625 --> 00:08:04,083 அது எது வேணா இருக்கலாம்ல. 84 00:08:04,166 --> 00:08:06,750 -ஒரு ஷெரிஃபா, என்னால்... -தாற்காலிக ஷெரிஃப். 85 00:08:07,291 --> 00:08:10,333 மன்னிக்கணும், பர்ட் இறந்தபின் அதானே உங்க பதவி? 86 00:08:10,791 --> 00:08:13,750 ஆம். என்னால் இதை ஆதாரமாக ஏற்க முடியாது, லூக். 87 00:08:13,833 --> 00:08:15,333 நீ தான் என்னிடம் கொடுத்த. 88 00:08:16,000 --> 00:08:17,916 நீ கவலையா இருக்கனு புரியுது, 89 00:08:18,000 --> 00:08:21,791 ஆனா ட்ரெவர் ஓரிரு நாள் காணாம போவது இது முதல் முறை இல்லையே? 90 00:08:22,458 --> 00:08:24,875 என்னை நம்பு, தேடுவோம். 91 00:08:30,791 --> 00:08:34,041 ஷெரிஃப் ஆக ட்ரூடி கோலுடன் போட்டியிடறீங்க போல. 92 00:08:34,750 --> 00:08:36,666 அவர் என்னுடன் போட்டியிடறார். 93 00:08:36,750 --> 00:08:38,833 அவருக்கு லான்டெரில் ரசிகர்களுண்டு. 94 00:08:39,250 --> 00:08:40,583 நல்ல போட்டியா இருக்கும். 95 00:08:42,208 --> 00:08:43,166 தேர்தல் எப்போ? 96 00:08:43,250 --> 00:08:44,416 28 நாட்கள் கழித்து. 97 00:08:50,125 --> 00:08:51,958 இந்தியன் ஷெரிஃபா இருந்ததில்லை. 98 00:08:52,041 --> 00:08:53,333 ஓரினச்சேர்க்கையாளும். 99 00:08:55,666 --> 00:08:59,833 நேரம் வந்துடுச்சு. எங்க உதவி தேவைப்பட்டா சொல்லுங்க. 100 00:09:01,041 --> 00:09:04,458 இந்த ட்ரெவர் விஷயத்துல தொந்தரவுக்கு மன்னிக்கவும். 101 00:09:05,083 --> 00:09:08,333 அவனை நினைச்சு கவலையா இருக்கு, அதான். 102 00:09:10,875 --> 00:09:12,041 ஒண்ணு சொல்றேன். 103 00:09:12,125 --> 00:09:16,291 இதை ஸ்டேஷனின் கவனத்திற்கு கொண்டு வரேன். இதை நான் எடுத்துட்டு போலாமா? 104 00:09:16,375 --> 00:09:18,291 நிச்சயமா. அது உங்களது. 105 00:09:36,208 --> 00:09:38,208 ஜாயை ஷெரிஃபாக தேர்ந்தெடுக்கவும் 106 00:09:49,458 --> 00:09:52,416 கம்யூனிட்டி பாங்க் 107 00:10:04,083 --> 00:10:07,416 பைசன் வாலி பாங்க் ஆஃப் வயோமிங் 108 00:10:20,125 --> 00:10:21,250 ஹை. 109 00:10:22,333 --> 00:10:23,375 ஹை. 110 00:10:23,958 --> 00:10:26,791 நாம் எங்கேயாவது தனியா பேச முடியுமா? 111 00:10:27,375 --> 00:10:30,375 தெரியல.எனக்கு ஒரு மணி நேரம் கழித்தே ஓய்வு. 112 00:10:31,458 --> 00:10:33,583 -சரி. -என்ன சரி? 113 00:10:35,041 --> 00:10:36,166 காத்திருக்கேன். 114 00:10:37,458 --> 00:10:39,000 இங்கே, வங்கியிலா? 115 00:10:39,083 --> 00:10:40,750 ஆம், எங்க வேண்ணாலும். 116 00:10:40,833 --> 00:10:43,166 தெருக்கு அந்த பக்க உணவகத்தில் சந்திப்போம். 117 00:10:43,875 --> 00:10:44,833 சரி. 118 00:10:49,916 --> 00:10:53,208 அப்போதான், என் தந்தை ரோடியோவில் வென்றதை பார்த்தப்போ. 119 00:10:55,166 --> 00:10:58,750 அதுலேர்ந்து, முடிவெடுத்தேன். மாட்டு சவாரி தான் என் வாழ்க்கை. 120 00:10:58,833 --> 00:11:00,416 வாழ்த்துக்கள். 121 00:11:00,500 --> 00:11:01,625 எதுக்கு? 122 00:11:01,708 --> 00:11:03,125 முன்னேறியதற்கு. 123 00:11:04,166 --> 00:11:07,333 உனக்கு மேல இருந்தவன் போதை பரிசோதனையில் மாட்டினான். 124 00:11:07,416 --> 00:11:08,666 நீ அடுத்த வாரம் ஓட்டற. 125 00:11:11,875 --> 00:11:13,583 என்ன? நிஜமாவா? 