1 00:00:16,850 --> 00:00:17,976 மன்னித்துவிடு. 2 00:00:22,773 --> 00:00:27,361 டைலர். ஹேய், இதைக் கேள். இதன் முடிவில் அருமையான இரயிலின் தாளம் இருக்கிறது. 3 00:00:27,444 --> 00:00:28,445 ம். 4 00:00:32,323 --> 00:00:35,285 அருமை. ஆனால் எப்போதும் என் லாக்கரில்தான் வாசிப்பாயா? 5 00:00:38,747 --> 00:00:41,583 செத். உன்னிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? 6 00:00:41,667 --> 00:00:44,545 ஹாலில் டிரம்ஸ் வாசிக்க அனுமதியில்லை. அதற்காகத்தான் இசை அறை இருக்கிறது. 7 00:00:44,628 --> 00:00:47,256 ஆம், ஆனால் அது பள்ளியின் மறுமுனையில் இருக்கிறது, எனவே... 8 00:00:50,634 --> 00:00:52,761 பள்ளி முடிந்த பிறகு இவற்றைத் திரும்ப பெற்றுக்கொள். 9 00:00:55,430 --> 00:00:57,766 கவலைப்படாதே. என் பையில் இன்னொரு ஜோடி இருக்கிறது. 10 00:01:04,772 --> 00:01:06,275 நீ கணித தேர்வுக்குத் தயாரா? 11 00:01:06,358 --> 00:01:08,402 என்ன? தேர்வு இருக்கிறதா? 12 00:01:08,485 --> 00:01:11,697 எப்படி மறந்தாய்? செல்வி பால்ஃபோர் கடந்த வகுப்பிலேயே சொன்னார். 13 00:01:11,780 --> 00:01:13,282 நகைச்சுவை செய்தேன். 14 00:01:14,074 --> 00:01:15,200 விட்டுவிடு. 15 00:01:15,284 --> 00:01:18,662 எதையும் குழப்பாதே, ஆனால் என்னால் C கிரேடு பெற முடியும் என்று நினைக்கிறேன். 16 00:01:18,745 --> 00:01:19,746 நானும்தான். 17 00:01:19,830 --> 00:01:22,708 நேற்றிரவு, குழந்தையை கவனித்துக்கொண்டதால், என்னால் படிக்க முடியவில்லை. 18 00:01:22,791 --> 00:01:24,668 நிஜமாகத்தான். ஜோக்கடிக்கவில்லை. 19 00:01:26,753 --> 00:01:27,921 காலை வணக்கம். 20 00:01:29,590 --> 00:01:33,510 எனவே, மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது, அது நல்லதல்ல. 21 00:01:33,594 --> 00:01:35,095 நேற்று, பள்ளிக்குப் பிறகு, 22 00:01:35,179 --> 00:01:40,350 யாரோ செல்வி பால்ஃபோரின் கணினியிலிருந்து இன்றைய தேர்வுக்கான பதில்களை திருடி இருக்கிறார்கள். 23 00:01:40,434 --> 00:01:42,728 இப்போது, வெளிப்படையாக, இதை செய்தவருக்கு இது தவறென்று தெரியும். 24 00:01:43,270 --> 00:01:46,690 எனவே, அவர்கள் என்னைச் சந்திக்க நாளின் இறுதிவரை அவகாசம் கொடுக்கிறேன். 25 00:01:46,773 --> 00:01:49,651 இல்லையென்றால், செல்வி பால்ஃபோர் புதிய கேள்விகளை தயார் செய்ய நேரிடும் 26 00:01:49,735 --> 00:01:52,446 அப்படியென்றால் நீங்கள் எல்லோரும் இரண்டு மடங்கு நேரம் படிக்க வேண்டும். 27 00:01:54,281 --> 00:01:55,949 யாரும் முன்வரவில்லை என்றால், 28 00:01:56,491 --> 00:02:00,954 இதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கும் வரை உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்திப்பேன். 29 00:02:29,358 --> 00:02:30,943 உலகின் தலைசிறந்த பள்ளி முதல்வர் 30 00:02:31,026 --> 00:02:32,736 "உண்மையில், 74% மாணவர்கள் 31 00:02:32,819 --> 00:02:36,365 அவர்களின் முக்கிய பாடங்களில் செயல்திறன் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர்..." 32 00:02:37,741 --> 00:02:40,118 உரையைப் படிப்பது யுக்தி அல்ல. நான் புல்லட் புள்ளிகளைப் பயன்படுத்துகிறேன். 33 00:02:40,202 --> 00:02:42,204 அது மிகவும் எளிமையான வழி, தெரியுமா? 34 00:02:42,287 --> 00:02:43,747 உனக்கு என்ன வேண்டும், செத்? 35 00:02:44,748 --> 00:02:47,543 குற்றம் செய்தவனுக்கு நாள் முடியும் வரைதான் கெடு கொடுப்பதாக சொன்னீர்கள், எனவே... 36 00:02:47,626 --> 00:02:49,211 நீதான் பதில்களை திருடியிருக்கிறாய். 37 00:02:50,671 --> 00:02:51,964 எப்படியோ, எனக்கு ஆச்சரியமாக இல்லை. 38 00:02:52,631 --> 00:02:54,258 -அச்சச்சோ. -உட்கார். 39 00:03:00,681 --> 00:03:02,516 சரி, இங்கே பார்க்கிறேன். 40 00:03:05,227 --> 00:03:06,436 யாரை அழைக்கிறீர்கள்? 41 00:03:06,520 --> 00:03:07,729 உன் பெற்றோரைத்தான். 42 00:03:07,813 --> 00:03:10,148 வேண்டாம். அது அவசியமில்லை என்று நினைக்கிறேன். 43 00:03:10,232 --> 00:03:11,358 அவர்களுக்கு வேலை பளு அதிகம். 44 00:03:11,441 --> 00:03:13,569 ஆம், ஹாய், நான் பள்ளி முதல்வர் யங். 45 00:03:13,652 --> 00:03:17,072 செத் சம்பந்தமாக பேச என்னை மீண்டும் அழையுங்கள். 46 00:03:17,155 --> 00:03:20,617 நான் உங்களுடன் விவாதிக்க விரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நன்றி. 47 00:03:21,451 --> 00:03:23,370 கண்டிப்பாக என்னை வெளியே விடமாட்டார்கள். 48 00:03:24,204 --> 00:03:27,791 இதனால் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்றால், நான் செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன். 