1 00:00:43,252 --> 00:00:45,254 கிரிக்கெட்? இது எழ வேண்டிய நேரம். 2 00:00:52,177 --> 00:00:53,637 எங்களுடைய முயற்சிகளுக்குப் பிறகும், 3 00:00:53,720 --> 00:00:56,390 புவி வெப்பநிலை அதிகரிப்பதைத் தடுக்க நாங்கள் இன்னும் போராடி வருகிறோம். 4 00:00:56,473 --> 00:00:58,475 மீண்டு வர முடியாத கட்டத்தை கிட்டத்தட்ட கடந்துவிட்டோம், 5 00:00:58,559 --> 00:01:01,770 அதனால்தான் உங்கள் மிஷன் மிகவும் முக்கியமானது. 6 00:01:02,354 --> 00:01:04,188 -காலை வணக்கம். -காலை வணக்கம், பக். 7 00:01:04,272 --> 00:01:05,649 ஹேய். கிரிக்கெட். 8 00:01:05,732 --> 00:01:08,193 எனவே இங்கே ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நல்ல வேலையைத் தொடருங்கள். 9 00:01:08,277 --> 00:01:09,778 பூமி உங்களை நம்பித்தான் இருக்கிறது. 10 00:01:10,445 --> 00:01:13,866 மனிதகுலத்திற்கு நீங்கள்தான் உயிர்க்காப்புப் படகு. வெப்பத்தை 1.5 டிகிரிக்கும் மேல் போக விடாதீர்கள். 11 00:01:14,741 --> 00:01:15,742 குஸினோ தொடர்பை துண்டிக்கிறேன். 12 00:01:17,911 --> 00:01:20,664 உலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் ஏன் ஒத்துழைக்கமாட்டேன் என்கிறார்கள்? 13 00:01:20,747 --> 00:01:22,082 அது அவ்வளவு எளிதல்ல. 14 00:01:22,165 --> 00:01:26,253 பெரும்பாலான இடங்கள் எண்ணையை நம்பியே இருக்கின்றன, எண்ணையை எரிப்பது பூமிக்கு தீங்கு விளைவிக்கிறது. 15 00:01:26,336 --> 00:01:28,922 நல்ல செய்தி என்னவென்றால், நாம் இங்கே முன்னேற்றத்தைக் காண்கிறோம். 16 00:01:29,006 --> 00:01:31,383 மண்ணில் செடிகளை வளர்க்கிறோம். நீரைக் கண்டுபிடிப்பதில் நெருங்கிவிட்டோம். 17 00:01:31,466 --> 00:01:35,095 எவ்வளவு சீக்கிரம் வெற்றி பெறுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் மீண்டும் பூமிக்குத் திரும்பலாம். 18 00:01:35,929 --> 00:01:36,972 உங்களை நேசிக்கிறேன், 19 00:01:37,055 --> 00:01:39,892 ஆனால் இரண்டு கிறிஸ்துமஸும் ஒரு ஹாலோவீனும் முடிந்துவிட்டது. 20 00:01:39,975 --> 00:01:41,143 நான் ட்ரிக்-ஆர்-ட்ரீட்டை மிஸ் செய்கிறேன். 21 00:01:41,226 --> 00:01:43,812 நான் இலைகளையும் இலையுதிர் காலத்தின் வாசனையும் மிஸ் செய்கிறேன். 22 00:01:44,396 --> 00:01:45,647 நானும்தான். 23 00:01:47,065 --> 00:01:49,151 எனவே, நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? 24 00:01:50,110 --> 00:01:51,278 எதற்காக? 25 00:01:52,112 --> 00:01:55,115 நம் வீட்டு விருந்தினர்கள். முதல் விருந்தினர்கள். 26 00:01:55,199 --> 00:01:57,618 தொலைத்தொடர்பு கருவியில் நேற்றிரவு கேஸியின் பெற்றோர்களிடம் பேசினேன். 27 00:01:57,701 --> 00:01:59,620 அவர்கள் நாளை 6 மணிக்கு இங்கிருப்பார்கள். 28 00:01:59,703 --> 00:02:00,913 உங்கள் ஒரே நண்பன் உங்கள் அறையில் 29 00:02:00,996 --> 00:02:04,583 ஹாலோகிராமில் தோன்றுவது எப்படி இருக்கும் என்று உங்களுக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா? 30 00:02:05,167 --> 00:02:09,003 நான் ஹை-பைவ் செய்வேன். அதாவது கையோடு கை மோதும் ஹை-பைவ். 31 00:02:10,297 --> 00:02:13,842 ஹேய். நாம் வீட்டில் செய்தது போல கொஞ்சம் 32 00:02:13,926 --> 00:02:15,886 சாக்லேட் குக்கீகளை செய்ய வேண்டும். 33 00:02:15,969 --> 00:02:18,639 பொருட்கள் விநியோகம் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இல்லை. 34 00:02:18,722 --> 00:02:21,475 நம் எல்லா சாக்லேட்களையும் குக்கீகள் செய்ய பயன்படுத்த வேண்டுமா? 35 00:02:22,309 --> 00:02:25,938 -ஆம். -சரி. வேலையைத் தொடங்கலாம். 36 00:02:29,900 --> 00:02:31,860 கழிவு மேலாண்மை தொடங்கப்பட்டது. 37 00:02:31,944 --> 00:02:33,403 கழிவைக் கையாளும் இயந்திரம் 38 00:02:39,034 --> 00:02:41,537 நான் சொல்வதெல்லாம், நாம் எல்லா சாக்லேட்களையும் பயன்படுத்திவிட்டால், 39 00:02:41,620 --> 00:02:43,413 பிறகு மற்ற விஷயங்களுக்காக எதுவும் இருக்காது. 40 00:02:43,956 --> 00:02:45,541 பேரிச்சம் கொட்டை பார்களை பயன்படுத்துவது எப்படி? 41 00:02:46,291 --> 00:02:49,628 அம்மா, நான் ஒன்பது மாதங்களாக குக்கீகளைச் சாப்பிடவில்லை. 42 00:02:49,711 --> 00:02:52,089 சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேவைதான், முட்டாள்தனம் கூடாது. 43 00:02:52,172 --> 00:02:53,674 சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம். 44 00:02:53,757 --> 00:02:55,342 அப்படித்தான் சாக்லேட்டும். 45 00:03:01,265 --> 00:03:04,059 ஹேய், சிறியவனே. உனக்கும் குக்கீ பிடிக்குமென்று நினைக்கிறேன். 46 00:03:05,686 --> 00:03:08,272 தேனீக்கள் இறப்பதை தடுத்து ஒரு குக்கீயைப் பெற தகுதி பெற்றுவிட்டான். 47 00:03:08,355 --> 00:03:11,149 டிரோன்கள் உதவத்தான் இருக்கின்றன. நமக்கு நிஜ தேனீக்கள் தேவை. 48 00:03:11,233 --> 00:03:12,776 -தேனீக்கள் இல்லையென்றால்... -மகரந்தச் சேர்க்கையும் இருக்காது. 