1 00:00:08,800 --> 00:00:11,386 குழந்தைகளே, போகலாம்! நீங்கள் பள்ளிக்குப் போகத் தாமதமாகிறது! 2 00:00:18,143 --> 00:00:19,144 ஆஹா. 3 00:00:19,228 --> 00:00:21,396 ஜாக், அந்த சட்டையைத்தான் அணிய வேண்டுமா? இது அழுக்காக இருக்கிறது. 4 00:00:21,480 --> 00:00:23,148 இது அழுக்கு இல்லை. கறை. 5 00:00:23,732 --> 00:00:24,983 அப்படியென்றால்... 6 00:00:25,067 --> 00:00:27,194 வீட்டுக்கு வெளியே நீ அதை அணியக் கூடாது, சரியா? 7 00:00:27,277 --> 00:00:28,445 கேஸடி! 8 00:00:28,529 --> 00:00:29,905 மிகவும் சோர்வாக இருக்கிறேன். 9 00:00:29,988 --> 00:00:32,783 ஏனென்றால் இஸபெல்லுடன் கண்விழித்து அரட்டையடித்திருக்கிறாய். 10 00:00:32,866 --> 00:00:35,953 அது உண்மையில் இஸபெல் மட்டும் அல்ல, ஆனால்... 11 00:00:36,036 --> 00:00:37,538 தாவரவியல் திட்டம் எப்படிப் போகிறது? 12 00:00:37,621 --> 00:00:40,916 நன்றாக. மிகவும் நன்றாக இருக்கப்போகிறது. 13 00:00:40,999 --> 00:00:44,044 நீ இன்னும் தொடங்கவில்லையா? உன் குழுவில் உள்ள மற்றவர்கள் தொடங்கியிருப்பார்கள். 14 00:00:44,878 --> 00:00:46,421 எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. 15 00:00:46,505 --> 00:00:49,925 ஊஹும். 9 மணிக்குப் பிறகு காணொளி அரட்டை கூடாது, கேஸ். 16 00:00:50,425 --> 00:00:53,345 சரி. நினைவுக்கு வந்துவிட்டது. இன்றிரவு முப்பரிமாண அறை வேண்டும். 17 00:00:53,428 --> 00:00:55,681 "ஜோம்பி தீவிலிருந்து தப்பித்தல் 3" வெளியாகிறது. 18 00:00:56,390 --> 00:00:58,559 இம்முறை, நம்மை கைவிடப்பட்ட கிடங்கில் விடுகிறார்கள், 19 00:00:58,642 --> 00:01:00,185 மிகவும் தாமதமாவதற்கு முன்பு அங்கிருந்து தப்பிக்க வேண்டும். 20 00:01:00,269 --> 00:01:04,022 வாய்ப்பே இல்லை. அந்த விளையாட்டின் கடைசி இரண்டு பதிப்புகளால் உனக்கு கெட்ட கனவு வந்தது. 21 00:01:04,105 --> 00:01:05,147 என்ன? 22 00:01:05,232 --> 00:01:07,025 அப்பா. நான் இனியும் குழந்தை கிடையாது. 23 00:01:07,109 --> 00:01:08,110 மன்னித்துவிடு, முடியாது. 24 00:01:08,193 --> 00:01:11,530 -இந்த அடுப்பு மீண்டும் இயங்கவில்லை. -வயரை கழற்றிவிட்டு மீண்டும் மாட்டு. 25 00:01:11,613 --> 00:01:12,906 அது இயங்கப்போவதில்லை, அப்பா. 26 00:01:14,074 --> 00:01:17,369 ஆம், வயரைக் கழற்றி மாட்டுவதன் மூலம் சிக்கலான மின்னணு சாதனங்களைச் சரிசெய்ய முடியாது. 27 00:01:18,537 --> 00:01:19,538 சரி! 28 00:01:20,038 --> 00:01:21,915 ஆம். இது இயங்குகிறது. 29 00:01:50,652 --> 00:01:51,653 வரவேற்கிறோம் நியூட்டன் நடுநிலைப் பள்ளி 30 00:01:52,237 --> 00:01:53,614 அது இன்றா? 31 00:01:55,574 --> 00:01:59,369 முதல் Z3 விமர்சனம் இப்போதுதான் வந்தது. அதுதான் மிகவும் பயமுறுத்தும் ஒன்று என்கிறார்கள். 32 00:01:59,453 --> 00:02:00,704 அது பயமாக இருக்குமா, என்ன? 33 00:02:00,787 --> 00:02:02,289 ஆம். உன் பெற்றோர்களிடம் சொல்லாதே. 34 00:02:02,372 --> 00:02:04,833 இந்த விஷயத்தில் அவர்களின் தலையீடு அதிகமாக இருக்கும் என்று தெரியும். 35 00:02:04,917 --> 00:02:06,919 என்ன? இல்லை, அவர்கள் கண்டிப்பானவர்கள் கிடையாது. 36 00:02:07,002 --> 00:02:08,127 என்னால் காத்திருக்க முடியாது. 37 00:02:08,211 --> 00:02:10,714 அது 12 மணிநேரம் நான்கு நொடிகளில் விளையாட கிடைக்கும். 38 00:02:10,797 --> 00:02:13,592 இப்போது மூன்று, இப்போது இரண்டு, இப்போது... 39 00:02:15,636 --> 00:02:16,637 அருமையான பாதுகாப்பு உறை! 40 00:02:16,720 --> 00:02:17,721 தெரியும், சரியா? 41 00:02:17,804 --> 00:02:19,932 நகரத்தில் ஒரு அற்புதமான கடை இருக்கிறது. 42 00:02:20,015 --> 00:02:22,142 -நீ கற்பனை செய்யும் எல்லாவற்றையும் விற்கிறார்கள். -அப்படியா? 