49 00:03:28,375 --> 00:03:30,460 நல்லது. ஆனால் இல்லை. 50 00:03:31,044 --> 00:03:34,131 உன் பெற்றோர்களிடம் பேசிய பிறகு, இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்பதை முடிவெடுக்கலாம். 51 00:03:39,303 --> 00:03:41,013 இருந்தாலும் நீ ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி. 52 00:03:41,096 --> 00:03:42,598 அதையாவது நீ சரியாக செய்தாய். 53 00:03:46,685 --> 00:03:49,521 உங்களுக்குத் தெரிந்தது போல, நியூட்டன் தொழில்நுட்பத்திற்கு முக்கியமான இடம், 54 00:03:49,605 --> 00:03:53,525 அதோடு இந்த துறையின் ஜாம்பவான்களில் ஒருவரை நம் பள்ளி உருவாக்கியிருக்கிறது. 55 00:03:53,609 --> 00:03:54,735 ஆஹா. 56 00:03:54,818 --> 00:03:57,863 டாக்டர் ஆனா மையர்ஸ் தனது புதிய கண்டுபிடிப்பைக் காட்ட 57 00:03:57,946 --> 00:04:00,949 இங்கு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 58 00:04:01,033 --> 00:04:02,367 இப்போது நீங்கள் எல்லோரும் 59 00:04:02,451 --> 00:04:05,746 உட்கார்ந்திருக்கும் இடத்தில் அவர் உட்கார்ந்து நீண்ட காலம் ஆகவில்லை. 60 00:04:05,829 --> 00:04:10,167 கடின உழைப்பால், எதையும் சாதிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. 61 00:04:12,127 --> 00:04:16,048 நாங்கள் இதை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை, இது இயங்குவதை முதலில் பார்க்கப் போவது நீங்கள்தான். 62 00:04:16,130 --> 00:04:20,886 எளிமையாக சொன்னால், இது ஒரு நொடியின் ஒரு பகுதிக்குள் அடிப்படை எண்ணங்களை 63 00:04:20,969 --> 00:04:23,096 பரிமாறிக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ அனுமதிக்கிறது. 64 00:04:23,180 --> 00:04:24,223 டெலிபதி போலவா? 65 00:04:24,306 --> 00:04:25,307 அது போல. 66 00:04:25,849 --> 00:04:27,309 இரண்டு தன்னார்வலர்கள் தேவை. 67 00:04:27,893 --> 00:04:29,061 நாங்கள் வருகிறோம். 68 00:04:29,144 --> 00:04:31,355 பொறு. அது ஏற்கனவே செயல்படுகிறது. 69 00:04:32,898 --> 00:04:35,067 டைலர், என்ன தைரியம் இருந்தால் அதைச் சொல்வாய். 70 00:04:35,150 --> 00:04:36,944 ஹேய், நீதான் ஆரம்பித்தாய். 71 00:04:38,237 --> 00:04:41,073 சரி, போதும் நிறுத்துங்கள். உட்கார், டைலர். 72 00:04:41,949 --> 00:04:42,991 நான் வருகிறேன். 73 00:04:43,575 --> 00:04:45,244 நீ அவர்களின் வயதில் இருந்தது நினைவிருக்கும். 74 00:04:46,578 --> 00:04:48,330 -செத். -ஆம். 75 00:04:48,413 --> 00:04:53,126 இந்த மின்முனைகள் எண்ணங்களை உடனுக்குடன் பகிர அனுமதிக்கும். 76 00:05:01,343 --> 00:05:03,303 இப்போது, உங்கள் கண்களை மூடுங்கள். 77 00:05:03,387 --> 00:05:07,891 உங்களுடன் ஏதோ இருப்பதைப் போலவோ, மயக்கம் வருவது போலவோ, 78 00:05:07,975 --> 00:05:08,976 நீங்கள் உணரலாம். 79 00:05:09,059 --> 00:05:11,270 கிட்டத்தட்ட ஒருவர் உங்களைக் கண்காணிப்பது போல இருக்கும். 80 00:05:11,353 --> 00:05:13,689 நான் எப்போதுமே பள்ளி முதல்வர் யங் என்னைக் கண்காணிப்பது போலத்தான் உணர்கிறேன். 81 00:05:16,275 --> 00:05:18,944 சரி, அப்படியென்றால் இணைப்பு நடந்துவிட்டது என்று அர்த்தம். 82 00:05:19,820 --> 00:05:23,365 இப்போது, இன்னொருவர் உங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் பார்க்க முடியாது. 83 00:05:23,448 --> 00:05:24,950 உங்கள் மனதை அவர்களால் அறிய முடியாது. 84 00:05:25,033 --> 00:05:26,994 ஆனால் நீங்கள் உருவாக்கும் எண்ணத்தை அவர்களால் பெற முடியும். 85 00:05:27,077 --> 00:05:31,164 நீங்கள் அவர்களைப் பற்றியோ அவர்களின் பெயரையோ நினைத்தால், அவர்களால் அதை உணர முடியும். 86 00:05:31,248 --> 00:05:34,126 -அருமை. -செத் சொன்னதை ஏற்கிறேன். மிகவும் அருமை. 87 00:05:35,002 --> 00:05:36,044 சரி. 88 00:05:54,271 --> 00:05:55,939 பரிமாற்றம் முடிந்தது. 89 00:05:59,401 --> 00:06:03,071 நீ என்ன செய்தாய்? நான் 12 வயது சிறுவனின் உடலில் இருக்கிறேன். 90 00:06:10,370 --> 00:06:14,708 முந்தைய சோதனைகளில், எளிய எண்ணங்களும் அடிப்படை வாக்கியங்களும் மட்டுமே பரிமாறப்பட்டது. 91 00:06:14,791 --> 00:06:17,503 ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டீர்கள். 92 00:06:18,086 --> 00:06:20,339 உன்னால் இதை சரிசெய்ய முடியும் தானே? 93 00:06:20,422 --> 00:06:23,759 என்னால் இவன் உடம்பில் இருந்துகொண்டு பள்ளியை நிர்வகிக்க முடியாது. 94 00:06:24,343 --> 00:06:26,220 ஆஹா, உங்கள் கண்பார்வை மோசமாக இருக்கிறது. 