1 00:00:05,214 --> 00:00:07,132 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 2 00:00:16,600 --> 00:00:19,436 அருமை, ஜெஸ்ஸி. நன்றாக ஆடுகிறாய். 3 00:00:20,020 --> 00:00:22,272 டிராவிஸ், நீ நன்றாக ஆடுகிறாய். 4 00:00:36,703 --> 00:00:38,205 சரி. 5 00:00:38,288 --> 00:00:41,375 அருமையாக ஆடினீர்கள், ஆம். மிகவும் நன்றாக இருந்தது. 6 00:00:41,458 --> 00:00:43,836 உங்களை ஆசுவாசப்படுத்தும் உடற்பயிற்சிகளை மறக்க வேண்டாம், சரியா? 7 00:00:43,919 --> 00:00:45,546 இப்போது, உங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, 8 00:00:45,629 --> 00:00:48,048 இந்த வியாழன் அன்று நடனக் குழுவிற்கான ஆடிஷன்கள் நடக்கின்றன. 9 00:00:48,131 --> 00:00:52,261 ஜூனியர் ஆண்களில் ஒரு இடமும், ஜூனியர் பெண்களில் ஒரு இடமும் இருக்கிறது. 10 00:00:52,344 --> 00:00:55,097 எனவே, நன்றாகப் பயிற்சி செய்யுங்கள். 11 00:01:00,769 --> 00:01:04,313 ஹேய், ஜெஸ்ஸி, நீ இன்று நன்றாக ஆடினாய். ஆடிஷன் செய்கிறாயா? 12 00:01:04,397 --> 00:01:05,691 -ஆம். -நானும்தான். 13 00:01:05,774 --> 00:01:08,527 ஆடிஷனை நினைக்கும்போது பதற்றமாக இருக்கிறது. நீ நிறைய பயிற்சி செய்கிறாயா? 14 00:01:09,027 --> 00:01:10,362 இல்லை, அப்படியெல்லாம் இல்லை. 15 00:01:10,445 --> 00:01:15,742 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிமிடம் இரு போதுமான நேரத்தை எடுத்துக்கொள் 16 00:01:15,826 --> 00:01:19,037 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 17 00:01:19,705 --> 00:01:22,833 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நொடி இருப்பதுதான் 18 00:01:23,375 --> 00:01:25,294 உன் கைகள், என் மீது 19 00:01:25,377 --> 00:01:28,755 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 20 00:01:36,180 --> 00:01:37,890 நீ செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதுதான் 21 00:01:39,725 --> 00:01:41,685 எண்பத்து ஒன்பது சதவிகிதம். 22 00:01:43,187 --> 00:01:47,774 எண்பத்து ஒன்பது! இவன் பிறப்பிலேயே நட்சத்திரம்தான். என்னிடமிருந்து இந்த திறமை வந்திருக்கிறது. 23 00:01:47,858 --> 00:01:49,735 நீதான் மோசமாக ஆடுவாய். 24 00:01:49,818 --> 00:01:51,570 நான்தான் தாளத்திற்கு ஏற்றார்போல் ஆடுவேன். 25 00:01:53,655 --> 00:01:55,282 உன் ஆடிஷன் பற்றி நன்றாக உணர்கிறாயா? 26 00:01:55,866 --> 00:01:58,118 அப்படித்தான் நினைக்கிறேன். நிறைய பயிற்சி செய்கிறேன். 27 00:01:58,202 --> 00:02:00,662 நாங்கள் பார்த்தோம். உன் நாயும்தான். 28 00:02:02,206 --> 00:02:03,624 அதை நடக்க அழைத்துப்போக மறந்துவிடுகிறாய். 29 00:02:04,208 --> 00:02:06,376 அப்பல்லோ வந்தபோது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் நினைவிருக்கிறதா? 30 00:02:06,460 --> 00:02:09,045 அது என் பொறுப்பில் இருக்கும். விரைவில் அதை வெளியே அழைத்துப் போகிறேன். 31 00:02:09,128 --> 00:02:12,841 கேள், எனக்குப் புரிகிறது. ஆனால் நீ அந்த சமநிலையை கண்டுபிடிக்க வேண்டும். 