126 00:11:13,666 --> 00:11:16,041 வேற கிரகத்தில் இருந்தியா என்ன? 127 00:11:17,958 --> 00:11:18,791 இல்லை. 128 00:11:21,083 --> 00:11:22,666 நிறைய நடந்துட்டிருக்கு. 129 00:11:29,375 --> 00:11:31,583 ஹேய், என்னுடன் இரவு உணவு சாப்பிடுவையா? 130 00:11:33,875 --> 00:11:36,416 இன்றிரவல்ல, என்றாவது. 131 00:11:36,500 --> 00:11:40,541 -இன்று கூட, உனக்கு பரவாயில்லைனா... -ரெட், டேட்டுக்கு கூப்பிடறியா? 132 00:11:41,000 --> 00:11:42,708 -இப்போ ஸ்பானிஷ் பேசறியோ? -ஆம். 133 00:12:00,166 --> 00:12:04,416 எனக்கு அது புரியவே இல்லை, ஆனா நாளை போலாமா? 134 00:12:05,375 --> 00:12:07,416 சரி, நாளை போலாம். 135 00:12:09,666 --> 00:12:11,916 இது தான் பேச விரும்பினியா? 136 00:12:12,416 --> 00:12:13,833 இல்லை, வேற ஒரு விஷயம். 137 00:12:14,791 --> 00:12:18,041 அன்றிரவு, ட்ரெவரிடம் என் நடத்தைக்கு வெட்கப்படறேன். 138 00:12:18,125 --> 00:12:20,375 சண்டைய சொல்றியா? பரவாயில்லை. 139 00:12:20,791 --> 00:12:22,750 அவனை எனக்கு அவ்வளவா பிடிக்காது. 140 00:12:22,833 --> 00:12:24,583 இல்லை, அது... 141 00:12:24,666 --> 00:12:30,250 டில்லெர்சன்கள் பத்தி தெரியும்ல. அதை பத்தி வெளியில் சொல்லாம இருக்க முடியுமா? 142 00:12:33,041 --> 00:12:34,125 சரி. 143 00:12:34,208 --> 00:12:38,416 ஓ கடவுளே எங்களுக்கு தரிசனம் கொடு. 144 00:12:48,708 --> 00:12:49,750 ஹலோ. 145 00:12:56,583 --> 00:12:58,958 ஹேய். அறுநூறு ஏக்கர்களா? 146 00:12:59,041 --> 00:13:02,041 டில்லெர்சன்களின் விஷப்பாம்பு வக்கீல் கூப்பிட்டான். 147 00:13:02,125 --> 00:13:03,000 தெரியும். 148 00:13:03,083 --> 00:13:05,166 நான் ஏன் இப்போதான் கேள்விப்படறேன்? 149 00:13:05,250 --> 00:13:07,541 நிறைய நடந்துட்டிருக்கு, பார்க்கறல்ல. 150 00:13:07,625 --> 00:13:08,958 முக்கியமா ஒண்ணிருக்கே. 151 00:13:09,041 --> 00:13:12,125 மேற்கு புல்வெளியில் பாதியும் முக்கியமான விஷயம் தான். 152 00:13:14,000 --> 00:13:16,625 -எங்கே போற? -டாட் பார்னியை பார்க்க போறேன். 153 00:13:18,625 --> 00:13:20,125 ஹே, ஹே. 154 00:13:20,208 --> 00:13:21,416 பெர்ரியை கூட்டி போ. 155 00:13:21,500 --> 00:13:22,916 அவனுக்கு வேலை இருக்கு. 156 00:13:23,000 --> 00:13:24,958 இல்ல, அவன் தந்தையுடன் இருக்கணும். 157 00:13:25,041 --> 00:13:27,458 அவனால் இதை தாங்க முடியுமானு தெரியலை. 158 00:13:27,958 --> 00:13:31,458 ப்ளீஸ், அவனுக்கு உதவு. அவனை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு. 159 00:13:31,541 --> 00:13:32,833 -சரி. -நல்லது. 160 00:13:39,250 --> 00:13:41,000 அது ஒரு விபத்து. 161 00:13:42,166 --> 00:13:45,583 நீங்க இருவரும் குடிச்சிருந்தீங்க, சண்டை வந்தது, நிறுத்தலை. 162 00:13:48,083 --> 00:13:49,791 அது விபத்து தானே? 163 00:13:54,333 --> 00:13:56,458 விபத்துகள்னு நான் எதையும் நினைக்கலை. 164 00:14:02,000 --> 00:14:03,791 ரெபெக்கா பத்தி சொல்றியா? 165 00:14:05,958 --> 00:14:08,083 விதி பத்தி சொல்றேன். 166 00:14:09,375 --> 00:14:11,791 -விதியா? -ஆம். 167 00:14:12,500 --> 00:14:13,833 அதுக்கு என்ன இப்போ? 168 00:14:14,875 --> 00:14:17,166 உலகம் அப்படிதான் இயங்குதா? 169 00:14:26,333 --> 00:14:28,583 உலகம் எப்படி இயங்குதுனு தெரியாது. 