95 00:06:26,929 --> 00:06:29,097 கவலை வேண்டாம். மூளையிலிருந்து வரும் செயலாக்கியின் 96 00:06:29,181 --> 00:06:31,683 நரம்பியல் இடைமுகத்தை மறுசீரமைப்பதன் மூலம் விளைவுகளை மாற்றியமைக்க முடியும். 97 00:06:31,767 --> 00:06:33,018 அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? 98 00:06:33,894 --> 00:06:36,271 24 மணிநேரமோ அதற்கு மேலோ ஆகலாம். 99 00:06:36,855 --> 00:06:37,856 இருபத்து நான்கு மணிநேரமா? 100 00:06:39,483 --> 00:06:40,859 இது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது. 101 00:06:40,943 --> 00:06:42,778 இங்கே படித்த யாரோவொரு விஞ்ஞானி என்பதற்காக 102 00:06:42,861 --> 00:06:44,655 ஒரு மாணவன் மீது ஆபத்தான சோதனைகளைச் செய்ய 103 00:06:44,738 --> 00:06:46,365 நாங்கள் அனுமதித்தது சரியாக இருக்காது. 104 00:06:46,448 --> 00:06:49,201 இது எனக்கு நல்லதென்று நினைக்கிறீர்களா? நான் என் நிதி உதவியை இழக்க நேரிடும். 105 00:06:50,160 --> 00:06:53,038 எனவே ஒப்புக்கொள்கிறோமா? இதை இரகசியமாக வைத்துக்கொள்வோம். 106 00:06:54,540 --> 00:06:55,874 விளையாடுகிறீர்களா? 107 00:06:55,958 --> 00:06:57,000 செத்? 108 00:06:57,084 --> 00:06:59,419 நான் பள்ளி முதல்வராக இருந்து பள்ளியை நடத்த வேண்டுமா? 109 00:07:00,003 --> 00:07:03,298 -கவலை வேண்டாம். யாரிடமும் சொல்ல மாட்டேன். -பொறு, நீ எதையும் நடத்த வேண்டியதில்லை. 110 00:07:04,049 --> 00:07:07,553 என்னால் உங்களைப் போல நன்றாக நடிக்க முடியும். உண்மையில், துல்லியமாக. 111 00:07:08,470 --> 00:07:09,972 அது மிகவும் நன்றாக இருக்கும். 112 00:07:10,055 --> 00:07:11,640 நான் வேலையைப் பார்ப்பது நல்லது. 113 00:07:12,432 --> 00:07:15,519 அடுத்த 24 மணிநேரத்திற்கு அப்படியே இருங்கள். 114 00:07:19,189 --> 00:07:22,359 இந்த சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமென்றால், சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். 115 00:07:22,442 --> 00:07:25,070 ஏதாவது முக்கியமான விஷயம் என்றால், என்னை வந்து பார். 116 00:07:25,153 --> 00:07:28,240 என்ன நடந்துவிடப் போகிறது? நான்தானே பள்ளி முதல்வர். 117 00:07:28,740 --> 00:07:30,784 நான் ஆசிரியர்கள் அறையில் உள்ள ஃப்ரிட்ஜை காலிசெய்துவிட்டு 118 00:07:30,868 --> 00:07:32,202 சோபாவில் தூங்குவேன். 119 00:07:32,870 --> 00:07:36,164 தகவலுக்காக சொல்கிறேன், உடற்கல்வி வகுப்பில் உடற்தகுதி தேர்வு இருக்கிறது, எனவே வாழ்த்துக்கள். 120 00:07:36,248 --> 00:07:39,001 அதோடு, பள்ளிக்குப் பிறகு டிரம்ஸ் வகுப்பு இருக்கிறது. 121 00:07:39,084 --> 00:07:42,129 அதோடு, நாளைக்கு நீங்கள் நிறைய வரலாறு பாடத்தைப் படிக்க வேண்டும். 122 00:07:42,212 --> 00:07:45,883 திரு. பெர்க் நிறைய வீட்டுப்பாடத்தைக் கொடுக்கிறார். ஆம். 123 00:07:47,134 --> 00:07:49,052 என் அலுவலகத்தில் எதையும் தொடாதே. 124 00:07:56,310 --> 00:07:57,728 மன்னிக்கவும், பள்ளி முதல்வர் யங். 125 00:07:57,811 --> 00:07:59,646 ஆம். அது நான்தான். 126 00:07:59,730 --> 00:08:02,733 செத்தின் பெற்றோர் இணைப்பில் இருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்றீர்கள். 127 00:08:02,816 --> 00:08:06,486 ஆம். முக்கியம்தான். நன்றி. 128 00:08:09,948 --> 00:08:10,949 அம்மா? 129 00:08:11,658 --> 00:08:12,910 செத்தின் அம்மாவா? 130 00:08:14,077 --> 00:08:15,913 மீண்டும் என்னை அழைத்ததற்கு நன்றி. 131 00:08:27,508 --> 00:08:29,718 ஹேய். உங்கள் வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. 132 00:08:29,801 --> 00:08:31,512 உங்களிடம் கூடுதல் ப்ரஷ் இருக்கிறதா? 133 00:08:31,595 --> 00:08:36,058 இது உங்கள் உடல்தான் என்றாலும் உங்களுடையதை பயன்படுத்த சங்கடமாக இருக்கிறது. 134 00:08:36,140 --> 00:08:37,601 என் ப்ரஷைத் தொடாதே. 135 00:08:38,268 --> 00:08:40,729 தொட்டியில் இன்னொன்று இருக்கிறது. பல்துலக்கியதும் எறிந்துவிடு. 136 00:08:40,812 --> 00:08:42,063 சரி, புரிந்தது. 137 00:08:44,691 --> 00:08:46,860 -அங்கே என்ன நடக்கிறது? -சில உதவிகள் வேண்டும். 138 00:08:46,944 --> 00:08:48,195 உன் பெற்றோர்கள் கறி உணவு செய்திருக்கிறார்கள். 139 00:08:48,862 --> 00:08:50,614 -நீங்கள் அதிர்ஷ்டசாலி. -நான் சைவம். 140 00:08:50,697 --> 00:08:53,575 செத், மேஜையில் ஃபோன்கள் கூடாது. விதிகள் உனக்கே தெரியும். 141 00:08:54,368 --> 00:08:55,369 போக வேண்டும். 142 00:08:56,036 --> 00:08:58,580 மன்னித்துவிடுங்கள்... அப்பா. 143 00:09:00,249 --> 00:09:02,125 உன் பள்ளி முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது. 