49 00:03:12,860 --> 00:03:16,113 மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால், பூமியின் உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இருக்காது. 50 00:03:16,196 --> 00:03:19,616 சிறிய விஷயம் கூட நமது சுற்றுச்சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 51 00:03:20,367 --> 00:03:24,162 சில சமயங்களில், நாம் இங்கு என்ன செய்கிறோம் என்பதை மக்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 52 00:03:24,246 --> 00:03:25,372 ஒருநாள் அவர்கள் பார்ப்பார்கள். 53 00:03:26,081 --> 00:03:29,376 நம்மைப் போலவே வாழ்விடங்களில் வாழும் குடும்பங்களை கற்பனை செய்து பார். 54 00:03:29,459 --> 00:03:34,214 உயிர்க்காப்புப் படகு. தினமும் ஒரேமாதிரி இருக்கும் உயிர்க்காப்புப் படகு. 55 00:03:34,965 --> 00:03:36,258 ஆனால் நாளை இல்லை. 56 00:03:37,134 --> 00:03:38,177 நாளை இல்லை. 57 00:03:38,260 --> 00:03:40,137 மக்களைப் பார்ப்பது நன்றாக இருக்கும். 58 00:03:40,721 --> 00:03:41,847 நீங்கள் என்ன அணியப் போகிறீர்கள்? 59 00:03:42,639 --> 00:03:43,932 இதுதான் என்று நினைக்கிறேன். 60 00:03:46,185 --> 00:03:49,146 வேண்டாமா? ஒருவேளை எனக்காக நீ ஒன்றைத் தேர்வு செய்கிறாயா? 61 00:03:49,730 --> 00:03:50,898 கண்டிப்பாக. 62 00:03:54,526 --> 00:03:56,403 -வீடு முற்றிலுமாக சார்ஜ் ஆகிவிட்டது. -ஆக்ஸிஜன்? 63 00:03:56,486 --> 00:03:58,113 சுற்றுக்சூழல் அமைப்புகள் சரிபார்ப்பு. 64 00:03:58,197 --> 00:04:00,991 -சுற்றுப்புறம் நன்றாக இருக்கிறது. -நீ இன்று கட்டுப்படுத்த தயாரா? 65 00:04:01,074 --> 00:04:03,785 ஃபிளைட் திட்டம் இருக்கிறது. தயாராக இருக்கிறேன். 66 00:04:08,207 --> 00:04:11,710 அதிகப்பட்ச உயரம் 300 மீட்டர்களாக அமைக்கப்பட்டது. இயக்குவதற்கு அனுமதி கோரப்படுகிறது. 67 00:04:12,544 --> 00:04:13,795 அனுமதி வழங்கப்பட்டது. 68 00:04:14,296 --> 00:04:16,048 மேலே எழும்புதல் தொடங்கப்பட்டது. 69 00:04:18,926 --> 00:04:20,969 சூரிய சக்தி தகடுகளில் மணல் இல்லை. 70 00:04:24,765 --> 00:04:26,225 வாழ்விட கட்டமைப்பு நன்றாக இருக்கிறது. 71 00:04:30,562 --> 00:04:31,688 ஹாய், அம்மா. 72 00:04:36,401 --> 00:04:38,278 தகவல்தொடர்பு கோபுரம் இயங்குகிறது. 73 00:04:42,366 --> 00:04:43,951 தரையிறக்கம் முடிந்தது. 74 00:04:44,034 --> 00:04:45,369 நல்ல வேலை செய்தாய், மாவேரிக். 75 00:04:45,953 --> 00:04:46,954 யார்? 76 00:04:49,873 --> 00:04:52,501 பள்ளியில் நல்ல நாளாக அமையட்டும், கிரிக்கெட். உன்னை நேசிக்கிறோம். 77 00:04:53,043 --> 00:04:54,962 அன்பு எல்லையற்றது. 78 00:04:59,591 --> 00:05:01,426 காற்று அழுத்தத்தை அகற்றுவது தொடங்குகிறது. 79 00:05:04,429 --> 00:05:07,140 எச்சரிக்கை. மூடிய பகுதியின் கதவு திறக்கிறது. 80 00:05:17,651 --> 00:05:19,027 காலை வணக்கம், டிக்பி. 81 00:05:22,739 --> 00:05:24,783 சீஸ்பர்கரையும் ஃபிரைஸையும் எனக்காக கொண்டுவாருங்கள், சரியா? 82 00:05:25,659 --> 00:05:27,953 புரிந்தது. இப்போது படுக்கையைத் தயார் செய். 83 00:05:56,523 --> 00:06:00,819 எனவே, விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். தோரோ கண்ணாமூச்சி விளையாடுகிறார்... 84 00:06:02,070 --> 00:06:03,363 கூச்சலிடும் நீர் பறவையோடு. 85 00:06:04,031 --> 00:06:06,325 யாராவது? ஆந்தை இல்லை, ஆனால்... 86 00:06:06,408 --> 00:06:08,118 -என்ன? -கூச்சலிடும் நீர் பறவை. 87 00:06:09,453 --> 00:06:11,580 நாம் சொல்வது அவர்களுக்குக் கேட்காது. இது பதிவு செய்யப்பட்டது. 88 00:06:11,663 --> 00:06:15,584 -தெரியும், கேஸி. பழகிவிட்டது. -சரி. 89 00:06:15,667 --> 00:06:19,546 எனவே, அவர் பெரிய நகரத்தைவிட்டு வெளியேறி காட்டில் ஒரு மரத்தால் ஆன வீட்டில் 90 00:06:19,630 --> 00:06:23,800 சிறிய அணில்கள், காடைகள், மற்றும் எறும்புகளோடு வால்டன் குளத்தில் வாழ்கிறார். இப்போது... 91 00:06:23,884 --> 00:06:25,928 -அவருக்கு எறும்புகளாவது இருக்கின்றன. -கூடவே ஒரு குளமும். 92 00:06:26,011 --> 00:06:27,346 கூடவே இயற்கையும். 93 00:06:27,429 --> 00:06:31,892 இங்கே சில எறும்புகள் இருந்திருக்கலாம். சிலந்தி கூட, எனக்கு சிலந்திகளைப் பிடிக்காது. 94 00:06:33,143 --> 00:06:34,269 பொறு. 95 00:06:36,980 --> 00:06:38,941 டி - நீ ஏலிஷின் பிறந்தநாள் பார்ட்டிக்குப் போகிறாயா? 96 00:06:39,024 --> 00:06:42,069 நான் ஏலிஷின் அற்புதமான பிறந்தநாள் பார்ட்டியை மீண்டும் மிஸ் செய்கிறேன். 97 00:06:42,569 --> 00:06:45,614 இடையில் நிறுத்தாமல் இருப்பது நல்லது. நம் வகுப்புகளை கண்காணிக்கிறார்கள், கிரிக். 98 00:06:47,074 --> 00:06:48,325 மிகச்சரி. 99 00:06:48,408 --> 00:06:50,869 எனவே, புதியவர்களிடம் பழக சங்கடப்படும் என் அப்பாவையும் 100 00:06:50,953 --> 00:06:52,704 மிகுந்த உற்சாகமான அம்மாவையும் நாளை சந்திக்க நீ தயாரா? 