170 00:14:31,166 --> 00:14:32,625 டாட் பார்னி பார்னி சட்டம் 171 00:14:34,250 --> 00:14:37,583 சரி. இது உங்க பண்ணை, 1878 உரிமைகள் வழங்கப்பட்டது, 172 00:14:37,666 --> 00:14:41,458 இது டில்லெர்சன்னின் பண்ணை, 1872 உரிமைகள் வழங்கப்பட்டது. 173 00:14:41,541 --> 00:14:45,416 இந்த ஏமாத்துகாரங்க படி அவர்களுடைய 600 ஏக்கர்கள் உங்களிடம் உள்ளதாம். 174 00:14:45,500 --> 00:14:46,833 இதனால்தான். 175 00:14:46,916 --> 00:14:50,625 கவுன்ட்டி எல்லைகளை மறுகட்டமைப்பு செய்தபோ, அரசுக்கு பிரச்சனைகள், 176 00:14:50,708 --> 00:14:54,916 இது அந்தகால நிலப்பரப்பு சொதப்பல். 177 00:14:55,000 --> 00:14:57,416 தெரியுதா? இது உங்க மேற்கு புல்வெளியின் மூலை, 178 00:14:57,500 --> 00:15:00,833 ஆனா இது டில்லெர்சன்னின் நிலமா, புறம்போக்கா, தெரியல. 179 00:15:00,916 --> 00:15:02,291 எல்லாம் ஒரே குழப்பம். 180 00:15:02,375 --> 00:15:05,250 அது உங்களது இல்லனு ஆணித்தரமா சொல்றாங்க. 181 00:15:05,750 --> 00:15:08,458 இல்லனா? கவுன்ட்டி மதிப்பீட்டாளர் அவங்க பக்கம். 182 00:15:08,541 --> 00:15:09,916 வாய்ப்பிருக்கு. 183 00:15:10,791 --> 00:15:13,333 என் ஆலோசனை? அவர்களிடம் நிலத்தை கொடுங்க. 184 00:15:13,416 --> 00:15:14,416 இல்லை. 185 00:15:14,500 --> 00:15:17,541 அழகான இடம் தான், ஆனா முழு பண்ணையும் போயிடக்கூடாது. 186 00:15:17,625 --> 00:15:19,916 சரி, நேரா கேக்கறேன், டாட். 187 00:15:20,000 --> 00:15:22,916 என் சொந்த வக்கீலே, இதில் நான் விட்டுக்கொடுத்து, 188 00:15:23,000 --> 00:15:25,458 என் நிலத்தில் ஒரு மைல் அளவு தர சொல்றாரா? 189 00:15:25,541 --> 00:15:27,375 இது சாதாரண நிலமல்ல, 190 00:15:27,458 --> 00:15:30,500 இங்குதான் எங்க குடும்பம் மூன்று தலைமுறையா புழங்குது. 191 00:15:31,333 --> 00:15:33,625 அப்படிலாம் விட்டுக்கொடுக்க முடியாது. 192 00:15:33,708 --> 00:15:36,916 டில்லெர்சன்கள் தோற்க மாட்டார்கள் என்று சொல்கிறேன். 193 00:15:38,583 --> 00:15:40,791 எல்லாத்துக்கும் முதல் முறை உண்டு. 194 00:15:46,333 --> 00:15:48,375 அவர் சொல்றதும் சரிதான். 195 00:15:48,458 --> 00:15:52,291 அவர்களிடம் நிலத்தை தந்தால், ட்ரெவர் விஷயத்தில் பின்வாங்குவாங்க. 196 00:15:52,375 --> 00:15:55,208 அவர்களுடன் சமரசமா போனா நம்மை விடுவாங்கல்ல? 197 00:15:55,291 --> 00:15:58,291 தம்பி, டில்லெர்சன்கள் பத்தி சொல்றேன், சரியா? 198 00:15:59,458 --> 00:16:02,166 அப்ப நீ சின்னவன், வெய்ன் டில்லெர்சன்னின் பண்ணையாள், 199 00:16:02,250 --> 00:16:06,208 அவனை ஒரு காளை குத்தியது. வயிற்றில் கோரமாக. 200 00:16:06,291 --> 00:16:10,208 அவன் செத்துடுவான்னு அனைவரும் அறிவர், ஆனா அவனை விடுவிக்க முடியலை. 201 00:16:10,291 --> 00:16:14,791 ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரமாகும், வேய்னிடம் ரெண்டு வழி இருந்தது. 202 00:16:14,875 --> 00:16:18,958 காளையை சுடணும், ஒரு மாடு வீண், ஆனா மனிதனுக்கு கண்ணியமான மரணம், 203 00:16:19,041 --> 00:16:20,166 இல்ல செய்ய கூடாது. 204 00:16:21,083 --> 00:16:22,708 வேய்ன் இரண்டாவதை செய்தான். 205 00:16:22,791 --> 00:16:26,208 எல்லாரையும் வேலைக்கு அனுப்பினான், மாடு அவனோட ஓடியது, 206 00:16:26,291 --> 00:16:28,666 பண்ணையாள் இறக்கும் வரை. 