144 00:09:02,835 --> 00:09:05,963 நீ நன்றாக படிப்பதாகவும், உன்னை நினைத்து பெருமைப்பட வேண்டும் என்றார். 145 00:09:06,505 --> 00:09:10,133 உனக்கு ஒரு புதிய டிரம் செட் வாங்கித்தரவும் பரிந்துரைத்தார், அது ஆர்வமூட்டுவதாக இருந்தது. 146 00:09:10,217 --> 00:09:13,554 அவர் வேறொரு செத் பற்றி பேசவில்லை என்று நன்றாகத் தெரியுமா? 147 00:09:13,637 --> 00:09:16,974 நாளை 2 மணிக்குப் பிறகு மீண்டும் கேட்டுப்பாருங்கள். 148 00:09:17,057 --> 00:09:20,394 பள்ளி முதல்வர் சிடுமூஞ்சி என்று ஏன் சொன்னாய் என்று தெரியவில்லை. என்னிடம் நன்றாக பேசினார். 149 00:09:20,477 --> 00:09:21,520 சிடுமூஞ்சியா? 150 00:09:24,273 --> 00:09:26,358 சரி, சாப்பிடு. 151 00:09:42,207 --> 00:09:43,375 சோம்பேறி. 152 00:09:45,377 --> 00:09:46,503 நடுநிலைப் பள்ளி கணிதம் 153 00:09:51,091 --> 00:09:52,718 செத்தின் டிரம் ஸ்டிக்குகள். 154 00:10:29,671 --> 00:10:30,881 செல்லம். 155 00:10:31,715 --> 00:10:33,759 உன்னை திடுக்கிட வைத்ததற்கு மன்னித்துவிடு. 156 00:10:33,842 --> 00:10:35,969 நீ படிக்க நிறைய வரலாற்று பாடம் இருக்கிறது என்று நினைத்தேன். 157 00:10:36,053 --> 00:10:37,054 ஆம் இருக்கிறது. 158 00:10:37,763 --> 00:10:40,724 முதலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். 159 00:10:41,600 --> 00:10:45,479 உன் கணிதத் தேர்வு பற்றி கேட்க மறந்துவிட்டேன். அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாய் என்று தெரியம். 160 00:10:45,562 --> 00:10:47,523 நீ செய்த இந்த ப்ளாஷ் கார்டுகள் மிகவும் உதவியாக இருந்தன. 161 00:10:48,023 --> 00:10:50,692 நீ பதற்றமாக இருப்பது தெரியும், ஆனால் நீ எதில் திறமைசாலி என்று உனக்கே தெரியும், 162 00:10:50,776 --> 00:10:52,569 நீ அதை சிறப்பாகச் செய்வாய். 163 00:10:54,154 --> 00:10:55,197 ஒரு மணிநேரத்தில் விளக்கை அணைத்துவிடு. 164 00:11:01,203 --> 00:11:02,663 செத் படித்தானா? 165 00:11:05,916 --> 00:11:07,251 நல்ல மதிப்பெண்ணா? 166 00:11:21,849 --> 00:11:22,891 மன்னித்துவிடு. 167 00:11:29,815 --> 00:11:30,899 ஹலோ, கெவின்! 168 00:11:31,650 --> 00:11:32,943 காலை வணக்கம், லிசா. 169 00:11:33,026 --> 00:11:34,069 செல்வி பால்ஃபோர். 170 00:11:34,987 --> 00:11:37,197 நான் வினோதமாக தெரிகிறேனா, அல்லது அது வினோதமா? 171 00:11:37,281 --> 00:11:38,490 மிகவும் வினோதம். 172 00:11:39,199 --> 00:11:42,244 ஹலோ, டைலர். இந்த உடை அற்புதமாக இருக்கிறது. 173 00:11:44,580 --> 00:11:45,873 பொய் சொல்லவில்லை. 174 00:11:53,964 --> 00:11:55,257 மிகவும் வினோதமாக இருக்கிறது. 175 00:11:58,802 --> 00:12:02,139 ஹேய். உங்கள் உதவியாளர் தினமும் காலையில் உங்களுக்கு பேஸ்ட்ரி கொண்டு வருவாரா? 176 00:12:02,222 --> 00:12:03,599 அதை என்னிடம் கொடு. 177 00:12:04,600 --> 00:12:07,144 உன் முகத்துக்கு என்ன ஆனது? அதாவது, என் முகத்துக்கு? 178 00:12:07,686 --> 00:12:09,271 இதற்கு முன்பு சவரம் செய்ததில்லை. 179 00:12:09,354 --> 00:12:12,274 அதோடு, இன்று காலை நான் எழுந்தபோது, என் முதுகில் வலி ஏற்பட்டது. 180 00:12:12,357 --> 00:12:14,776 அது பரிசோதனையின் பக்கவிளைவாக இருக்கலாம். 181 00:12:14,860 --> 00:12:16,236 அதை முதுமை என்று சொல்வார்கள். 182 00:12:16,320 --> 00:12:20,032 திருடப்பட்ட பதில்களைப் பற்றி பேசலாம். நீ தேர்வுக்குப் படித்திருக்கிறாய். 183 00:12:21,617 --> 00:12:22,910 என்ன நடக்கிறது? 184 00:12:24,620 --> 00:12:27,664 இவை என் அம்மாவின் யோசனை. நான் அவற்றை அதிகம் பயன்படுத்தவில்லை. 185 00:12:28,332 --> 00:12:29,333 அட, செத். 186 00:12:30,292 --> 00:12:31,543 உன் விஷயங்கள் உனக்குத் தெரியும். 187 00:12:31,627 --> 00:12:33,003 அதை யார் செய்தது? 188 00:12:33,629 --> 00:12:34,713 டைலரா? 189 00:12:35,297 --> 00:12:36,715 அவன் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை, 190 00:12:37,591 --> 00:12:40,844 ஆங்கிலத்திலும், வரலாறிலும். 191 00:12:40,928 --> 00:12:43,931 நான் செய்தேன். நான் ஏன் அப்படி பொய் சொல்ல வேண்டும்? 192 00:12:44,932 --> 00:12:46,058 எனக்கு உறுதியாக தெரியவில்லை. 193 00:12:46,725 --> 00:12:48,185 ஆனால் நீ யாரையோ காப்பாற்றுகிறாய். 194 00:12:49,937 --> 00:12:51,438 வகுப்பிற்குச் செல்வது நல்லது. 195 00:13:02,616 --> 00:13:03,909 ஹேய், டைலர். 196 00:13:06,411 --> 00:13:08,163 உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 197 00:13:08,247 --> 00:13:12,125 நேற்று, நான் தேர்வு பதில்களை திருடியதாக பள்ளி முதல்வரிடம் சொன்னேன். 