43 00:02:22,226 --> 00:02:24,937 நாளை ஜிம் வகுப்பிற்குப் பிறகு பள்ளி புகைப்படங்கள் எடுப்பதை நம்பமுடியவில்லை. 44 00:02:25,020 --> 00:02:27,356 -அநியாயம். நான் மிகவும் களைப்பாக இருப்பேன். -ஹேய், கேஸடி! 45 00:02:28,232 --> 00:02:30,943 தாவரவியல் திட்டத்தில் உன் பகுதியை என்னிடமும் டிம்மிடமும் எப்போது காட்டப்போகிறாய்? 46 00:02:31,026 --> 00:02:33,111 பிறகு. இன்னும் அதை முடிக்கவில்லை. 47 00:02:33,195 --> 00:02:35,697 சரி. நாங்கள் அதை சமர்ப்பிக்கும் முன்பு எல்லா பகுதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். 48 00:02:36,573 --> 00:02:37,866 புதிய குளம் எப்படி இருக்கிறது, டெஸ்? 49 00:02:37,950 --> 00:02:39,785 அற்புதமாக இருக்கிறது. விரைவில் வந்து பார்க்கிறாயா? 50 00:02:39,868 --> 00:02:40,869 ஆம்! 51 00:02:59,805 --> 00:03:00,806 ஜோம்பி தீவு 3. 52 00:03:00,889 --> 00:03:01,807 -ஹேய்! -என் முறை. 53 00:03:01,890 --> 00:03:02,891 நான் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 54 00:03:02,975 --> 00:03:06,770 ஜோம்பி தீவிலிருந்து தப்பித்தல் 3 இன்றிரவு வெளியாகிறது என்றேனே, நேரலையில் வரப்போகிறது. 55 00:03:06,854 --> 00:03:08,313 அதை விளையாட உனக்கு அனுமதியில்லை. 56 00:03:08,397 --> 00:03:10,315 -நிறுத்து! -திருப்பிக் கொடு, ஜாக். 57 00:03:10,399 --> 00:03:12,901 முடியாது! நீ இங்கே நீண்ட நேரமாக இருக்கிறாய். அறையை சுயநலமாக பயன்படுத்துவதை நிறுத்து! 58 00:03:14,069 --> 00:03:16,029 இங்கே என்ன நடக்கிறது? 59 00:03:16,113 --> 00:03:18,365 நான் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன், ஜாக் அதை மாற்றிவிட்டான். 60 00:03:18,448 --> 00:03:20,784 என் விளையாட்டிற்காக முப்பரிமாண அறை இன்றிரவு வேண்டும் என்று அவளிடம் சொல்லியிருந்தேன். 61 00:03:20,868 --> 00:03:23,328 அந்த விளையாட்டை விளையாட கூடாதென்று உன்னிடம் சொல்லியிருந்தோம். அது பயமாக இருக்கும். 62 00:03:23,412 --> 00:03:25,873 என்ன? என்னால் சமாளிக்க முடியும். 63 00:03:25,956 --> 00:03:27,749 கேஸடி, உனக்கு ஒதுக்கப்பட்ட பணியின் தேதி நெருங்குகிறது. 64 00:03:27,833 --> 00:03:30,794 உனக்கு அதிக நேரம் இருப்பதாக என்னிடம் சொல்லாதே. 65 00:03:31,545 --> 00:03:33,422 -உங்கள் இருவருக்கும் ஓய்வு தேவை. -என்... 66 00:03:35,382 --> 00:03:37,217 பெற்றோர் கட்டுப்பாடுகளை ஆன் செய்யப் போகிறேன். 67 00:03:38,760 --> 00:03:40,387 ஒரு வாரத்திற்கு முப்பரிமாண அறை கிடையாது. 68 00:03:41,138 --> 00:03:42,723 உங்கள் ஃபோன்களுக்கும் அதே கட்டுப்பாடுதான். 69 00:03:42,806 --> 00:03:44,349 -என்... -என்ன? ஏன்? 70 00:03:44,433 --> 00:03:47,227 ஏனென்றால் ஒவ்வொரு இரவும் காணொளி அரட்டையால் தாமதமாக தூங்குகிறாய். அதனால்தான். 71 00:03:47,311 --> 00:03:48,312 அவற்றைக் கொடுங்கள். 72 00:03:48,896 --> 00:03:51,857 பெற்றோர் கட்டுப்பாடுகளை ஆன் செய்த பிறகு திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். 73 00:04:01,700 --> 00:04:04,077 புதிது போன்றவை 74 00:04:15,214 --> 00:04:16,882 எல்லோரும் Z3 பற்றி பேசுகிறார்கள். 75 00:04:16,964 --> 00:04:19,760 அம்மா அப்பாவால் அந்த வாய்ப்பு முற்றிலும் கெட்டுப்போகப் போகிறது. 76 00:04:19,843 --> 00:04:21,053 நம் மீது போதுமான நம்பிக்கை வைப்பதில்லை. 77 00:04:21,136 --> 00:04:23,263 எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை எப்போது செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. 78 00:04:23,347 --> 00:04:25,098 வேலைகளை எப்படி முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். 