207 00:16:29,916 --> 00:16:34,250 டில்லெர்சன்களுடம் சமரசம் முடியாது. அவர்களிடமிருந்து தள்ளி இருக்கணும். 208 00:17:10,500 --> 00:17:12,208 உங்க காலுக்கு என்ன ஆச்சு? 209 00:17:13,458 --> 00:17:18,208 வயசாச்சு. நம்ப மாட்ட, படுக்கையிலிருந்து எழுந்திருக்கையில் பட்டுது. 210 00:17:25,750 --> 00:17:27,583 நீங்க வந்திருக்கீங்கனு சொல்றேன். 211 00:17:34,458 --> 00:17:40,458 என்னிடமிருந்து ஒளிய இடமில்லை 212 00:17:40,541 --> 00:17:45,708 என்னை இன்னொரு கதவையும் மூட வைக்காதே 213 00:17:45,791 --> 00:17:50,083 இனியும் நான் காயப்படுத்த விரும்பலை 214 00:17:50,166 --> 00:17:55,166 தைரியம் இருந்தா என் கைகளிலேயே இரு 215 00:17:55,250 --> 00:17:59,666 அல்லது உன்னை அங்கே கற்பனை செய்யணுமா 216 00:17:59,750 --> 00:18:02,625 என்னிடமிருந்து விலகிப்போகாதே 217 00:18:04,666 --> 00:18:09,916 என்னிடம் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை 218 00:18:11,500 --> 00:18:14,625 வயோமிங் பல்கலைக்கழகம் அரிய தனிம துறை - டாக்டர் நியா பின்டு 219 00:18:14,708 --> 00:18:16,583 நீ இல்லையென்றால் 220 00:18:16,666 --> 00:18:18,916 சரி, வாங்க. 221 00:18:48,625 --> 00:18:50,208 ராயல். 222 00:18:50,291 --> 00:18:52,583 வேய்ன். எப்படி இருக்க... 223 00:18:52,666 --> 00:18:54,750 லூக், க்ளமாட்டோ கொண்டு வரயா? 224 00:18:55,583 --> 00:18:57,666 ராயல், குடிக்க ஏதாவது? க்ளமாட்டோ? 225 00:18:57,750 --> 00:18:59,250 ஜில் தேனீர் இருக்கா? 226 00:19:01,375 --> 00:19:03,625 இல்லை? அவர் குடிப்பதே எனக்கும். நன்றி. 227 00:19:07,875 --> 00:19:09,500 இன்னும் ட்ரெவ்வை தேடறீங்களா? 228 00:19:09,833 --> 00:19:13,166 லூக் தேடறான், எங்கேயாவது சரக்கடிச்சு மப்பாயி கிடப்பான், 229 00:19:13,250 --> 00:19:16,166 இல்லனா எவ கூடயாவது படுத்திருப்பான், அது போல. 230 00:19:16,250 --> 00:19:18,625 ராய், என் நிலத்தில் இருக்க. 231 00:19:18,708 --> 00:19:19,750 இரு, பொறு. 232 00:19:19,833 --> 00:19:22,875 நான் நஷ்டஈடு கேட்கலைன்னு சந்தோஷப்படு. 233 00:19:22,958 --> 00:19:25,916 உண்மையை பேசுவோம். நீதான் எங்களிடமிருந்து திருடற. 234 00:19:26,000 --> 00:19:30,500 இது வயோமிங். அந்த பெயர் சூட்டப்பட்ட நாளிலேயே அது திருடப்பட்டது. 235 00:19:30,583 --> 00:19:31,791 லஞ்சம் கொடுத்தியா? 236 00:19:31,875 --> 00:19:35,583 ஒருவர் தான் சட்டத்தை மீறுகிறார், அது நானில்லைன்னு அரசு சொல்லுது. 237 00:19:35,666 --> 00:19:36,625 அப்போ ஏன் இப்போ? 238 00:19:36,708 --> 00:19:38,875 உன்கிட்ட நெருங்கலாம்னு தான். 239 00:19:46,333 --> 00:19:48,916 என் தெற்கு புல்வெளியில் 200 ஏக்கர் தர்றேன். 240 00:19:49,000 --> 00:19:50,458 மேற்கு. 241 00:19:51,583 --> 00:19:52,916 ஏன் மேற்கு? 242 00:19:55,583 --> 00:19:57,458 "ஏன் மேற்கு?" ஆம். 243 00:20:04,875 --> 00:20:06,250 நீ சொல்லு. 244 00:20:07,875 --> 00:20:11,791 '80களின் முடிவில், நான் சிற்றின்ப கலையை மிகவும் ரசித்தேன். 245 00:20:12,291 --> 00:20:14,500 ஒரு மூணு டஜன் ஓவியங்கள் வாங்கினேன். 