198 00:13:12,209 --> 00:13:14,002 தேர்வு பதில்களை நீ திருடினாயா? 199 00:13:14,086 --> 00:13:15,254 குரலை உயர்த்தாதே. 200 00:13:16,213 --> 00:13:21,885 இல்லை, நான் திருடவில்லை. செய்ததாகச் சொன்னேன். திருடியது யாரென்று நம் இருவருக்குமே தெரியும். 201 00:13:21,969 --> 00:13:23,554 அப்படியா? யார்? 202 00:13:23,637 --> 00:13:25,889 நீதான், டைலர். நீ தேர்வு பதில்களை திருடினாய். 203 00:13:25,973 --> 00:13:28,225 இல்லை, நான் செய்யவில்லை. நீ ஏன் அப்படி நினைக்கிறாய்? 204 00:13:28,308 --> 00:13:30,185 உன் மதிப்பெண்கள் மோசமாக இருப்பதால்? 205 00:13:30,269 --> 00:13:31,895 எனது மதிப்பெண்கள் எப்போதும் மோசமாக உள்ளன. 206 00:13:34,064 --> 00:13:36,149 இது ஒரு வித்தியாசமான வழியில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 207 00:13:39,486 --> 00:13:40,779 விளையாட்டுக்குச் சொன்னேன். 208 00:13:41,154 --> 00:13:42,531 நீ திருடவில்லை என்று தெரியும். 209 00:13:42,614 --> 00:13:44,241 எனக்கு நகைச்சுவை புரியவில்லை. 210 00:13:45,325 --> 00:13:47,953 ஆசிரியர்களின் ஓய்வறையில் இவற்றை வைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? 211 00:13:48,036 --> 00:13:49,538 அது எவ்வளவு சுவையானது தெரியுமா? 212 00:13:52,541 --> 00:13:54,626 எனவே, என்ன நடக்கிறது? 213 00:13:55,335 --> 00:13:58,005 -வழக்கமாக, நீங்கள் கூட்டத்தைத் தொடங்குவீர்கள். -நிச்சயமாக. 214 00:13:58,881 --> 00:14:01,091 ஆனால் இன்றைக்கு அதை மாற்றுவோம். 215 00:14:01,175 --> 00:14:05,762 சரி. புதிய அணி சீருடைகளுக்கு நிதி திரட்டும் யோசனை தேவை. 216 00:14:05,846 --> 00:14:07,389 நாம் சாக்லேட் பார்களை விற்கலாம். 217 00:14:07,472 --> 00:14:09,766 இல்லை, அது முடிந்தது. 218 00:14:11,393 --> 00:14:13,812 கிடைத்துவிட்டது: பார்ட்டி. 219 00:14:14,396 --> 00:14:15,564 என்ன? 220 00:14:15,647 --> 00:14:18,859 ஒரு டீஜேவை வரவழைப்போம், சில கலை ஓவியங்களால் ஜிம்மை அலங்கரிப்போம், 221 00:14:18,942 --> 00:14:20,235 சில நடமாடும் உணவகங்களை வரவழைப்போம். 222 00:14:20,319 --> 00:14:22,237 எல்லா வருமானமும் சீருடைகளுக்குப் போகும். 223 00:14:22,321 --> 00:14:24,698 உண்மையில், இது ஒரு நல்ல யோசனை. 224 00:14:24,781 --> 00:14:26,325 நிச்சயமாக. 225 00:14:26,408 --> 00:14:27,910 நான்தான் பள்ளி முதல்வர். 226 00:14:27,993 --> 00:14:30,370 -அடுத்தது என்ன? -பள்ளி மதிய உணவு மெனுவை மறுபரிசீலனை செய்தல். 227 00:14:31,205 --> 00:14:32,539 காரத்தை எடுத்துவிடுங்கள். 228 00:14:32,623 --> 00:14:35,167 அது நல்லதில்லை, எல்லோரும் உடல்நிலை சரியில்லாதது போல உணர்கிறார்கள். 229 00:14:35,918 --> 00:14:38,212 அதை பீட்சாவாக மாற்றிவிடுங்கள். 230 00:14:38,795 --> 00:14:40,172 ஆனால் செவ்வாய்தான் பீட்சா தினம். 231 00:14:41,006 --> 00:14:42,758 இப்போது செவ்வாய் மற்றும் வியாழன் பீட்சா தினங்கள். 232 00:14:43,842 --> 00:14:45,802 இது வேடிக்கையாக இருக்கிறது. வேறு என்ன? 233 00:14:45,886 --> 00:14:48,555 எனக்கு உதவி தேவை. இன்னும் ஜெரமியுடன் பிரச்சினையில் இருக்கிறேன். 234 00:14:48,639 --> 00:14:50,390 அவன் வகுப்பிற்கு இடைஞ்சல். 235 00:14:50,474 --> 00:14:53,519 -ஜெரமி மோசமானவன். -பள்ளி முதல்வர் யங். 236 00:14:54,520 --> 00:14:57,189 அட, நாம் எல்லோரும் அப்படிதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். 237 00:15:00,192 --> 00:15:02,569 சரி, அவ்வளவுதான் என்றால், 238 00:15:02,653 --> 00:15:05,280 ஆசிரியர்களின் ஓய்வறையில் சில ஹாட் பாக்கெட்டுகளைப் பார்த்தேன். 239 00:15:06,281 --> 00:15:08,659 இன்றைய முக்கிய நிர்வாகசபைக் கூட்டத்துக்கு வாழ்த்துகிறேன். 240 00:15:08,742 --> 00:15:09,952 நன்றி. 241 00:15:11,662 --> 00:15:13,747 எந்த நிர்வாகசபைக் கூட்டத்தை குறிப்பிடுகிறீர்கள்? 242 00:15:13,830 --> 00:15:14,915 எனக்கு நிறைய இருக்கின்றன... 243 00:15:15,916 --> 00:15:19,002 -இசைக்கான பட்ஜெட்டை குறைப்பது. -இசைக்கான பட்ஜெட்டைக் குறைப்பதா? 244 00:15:22,798 --> 00:15:24,216 அதற்காக காத்திரு. 245 00:15:26,176 --> 00:15:27,594 அது விலைமதிப்பற்றது. 246 00:15:27,678 --> 00:15:29,763 செத், நீ எனக்கு பதில் சொல்லவேயில்லை. 247 00:15:29,847 --> 00:15:31,765 நான் கொஞ்சம் வேலையாக இருந்தேன். 248 00:15:33,100 --> 00:15:35,811 -என் வடிவமைப்பைப் பற்றி என்ன நினைக்கிறாய்? -இது எதற்காக? 249 00:15:35,894 --> 00:15:38,480 என் டி-ஷர்ட் அச்சிடும் தொழிலுக்காக. 250 00:15:39,064 --> 00:15:41,149 நேர்மையாகச் சொல், இதற்காக 35 டாலர்கள் கொடுப்பாயா? 