79 00:04:26,517 --> 00:04:28,769 இந்த இடத்தில் நமக்குத் தேவையானது கிடைக்கும் என்று நினைக்கிறாயா? 80 00:04:28,852 --> 00:04:32,105 நீ கற்பனை செய்யும் எதையும் இவர்கள் விற்கிறார்கள் என்று டைலர் சொன்னான். 81 00:04:37,152 --> 00:04:38,987 ஹாய். எங்கள் முப்பரிமாண அறையில் பெற்றோர் கட்டுப்பாடுகளை 82 00:04:39,071 --> 00:04:41,365 ஆஃப் செய்யக்கூடிய ரிமோட்டைத் தேடுகிறோம். 83 00:04:42,658 --> 00:04:45,035 எங்கள் பெற்றோர்கள் தவறுதலாக ஆன் செய்துவிட்டனர். 84 00:04:45,118 --> 00:04:47,996 அவர்களுக்கு வயதாகிவிட்டதால், தொழில்நுட்பத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. 85 00:04:48,080 --> 00:04:50,165 பிறகு இந்த வினோதமான நிகழ்வு நடந்தது. 86 00:04:50,249 --> 00:04:52,501 யாரோ எங்கள் வீட்டின் உள்ளே புகுந்து ரிமோட்டைத் திருடிவிட்டனர். 87 00:04:52,584 --> 00:04:54,086 அவர்கள் மற்ற பொருட்களையும் திருடிவிட்டனர். 88 00:04:55,462 --> 00:04:56,880 -தெளிவுபடுத்த விரும்பினேன். -ஆம். 89 00:04:57,464 --> 00:04:58,674 நிச்சயமாக. 90 00:04:58,757 --> 00:05:00,676 நீங்கள் நன்றாக தெளிவுபடுத்தினீர்கள். 91 00:05:01,927 --> 00:05:06,723 நீங்கள் விரும்பியதை செய்யும் ஒரு பொதுவான ரிமோட்டை இங்கு எங்கோதான் வைத்திருந்தேன். 92 00:05:08,433 --> 00:05:10,602 வணிக ரீதியாக தோல்வியடைந்த ஒரு புதிதாய் தொடங்கிய நிறுவனத்திடம் அதைப் பெற்றேன். 93 00:05:11,353 --> 00:05:12,271 இதோ கிடைத்துவிட்டது. 94 00:05:15,566 --> 00:05:16,859 அருமையாக இருக்கிறதுதானே? 95 00:05:17,609 --> 00:05:20,070 இது நிச்சயமாக வேலை செய்யுமா? எங்கள் முப்பரிமாண அறை புத்தம் புதிது. 96 00:05:20,153 --> 00:05:23,073 ரிமோட்டை லாக் செய்யப்பட்ட ஃபோனில் பயன்படுத்தவும் விரும்புகிறோம். 97 00:05:23,156 --> 00:05:25,617 இது எல்லாவற்றிற்கும் பொதுவானது. 98 00:05:27,578 --> 00:05:29,496 இது எல்லாவற்றிலும் வேலை செய்யும். 99 00:05:39,089 --> 00:05:42,426 நாம் இதை நிச்சயமாக செய்ய வேண்டுமா? அம்மாவும் அப்பாவும் மிகவும் கோபப்படுவார்கள். 100 00:05:42,509 --> 00:05:45,262 ஒருவேளை கண்டுபிடித்தால், ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள். 101 00:05:45,888 --> 00:05:47,931 சரி, இப்போது, இதை எப்படி ஆன் செய்வது? 102 00:05:48,682 --> 00:05:50,142 ஒரு பொத்தானை அழுத்திப் பார். 103 00:05:51,101 --> 00:05:52,352 சரி. 104 00:05:52,936 --> 00:05:55,564 -ஆன் செய்யப்படுகிறது. -அருமை! 105 00:05:56,231 --> 00:05:58,775 சரி, பெற்றோர் கட்டுப்பாடுகள். 106 00:05:59,776 --> 00:06:02,112 சரி. இப்போது, வேறொன்றை அழுத்துகிறேன். 107 00:06:02,196 --> 00:06:03,906 பெற்றோர் கட்டுப்பாடுகள் ஆஃப் செய்யப்படுகிறது. 108 00:06:03,989 --> 00:06:05,532 குழந்தைகளே! 109 00:06:06,575 --> 00:06:09,161 அம்மா, அப்பா, நீங்கள் கோபப்படும் முன்பு, என்னால் விளக்க முடியும். 110 00:06:09,244 --> 00:06:12,873 நாங்கள் இப்போதுதான் இங்கு வந்தோம் ஏனென்றால் நாங்கள்... 111 00:06:13,457 --> 00:06:15,417 பெற்றோர் கட்டுப்பாடுகளை ஆஃப் செய்ய வந்தீர்களா? 112 00:06:16,084 --> 00:06:17,085 அதுதான் உங்கள் விருப்பம் என்றால், 113 00:06:17,169 --> 00:06:20,589 அந்த முடிவை எடுக்கும் வயது உங்களுக்கு ஆகிவிட்டது என்று நினைத்தால், சொல்லுங்கள். 114 00:06:23,175 --> 00:06:24,343 எனக்கு ஆகிவிட்டதா? 115 00:06:31,892 --> 00:06:32,893 அம்மா, 116 00:06:32,976 --> 00:06:36,104 என் ஃபோனின் பெற்றோர் கட்டுப்பாடுகளையும் ஆஃப் செய்ய முடியுமா? 117 00:06:36,188 --> 00:06:38,649 அந்த முடிவை எடுக்கும் வயது எனக்கும் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். 