32 00:02:13,425 --> 00:02:16,345 நடனம் மட்டும் வாழ்க்கையில் முக்கியமில்லை. உனக்குப் பள்ளியும் இருக்கிறது. 33 00:02:16,929 --> 00:02:19,389 தெரியும், ஆனால் ஆடிஷனுக்கு ஒரு வாரம்தான் இருக்கிறது. 34 00:02:19,932 --> 00:02:21,850 மூன்று மாதங்களாக பயிற்சி செய்கிறாய். 35 00:02:21,934 --> 00:02:25,395 நடனக்குழுவில் இடம் கிடைத்தால், அது உன் நேரத்தை இன்னும் அதிகமாக எடுக்கும். 36 00:02:25,479 --> 00:02:28,106 என்ன? என்னை நிறுத்த சொல்கிறீர்களா? 37 00:02:28,190 --> 00:02:31,235 இல்லை. நடனத்தின் மீது உனக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பது தெரியும். 38 00:02:31,318 --> 00:02:33,153 உன் நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும். 39 00:02:33,237 --> 00:02:35,489 முயற்சிக்கிறேன், ஆனால் இது முக்கியம். 40 00:02:35,572 --> 00:02:36,782 எங்களுக்குத் தெரியும். 41 00:02:37,324 --> 00:02:39,159 எனவே, உனக்கு உதவக்கூடிய ஒன்றை யோசித்திருக்கிறோம். 42 00:02:42,329 --> 00:02:45,332 ஹலோ. நான்தான் உன் தனிப்பட்ட உதவியாளர். 43 00:02:45,415 --> 00:02:48,502 உன் பணிகளிலும் நேர நிர்வாகத்திலும் என்னால் உதவ முடியும். 44 00:02:49,795 --> 00:02:52,589 இது பேசுகிறது. இது எதற்காக? 45 00:02:52,673 --> 00:02:53,757 நன்றாக இருக்கிறதுதானே? 46 00:02:53,841 --> 00:02:56,552 இது உன் பள்ளிப்பாடங்களைத் திட்டமிட உதவும் பேசும் உதவியாளர். 47 00:02:56,635 --> 00:02:57,886 பேசு, முயற்சித்துப் பார். 48 00:02:58,595 --> 00:03:01,181 எனக்கு ஒதுக்கிய வீட்டுப்பாடங்களைச் சரியான நேரத்தில் செய்து முடிக்க உதவ முடியுமா? 49 00:03:01,265 --> 00:03:04,059 கண்டிப்பாக. உன் பள்ளி போர்ட்டலுடன் என்னை இணைத்துவிடு. 50 00:03:04,142 --> 00:03:05,227 வாராந்திர நாட்காட்டி 51 00:03:07,104 --> 00:03:11,066 உனக்கு தற்போது ஒதுக்கப்பட்ட வீட்டுப்பாடங்களுக்கும் தேர்வுகளுக்குமான அட்டவணை என்னிடம் இருக்கிறது. 52 00:03:11,149 --> 00:03:13,694 திட்டமிட்டபடி பணிகளை முடிக்க படிக்கும் திட்டத்தை உருவாக்குகிறேன். 53 00:03:14,403 --> 00:03:16,363 சரி, நிறைவடைந்தது. 54 00:03:16,864 --> 00:03:20,367 ஆங்கிலத்திற்கான உன் புத்தக அறிக்கையை முதலில் முடிக்க பரிந்துரைக்கிறேன். 55 00:03:21,159 --> 00:03:22,744 இன்னும் அற்புதமான பகுதி வரவில்லை. 56 00:03:22,828 --> 00:03:24,746 இதன் கற்பிக்கும் செயல்பாட்டை அதிடம் காட்டச் சொல். 57 00:03:25,664 --> 00:03:27,749 உன்னுடைய கற்பிக்கும் செயல்பாட்டை எனக்குக் காட்ட முடியுமா, தயவுசெய்து? 58 00:03:28,292 --> 00:03:29,293 கண்டிப்பாக. 59 00:03:29,376 --> 00:03:31,628 என்னால் உனக்கு பலவிதமான பாடங்களில் உதவ முடியும். 60 00:03:33,755 --> 00:03:34,882 வாய்ப்பே இல்லை. 61 00:03:36,258 --> 00:03:38,260 உனக்கு இயற்பியலில் ஏதாவது உதவி தேவையா? 