251 00:15:41,233 --> 00:15:43,819 முப்பத்தைந்து டாலர்களா? ஒரு டி-ஷர்ட்டுக்கா? 252 00:15:44,695 --> 00:15:45,696 வாய்ப்பே இல்லை. 253 00:15:48,407 --> 00:15:51,118 ஆனால் நான் உன் இலக்கு வாடிக்கையாளராக இல்லாமல் இருக்கலாம். 254 00:15:53,120 --> 00:15:56,623 செத், நான் உன்னிடம் பேச வேண்டும். இப்போதே. 255 00:16:00,752 --> 00:16:02,421 இசைக்கான பட்ஜெட்டைக் குறைக்கிறீர்களா? 256 00:16:02,504 --> 00:16:04,923 எப்படி முடிந்தது? எனக்குப் பிடித்த ஒரே பாடம் அதுதான். 257 00:16:05,007 --> 00:16:06,675 நான் பட்ஜெட்டைக் குறைக்கவில்லை. 258 00:16:06,758 --> 00:16:09,178 பள்ளி நிர்வாகம் அதைச் செய்கிறது. நான் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறேன். 259 00:16:10,596 --> 00:16:12,890 -நீங்களா? நிஜமாகவா? -ஆம். 260 00:16:13,390 --> 00:16:16,894 நம்புகிறாயோ இல்லையோ, நான் இசையில் அக்கறை காட்டுகிறேன், ஹாலில் அல்ல. 261 00:16:17,769 --> 00:16:21,106 -நான் கலைகளை அகற்ற விரும்பவில்லை. -மன்னிக்கவும், நான் நினைத்தேன்... 262 00:16:21,190 --> 00:16:23,066 எனக்குப் பிறகு நிர்வாகக் குழுவுடன் ஒரு முக்கிய சந்திப்பு இருக்கிறது. 263 00:16:23,150 --> 00:16:26,153 ஒன்றும் ஆகாது. டாக்டர் எல்லாவற்றையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். 264 00:16:26,236 --> 00:16:27,613 போகலாம். 265 00:16:30,073 --> 00:16:32,910 இணைப்புகளை மூன்று முறை சரிபார்க்கிறேன். 266 00:16:34,161 --> 00:16:36,538 நாங்கள் மாறுவதற்கு முன், நான் சொல்ல விரும்புகிறேன்… 267 00:16:38,665 --> 00:16:41,752 உங்கள் விரிப்பில் கொஞ்சம் சாஸைக் கொட்டிவிட்டேன். குளியல் தொட்டி உடைந்துவிட்டது, இருந்தாலும், 268 00:16:41,835 --> 00:16:45,130 -சரியாக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். - 24 மணி நேரம்தான் ஆகிறது. 269 00:16:45,714 --> 00:16:49,092 -சரி. நாம் தொடங்கலாம். தயாரா? -ஆம். 270 00:16:49,676 --> 00:16:53,847 சரி, கண்ணை மூடுங்கள். கவனம் செலுத்துங்கள். 271 00:17:04,650 --> 00:17:07,861 எதுவும் நடக்கவில்லை. நான் இன்னும் அவன்தான். 272 00:17:08,904 --> 00:17:09,905 சரி, பதற்றமடைய வேண்டாம். 273 00:17:11,073 --> 00:17:14,326 மூளை என்பது நியூரான்களால் ஆனா சிக்கலான ஒன்று, 274 00:17:14,409 --> 00:17:16,954 அதோடு இது புதிய தொழில்நுட்பம். இது நேரம் எடுக்கும். 275 00:17:17,037 --> 00:17:19,957 45 நிமிடங்களில் ஒரு கூட்டம் இருக்கிறது. நாங்கள் என்ன செய்வது? 276 00:17:20,540 --> 00:17:21,541 என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 277 00:17:22,041 --> 00:17:26,046 கொஞ்சம் வினோதமானதுதான், ஆனால் நான் உங்களைப் போல பேசினால்? 278 00:17:29,132 --> 00:17:30,759 நமக்கு வேறு வழியில்லை என்று நினைக்கிறேன். 279 00:17:32,386 --> 00:17:33,887 நான் நன்றாக செய்வேன். 280 00:17:33,971 --> 00:17:35,764 நாம் இசைக்கான பட்ஜெட்டைக் காப்பாற்ற வேண்டும். 281 00:17:37,391 --> 00:17:40,894 நீ ஒரு குறிப்பு கொடுக்க வேண்டும், அதனால் நான் வகுப்பிலிருந்து சீக்கிரம் வெளியேற முடியும். 282 00:17:41,478 --> 00:17:42,312 சரி. 283 00:17:47,651 --> 00:17:49,611 ஹேய், ஒரு நொடி கிடைக்குமா? 284 00:17:49,695 --> 00:17:52,656 -நான் உன்னிடம் பேசவேண்டும். இது முக்கியமானது. -என்ன விஷயம்? 285 00:17:52,739 --> 00:17:55,659 தேர்வு விடைகளை திருடியதாக நீ பழியை ஏற்றுக்கொண்டதாக டைலர் சொன்னான். 286 00:17:56,410 --> 00:17:57,411 அவன் சொன்னானா? 287 00:17:57,494 --> 00:18:00,831 அதை அவன் செய்ததாக நீ குற்றம் சாட்டினாய் என்றும் சொன்னான். 288 00:18:01,665 --> 00:18:03,792 நீ ஏன் அப்படி செய்தாய்? அது நான்தான் என்று உனக்குத் தெரியும். 289 00:18:05,586 --> 00:18:08,046 டைலருடன் விளையாடினேன். 290 00:18:09,464 --> 00:18:10,966 என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி. 291 00:18:11,508 --> 00:18:13,343 என் அப்பா வேலையை இழந்ததில் இருந்து படிக்க நேரம் கிடைப்பது 292 00:18:13,427 --> 00:18:14,595 மிகவும் கடினமாக இருக்கிறது. 293 00:18:14,678 --> 00:18:17,639 அவர் வேலை தேடும் போது நான் வீட்டுக்கு உதவி செய்து வருகிறேன். 294 00:18:17,723 --> 00:18:21,059 குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, டி-ஷர்ட் வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறேன். 295 00:18:21,643 --> 00:18:24,479 எல்லாவற்றிற்கும் மேலாக மோசமான மதிப்பெண்ணைப் பெறும் எண்ணத்தை 296 00:18:24,563 --> 00:18:25,731 உன்னால் தாங்க முடியவில்லை. 