118 00:06:40,025 --> 00:06:40,859 சரி. 119 00:06:43,320 --> 00:06:44,321 என்னிடம் கொடு. 120 00:06:48,992 --> 00:06:49,993 சரி. 121 00:06:50,077 --> 00:06:53,413 நீங்கள் ஏன் உட்காரக்கூடாது? இதோ வந்துவிடுகிறோம். 122 00:06:56,708 --> 00:06:58,043 நீ அதைப் பார்த்தாய்தானே? 123 00:06:58,126 --> 00:06:59,670 நாம் கேட்டதை அவர்கள் செய்தார்கள். 124 00:06:59,753 --> 00:07:01,421 ஆம். அது இந்த ரிமோட்தான். 125 00:07:01,505 --> 00:07:04,174 இது முப்பரிமாண அறையின் பெற்றோர் கட்டுப்பாடுகளை ஆஃப் செய்யவில்லை. 126 00:07:04,258 --> 00:07:07,427 இது அம்மா அப்பாவின் பெற்றோர் கட்டுப்பாடுகளை ஆஃப் செய்திருக்கிறது. 127 00:07:08,554 --> 00:07:09,596 அதற்கு வாய்ப்பே இல்லை. 128 00:07:09,680 --> 00:07:11,306 சரி, அப்படியென்றால் நிரூபித்துக் காட்டுகிறேன். 129 00:07:11,390 --> 00:07:13,642 வேறொரு பொத்தானை அழுத்துகிறேன். மொழி. 130 00:07:14,268 --> 00:07:16,436 மொழி: ஸ்பானிஷ். 131 00:07:21,567 --> 00:07:22,943 இது அற்புதமாக இருக்கிறது. 132 00:07:23,610 --> 00:07:27,489 எனக்கு எந்த அளவுக்கு ஸ்பானிய மொழி தெரியவில்லை என்பது பற்றி மோசமான உணர்வு ஏற்பாட்டாலும் கூட. 133 00:07:28,907 --> 00:07:29,992 மியூட் செய்யப்படுகிறது. 134 00:07:30,075 --> 00:07:32,119 -நீ முயற்சிக்கிறாயா? -தெரியவில்லை. 135 00:07:32,953 --> 00:07:35,998 என்ன? அவர்கள் நம்மை குழந்தைகள் போல நடத்துவது தவறு என்று நினைக்கவில்லையா? 136 00:07:37,583 --> 00:07:39,960 சரி. நல்ல கருத்து. நான் ஒன்றை முயற்சிக்கிறேன். 137 00:07:41,378 --> 00:07:44,173 மொழி: ஆங்கிலம். அன்மியூட் செய்யப்படுகிறது. 138 00:07:45,299 --> 00:07:48,552 அம்மா, நாளை புகைப்பட நாளுக்கு உங்கள் வைர நெக்லஸை அணியட்டுமா? 139 00:08:03,692 --> 00:08:06,403 உன் அம்மா அந்த வைர நெக்லஸை உனக்குக் கொடுத்ததை நம்பமுடியவில்லை. 140 00:08:06,486 --> 00:08:07,571 இது மிகவும் ஆடம்பரமாக இருக்கிறது. 141 00:08:09,239 --> 00:08:10,949 அவர் எல்லா விஷயங்களிலும் என்னை நம்புகிறார். 142 00:08:11,033 --> 00:08:12,826 ஜிம்மிலிருந்து உன் தலைமுடி எப்படி கலையாமல் இருக்கிறது? 143 00:08:13,493 --> 00:08:15,078 ஜிம் வகுப்பைத் தவிர்க்க அப்பா அனுமதி கடிதம் கொடுத்தார். 144 00:08:16,747 --> 00:08:19,166 என்ன? புகைப்பட நாளுக்கு அழகாகத் தெரிய வேண்டும். 145 00:08:21,877 --> 00:08:25,631 இந்த ஸ்வெட்டரில் நான் மிகவும் சூடாக இருக்கிறேன். நெஞ்சில் நாய் உட்கார்ந்திருப்பதைப் போல உணர்கிறேன். 146 00:08:26,924 --> 00:08:28,884 -அப்படியென்றால் கழற்றிவிடு. -சரி, சரி. 147 00:08:28,967 --> 00:08:32,304 அழுக்கு டி-ஷர்ட்டில் நான் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டால் என் பெற்றோர்கள் கோபப்படுவார்கள். 148 00:08:32,888 --> 00:08:35,807 இது அழுக்கு இல்லை. கறை. 149 00:08:35,890 --> 00:08:37,518 ஏன் இது யாருக்கும் புரியவில்லை? 150 00:08:43,941 --> 00:08:45,692 ஹாய், குழந்தைகளே. பள்ளி எப்படி போனது? 151 00:08:45,776 --> 00:08:46,610 நன்றாக. 152 00:08:46,693 --> 00:08:50,280 கேட்டுக்கொண்டது போல இரவு உணவுக்கு பிட்சாவும் ஐஸ்கிரீமும் இருக்கிறது. 153 00:08:50,364 --> 00:08:52,157 மேஜையில் இதை எடுத்துவைக்க உதவி செய்வீர்களா? 154 00:08:52,241 --> 00:08:55,285 நான் இன்றிரவு முப்பரிமாண அறையில் சாப்பிடப் போகிறேன். 155 00:08:55,369 --> 00:08:57,162 நான் என் அறையில் சாப்பிடப் போகிறேன். 156 00:08:57,746 --> 00:08:59,748 அதுதான் உங்கள் விருப்பம் என்றால், சரி. 157 00:09:01,208 --> 00:09:02,876 சரி. இரவு உணவுக்கு நன்றி. 