62 00:03:38,343 --> 00:03:40,846 ஆம், நேர்மையாக சொன்னால், நிறைய. 63 00:03:40,929 --> 00:03:44,308 என் பொது சார்பியல் கோட்பாட்டை என்னால் உனக்கு விளக்க முடியும். 64 00:03:44,808 --> 00:03:47,769 -அல்லது ஒருவேளை... -பண்டைய நாகரீகங்கள். 65 00:03:48,437 --> 00:03:52,524 பூடிக்கா, பிரிட்டிஷ் ஐசீனாய் பழங்குடியினரின் ராணியான நான், வலிமைமிக்க 66 00:03:52,608 --> 00:03:56,028 ரோமானியப் பேரரசுக்கு எதிரான எழுச்சியை எப்படி வழிநடத்தினேன் என்பதைச் சொல்ல முடியும். 67 00:03:56,862 --> 00:03:58,322 இது மிகவும் அற்புதமாக இருக்கிறது. 68 00:03:59,448 --> 00:04:02,534 உனக்கு உதவவே இருக்கிறேன், ஜெஸ்ஸி. நாம் தொடங்கலாம். 69 00:04:03,202 --> 00:04:04,536 நன்றாக படி, செல்லம். 70 00:04:32,564 --> 00:04:35,901 எனவே அந்த உதவியாளர் வரலாற்றிலிருக்கும் யாராக வேண்டுமானாலும் தோன்றும் என்கிறாயா? 71 00:04:36,527 --> 00:04:38,487 கேட்கவே அருமையாக இருக்கிறது. 72 00:04:38,570 --> 00:04:42,282 முதலில் அருமையாகத்தான் இருந்தது, இப்போது எந்நேரமும் வீட்டுப்பாடம்தான் செய்கிறேன். 73 00:04:45,369 --> 00:04:47,371 உதவியாளர் உதவி செய்வது போல இருக்கிறது. 74 00:04:47,454 --> 00:04:49,081 இப்போது ஒத்திகைப் பார்க்க நேரமேயில்லை. 75 00:04:49,164 --> 00:04:52,376 டிராவிஸ் இந்த ஆடிஷனில் மிகவும் எளிதாக என்னை வென்றுவிடுவான். 76 00:04:52,459 --> 00:04:55,504 அதாவது, அவன் ஏற்கனவே இந்த வருடம் பள்ளி இசை நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தான். 77 00:04:55,587 --> 00:04:57,714 அவன் நடனக்குழுவிலும் சேர வேண்டுமா? 78 00:04:58,340 --> 00:05:00,551 நடனம்தான் நான் நான்றாக செய்யும் ஒரே விஷயம். 79 00:05:03,053 --> 00:05:05,848 இந்த வருடம் ஒரேயொரு இடம்தான் இருக்கிறது, ஒருவேளை அதை அவன் பெறலாம். 80 00:05:06,807 --> 00:05:09,726 அது உனக்குத் தெரியாது. கைகளை பக்கவாட்டில் நீட்டி நில். 81 00:05:13,939 --> 00:05:15,065 உன் கைகளை அலைகள் போல அசை. 82 00:05:17,734 --> 00:05:19,403 உன் கைகளை இடுப்பில் வை. 83 00:05:20,696 --> 00:05:21,989 இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டு. 84 00:05:26,493 --> 00:05:27,786 அமைதியாக இரு, ஜெஸ்ஸி. 85 00:05:28,287 --> 00:05:31,665 டிராவிஸ் பற்றி கவலைப்படாதே. நீ நன்றாக ஆடப்போகிறாய். 86 00:05:33,584 --> 00:05:37,045 எதற்காக இந்த கெட்டப்? நீ ரோபாட் செய்கிறாயா? 87 00:05:37,754 --> 00:05:40,674 இது ரோபாட் இல்லை. இது ஆள் உயர பொம்மை. 88 00:05:41,258 --> 00:05:42,718 இது சரியாக என்ன? 89 00:05:43,760 --> 00:05:47,639 இது ஒருங்கிணைந்த மூட்டுகள் கொண்ட பொம்மை போன்றது. 90 00:05:47,723 --> 00:05:50,309 அறிவியல் கண்காட்சிக்கான எனது திட்டமாக 91 00:05:50,392 --> 00:05:53,270 இதை ஒரு நபரைப் போலவே நடக்கவும் நகரவும் செய்ய வேண்டும். 92 00:05:53,353 --> 00:05:56,440 சமையல் சோடாவையும் வினிகரையும் வைத்து ஒரு எரிமலையை செய்தேன், 93 00:05:56,523 --> 00:05:59,318 நீ இந்த உலகத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இருப்பதாக சொல்கிறாயா? 