297 00:18:25,814 --> 00:18:27,983 இது சால்ஜாப்பு இல்லை. நான் மோசமாக உணர்கிறேன். 298 00:18:28,901 --> 00:18:31,695 அது தவறு, அதற்காக நீ பழியேற்க விடமாட்டேன். 299 00:18:32,279 --> 00:18:34,573 பள்ளி முதல்வர் கடுமையான தண்டனை தர மாட்டார் என்று நம்புகிறேன். 300 00:18:34,656 --> 00:18:37,868 அவர் நல்ல மனிதர். உனக்கு ஆச்சரியம் தரலாம். 301 00:18:37,951 --> 00:18:41,496 நீ இதைச் செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. நீ நிஜமாகவே நல்ல நண்பன். 302 00:18:53,050 --> 00:18:54,760 -ஹலோ, ஜான். -ஹாய். 303 00:18:57,387 --> 00:18:58,388 ஆம். 304 00:19:04,144 --> 00:19:05,229 இது யார்? 305 00:19:06,396 --> 00:19:09,566 இது செத். எங்கள் இசை மாணவர்களில் ஒருவன், 306 00:19:09,650 --> 00:19:13,695 திறமையான டிரம்ஸ் கலைஞன், மிகவும் திறமையானவன். 307 00:19:13,779 --> 00:19:15,864 இப்போது இவனுடைய ஆட்டோகிராஃபை வாங்கிக்கொள்ளுங்கள், பெரிய பிரபலமாகப் போகிறான். 308 00:19:17,199 --> 00:19:19,159 எப்படியோ, இன்று இவனும் வரவேண்டும் என்று நினைத்தேன், 309 00:19:19,243 --> 00:19:22,079 எனவே நீங்கள் பாதிப்பை நேராக பார்க்க முடியும் என்பதால். 310 00:19:23,539 --> 00:19:25,707 -ஹேய். -வரவேற்கிறோம், செத். 311 00:19:27,292 --> 00:19:28,961 சொல்லுங்கள், ஜான். 312 00:19:35,384 --> 00:19:39,680 -"நியூட்டன் ஒரு தொழில்நுட்ப தலைநகர்..." -குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும், 313 00:19:40,264 --> 00:19:43,100 -ஸ்லைடுகள் இருக்குமே, பள்ளி முதல்வரே. -அப்படியா? 314 00:19:44,309 --> 00:19:45,644 ஆம், என்னிடம் இருக்கிறது. 315 00:19:46,228 --> 00:19:48,522 நிச்சயமாக, நீ ஏன் எனக்காக அவற்றை இயக்கக்கூடாது. 316 00:19:48,605 --> 00:19:50,732 அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும், பள்ளி முதல்வரே. 317 00:19:53,026 --> 00:19:56,363 "நியூட்டன் ஒரு தொழில்நுட்ப தலைநகர் என்று அறியப்படுகிறது, 318 00:19:56,446 --> 00:20:00,117 ஆனால் நாம் எல்லாவற்றிலும் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விடக்கூடாது. 319 00:20:00,200 --> 00:20:04,079 எங்கள் மாணவர்களின் வளர்ச்சியில் கலை, உடற்கல்வி, 320 00:20:04,162 --> 00:20:05,956 அதோடு இசை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். 321 00:20:06,039 --> 00:20:08,041 விளக்கப்படம் A இல் நீங்கள் பார்க்க முடியும், 322 00:20:08,542 --> 00:20:12,546 ஆரோக்கியமான மூளை வளர்ச்சி, கல்விச் செயல்திறன், 323 00:20:12,629 --> 00:20:16,300 மற்றும் ஒட்டுமொத்த நேர்மறையான மனநிலையோடு சம்பந்தப்பட்டது இசை..." 324 00:20:16,383 --> 00:20:17,634 மீண்டும் குறுக்கிட்டுக்கு மன்னிக்கவும். 325 00:20:18,594 --> 00:20:20,762 கொஞ்சம் தனியாக பேசலாமா, பள்ளி முதல்வரே? 326 00:20:21,388 --> 00:20:23,098 ஆம். ஒரு நிமிடம். 327 00:20:28,937 --> 00:20:31,315 நான் முயற்சி செய்கிறேன், ஆனால் இது மிகவும் சலிப்பாக இருக்கிறது. 328 00:20:31,398 --> 00:20:35,360 -இதைப் படிக்கும்போதே தூக்கம் வருகிறது. -பேச்சை மறந்துவிடு. நல்ல யோசனை இருக்கிறது. 329 00:20:35,944 --> 00:20:40,073 நீ நீயாக இரு, அங்கு சென்று, உன்னால் முடிந்த சிறந்ததை செய். 330 00:20:42,242 --> 00:20:44,870 -சரியாக எப்படி? -ஒரு வகுப்பு கோமாளியாக. 331 00:20:45,621 --> 00:20:48,165 பார், நீ நிச்சயமாக இசையில் ஆர்வமுள்ளவன். 332 00:20:49,208 --> 00:20:50,501 அதை அவர்களிடம் காட்டு. 333 00:21:01,094 --> 00:21:02,221 பேச்சை மறந்துவிடு. 334 00:21:02,304 --> 00:21:05,599 இது ஒரு சில தகவல்களும் புள்ளிவிவரங்களும்தான், அது நம் எல்லோரையும் சலிப்படைய செய்கிறது. 335 00:21:05,682 --> 00:21:08,477 இசை என்பது எண்களைப் பற்றியது அல்ல. அது உணர்ச்சியைப் பற்றியது. 336 00:21:11,188 --> 00:21:14,149 -நீங்கள் என்ன கேட்பீர்கள்? -நான் ஜாஸ் கேட்பேன். 337 00:21:14,233 --> 00:21:16,193 அருமை. சில மைல்ஸ் டேவிஸ் இசையை. 338 00:21:16,276 --> 00:21:18,028 கொஞ்சம் கோல்ட்ரேன்? 339 00:21:18,111 --> 00:21:19,780 -அது தாக்கத்தை ஏற்படுத்தும், இல்லையா? -ஆம். 340 00:21:19,863 --> 00:21:20,906 நீங்கள் எப்படி? 341 00:21:20,989 --> 00:21:22,199 எனக்கு ராப் பிடிக்கும். 342 00:21:22,908 --> 00:21:25,244 நான் அதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அது நன்றாக இருக்கும். 343 00:21:25,327 --> 00:21:26,828 எனக்கு 80களின் சாஃப்ட் ராக் பிடிக்கும். 344 00:21:26,912 --> 00:21:29,581 நிச்சயமாக. அதனால் உங்களை தப்பாக நினைக்கமாட்டேன். 