246 00:20:14,583 --> 00:20:16,250 புனிதவான்களை பத்தி பேசலை, 247 00:20:16,333 --> 00:20:20,291 ஆப்ரே பேர்ட்ஸ்லியோ பாப்லோ பிக்காஸோ பத்தி பேசலை, 248 00:20:20,375 --> 00:20:22,250 அன்றாட விஷயம் பத்தி பேசறேன், 249 00:20:22,333 --> 00:20:26,958 வயிற்றை புரட்டும் விஷயங்கள். கோல்டின், பெட்டி டாம்ப்கின்ஸ், ஜார்ஜ் கோண்டோ. 250 00:20:29,708 --> 00:20:33,708 அதை செய்ய காரணம், எனக்கு காரசாரமா ஏதாவது தேவைப்பட்டது. 251 00:20:34,458 --> 00:20:39,458 என் வீட்டிற்கு வந்தால் நேரம் போவதே தெரிய கூடாது என்று எண்ணினேன். 252 00:20:42,500 --> 00:20:44,583 ஆனால் அது நடக்கலை. 253 00:20:46,916 --> 00:20:48,708 அதனால நிறைய வாங்கி குவித்தேன். 254 00:20:50,000 --> 00:20:53,000 யோசிப்பேன், "சரியான ஓவியம் கிடைச்சுதுனா, 255 00:20:53,083 --> 00:20:58,041 "சரியான புகைப்படம் கிடைச்சா" என்று, தெரியுமா? 256 00:20:58,125 --> 00:20:59,958 சீக்கிரமே, 257 00:21:00,041 --> 00:21:04,041 சுவர்கள் முழுக்க ஒரே ஆபாசம். 258 00:21:04,833 --> 00:21:06,875 பார்த்தா கூனி குறுகி போவோம். 259 00:21:08,375 --> 00:21:12,708 ஆனாலும் அது ஈர்க்கலை. 260 00:21:15,125 --> 00:21:16,625 பின் நான் உணர்ந்தேன், 261 00:21:18,375 --> 00:21:20,375 என்னால் பார்க்க முடியாததை 262 00:21:21,500 --> 00:21:23,291 எண்ணிதான் எனக்கு உற்சாகம், 263 00:21:24,750 --> 00:21:26,416 எனக்கு தெரியாதவை, 264 00:21:28,000 --> 00:21:30,625 என்னிடமிருந்து மறைக்கப்பட்டவை, 265 00:21:30,708 --> 00:21:32,833 என்னை தேடவைத்தவைகள். 266 00:21:36,666 --> 00:21:41,291 நாம் வேட்டையாட பிறந்தோம். ஒரு எல்லை வென்றால் அடுத்தது. 267 00:21:43,250 --> 00:21:45,750 என் பசி மிக அதிகமா இருக்கு. 268 00:21:55,083 --> 00:21:58,833 உன் மேற்கு புல்வெளி வேணும், ஏன்னா எனக்கு அது வேணும். 269 00:22:02,958 --> 00:22:05,708 மாறாக நல்லதா தரேன், இந்த பள்ளத்தாக்கில்... 270 00:22:05,791 --> 00:22:09,625 நீ என்ன தந்தாலும் கவலையில்லை, ராய்! 271 00:22:09,708 --> 00:22:11,791 மேற்கு புல்வெளி எனதாகப் போகுது, 272 00:22:11,875 --> 00:22:14,541 வயோமிங் அரசும் அதை தான் சொல்லுது. 273 00:22:24,708 --> 00:22:27,666 அப்போ வக்கீல்கள் அதை தீர்மானிக்கட்டும். 274 00:22:29,750 --> 00:22:32,208 அந்த நிலத்தில் என்ன அவ்வளவு ஈர்ப்பு? 275 00:22:34,375 --> 00:22:36,333 உணர்வு பூர்வமானது. 276 00:22:37,083 --> 00:22:38,916 உன்னை எப்பவுமே நம்ப முடியாது, 277 00:22:41,041 --> 00:22:44,166 நாம் சந்தித்த நாளிலிருந்து. 278 00:22:52,250 --> 00:22:54,791 க்ளாம் ஜூஸிற்கு நன்றி, வேய்ன். 279 00:23:28,333 --> 00:23:31,333 மலையேற போகட்டுமா? வேலைகளை முடிச்சுட்டேன். 280 00:23:35,416 --> 00:23:36,583 சரி. 281 00:23:38,166 --> 00:23:40,500 -பாதையை விட்டு போகாதே. -சரி. 282 00:23:42,125 --> 00:23:43,625 இரவு உணவுக்கு வந்துடணும்! 283 00:24:19,833 --> 00:24:21,083 மன்னிக்கணும். 284 00:24:28,041 --> 00:24:29,416 இங்கே ஏன் இருக்கீங்க? 285 00:24:30,833 --> 00:24:32,208 தெரியலை. 286 00:24:34,041 --> 00:24:36,750 ஆனா நான் இங்கே வரணும்னு தெரியும். 287 00:24:38,000 --> 00:24:39,166 ஏன்? 288 00:24:44,875 --> 00:24:46,375 அது தெரியுதா? 289 00:24:53,125 --> 00:24:54,500 நான்... 