101 00:06:52,788 --> 00:06:57,709 தயார், உன் பேஸ்பால் கையுறையையும், சறுக்கு காலணியையும், இசைக் கருவியையும் கொண்டு வா. 102 00:06:57,793 --> 00:06:59,503 டேலன்ட் ஷோவிற்காக நாம் நமது பாடலை பதிவு செய்ய வேண்டும். 103 00:06:59,586 --> 00:07:01,672 என் அப்பா அதற்கு நேர வரம்பு இருக்கும் என்றார். 104 00:07:01,755 --> 00:07:03,382 நாம் நம் ஆக்ஸிஜனை குறைய விடக் கூடாது. 105 00:07:03,465 --> 00:07:08,387 ஆம், நான்கு மணிநேரத்தில் நாம் ஜாலியாக இருக்க முடியும். அது அருமையாக இருக்கப் போகிறது. 106 00:07:08,470 --> 00:07:10,222 எனவே, மழைக்காலம் வரப் போகிறது, 107 00:07:10,305 --> 00:07:14,309 தோரோவிடம் அதைக் கடுமையான வானிலையிலிருந்து பாதுகாக்கும் 108 00:07:14,393 --> 00:07:15,519 மரத்தால் ஆன வீடு இருக்கிறது. 109 00:07:18,689 --> 00:07:21,233 உன் அம்மாவும் நானும் இன்று ரோவரில் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தோம். 110 00:07:22,401 --> 00:07:24,111 பூமிக்குப் போகும் வார்ம்ஹோலை கண்டுபிடித்தீர்களா? 111 00:07:24,736 --> 00:07:28,073 செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தை உறுதிசெய்யும் நிலையில் இருக்கிறோம். 112 00:07:28,156 --> 00:07:30,576 எங்கள் ஆய்வு கருவி ஒரு கிலோமீட்டர் ஆழத்தை எட்டியது. 113 00:07:31,118 --> 00:07:33,453 நிலத்தடியில் ஏரி இருந்தால், அது எல்லாவற்றையும் மாற்றிவிடும். 114 00:07:33,537 --> 00:07:35,747 அதுதான் மனிதகுலத்திற்குத் தேவையான அடிப்படை விஷயம். 115 00:07:35,831 --> 00:07:40,627 நுண்ணுயிரிகள், செவ்வாய்க் கடல், வாழக்கூடிய கிரகத்திற்கான சூத்திரத்தின் ஒரு பகுதி. 116 00:07:40,711 --> 00:07:42,171 எனவே, இன்று பள்ளி எப்படிப் போனது? 117 00:07:43,881 --> 00:07:45,048 நன்றாக. 118 00:07:45,132 --> 00:07:48,135 நீயும் கேஸியும் இணைந்து உருவாக்கும் அந்தப் பாடல் என்ன ஆனது? 119 00:07:48,218 --> 00:07:51,305 அவன் வந்தவுடன் நாளை நாங்கள் அதை பதிவு செய்யப் போகிறோம். 120 00:07:51,930 --> 00:07:53,015 பார்வையாளர்கள் வேண்டுமா? 121 00:07:53,891 --> 00:07:54,892 வேண்டாம். 122 00:07:54,975 --> 00:07:57,144 -அட. -கிரிக்கெட். 123 00:08:00,272 --> 00:08:01,356 வானிலை எச்சரிக்கை. 124 00:08:04,276 --> 00:08:05,611 வானிலை எச்சரிக்கை. 125 00:08:05,694 --> 00:08:07,571 வானிலை ரோவர் ஒரு புயலைக் கண்காணிக்கிறது. 126 00:08:07,654 --> 00:08:10,532 சிறிய வகை A. சுமார் 14 மணிநேரங்களில் இங்கு வந்தடையும். 127 00:08:12,034 --> 00:08:15,621 மணல் புயல் கடந்து செல்லும் வரை கேஸி மற்றும் அவரது குடும்பத்தாரின் 128 00:08:15,704 --> 00:08:17,497 வருகையை நாம் ஒத்திவைக்க வேண்டும். 129 00:08:18,290 --> 00:08:21,502 புயலுக்குப் பிறகு வீடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு நாம் மீண்டும் திட்டமிடலாம். 130 00:08:22,711 --> 00:08:23,712 எவ்வளவு நேரம்? 131 00:08:26,215 --> 00:08:28,759 -பக், அது பல காரணிகளைப் பொறுத்தது... -எவ்வளவு நேரம்? 132 00:08:29,760 --> 00:08:32,179 மூன்று வாரங்கள். இரண்டாகவும் இருக்கலாம். 133 00:08:34,097 --> 00:08:36,642 எனக்கு வேண்டியதெல்லாம் என் நண்பனோடு சில மணிநேரங்கள். 134 00:08:37,142 --> 00:08:38,434 அதிகம் கேட்கிறேனா? 135 00:08:39,227 --> 00:08:43,357 நாம் இன்னொரு கிரகத்தில் இருக்கிறோம், வானிலை நம் திட்டங்களைக் கெடுக்கிறதா? 136 00:08:44,107 --> 00:08:45,484 நிஜமாகவா? 137 00:08:45,567 --> 00:08:47,819 -வருந்துகிறோம், கிரிக்கெட். -ஆம். 138 00:08:48,362 --> 00:08:50,864 ஆம். நானும்தான். 139 00:09:05,546 --> 00:09:08,966 சரி. தொழில்நுட்பரீதியாக இது அவர்களின் தவறு கிடையாது. 140 00:09:09,842 --> 00:09:12,511 அதாவது, நாம் இதை மாதக்கணக்கில் செய்து கொண்டிருக்கிறோம். 141 00:09:12,594 --> 00:09:13,762 இன்னும் இரண்டு வாரங்கள் முடியாதா? 142 00:09:13,846 --> 00:09:16,056 காலநிலை மாற்றத்துக்கு யாரோ ஒருவர் 143 00:09:16,139 --> 00:09:19,476 ஏதோ செய்கிறார் என்று மக்கள் எப்படிக் கருதுகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? 144 00:09:19,977 --> 00:09:21,645 அந்த யாரோ நாம்தான். 145 00:09:22,479 --> 00:09:24,773 சில சமயங்களில் அந்த யாரோவாக இருக்க நான் விரும்பவில்லை. 146 00:09:25,607 --> 00:09:26,608 புரிகிறது. 147 00:09:26,692 --> 00:09:30,696 இப்போது டேலன்ட் ஷோவை மிஸ் செய்யப் போகிறோம். இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது. 148 00:09:30,779 --> 00:09:32,406 அதை தனித்தனியாக பதிவு செய்ய முடியும். 149 00:09:33,699 --> 00:09:35,576 மக்கள் பூமியை கெடுக்காமல் இருந்திருக்கலாம். 150 00:09:37,202 --> 00:09:39,121 -அதற்கு தாமதம் ஆகவில்லை. -ஒருவேளை இருக்கலாம். 151 00:09:44,084 --> 00:09:47,796 சரி. எனவே நான் பாடலை சோதித்துப் பார்த்தேன். அதைக் கேட்க வேண்டுமா? 