158 00:09:04,127 --> 00:09:07,673 ஜோம்பி தீவிலிருந்து தப்பித்தல் 3ஐ இப்போது வெளியிடுகிறோம். 159 00:09:07,756 --> 00:09:09,800 வயது முதிர்ந்த பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. 160 00:09:14,388 --> 00:09:15,848 இந்த விளையாட்டு பயமுறுத்தவில்லையே. 161 00:09:16,932 --> 00:09:18,559 ஆனாலும் நன்றாக இருக்கிறது. 162 00:09:29,236 --> 00:09:30,237 முதல் தடயம். 163 00:09:40,622 --> 00:09:43,375 முப்பரிமாண அறையை ஆஃப் செய்! 164 00:09:59,308 --> 00:10:03,103 நாம் எல்லோரும் நாளை டெஸ்ஸின் குளத்தில் இருக்கும்போது இது என்னிடம் இருக்கும். 165 00:10:03,187 --> 00:10:04,229 மிகவும் அழகு. 166 00:10:04,313 --> 00:10:05,689 டெஸ் அழைக்கிறாள். 167 00:10:05,772 --> 00:10:08,317 அவள் மீண்டும் தாவரவியல் திட்டம் பற்றி என்னை நச்சரிக்கிறாள். 168 00:10:08,400 --> 00:10:11,278 அவள் உன் குழுவில் இருக்கிறாள், திட்டம் நாளை நடக்கவிருக்கிறது. 169 00:10:11,361 --> 00:10:13,447 ஆம், எனது பகுதியை முடிக்க இரவு முழுவதும் இருக்கிறது, 170 00:10:13,530 --> 00:10:15,741 ஆனால் அவள் எனக்கு மெஸ்சேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தால் என்னால் முடிக்க முடியாது. 171 00:10:15,824 --> 00:10:16,909 கேஸ்? 172 00:10:17,492 --> 00:10:18,952 நான் குட் நைட் சொல்ல விரும்பினேன். 173 00:10:20,787 --> 00:10:21,914 9 மணிக்கு மேல் ஆகிவிட்டது. 174 00:10:21,997 --> 00:10:24,875 அதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? நான் காணொளி அரட்டையை நிறுத்த வேண்டுமா? 175 00:10:24,958 --> 00:10:27,628 இல்லை, ஒருவேளை நீ சோர்வாக இருக்கலாம் என்று சொல்கிறேன். 176 00:10:28,378 --> 00:10:31,215 உனக்கு வேண்டியபோது நீ தூங்கு. குட் நைட். 177 00:10:32,758 --> 00:10:33,884 குட் நைட். 178 00:10:35,677 --> 00:10:37,387 உன் அம்மா பொறுமையாக பேசுகிறார். 179 00:10:38,055 --> 00:10:39,890 வேறொருவர் போல தோன்றுகிறது. 180 00:10:50,734 --> 00:10:52,569 இல்லை. நான் மீண்டும் ஏமாறமாட்டேன். 181 00:10:58,825 --> 00:10:59,910 அம்மா! 182 00:10:59,993 --> 00:11:02,913 இல்லை. சரி. 183 00:11:06,959 --> 00:11:09,211 அப்பா? இங்கே என்ன செய்கிறீர்கள்? 184 00:11:11,588 --> 00:11:13,257 இல்லை. இல்லை. 185 00:11:15,843 --> 00:11:17,845 அம்மா! என்ன? வேண்டாம்! 186 00:11:17,928 --> 00:11:18,929 அப்பா! வேண்டாம்! 187 00:11:20,264 --> 00:11:22,599 வேண்டாம்! 188 00:11:22,683 --> 00:11:25,435 வேண்டாம்! 189 00:11:26,770 --> 00:11:30,440 ஹேய், நீ நலமா? நீ அலறுவது கேட்டது. 190 00:11:30,524 --> 00:11:32,568 ஜோம்பி தீவிலிருந்து தப்பித்தல் நிஜமாகவே என்னைப் பயமுறுத்தியது. 191 00:11:33,902 --> 00:11:35,153 நான் அதை விளையாடியிருக்கக் கூடாது. 192 00:11:35,237 --> 00:11:36,905 நான் அதை விளையாடியிருக்கக் கூடாது. கூடாது... 193 00:11:36,989 --> 00:11:39,157 ஹேய், எதற்கு இந்த அலறல்? 194 00:11:39,241 --> 00:11:41,451 உன் தம்பிக்கு கெட்ட கனவு வந்திருக்கிறது. 195 00:11:41,535 --> 00:11:42,536 ஜோம்பி தீவா? 196 00:11:43,829 --> 00:11:45,289 மீண்டும் தூங்கு. 197 00:11:46,039 --> 00:11:47,499 உனக்கு ஒன்றும் ஆகாது. 198 00:11:48,792 --> 00:11:50,460 மீண்டும் தூங்குவதா? 199 00:11:50,544 --> 00:11:52,004 என்ன அது? 200 00:11:52,087 --> 00:11:55,299 -அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? -தெரியவில்லை, என்னை ஆறுதல்படுத்து. 201 00:11:55,382 --> 00:11:58,010 அவர்களின் பெற்றோர் கட்டுப்பாடுகளை மீண்டும் ஆன் செய்ய வேண்டும். 