290 00:24:55,291 --> 00:24:57,916 இதை பல வருடங்களா வரைஞ்சுட்டிருக்கேன், 291 00:24:58,000 --> 00:25:01,333 இப்போ இங்கே எல்லா இடத்திலும் இதை பார்க்கிறேன். 292 00:25:03,375 --> 00:25:05,000 என் குடும்ப சின்னம். 293 00:25:07,000 --> 00:25:08,458 நீ ஆபட்டா? 294 00:25:13,583 --> 00:25:15,416 -ராயல்... -அவரை தெரியுமா? 295 00:25:23,041 --> 00:25:27,500 இன்று காலை விசித்திரமா நடந்தார், ஆனா அவர் எப்பவுமே விசித்திரம் தான். 296 00:25:29,791 --> 00:25:30,875 இன்றா? 297 00:25:32,791 --> 00:25:34,500 ஆம், காலை உணவின் போது. 298 00:25:35,416 --> 00:25:36,333 ஏன்? 299 00:25:39,708 --> 00:25:40,916 ஒண்ணும் இல்ல. நான்... 300 00:25:42,291 --> 00:25:44,083 அதை கேட்க மகிழ்ச்சி. 301 00:25:47,958 --> 00:25:49,666 உங்க சங்கிலி பிடிச்சிருக்கு. 302 00:25:51,458 --> 00:25:52,583 இதுவா? 303 00:25:55,291 --> 00:25:56,541 எனக்கும் தான். 304 00:26:11,041 --> 00:26:13,875 ஏ 305 00:27:03,416 --> 00:27:05,083 யூரிபெடீஸ் குவான்டம் மெகானிக்ஸ் 306 00:27:53,083 --> 00:27:54,916 ரெட், ஏமியின் தட்டை கொடு. 307 00:28:00,000 --> 00:28:02,333 அவ பாதையை விட்டு போயிருக்க மாட்டால்ல? 308 00:28:02,416 --> 00:28:04,125 சரி. நன்றி. 309 00:28:08,875 --> 00:28:10,375 உருளைகிழங்கு? 310 00:28:12,125 --> 00:28:13,375 நன்றி. 311 00:28:14,958 --> 00:28:17,125 -ரெட், ரொட்டியை கொடு, கண்ணு. -சரி. 312 00:28:17,208 --> 00:28:18,333 பிரார்த்திக்கலாமா? 313 00:28:22,583 --> 00:28:24,458 இரவு உணவுக்கு பிரார்த்திக்கணும். 314 00:28:31,708 --> 00:28:32,833 சரி. 315 00:28:34,208 --> 00:28:35,208 கடவுளே, 316 00:28:37,000 --> 00:28:38,458 நாங்கள் ஜெபிக்கிறோம், 317 00:28:42,125 --> 00:28:43,333 ட்ரெவருக்காக, அவன் 318 00:28:46,708 --> 00:28:47,708 குடும்பத்திற்காக 319 00:28:51,208 --> 00:28:54,500 எங்க பசங்களுக்காக, எங்க குடும்பத்திற்காக. 320 00:28:58,000 --> 00:29:01,333 நீங்கள் எங்களை மன்னியுங்கள், 321 00:29:04,500 --> 00:29:05,708 அப்படிதான் போல. 322 00:29:07,541 --> 00:29:11,375 எங்களுக்கு வழி காட்டுங்கள், நாங்கள் பிரச்சனையில் இருக்கிறோம். 323 00:29:13,708 --> 00:29:15,125 செய்வதறியாது இருக்கோம். 324 00:29:20,125 --> 00:29:21,958 இந்த விசித்திர உலகை படைத்தீங்க, 325 00:29:24,375 --> 00:29:28,083 உங்க நோக்கம் என்ன என்று எங்களுக்கு ஏதேனும் அடையாளம் காட்டலாம், 326 00:29:28,166 --> 00:29:30,750 ஏன்னா எனக்கு எதுவுமே தெரியலை. 327 00:29:31,875 --> 00:29:36,291 உங்களுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கலாம், நீங்களே கூட இல்லை போல, யாரறிவார்? 328 00:29:37,875 --> 00:29:43,375 உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி, ஒரு வெற்றிடம் இருக்கு. 329 00:29:43,458 --> 00:29:46,416 ஒரு பெரிய வெற்றிடம் இருக்கு. அதை நிரப்பி விடுங்க. 330 00:29:46,500 --> 00:29:48,541 அந்த வெற்றிடத்தை நிரப்பி விடுங்க. 331 00:29:48,625 --> 00:29:51,291 நீங்க இங்கே கீழே வந்து விளக்கம் கொடுங்க, 332 00:29:51,375 --> 00:29:53,583 ஏன்னா உங்க இந்த உலகம் எனக்கு புரியலை, 333 00:29:53,666 --> 00:29:55,375 அதற்காக உங்களை வெறுக்கிறேன், 334 00:29:55,458 --> 00:29:57,875 உங்களை நம்பறேன்னு கூட நினைக்கலை, 335 00:29:57,958 --> 00:29:59,875 ஆனா உங்களை உண்மையா வெறுக்கிறேன்! 