152 00:09:48,922 --> 00:09:50,132 எனக்காக வாசி. 153 00:09:52,718 --> 00:09:58,515 ஒரு தனிமையான கிரகத்தில், ஹாலோகிராம்களைப் போல, நாம் ஒளியுடன் மட்டுமே நடனமாடுகிறோம் 154 00:09:58,599 --> 00:10:02,436 நீ இருக்கும் இடத்திலிருந்தே நீ என் கையைப் பிடிக்கலாம் 155 00:10:02,936 --> 00:10:06,607 என் கையைப் பற்றிக்கொள் நாம் வானம் முழுக்க சுற்றித் திரியலாம் 156 00:10:06,690 --> 00:10:09,067 எதிரொலிகளைப் போல, ஒருபோதும் விட்டுவிடாதே 157 00:10:09,151 --> 00:10:11,403 நூறு மில்லியன் மைல்கள் 158 00:10:11,486 --> 00:10:13,947 சிரிப்பை விட பிரகாசமானது 159 00:10:14,031 --> 00:10:16,617 நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கிருப்பேன் 160 00:10:16,700 --> 00:10:21,747 நாம் முழுநிலவைப் பார்க்கலாம் உன்னையும் என்னையும் தவிர இங்கே யாருமில்லை 161 00:10:22,289 --> 00:10:24,499 பிரகாசத்தில், நாமும் மின்னுகிறோம் 162 00:10:25,501 --> 00:10:28,337 கொஞ்சம் பொறு, நாம் மின்னுகிறோம் 163 00:10:30,005 --> 00:10:31,757 ஹேய், மகனே. வருகிறாயா? 164 00:10:31,840 --> 00:10:33,300 இதோ வருகிறேன். 165 00:10:35,135 --> 00:10:37,596 நான் போய் என் அப்பாவுடன் செஸ் விளையாட வேண்டும். விரோத போட்டி. 166 00:10:39,348 --> 00:10:41,266 இரவு வணக்கம் சொல்ல மறக்காதே. 167 00:10:41,350 --> 00:10:42,351 மறக்கமாட்டேன். 168 00:11:05,874 --> 00:11:09,294 ஒருமுறை பயன்படுத்தப்படும் துண்டு 169 00:11:26,061 --> 00:11:27,187 இரவு வணக்கம், நண்பா. 170 00:11:34,111 --> 00:11:35,904 இன்று வேலைகளை கவனித்துக் கொண்டதற்கு நன்றி, பக். 171 00:11:36,405 --> 00:11:37,406 பரவாயில்லை. 172 00:11:37,948 --> 00:11:40,742 புயல் தாக்கும் முன் நாம் தோண்டிய இடத்தைப் பாதுகாத்துவிட்டு வருகிறோம். 173 00:11:43,120 --> 00:11:44,371 நீ நலமா? 174 00:11:44,913 --> 00:11:45,914 கண்டிப்பாக. 175 00:11:47,291 --> 00:11:49,918 -மறக்காதே... -படுக்கையைத் தயார்செய்ய. மறக்கமாட்டேன். 176 00:12:14,318 --> 00:12:16,111 அந்த கிரில் செய்யப்பட்ட சீஸ் சாண்ட்விச் அருமையாக இருக்கிறது. 177 00:12:17,487 --> 00:12:20,032 பள்ளியில் ஒன்றாக உணவு உண்பதைப் போன்ற உருவகம் நம்மை தனிமைப்படுத்துவதைக் குறைக்கும் 178 00:12:20,115 --> 00:12:21,909 என்று தெரியும், ஆனால் நேர்மையாகச் சொன்னால், 179 00:12:21,992 --> 00:12:26,413 எந்த அளவிற்கு வீட்டைப் போல உணர்கிறேனோ, அந்த அளவிற்கு அதை மிஸ் செய்கிறேன். 180 00:12:28,415 --> 00:12:32,044 சரி. உன்னை உற்சாகப்படுத்த ஒரு ஜோக் சொல்கிறேன். கேள். 181 00:12:32,794 --> 00:12:35,714 ஏன் ஏலியன்கள் இன்னும் நம் சூரிய குடும்பத்திற்குள் வரவில்லை? 182 00:12:36,715 --> 00:12:39,593 அவர்கள் விமர்சனங்களைப் படித்திருப்பார்கள். ஒரு ஸ்டார். 183 00:12:42,095 --> 00:12:43,680 "அதை பார்த்திருப்பார்களா"? 184 00:12:44,264 --> 00:12:47,976 இரண்டாவதாக, எப்படி 13 வயதான உனக்கு பழைய ஜோக்குகள் மட்டுமே தெரிந்திருக்கிறது? 185 00:12:48,060 --> 00:12:49,102 உன்னை சிரிக்க வைத்தேனே. 186 00:12:49,186 --> 00:12:50,896 நான் உன்னைப் பார்த்து சிரித்தேன், உன் ஜோக்குக்காக அல்ல. 187 00:12:50,979 --> 00:12:52,439 ஆனால் முயற்சி செய்ததற்கு நன்றி. 188 00:12:54,942 --> 00:12:56,860 நீ எப்படி எப்பொழுதும் நம்பிக்கையுடன் இருக்கிறாய்? 189 00:12:57,819 --> 00:12:58,904 இது விருப்பத் தேர்வு. 190 00:13:03,408 --> 00:13:04,826 உன்னிடம் ஒன்று கேட்கலாமா? 191 00:13:05,327 --> 00:13:06,495 கேள். 192 00:13:06,578 --> 00:13:09,623 எப்போதாவது உன் பெற்றோர் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறதா? 193 00:13:09,706 --> 00:13:11,625 -எப்போதும். -கேஸி. 194 00:13:12,459 --> 00:13:13,460 மன்னித்துவிடு. 195 00:13:14,044 --> 00:13:17,631 அதாவது, நம்மை இங்கு அழைத்து வந்ததற்காக எப்போதாவது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறதா? 196 00:13:18,924 --> 00:13:20,759 சில நேரங்களில் முக்கியமில்லாதவள் போல உணர்கிறேன். 197 00:13:20,843 --> 00:13:22,219 அல்லது பேசும் செடி போல. 198 00:13:24,054 --> 00:13:25,973 பார், நாம் என்ன செய்கிறோம் என்பது புரிகிறது. 199 00:13:26,557 --> 00:13:31,937 இது முக்கியம், ஆனால் இயற்கை காற்றையும் ஓட்டத்தையும் மிஸ் செய்கிறேன். 200 00:13:35,691 --> 00:13:36,942 என் நண்பர்களை மிஸ் செய்கிறேன். 201 00:13:38,318 --> 00:13:39,319 நான் உன் நண்பன்தான். 202 00:13:40,320 --> 00:13:45,701 தெரியும். வீட்டை மிஸ் செய்கிறேன். அவ்வளவுதான். 203 00:13:46,743 --> 00:13:49,872 பார், உன்னை விட நான் இங்கு இருக்க விரும்பவில்லை. 204 00:13:51,331 --> 00:13:53,208 ஆனால், அதாவது, நாம் என்ன செய்ய முடியும்? 205 00:13:53,834 --> 00:13:56,795 எனக்குத் தெரியும். நான் வருந்துகிறேன். 206 00:13:58,088 --> 00:13:59,590 என்ன நினைக்கிறேன் தெரியுமா? 