202 00:11:58,719 --> 00:12:02,222 பார், உன்னால் ஜோம்பி தீவை கையாள முடியாவிட்டால், நீ அதை விளையாடக்கூடாது. 203 00:12:02,890 --> 00:12:06,602 -வேண்டுமென்றால், விளக்குகள் எரியட்டும். -இல்லை. பரவாயில்லை. 204 00:12:09,938 --> 00:12:14,109 இன்னொரு யோசனை, தயவுசெய்து அவற்றை ஆன் செய்கிறாயா? 205 00:12:15,986 --> 00:12:17,237 நன்றி. 206 00:12:43,138 --> 00:12:44,473 -நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? -ஒன்றுமில்லை. 207 00:12:44,556 --> 00:12:45,682 ஆம், சரி. 208 00:12:46,266 --> 00:12:48,560 திருப்பிக் கொடு! நிறுத்து! 209 00:12:49,144 --> 00:12:51,313 ஹேய், திருப்பிக் கொடு! உனக்கு என்ன ஆனது? 210 00:12:51,396 --> 00:12:52,731 நாம் தலையிட வேண்டுமா? 211 00:12:54,024 --> 00:12:56,568 இதை அவர்களே தீர்த்துக்கொள்ளும் வயது அவர்களுக்கு ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். 212 00:12:57,194 --> 00:12:58,487 ரிவைண்ட் செய்யப்படுகிறது. 213 00:13:03,116 --> 00:13:04,701 -பொத்தான்களை அழுத்துவதை நிறுத்து! -ப்ளே செய்யப்படுகிறது. 214 00:13:04,785 --> 00:13:06,745 -நான் இல்லை! நீதான் செய்கிறாய்! -இல்லை! 215 00:13:06,828 --> 00:13:07,996 நாம் தலையிட வேண்டுமா? 216 00:13:08,080 --> 00:13:08,914 இல்லை! 217 00:13:08,997 --> 00:13:11,458 இதை அவர்களே தீர்த்துக்கொள்ளும் வயது அவர்களுக்கு ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். 218 00:13:11,542 --> 00:13:12,668 அதைத் திரும்பக் கொடு! 219 00:13:13,836 --> 00:13:14,962 பாஸ் செய்யப்படுகிறது. 220 00:13:18,841 --> 00:13:20,843 அவர்கள் உறைந்துவிட்டார்களா? இல்லை. 221 00:13:24,012 --> 00:13:26,223 பிரமாதம், ஜாக். இது வேலை செய்யவில்லை. 222 00:13:26,306 --> 00:13:28,517 நாம் சண்டையிட்டபோது அது நின்றிருக்க வேண்டும். 223 00:13:28,600 --> 00:13:29,601 நான் முயற்சிக்கிறேன். 224 00:13:31,937 --> 00:13:33,063 இல்லை. 225 00:13:46,785 --> 00:13:47,828 ஹேய். 226 00:13:48,328 --> 00:13:50,289 அவர்களுக்குக் குளிருமோ என்று பயந்தேன். 227 00:13:50,372 --> 00:13:52,583 -நீ நன்றாகத் தூங்கவில்லையா? -இல்லை. நீ? 228 00:13:52,666 --> 00:13:54,585 இல்லை. நான் மிகவும் பயந்துவிட்டேன். 229 00:13:55,294 --> 00:13:56,753 நாம் என்ன செய்யப் போகிறோம்? 230 00:13:56,837 --> 00:14:00,299 தெரியவில்லை. ஆனால் அது எதுவாக இருந்தாலும், நாம் முதலில் பள்ளிக்குப் போக வேண்டும். 231 00:14:09,349 --> 00:14:10,517 ஜாக். 232 00:14:16,815 --> 00:14:19,276 -ஜாக். -செல்வி. ரையன்? 233 00:14:19,860 --> 00:14:21,737 தலைமை ஆசிரியர் அலுவலகம். இப்போதே. 234 00:14:28,118 --> 00:14:30,662 ஆஹா! இது நன்றாக தெரிகிறது. 235 00:14:32,623 --> 00:14:35,250 -ஆனால் தண்டு எங்கே? -வழியே இல்லை. 236 00:14:36,460 --> 00:14:39,546 அது என்னுடைய தவறு. நான் அதைச் செய்யவில்லை. 237 00:14:40,339 --> 00:14:43,759 மீதமுள்ளவை நன்றாக இருக்கிறது. எனவே உங்களுக்கு C கொடுக்கிறேன். தேர்ச்சி பெறுவீர்கள். 238 00:14:44,593 --> 00:14:45,636 C? 239 00:14:47,513 --> 00:14:48,805 அது மிகவும் குறைவு. 240 00:14:50,641 --> 00:14:53,560 பிறகு தலைமை ஆசிரியர் அம்மாவும் அப்பாவும் நாளை சந்திக்க வேண்டும் என்றார். 241 00:14:53,644 --> 00:14:55,354 -சந்திப்பதா? நேரிலா? -ஆம். 242 00:14:58,524 --> 00:15:00,108 ஹேய்! நீ எப்போது வருகிறாய்? 243 00:15:00,776 --> 00:15:01,610 நீ எங்கே இருக்கிறாய்? 244 00:15:01,693 --> 00:15:03,946 டெஸ்ஸின் குளத்தில் இருக்கிறேன். எல்லோரும் இங்கே இருக்கிறார்கள். 245 00:15:04,988 --> 00:15:06,406 என்னை அழைக்கவில்லை. 