336 00:30:10,250 --> 00:30:11,250 ஆமென். 337 00:30:29,416 --> 00:30:30,958 சரி, ஏதாவது... 338 00:30:31,916 --> 00:30:34,166 -மன்னிக்கணும் தாமதத்திற்கு. -எங்க போன? 339 00:30:34,250 --> 00:30:37,291 மலையேறினேன். ஒரு ஹிப்பி பெண்ணை பார்த்தேன். 340 00:30:37,375 --> 00:30:38,875 யாரை பார்த்த? 341 00:30:38,958 --> 00:30:41,041 ஆட்டம் என்ற பெண். உங்களை தெரியுமாம். 342 00:30:41,833 --> 00:30:45,166 அவளிடமிருந்து விலகியிரு. புரியுதா? அவளிடம் இனி பேசாதே. 343 00:30:45,250 --> 00:30:46,166 ஏன்? 344 00:30:46,250 --> 00:30:49,541 அது எல்லாருக்கும் தான். யாரும் பேசக் கூடாது. புரியுதா? 345 00:30:53,458 --> 00:30:54,875 கால்நடைகளை இடம் மாற்றணும். 346 00:30:56,000 --> 00:30:57,041 என்ன? 347 00:30:57,375 --> 00:30:59,583 மாடுகளை கிழக்கு புல்வெளிக்கு மாற்றணும். 348 00:30:59,666 --> 00:31:01,041 -எப்போ? -நாளை. 349 00:31:02,041 --> 00:31:04,916 மேற்கில் அதுங்க கொஞ்ச நாளாதான் மேயுது, இன்னும்... 350 00:31:05,000 --> 00:31:06,166 -மாற்றணும். -ஏன்? 351 00:31:06,250 --> 00:31:07,083 என் ஆணை. 352 00:31:07,166 --> 00:31:08,958 ஆட்கள் பத்தாதே... 353 00:31:09,041 --> 00:31:11,000 இம்மேஜையில் பத்து கைகள் இருக்கே. 354 00:31:11,083 --> 00:31:13,541 -ஏமிக்கு ஸ்கூல் இருக்கு. -நாளை அவ போகல. 355 00:31:13,625 --> 00:31:15,416 -ராயல்... -இதான் செய்யறோம்! 356 00:31:15,500 --> 00:31:17,625 நாமே. கால்நடைகளை நகர்த்தறோம்! 357 00:31:19,208 --> 00:31:20,958 பெரிய வெற்றிடம் இருக்கு! 358 00:31:25,500 --> 00:31:29,416 மேற்கு புல்வெளியிலிருந்து கால்நடைகளை மாற்றுகிறோம், உறுதி! 359 00:31:29,500 --> 00:31:31,416 இப்போ உருளைகிழங்கை கொடு. 360 00:31:56,833 --> 00:31:58,208 இங்க சுத்தி வா. 361 00:31:59,250 --> 00:32:01,000 சுத்தி வா, சுத்தி வா. 362 00:32:06,833 --> 00:32:08,000 வா. 363 00:32:14,166 --> 00:32:15,416 சரி, போலாம். 364 00:32:57,541 --> 00:32:58,750 எங்கே போறார்? 365 00:32:59,583 --> 00:33:01,625 அவருக்கு கிறுக்கு பிடிச்சாச்சு. 366 00:34:09,541 --> 00:34:10,791 எங்கே இருக்க? 367 00:34:39,333 --> 00:34:41,000 என்ன தேடற? 368 00:34:43,583 --> 00:34:44,916 நானும் அதையே கேட்பேன். 369 00:34:50,291 --> 00:34:51,833 நீ என் நிலத்தை விட்டு போ. 370 00:34:53,250 --> 00:34:54,083 முடியாது. 371 00:34:55,333 --> 00:34:56,333 ஏன்? 372 00:34:56,583 --> 00:34:59,458 ஏன்னா என்னிடம் நிறைய ரகசியங்கள் உள்ளது, 373 00:34:59,541 --> 00:35:02,625 முக்கியமானது, நீ குழியில் சடலத்தை தூக்கி எறிந்தது. 374 00:35:02,708 --> 00:35:03,666 நீயும் தான். 375 00:35:04,500 --> 00:35:06,000 ஆனா நீ திரும்பிட்ட. 376 00:35:07,666 --> 00:35:08,666 எப்படி? 377 00:35:17,916 --> 00:35:19,041 உன் நிஜ பெயர் என்ன? 378 00:35:19,708 --> 00:35:20,916 ஆட்டம். 379 00:35:21,000 --> 00:35:22,875 -உன் கடைசி பெயர்? -ரிவர்ஸ். 380 00:35:23,791 --> 00:35:25,416 எப்படி இவ்வளவு பணம்? 381 00:35:26,208 --> 00:35:27,041 அறக்கட்டளை நிதி. 