207 00:13:59,673 --> 00:14:02,676 நாம் விஷயங்களை ஏற்றுக்கொண்டு இதிலிருக்கும் சிறப்பானவற்றைப் பெறலாம். 208 00:14:04,970 --> 00:14:05,971 நீ சொன்னது சரியாக இருக்கலாம். 209 00:14:07,306 --> 00:14:09,433 கோரஸின் இரண்டாம் பாதியை எனக்குக் கிடைத்துவிட்டது, 210 00:14:09,516 --> 00:14:11,059 பிறகு நாம் அதை பதிவு செய்யலாம். 211 00:14:12,352 --> 00:14:15,272 நாம் முழுநிலவைப் பார்க்கலாம் 212 00:14:16,064 --> 00:14:18,734 உன்னையும் என்னையும் தவிர இங்கே யாருமில்லை 213 00:14:19,318 --> 00:14:21,904 பிரகாசத்தில், நாமும் மின்னுகிறோம் 214 00:14:22,738 --> 00:14:26,158 கொஞ்சம் பொறு, நாம் மின்னுகிறோம் 215 00:14:26,241 --> 00:14:29,745 நாம் பால்வீதியைப் பின்தொடரலாம் 216 00:14:30,245 --> 00:14:34,374 நமக்கு விளையாட வரும் நட்சத்திரங்கள் இருக்கின்றன 217 00:14:34,958 --> 00:14:38,378 இன்னொரு நாளின் பிரகாசத்தோடு 218 00:14:38,462 --> 00:14:42,716 எனவே காத்திரு, நாம் கிட்டத்தட்ட வீட்டிற்கு வந்துவிட்டோம் 219 00:14:43,300 --> 00:14:45,302 இரண்டாவது பகுதி, கோரஸையும் தொடர்ந்து பாடு. 220 00:14:47,638 --> 00:14:50,682 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 221 00:14:50,766 --> 00:14:52,976 விண்மீன் குழுக்களில் 222 00:14:53,060 --> 00:14:56,647 நம்முடைய கனவுகள் எல்லாவற்றையும் வரைபடமாக வரைவோம் 223 00:14:56,730 --> 00:15:01,860 அது மங்கலாகத்தான் இருக்கிறது ஆனால் தெளிவான இரவில் நீ அதைப் பார்க்கலாம் 224 00:15:01,944 --> 00:15:04,196 நோக்கங்கள், துண்டிக்கப்பட்ட இணைப்புகள் 225 00:15:04,279 --> 00:15:06,240 நாம் மிதந்து கொண்டிருக்கிறோம் 226 00:15:06,990 --> 00:15:11,828 உயிர்ப்புடன் இருக்கும் உணர்வோடு ஆம் நாம் பறக்கப் போகிறோம் 227 00:15:11,912 --> 00:15:16,917 முழுநிலவைப் பார்க்கலாம் உன்னையும் என்னையும் தவிர இங்கே யாருமில்லை 228 00:15:17,626 --> 00:15:23,048 பிரகாசத்தில், நாமும் மின்னுகிறோம் கொஞ்சம் பொறு, நாம் மின்னுகிறோம் 229 00:15:23,131 --> 00:15:24,967 நாம் பால்வீதியைப் பின்தொடரலாம் 230 00:15:25,551 --> 00:15:27,594 நமக்கு விளையாட வரும் நட்சத்திரங்கள் இருக்கின்றன 231 00:15:28,470 --> 00:15:30,264 -இன்னொரு நாளின் வெளிச்சத்தில் -கேஸி? 232 00:15:31,181 --> 00:15:34,977 காத்திரு, நாம் கிட்டத்தட்ட வீட்டிற்கு வந்துவிட்டோம் 233 00:15:36,311 --> 00:15:38,647 கேஸி! கேஸ்... 234 00:15:38,730 --> 00:15:40,148 கேஸி? 235 00:15:44,528 --> 00:15:45,737 தொடங்கு நிறுத்து 236 00:15:55,330 --> 00:15:56,582 இல்லை. 237 00:15:56,665 --> 00:15:59,209 கிரிக்கெட், இது D வகை புயல். 238 00:15:59,293 --> 00:16:02,087 தாக்கத்திற்குத் தயாராகு. பிரதான மையத்துக்கு போ. இப்போதே! 239 00:16:07,342 --> 00:16:08,802 -ஜன்னல் கவசங்கள் ஏற்று. -செய்கிறேன். 240 00:16:11,013 --> 00:16:14,433 -ஜெனரேட்டர் இயங்குகிறது. ஏர் லாக்குகளை மூடு. -மூடுகிறேன். 241 00:16:14,516 --> 00:16:15,976 ஏர் லாக்குகள் மூடப்படுகின்றன. 242 00:16:17,269 --> 00:16:18,270 மூடப்பட்டது. 243 00:16:19,688 --> 00:16:22,232 வானிலை ரோவருக்கு என்ன ஆனது? அது ஏன் நம்மை எச்சரிக்கவில்லை? 244 00:16:22,316 --> 00:16:24,526 அது ரீடிங்குகளை அனுப்பும் முன் புயல் தாக்கியிருக்க வேண்டும். 245 00:16:24,610 --> 00:16:27,487 தண்ணீர், சூரிய ஒளி, சுற்றுச்சூழல், எல்லாம் நன்றாக இருக்கிறது. 246 00:16:27,988 --> 00:16:29,072 ஹாப் பூட்டப்பட்டுவிட்டது. 247 00:16:31,116 --> 00:16:34,411 ப்ராக்ஸிமிட்டி எச்சரிக்கை. 248 00:16:35,704 --> 00:16:37,247 தாக்கத்திற்குத் தயாராகுங்கள். 249 00:16:38,040 --> 00:16:39,416 தாக்கத்திற்குத் தயாராகுங்கள். 250 00:16:40,792 --> 00:16:41,710 வாழ்விடக் கட்டுப்பாட்டு மையம் 251 00:17:00,187 --> 00:17:01,688 தொடர்பு துண்டிக்கப்பட்டது 252 00:17:02,564 --> 00:17:04,273 பூமியுடனான தொடர்பை இழந்துவிட்டோம். 253 00:17:10,489 --> 00:17:11,949 சிக்னலின் வலிமை சிக்னல் இழந்தது 254 00:17:19,957 --> 00:17:21,165 இல்லை. 255 00:17:22,041 --> 00:17:24,336 கேஸியின் ஹாபில் மின்சாரம் இல்லை. நாம் போய் அவர்களுக்கு உதவ வேண்டும். 256 00:17:24,419 --> 00:17:26,922 பொறு, கிரிக்கெட். ஆக்ஸிஜன் குறைவதை உறுதிப்படுத்துகிறது. 257 00:17:27,005 --> 00:17:28,173 டிரோன் நன்றாக இருக்கிறது. 258 00:17:28,257 --> 00:17:30,259 அம்மா, நாம் அங்கேயே போய், அவர்கள் நலமாக இருப்பதை உறுதி செய்யலாமா? 259 00:17:30,342 --> 00:17:33,846 பக், கேள். ரோவரின் கதவு சிக்கியிருக்கிறது, ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. 260 00:17:33,929 --> 00:17:37,057 ஒரு தண்ணீர் பிரச்சினை. ரோவர் செயல்படுகிறதா என்பது கூட நமக்கு தெரியவில்லை. 261 00:17:37,140 --> 00:17:38,350 நீரோட்டத்தை சரி செய்து, 262 00:17:38,433 --> 00:17:40,978 சுவாசிக்க காற்றைக் கொடுக்கும் எலெக்ட்ரோலைசிஸ் இயந்திரத்தை இயக்க வேண்டும். 