246 00:15:06,990 --> 00:15:09,326 இல்லை, நான் அவளிடம் பேசலாம். 247 00:15:09,409 --> 00:15:11,662 இல்லை, வேண்டாம். அவள் என் மீது கோபமாக இருக்கிறாள் என்று நினைக்கிறேன். 248 00:15:12,496 --> 00:15:14,373 நான் நம் செயல்முறையை சரியாகச் செய்யவில்லை. 249 00:15:14,915 --> 00:15:15,916 ஜாலியாக இருங்கள். 250 00:15:17,000 --> 00:15:18,126 நீ நலமா? 251 00:15:19,378 --> 00:15:20,379 வா. 252 00:15:26,593 --> 00:15:28,637 ஆக்டிவேட்டர் நின்று போனது போல தெரிகிறது. 253 00:15:28,720 --> 00:15:30,597 ஆம், எங்களுக்கும் அது தெரியும். 254 00:15:30,681 --> 00:15:32,641 இதற்கு புதிதாக மாற்றிக்கொடுக்க முடியாதா, தயவுசெய்து? 255 00:15:32,724 --> 00:15:35,561 ஏற்கனவே சொன்னேனே. தோல்வியுற்ற புதிய நிறுவனத்திடம் இதை வாங்கினேன். 256 00:15:35,644 --> 00:15:36,687 என்னிடம் ஒன்றுதான் இருந்தது. 257 00:15:36,770 --> 00:15:38,397 சரி, இதை சரிசெய்ய முடியுமா? 258 00:15:39,064 --> 00:15:42,734 இதில் இருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவு நுட்பமானது என்ற யோசனை உங்களுக்கு இருக்கிறதா? 259 00:15:44,403 --> 00:15:45,404 இல்லை. 260 00:15:45,487 --> 00:15:47,155 சரி, நாங்கள் என்ன செய்வது? 261 00:15:47,239 --> 00:15:51,869 எனக்குத் தெரியாது. உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள். ஒருவேளை அவர்கள் இதை சரிசெய்யலாம். 262 00:16:01,712 --> 00:16:03,547 அவள் என் மீது கோபப்படுவது எனக்குப் புரிகிறது. 263 00:16:03,630 --> 00:16:05,757 திட்டத்தின் என் பகுதியை நான் சரியான நேரத்தில் ஒப்படைக்கவில்லை. 264 00:16:07,301 --> 00:16:08,343 நான் பிஸியாக இருந்தேன். 265 00:16:09,303 --> 00:16:13,056 அதாவது, ஹலோ. நீங்கள் உறைந்துபோனது, எல்லாம். 266 00:16:13,891 --> 00:16:16,435 நிச்சயமாக, நீங்கள் சொன்னது போல நான் முன்பே தொடங்கியிருக்க வேண்டும், ஆனால்… 267 00:16:18,103 --> 00:16:19,229 இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. 268 00:16:20,522 --> 00:16:25,152 டெஸ்ஸின் மனம் புண்பட்டிருக்கிறது, அதை சரி செய்ய என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. 269 00:16:26,945 --> 00:16:28,071 ஆனால் உங்களுக்குத் தெரியும். 270 00:16:28,697 --> 00:16:31,617 அவர் உறைந்திருக்கிறார் என்பது உனக்குத் தெரியும், இல்லையா? 271 00:16:33,160 --> 00:16:35,913 எனக்கு பயமாக இருக்கிறது, ஜாக். நான் அம்மாவையும் அப்பாவையும் மிஸ் செய்கிறேன். 272 00:16:35,996 --> 00:16:38,498 நாம் அவர்களை இயங்கவைக்க முடியாவிட்டால் என்ன செய்வது? 273 00:16:39,082 --> 00:16:42,544 பார், அம்மாவும் அப்பாவும் என்ன செய்வார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும். 274 00:16:43,128 --> 00:16:48,550 நான் வருத்தப்படும்போது, அம்மா என்னை சுவாசிக்கவும், சுயமதிப்பீடு செய்யவும் சொல்வார். 275 00:16:49,134 --> 00:16:53,347 எனக்குப் பசிக்கிறதா? சோர்வாக இருக்கிறேனா? நான் உணர்ச்சிவசப்படுகிறேனா? 276 00:16:54,097 --> 00:16:55,724 ஆம், ஆம், இல்லை. 277 00:16:55,807 --> 00:16:58,519 நான் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடவில்லை தெரியுமா? வா. 278 00:17:02,564 --> 00:17:05,526 இப்போதே அப்பாவின் பார்பிக்யூ வான்கோழி பர்கர்களில் ஒன்றைச் சாப்பிடலாம். 279 00:17:05,608 --> 00:17:08,945 நானும்தான். ஆனால் ஒரு கப் சூடுபடுத்தப்பட்ட பாஸ்தாவை நான் சாப்பிடலாம். 280 00:17:11,573 --> 00:17:13,157 அருமை. இது மீண்டும் வேலை செய்யவில்லை. 281 00:17:13,242 --> 00:17:15,117 அதை கழற்றிவிட்டு திரும்ப மாட்டு. 282 00:17:20,665 --> 00:17:21,666 இது வேலை செய்கிறது. 