345 00:21:29,665 --> 00:21:34,044 விஷயம் என்னவென்றால், இசை என்பது நம் வாழ்வின் ஒலிப்பதிவு. 346 00:21:34,127 --> 00:21:36,922 நம் பெற்றோர்கள் 15 முறை செய்யச் சொன்ன பிறகு 347 00:21:37,005 --> 00:21:39,925 நாம் கட்டுரைகள் எழுதும் போது, அல்லது இரவு உணவு சமைக்கும் போது 348 00:21:40,008 --> 00:21:42,970 அல்லது நம் அறைகளை சுத்தம் செய்யும்போது அதைத்தான் கேட்கிறோம். 349 00:21:43,512 --> 00:21:47,516 நாம் சோகமாக இருக்கும்போது அதுதான் மகிழ்ச்சியை தருகிறது. நம் தனிமை உணர்வை குறைக்கிறது. 350 00:21:47,599 --> 00:21:50,602 நாம் அதை நம் பள்ளிகளில் இருந்து அகற்ற முடியாது, ஏனென்றால் அதன் மூலம், 351 00:21:50,686 --> 00:21:53,564 நாம் யார் என்பதில் பெரும் பகுதியை இழக்கிறோம். 352 00:22:11,748 --> 00:22:13,000 சரி. 353 00:22:20,465 --> 00:22:22,467 உங்களுக்கு டிரம்ஸ் வாசிக்கத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. 354 00:22:22,551 --> 00:22:25,179 இசை வகுப்பில் கற்றேன். இது ஒரு ப்ளூஸ் இசை. 355 00:22:25,262 --> 00:22:26,680 இசையை ஒலிக்கவிடு, செத். 356 00:22:28,223 --> 00:22:31,143 வாருங்கள். இணைந்து கைத்தட்டுங்கள். 357 00:22:31,935 --> 00:22:35,731 வாருங்கள், இசைக்கேற்ப உங்கள் உடல் ஆடட்டும். 358 00:22:35,814 --> 00:22:38,358 இதோ. இப்போது, காற்றில் கிதார் வாசிப்பது எப்படி? 359 00:22:39,526 --> 00:22:42,446 நீங்கள் கண்ணாடி முன்பு காற்றில் கிதார் வாசித்ததில்லை என்று சொல்லாதீர்கள். 360 00:22:42,529 --> 00:22:44,114 நீங்கள் கண்டிப்பாக செய்திருப்பீர்கள். 361 00:22:46,742 --> 00:22:47,868 இதோ. 362 00:22:49,703 --> 00:22:50,704 ஆம். 363 00:22:52,706 --> 00:22:55,042 இந்த பள்ளியில் என்ன நடக்கிறது? 364 00:22:55,125 --> 00:22:58,420 வினோதம். மிக மிக வினோதம். 365 00:23:04,593 --> 00:23:05,719 நீ சாதித்துவிட்டாய், செத். 366 00:23:05,802 --> 00:23:08,514 அவர்கள் இசைக்கான பட்ஜெட்டை குறைக்காமல், அதை அதிகரிக்கிறார்கள். 367 00:23:08,597 --> 00:23:10,766 என்ன டிரம் செட் வாங்க வேண்டும் என்று எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. 368 00:23:11,308 --> 00:23:13,894 சரி, இதை மீண்டும் முயற்சிப்போம். கண்ணை மூடுங்கள். 369 00:23:24,112 --> 00:23:25,906 பரிமாற்றம் முடிந்தது. 370 00:23:29,993 --> 00:23:32,204 என் முதுகு வலிக்கிறது. இது நான்நான். 371 00:23:33,872 --> 00:23:36,542 -பார்க்க முடிகிறது. -கடவுளுக்கு நன்றி. 372 00:23:37,709 --> 00:23:40,003 இது நடக்கவே இல்லை. 373 00:23:45,676 --> 00:23:47,427 நான் நீயாக இருப்பதை மிஸ் செய்யப்போகிறேன், செத். 374 00:23:47,970 --> 00:23:50,889 வீட்டுப்பாடங்களைத் தவிர, மீண்டும் சிறுவனாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 375 00:23:51,515 --> 00:23:55,185 ஒரு விசித்திரமான வழியில், இது என்னை ஒரு சிறந்த பள்ளி முதல்வராக மாற்றும் என்று நினைக்கிறேன். 376 00:23:55,269 --> 00:23:56,937 ஏற்கனவே நீங்கள் நல்ல முதல்வர்தான். 377 00:23:57,896 --> 00:24:01,650 உட்கார்ந்துகொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை சிரமமாக்குவதுதான் உங்கள் வேலை என்று நினைத்தேன். 378 00:24:01,733 --> 00:24:04,653 நீங்கள் செய்கிறீர்கள், ஆனால் வேண்டுமென்றே அல்ல. 379 00:24:04,736 --> 00:24:07,030 உங்கள் வேலை கடினமானது, நீங்கள் அதில் வல்லவர். 380 00:24:07,114 --> 00:24:08,448 என்னை விட நன்றாக. 381 00:24:10,617 --> 00:24:12,619 நான் லோகனிடம் பேசினேன், நீ என்ன செய்தாய் என்று அவள் சொன்னாள். 382 00:24:13,537 --> 00:24:15,163 ஆம், அதைப் பற்றி நான் கவலைப்பட்டேன். 383 00:24:16,540 --> 00:24:19,543 அவளிடம் கடினமாக நடந்துகொள்ள வேண்டாம், சரியா? அவள் கஷ்டகாலத்தில் இருக்கிறாள். 384 00:24:20,419 --> 00:24:22,963 பின்விளைவுகள் இருக்கும், ஆனால் கவலைப்படாதே, அவை நியாயமானதாக இருக்கும். 385 00:24:23,630 --> 00:24:28,844 அவளைக் காப்பாற்றியது உண்மையில் முட்டாள்தனமானது ஆனால் நம்பமுடியாத அளவுக்கு தைரியமானது. 386 00:24:29,761 --> 00:24:33,515 உன்னை நண்பனாக பெற்ற அவள் அதிர்ஷ்டசாலி, நீ என் மாணவனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். 387 00:24:40,689 --> 00:24:42,316 ஹாலில் சந்திப்போம். 388 00:24:45,194 --> 00:24:46,195 இன்னொரு விஷயம். 389 00:24:46,278 --> 00:24:49,448 உங்கள் புதிய சோஃபா கொஞ்சம் கிழிந்திருக்கும், ஆனால் அது ஏற்கனவே இருந்தது என்று நினைக்கிறேன். 390 00:25:50,884 --> 00:25:52,886 வசனத் தமிழாக்கம் அருண்குமார்