263 00:17:41,061 --> 00:17:42,980 நம் ஆதார வளங்கள் இல்லாமல், பெரும் சிக்கலில் இருக்கிறோம். 264 00:17:43,063 --> 00:17:45,566 மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன் நம் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 265 00:17:45,649 --> 00:17:48,235 இப்போது, அது நீர் அமைப்பை அணுகுவது பற்றியது. 266 00:17:48,819 --> 00:17:52,656 நம் நிலைமையை சரிசெய்துவிட்டு, பிறகு கேஸி மீது கவனம் செலுத்தலாம். சரியா? 267 00:17:52,739 --> 00:17:54,116 ஆக்செஸ் பேனல் வெளியே உள்ளது. 268 00:17:54,199 --> 00:17:56,952 நாம் அங்கு போக முடியாது. ஏர் லாக் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. 269 00:18:06,461 --> 00:18:09,006 இந்த சிறிய பாதை வழியாக பேனலுக்குச் சென்று, 270 00:18:09,506 --> 00:18:11,466 நீர் ஓட்டத்தை மற்ற கால்வாய்க்கு மாற்றினால்? 271 00:18:11,550 --> 00:18:13,302 இது மனிதர்கள் நுழைய போதுமானதாக இல்லை. 272 00:18:14,178 --> 00:18:16,471 என்னால் முடியும். சுண்டெலி போல. 273 00:18:45,792 --> 00:18:47,461 -ச்சே. -கிரிக்கெட். 274 00:18:47,544 --> 00:18:49,338 -நாம் அவளை வெளியே இழுக்க வேண்டும். -காத்திரு. 275 00:18:54,760 --> 00:18:55,761 நான் நன்றாக இருக்கிறேன். 276 00:18:58,055 --> 00:18:59,473 சரி. 277 00:19:00,724 --> 00:19:02,017 ஆக்செஸ் பேனல் 278 00:19:10,734 --> 00:19:12,611 நீர் ஓட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. 279 00:19:15,030 --> 00:19:16,740 நீர் அழுத்தத்தை நிலைப்படுத்துதல். 280 00:19:26,625 --> 00:19:28,252 இன்னும் பூமியிலிருந்து தொடர்பு இல்லை. 281 00:19:29,461 --> 00:19:31,004 ஆக்ஸிஜன் கசிவு? 282 00:19:31,588 --> 00:19:33,966 தோட்டத்தின் ஏர் லாக்கை மூடிவிட்டோம். இது நிறுத்தப்பட்டது. 283 00:19:36,093 --> 00:19:37,427 எல்லா தாவரங்களும் இறந்துவிட்டால்? 284 00:19:38,220 --> 00:19:42,307 அது நம் வேலைக்கு பேரழிவாக இருக்கும், ஆனால் நமக்கு பிரச்சினை இல்லை. 285 00:19:42,933 --> 00:19:45,227 மீண்டும் நடவு செய்து புதிதாக வளர்க்க தொடங்க வேண்டும். 286 00:19:45,310 --> 00:19:47,688 அடுத்த விநியோகத்தின் போது புதிய தாவரங்களை ஆர்டர் செய்வோம். 287 00:19:47,771 --> 00:19:48,814 புதிய சுற்றுச்சூழல் அமைப்பைத் தொடங்க. 288 00:19:49,773 --> 00:19:51,483 வீட்டில் அது அவ்வளவு எளிதல்ல. 289 00:19:51,567 --> 00:19:54,528 ஆம், தாவரங்களை ஆர்டர் செய்ய வேறு பூமி இல்லை. 290 00:19:54,611 --> 00:19:57,155 கேஸி? 291 00:19:58,657 --> 00:20:01,159 நம்மைப் போலவே அவர்களும் நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என உறுதியாக நம்புகிறேன். 292 00:20:01,785 --> 00:20:03,912 அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாமா? 293 00:20:03,996 --> 00:20:05,789 தொலைத்தொடர்பு சாதனங்கள் வேலை செய்யவில்லை. 294 00:20:05,873 --> 00:20:07,332 அதோடு, சூரிய ஒளியை இழக்கிறோம். 295 00:20:07,416 --> 00:20:10,252 எனவே, உபயோகத்தைக் குறைத்து, ஒவ்வொரு கிலோவாட் மின்சாரத்தையும் சேமிக்க வேண்டும். 296 00:20:12,588 --> 00:20:13,881 நாளை, பக். 297 00:20:53,128 --> 00:20:54,296 இனிய இரவாக அமையட்டும், நண்பா. 298 00:20:58,091 --> 00:20:59,176 ஹேய். 299 00:20:59,259 --> 00:21:01,011 அவன் திரும்ப சமிக்ஞை செய்யவில்லை. 300 00:21:03,430 --> 00:21:04,890 எப்போதும் திரும்ப சமிக்ஞை செய்வான். 301 00:21:07,851 --> 00:21:11,563 கேஸி அநேகமாக நகைச்சுவை செய்துகொண்டு, 302 00:21:12,064 --> 00:21:14,399 தன் அப்பாவுடன் டார்ச் லைட் வெளிச்சத்தில் செஸ் விளையாடிக்கொண்டிருக்கலாம். 303 00:21:17,694 --> 00:21:22,658 இன்று போய்விட்டது. நாளை நடவடிக்கை எடுப்போம். சத்தியமாக. 304 00:21:26,537 --> 00:21:27,746 உங்களை நேசிக்கிறேன், அம்மா. 305 00:21:29,164 --> 00:21:30,457 ரொம்பவுமா? 306 00:21:30,541 --> 00:21:31,834 ரொம்பவும். 307 00:21:43,136 --> 00:21:44,972 கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. அதை அடைத்துவிட்டேன். 308 00:21:45,722 --> 00:21:47,891 தாவரங்கள் நன்றாக இருக்கின்றன, டிரோன்கள் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. 309 00:21:47,975 --> 00:21:51,603 நாம் மற்ற ஹேபுக்கு போக முடியாது. மன்னித்துவிடு, கிரிக்கெட். 310 00:21:52,396 --> 00:21:55,524 உள் கதவை திறக்க முடிந்தது, ஆனால் ரோவரை ஓட்ட வாய்ப்பில்லை. 311 00:21:55,607 --> 00:21:57,985 கேமராவில் பார்க்க முடியவில்லை. காற்று அதைத் தள்ளியிருக்க வேண்டும். 312 00:21:58,068 --> 00:21:59,945 எனவே, நாம் பூட்டப்பட்டிருக்கிறோம். 313 00:22:00,028 --> 00:22:01,446 எச்சரிக்கை. ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. 