283 00:17:23,377 --> 00:17:26,630 அப்பாவின் குறைந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்காக நாம் எப்போதும் அவரை கேலி செய்வோம், 284 00:17:27,923 --> 00:17:29,800 ஆனால் சில நேரங்களில் அவை வேலை செய்கின்றன. 285 00:17:33,595 --> 00:17:36,515 பேட்டரியை மாற்றுவது எளிமையான தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறாயா? 286 00:17:36,598 --> 00:17:37,683 மாற்றிப் பார்ப்பது நல்லதுதான். 287 00:17:38,725 --> 00:17:40,143 ஒரு பிரச்சினை. 288 00:17:40,227 --> 00:17:41,353 பேட்டரி எங்கே? 289 00:17:43,313 --> 00:17:44,857 இதாகத்தான் இருக்க வேண்டும். 290 00:17:44,940 --> 00:17:48,235 இது வேலை செய்யவில்லை என்றால், அம்மாவையும் அப்பாவைவையும் சரிசெய்யவே முடியாது. 291 00:17:53,991 --> 00:17:55,409 நாம் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும். 292 00:18:10,549 --> 00:18:11,550 வா. 293 00:18:15,721 --> 00:18:17,264 இக்கட்டான தருணம். 294 00:18:22,603 --> 00:18:23,979 அன்பாஸ் செய்யப்படுகிறது. 295 00:18:25,272 --> 00:18:26,523 ஹாய், குழந்தைகளே. 296 00:18:27,149 --> 00:18:28,984 நீங்கள் இன்னும் சண்டையிடாமல் இருப்பது நன்றாக இருக்கிறது. 297 00:18:29,067 --> 00:18:31,278 -இது வேலை செய்தது. -எது வேலை செய்தது? 298 00:18:31,361 --> 00:18:34,990 -பெற்றோர் கட்டுப்பாடுகளை ஆன் செய்யுங்கள். -நான் முப்பரிமாண அறைக்குப் போகிறேன். 299 00:18:35,073 --> 00:18:37,492 -இல்லை, அந்த பெற்றோர் கட்டுப்பாடுகள் அல்ல. -இவை. 300 00:18:38,035 --> 00:18:40,370 பெற்றோர் கட்டுப்பாடுகள் ஆன் செய்யப்படுகிறது. 301 00:18:45,417 --> 00:18:48,795 சரி, இங்கே என்ன நடக்கிறது? நாம் ஏன் நடைபாதையில் நிற்கிறோம்? 302 00:18:49,213 --> 00:18:50,589 அது என்ன? 303 00:18:50,672 --> 00:18:53,383 எல்லாவற்றையும் விளக்குகிறோம். ஆனால் முதலில், நீங்கள் சொல்வது சரிதான். 304 00:18:53,467 --> 00:18:54,968 நாங்கள் நினைப்பது போல எங்களுக்கு முதிர்ச்சி போதவில்லை. 305 00:18:55,052 --> 00:18:56,970 முடிவுகளை எடுப்பதற்கு நீங்கள் இன்னும் உதவ வேண்டும். 306 00:18:59,806 --> 00:19:00,974 நாங்கள் உங்களை நேசிக்கிறோம். 307 00:19:01,934 --> 00:19:03,185 இங்கே வாருங்கள். 308 00:19:03,268 --> 00:19:05,521 -நாங்களும் உங்களை நேசிக்கிறோம். -நாங்கள் உங்களை நேசிக்கிறோம். 309 00:19:07,731 --> 00:19:08,565 இப்போது விளக்குங்கள். 310 00:19:09,149 --> 00:19:11,318 நாங்கள் வருந்துவதைத் தெரிந்து கொள்ளுங்கள், 311 00:19:11,401 --> 00:19:15,322 நீங்கள் எங்களை ஒரு வாரத்திற்கு தண்டித்தாலும் அது முற்றிலும் நியாயமானது. 312 00:19:15,405 --> 00:19:18,700 ஆம். நீங்கள் நாளை எங்கள் தலைமை ஆசிரியரை சந்திக்க வேண்டும், 313 00:19:18,784 --> 00:19:20,369 எனவே அதை இரண்டு வாரங்கள் ஆக்குவது நல்லது. 314 00:19:27,918 --> 00:19:30,128 சரி, அம்மா. தரை சுத்தமாகிவிட்டது நான் இப்போது போகலாமா? 315 00:19:30,212 --> 00:19:32,756 ஆம், சலவையை முடித்துவிட்டு குப்பையை கொண்டுபோய் கொட்டிவிட்டோம். 316 00:19:32,840 --> 00:19:35,133 அப்பா, அம்மாவிடம் சொல்லுங்கள் இது ரொம்ப அதிகம் என்று. 317 00:19:35,217 --> 00:19:39,221 சரி, நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் தண்டிக்கப்பட்டது போதும். தயவு செய்து. 318 00:19:39,304 --> 00:19:40,305 சரி, கேளுங்கள். 319 00:19:40,389 --> 00:19:42,391 நான் சத்தியம் செய்கிறேன்... நாங்கள் சத்தியம் செய்கிறோம்... 320 00:19:42,975 --> 00:19:43,976 மியூட் செய்யப்படுகிறது. 321 00:20:51,293 --> 00:20:53,295 வசனத் தமிழாக்கம் அருண்குமார்