382 00:35:27,125 --> 00:35:29,500 மண்ணாங்கட்டி. உனக்கு சுரங்கத்தில் ஆர்வமா? 383 00:35:29,583 --> 00:35:30,583 சுரங்கமா? 384 00:35:30,666 --> 00:35:33,208 தோண்டுதல், சுரங்க பணி. சுரங்கத்தில் ஆர்வமா? 385 00:35:33,291 --> 00:35:35,916 -இல்லை. -அரசுப் பணியில் இருக்கியா? 386 00:35:36,000 --> 00:35:37,083 -இல்லை. -எப்பயாவது? 387 00:35:37,166 --> 00:35:39,416 -இல்லை. -நீ ஏதாவது வழிபாட்டு கும்பலா? 388 00:35:40,416 --> 00:35:41,250 ஆம். 389 00:35:41,583 --> 00:35:43,708 மஞ்சள் நிறம் என்றால் என்ன தோன்றும்? 390 00:35:43,791 --> 00:35:46,708 -மஞ்சள் நிறமென்றால்... -யோசிக்கிறேன். 391 00:35:46,791 --> 00:35:48,791 -மஞ்சள் நிறமென்றால்... -அதிகாரம். 392 00:35:48,875 --> 00:35:50,708 -கொன்னுருக்கியா? -இல்லை, நீ? 393 00:35:50,791 --> 00:35:52,166 நீ தான் அதை செய்தியா? 394 00:35:52,250 --> 00:35:54,666 என்னை தள்ளிய போது, என்னை கொல்ல பார்த்தியா? 395 00:35:54,750 --> 00:35:56,416 இல்லை. இப்போ என் முறை. 396 00:35:58,208 --> 00:36:00,625 உன் சிறுவயது நினைவு என்ன இருக்கு? 397 00:36:02,250 --> 00:36:05,041 ஒன்பது வயசுக்கு முன் ஏதாவது நினைவிருக்கா? 398 00:36:05,125 --> 00:36:06,000 ஏன்? 399 00:36:06,875 --> 00:36:08,875 ஏன்னா இங்கே வரும் வரை எனக்கு இல்லை. 400 00:36:11,875 --> 00:36:13,583 விதி மேலே நம்பிக்கை உண்டா? 401 00:36:18,000 --> 00:36:19,541 எதுவோ இங்க கூட்டி வந்தது. 402 00:36:20,458 --> 00:36:21,833 அது என்னது? 403 00:36:22,750 --> 00:36:25,375 அதை கண்டுபிடிக்க நீதான் உதவப் போற. 404 00:36:25,833 --> 00:36:27,458 இங்கே ஏதோ நடக்குது. 405 00:36:27,541 --> 00:36:29,000 உன்னை, என்னை விட பெரியது. 406 00:36:29,083 --> 00:36:31,916 நம் இருவருக்கு மட்டுமே அது தெரியும். 407 00:36:32,000 --> 00:36:34,208 நாம் இதை புரிந்து கொள்ள உதவிக்கலாம். 408 00:36:34,291 --> 00:36:36,125 பயப்பட வேண்டாம். 409 00:36:38,666 --> 00:36:40,083 அங்கே என்ன பார்த்தாய்? 410 00:37:58,125 --> 00:38:02,083 மறுபடி சொல்றேன். நமக்கு... கம்பிகுள்ள. 411 00:38:08,041 --> 00:38:09,833 இலக்கு... 412 00:38:13,166 --> 00:38:14,000 பை9 413 00:39:12,416 --> 00:39:15,708 எல்லா அணிகளும், எல்லா அணிகளும் அப்படியே இருக்கவும். 414 00:39:22,583 --> 00:39:23,583 இது நம் நிலமா? 415 00:39:25,291 --> 00:39:27,083 இல்லை. இப்போ இல்லை. 416 00:39:32,916 --> 00:39:33,916 ராயல். 417 00:39:36,416 --> 00:39:39,833 நீ இறந்துட்ட. நீ செத்து இரண்டு வருடங்களாச்சு. 418 00:39:41,166 --> 00:39:43,166 சரியா? என் கைகளில் இறந்தாய். 419 00:39:46,958 --> 00:39:50,250 எல்லா அணிகளும், இடத்துக்கு போகவும். தெரிந்து கொள்ளவும். 420 00:39:50,333 --> 00:39:54,083 மறுபடியும், எல்லா அணிகளும் இடத்திற்கு போகவும். தெரிந்து கொள்ளவும். 421 00:39:54,166 --> 00:39:56,000 திருப்பி எடுக்க. 422 00:39:58,541 --> 00:39:59,583 ஓடு. 423 00:40:06,583 --> 00:40:07,958 நகராத! 424 00:40:08,041 --> 00:40:09,208 இல்லை! இல்ல! 425 00:42:15,166 --> 00:42:17,166 வசனங்கள் மொழிபெயர்ப்பு சிவராமன் 426 00:42:17,250 --> 00:42:19,250 படைப்பு மேற்பார்வையாளர்:பி.கே.சுந்தர்