314 00:22:01,530 --> 00:22:04,283 மற்ற ஹேபில் உயிர் வாழ உதவும் அமைப்பு பல ஆக்ஸிஜன் கசிவுகளைக் காட்டுகிறது. 315 00:22:04,366 --> 00:22:05,993 -மோசமாகவா? -இன்னும் இல்லை. 316 00:22:08,954 --> 00:22:10,205 டிரோன் எப்படி? 317 00:22:10,873 --> 00:22:12,165 அதற்கு என்ன? 318 00:22:12,249 --> 00:22:14,543 அதாவது, அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்கக் கூட முடியாதா? 319 00:22:15,586 --> 00:22:18,505 பக், நம்மிடம் உள்ள ஒரே டிரோன் இதுதான். நம்மிடம் இன்னொன்று இல்லை. 320 00:22:18,589 --> 00:22:21,300 -தோண்டிய இடத்தைச் சரிபார்க்க வேண்டும். -அதை பிறகு பார்க்கலாம். 321 00:22:21,383 --> 00:22:23,844 சரியா, மேக்ஸ்? அதாவது, அவர்களின் ஆக்ஸிஜனைப் பற்றி கவலைப்படுகிறேன். 322 00:22:25,762 --> 00:22:26,763 நான் பார்த்துக்கொள்கிறேன். 323 00:22:28,515 --> 00:22:29,892 அம்மா, என்னால் முடியும். 324 00:22:31,518 --> 00:22:33,020 அது நேர் திசையில் இருக்கிறது. 325 00:22:33,896 --> 00:22:35,898 -கிரிக்கெட்... -அவன் என் உற்ற நண்பன். 326 00:22:41,486 --> 00:22:43,030 பறக்கத் தொடங்கிவிட்டது. 327 00:22:49,077 --> 00:22:50,287 நன்றாக செய்தாய், பக். 328 00:22:51,580 --> 00:22:52,581 ஏறக்குறைய அடைத்துவிட்டோம். 329 00:22:53,081 --> 00:22:54,374 உன் அடிவானத்தைப் பார். 330 00:22:59,129 --> 00:23:02,341 வரம்பு எச்சரிக்கை. டிரோனுடனான தொடர்பு பாதிக்கப்பட்டது. 331 00:23:05,260 --> 00:23:08,180 நிலைமை மோசமாக உள்ளது. டிரோன் தொடர்பை இழந்துவிட்டது. 332 00:23:08,263 --> 00:23:09,723 இல்லை! 333 00:23:16,271 --> 00:23:20,484 அந்த உபகரணத்திற்கு மாற்று எதுவும் இல்லை, அமலே. அது போய்விட்டது. 334 00:23:21,902 --> 00:23:24,071 அது முட்டாள்தனம். நான் வருந்துகிறேன். 335 00:23:24,154 --> 00:23:26,073 ஏர் லாக்குக்கு ஏற்பட்ட சேதம் நம்மை உள்ளே அடைத்தது, 336 00:23:26,156 --> 00:23:28,033 இப்போது டிரோன் இல்லாமல் எதையும் பார்க்க முடியாது. 337 00:23:28,867 --> 00:23:33,413 -இனியும் அபாயமானதை செய்ய முடியாது. -நம் மீது கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான். 338 00:23:34,831 --> 00:23:36,917 இது அது பற்றியது அல்ல. 339 00:23:38,252 --> 00:23:41,338 இந்த முழு பரிசோதனையிலும், நாம் செவ்வாய் கிரகத்தில் இருக்கக் காரணம் 340 00:23:41,421 --> 00:23:43,966 மனிதகுலத்திற்கு உதவுவதுதான் என்று இருவரும் கற்றுக் கொடுத்தீர்கள். 341 00:23:44,466 --> 00:23:46,844 உயிர்களைக் காப்பாற்ற ஒரு உயிர்க்காப்புப் படகை செய்வது. 342 00:23:47,553 --> 00:23:50,806 ஒவ்வொரு சிறிய செயலும் மாற்றத்தை ஏற்படுத்தும். சரியா? 343 00:23:51,807 --> 00:23:52,891 -ஆம். -நிச்சயமாக. 344 00:23:53,433 --> 00:23:56,103 இப்போது அங்கே மனிதர்கள் இருக்கிறார்கள், இப்போது. 345 00:23:57,437 --> 00:24:01,692 கேஸி திரும்பி சமிக்ஞை தரவில்லை. ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? 346 00:24:05,195 --> 00:24:06,905 அவர்களுக்கு உதவி தேவையா என்று பார்க்க வேண்டும். 347 00:24:07,990 --> 00:24:09,157 கிரிக்கெட். 348 00:24:09,241 --> 00:24:11,910 நிஜமாகவா? நாம் முயற்சி கூட செய்ய மாட்டோம்? 349 00:24:13,495 --> 00:24:16,665 அதுவே நாமாக இருந்தால்? 350 00:24:17,916 --> 00:24:19,501 அவர்கள் வந்து நம்மை காப்பாற்ற வேண்டும் என விரும்பமாட்டீர்களா? 351 00:24:21,044 --> 00:24:23,380 பக், ரோவர் உடைந்துவிட்டது. 352 00:24:23,463 --> 00:24:26,175 நாம் உடைந்த ஏர் லாக்குடன் உள்ளே சிக்கியிருக்கிறோம். 353 00:24:27,676 --> 00:24:29,303 நாம் எப்படி உதவுவோம் என்கிறாய்? 354 00:24:30,012 --> 00:24:31,013 நாம் நடப்போம். 355 00:24:35,184 --> 00:24:36,810 இங்கே உள்ள ஆக்ஸிஜன் மூலம். 356 00:24:37,311 --> 00:24:40,189 அங்கு செல்வதற்கு ஆறரை மணி நேர ஆக்ஸிஜன் தரும். 357 00:24:40,898 --> 00:24:45,235 அதுபோதும். ஆனால் அது ஒரு வழி பயணம். 358 00:24:46,278 --> 00:24:48,488 உடைந்த பிரதான ஏர் லாக்கை திறக்க முடிந்தால், 359 00:24:48,572 --> 00:24:49,907 ஹேபில் உள்ள எல்லா காற்றையும் இழப்போம். 360 00:24:49,990 --> 00:24:53,911 நாம் அதை மீண்டும் மூட முடியாவிட்டால், திரும்பி வர முடியாது. 361 00:24:55,662 --> 00:24:57,539 அம்மா, உங்களால் முடியும். 362 00:24:58,123 --> 00:25:01,251 நாம் இதை செய்ய முடியும். நம்மால் முடியும் என்று எனக்குத் தெரியும். 363 00:25:43,544 --> 00:25:45,462 அழுத்தத்தை நீக்குவது தொடங்கப்பட்டது. 364 00:26:34,261 --> 00:26:35,554 அம்மாக்களே? 365 00:26:39,391 --> 00:26:41,560 நீங்கள் விளையாடுகிறீர்கள். 366 00:26:45,522 --> 00:26:46,815 நாம் ஒருபோதும் வெளியேறவில்லையா? 367 00:26:48,192 --> 00:26:49,276 உங்களுக்குத் தெரியுமா? 368 00:26:50,777 --> 00:26:51,778 இல்லை! 369 00:26:52,487 --> 00:26:54,239 நிச்சயமாக இல்லை. 370 00:26:56,575 --> 00:26:57,576 கிரிக்கெட். 371 00:27:05,918 --> 00:27:07,753 இப்போது இங்கே என்ன நடக்கிறது? 372 00:27:07,836 --> 00:27:11,423 நீ நலமாக இருக்கிறாய். வருத்தப்படுகிறாயா? அதாவது, நான்... 373 00:27:11,507 --> 00:27:13,592 வருத்தமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆனால் உறுதியாக தெரியவில்லை. 374 00:27:13,675 --> 00:27:15,427 இப்போது எல்லா உணர்வுகளும் ஏற்படுகின்றன. 375 00:27:16,345 --> 00:27:18,555 எனக்கு கோபம்தான், ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 376 00:27:20,182 --> 00:27:21,433 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 377 00:27:22,017 --> 00:27:23,352 நீ நலமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. 378 00:27:26,855 --> 00:27:28,065 உன் பெற்றோர்கள் எங்கே? 379 00:27:28,148 --> 00:27:31,068 அவர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. நாங்களும் இப்போதுதான் கண்டுபிடித்தோம். 380 00:27:32,069 --> 00:27:36,365 நான் 14 மாதங்கள் ரோவரை ஓட்டினேன். 381 00:27:37,491 --> 00:27:41,245 அது ஒரு சிமுலேஷன். ஹைட்ராலிக்ஸ் கொண்ட ஒரு நிலையான வீடியோ கேம். 382 00:27:41,912 --> 00:27:43,747 செவ்வாய் கிரகத்தில் வாழும் அழுத்தத்தோடு 383 00:27:43,830 --> 00:27:46,625 ஒரு குடும்பம் வாழ முடியும் என்பதை உறுதி செய்வதே பரிசோதனையின் நோக்கம். 384 00:27:46,708 --> 00:27:48,836 ஒரு நெருக்கடியில் பிரச்சினையை தீர்க்க ஒன்றாக வேலை செய்ய முடியும் என்பதையும். 385 00:27:50,963 --> 00:27:54,883 எங்களுக்கு... புரிகிறது என்று நினைக்கிறேன். 386 00:27:55,717 --> 00:27:58,136 நான் இப்போது ஒருவிதமாக உணர்ச்சிவசப்படுகிறேன். 387 00:27:58,720 --> 00:28:02,516 நீங்கள் சமயோசிதம், குழுப்பணி, மனித வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பு எல்லாவற்றையும் காட்டினீர்கள். 388 00:28:02,599 --> 00:28:04,726 தேவையான எல்லா சோதனைகளிலும் நீங்கள் சிறந்து விளங்கினீர்கள். 389 00:28:04,810 --> 00:28:09,439 செவ்வாய் கிரகத்தில் நாங்கள் குடியேற்றம் செய்து வாழவைக்க தேவையான குடும்பம் நீங்கள். 390 00:28:10,399 --> 00:28:12,150 நாங்கள் போகத் தேவையில்லை என்றால்? 391 00:28:14,236 --> 00:28:16,989 செவ்வாய் கிரகம் உயிர்க்காப்புப் படகு அல்ல. அது பாடம். 392 00:28:19,408 --> 00:28:23,453 நாங்கள் 14 மாதங்கள் கார்பன்-நியூட்ரல், கழிவற்ற வாழ்க்கையை வாழ்ந்தோம். 393 00:28:24,204 --> 00:28:27,457 உண்மையான தியாகம் தனியாக இருப்பதுதான். 394 00:28:28,917 --> 00:28:31,837 சுத்தமாக வாழ நாம் ஏன் செவ்வாய் கிரகம் வரை போக வேண்டும்? 395 00:28:32,880 --> 00:28:34,923 இவற்றையெல்லாம் பூமியில் நம்மால் செய்ய முடிந்தால், 396 00:28:35,007 --> 00:28:36,800 அது உண்மையில் இரு உலகங்களிலும் நல்லது. 397 00:28:38,177 --> 00:28:40,762 நாம் ஒன்றாக சேர்ந்து பூமியை காப்பாற்றலாம். நமக்கு உயிர்க்காப்புப் படகு தேவையில்லை. 398 00:28:43,140 --> 00:28:46,977 கிரிக்கெட் ஜூன், கடந்த 24 மணிநேரத்தில் நீ செய்தது 399 00:28:47,060 --> 00:28:48,562 எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடம். 400 00:28:49,938 --> 00:28:51,273 நீ பிறவியிலேயே தலைமை பண்பு கொண்டவள். 401 00:28:51,940 --> 00:28:52,941 நானா? 402 00:28:53,025 --> 00:28:55,152 ஆம். நீதான். 403 00:28:57,613 --> 00:28:58,864 நீ இங்கே உன் வேலையைச் செய். 404 00:28:59,489 --> 00:29:01,825 செவ்வாய் கிரக உயிர்க்காப்புப் படகு திட்டத்துடன் நாம் முன்னேறுவோம். 405 00:29:02,826 --> 00:29:04,203 அது தேவைப்படாது என்பது என் நம்பிக்கை. 406 00:29:07,331 --> 00:29:10,209 நாம் தொடங்குவதற்கு முன் இன்னும் ஒரு விஷயம். 407 00:29:11,960 --> 00:29:14,463 -நேரம் என்ன? -மதியம் 3:00 மணி. 408 00:29:16,757 --> 00:29:17,758 இன்னும் நேரம் இருக்கிறது. 409 00:29:18,717 --> 00:29:21,261 கேஸி, உன்னுடைய சீக்வென்சர் இருக்கிறதா? 410 00:29:22,596 --> 00:29:23,472 ஆம். 411 00:29:24,473 --> 00:29:28,936 ஆம், நாம் பறக்கப் போகிறோம், முழுநிலவைப் பார்க்கலாம் 412 00:29:29,770 --> 00:29:34,441 உன்னையும் என்னையும் தவிர இங்கே யாருமில்லை, பிரகாசத்தில், நாம் மின்னுகிறோம் 413 00:29:35,484 --> 00:29:38,070 கொஞ்சம் பொறு, நாம் மின்னுகிறோம் 414 00:29:38,153 --> 00:29:40,531 நாம் பால்வீதியைப் பின்தொடரலாம் 415 00:29:40,614 --> 00:29:45,702 விளையாட வரும் நட்சத்திரங்கள் இருக்கின்றன இன்னொரு நாளின் வெளிச்சத்தில் 416 00:29:45,786 --> 00:29:48,997 எனவே காத்திரு, நாம் கிட்டத்தட்ட வீட்டிற்கு வந்துவிட்டோம் 417 00:29:49,081 --> 00:29:52,334 முழுநிலவு 418 00:29:54,711 --> 00:29:57,047 முழுநிலவு 419 00:29:57,130 --> 00:30:00,467 காத்திரு, நாம் கிட்டத்தட்ட வீட்டிற்கு வந்துவிட்டோம் 420 00:30:57,566 --> 00:30:59,568 வசனத் தமிழாக்கம் அருண்குமார்