94 00:06:00,986 --> 00:06:02,029 ஆம். 95 00:06:04,865 --> 00:06:08,619 என் இராணுவம் ரோமானிய தலைநகரான கோல்செஸ்டரை கைப்பற்றிய பிறகு 96 00:06:08,702 --> 00:06:11,663 நாங்கள் லண்டனையும் செயின்ட் ஆல்பன்ஸையும் மீட்டெடுக்க முடிவு செய்தோம். 97 00:06:12,414 --> 00:06:13,540 நன்றி, உதவியாளரே. 98 00:06:13,624 --> 00:06:17,461 பரவாயில்லை, ஜெஸ்ஸி. என்னால் முடிந்த வழியில் உனக்கு உதவுவது என் கடமை. 99 00:06:18,837 --> 00:06:20,005 முடிந்தது. 100 00:06:20,088 --> 00:06:22,549 நீ இரவில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம், நண்பா. 101 00:06:22,633 --> 00:06:25,260 ஆனால் உன் வம்சாவளி தொடர்பான பாடத்தை முடிக்க வேண்டியுள்ளது. 102 00:06:26,428 --> 00:06:28,430 நான் மறந்துவிட்டேன். எப்போது முடிக்க வேண்டும்? 103 00:06:28,514 --> 00:06:29,556 நாளைக்கு. 104 00:06:29,640 --> 00:06:31,350 இன்றிரவு என் அட்டவணையில் ஒரு மணிநேர 105 00:06:31,433 --> 00:06:33,143 நடனப் பயிற்சியை எப்படியாவது சேர்க்க முடியுமா? 106 00:06:33,936 --> 00:06:36,772 படிப்பு திட்டத்தின் படி, முடியாது. 107 00:06:38,690 --> 00:06:42,277 உன் வம்சாவளி பாட அறிக்கைக்காக, நாம் உன் பரம்பரையைப் பார்க்கிறோம். 108 00:06:42,361 --> 00:06:44,571 உன் பரம்பரை உன்னிடமிருந்துதான்... 109 00:06:45,447 --> 00:06:46,615 ...தொடங்குகிறது. 110 00:06:47,199 --> 00:06:51,537 ஹேய். நீ என்னைப் போலவே தோன்றுகிறாய். அருமை. 111 00:06:55,457 --> 00:06:57,459 எனக்கொரு நல்ல யோசனை கிடைத்துவிட்டது. 112 00:07:00,128 --> 00:07:03,882 ஜெஸ்ஸி, நாம் பொறுப்பற்ற குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துவிட்டோம். 113 00:07:03,966 --> 00:07:06,385 ஆம், உன் திட்டம் நூறு மடங்கு நன்றாக இருக்கப்போகிறது. 114 00:07:06,468 --> 00:07:09,763 ஏன் தெரியுமா? இப்போது அது தொழில்நுட்ப ரீதியாக ரோபாட் ஆகிவிட்டதால். 115 00:07:10,848 --> 00:07:12,099 யார் சொன்னது? 116 00:07:12,182 --> 00:07:16,103 இப்போது, என் உதவியாளரை உன் ரோபாட்டுடன் இணைப்பதால், 117 00:07:16,186 --> 00:07:17,896 அது உயிர் பெறுகிறதுதானே? 118 00:07:17,980 --> 00:07:20,190 உதவியாளரும் பொம்மையும் சேர்ந்து ரோபாட் ஆகிறது. 119 00:07:20,983 --> 00:07:22,276 அதுதான் அறிவியல். 120 00:07:22,359 --> 00:07:25,904 அது அறிவியல் இல்லை. அந்த சிறிய ஸ்பேனரை எடுத்துக்கொடு. 121 00:07:33,495 --> 00:07:34,872 அபாரம். 122 00:07:35,455 --> 00:07:36,915 நீ நலமா, உதவியாளரே? 123 00:07:36,999 --> 00:07:38,625 உனக்கு எப்படி உதவுவது, ஜெஸ்ஸி? 124 00:07:41,295 --> 00:07:43,672 இது அச்சு அசலாக உன்னைப் போலவே இல்லை. 125 00:07:43,755 --> 00:07:45,507 நீல உடலுடனா? 126 00:07:46,842 --> 00:07:48,760 பொம்மையின் மீது ஆடைகளை தோன்ற வைக்க முடியுமா, 127 00:07:48,844 --> 00:07:51,388 நான் அணிந்திருப்பதைப் போல? 128 00:07:54,808 --> 00:07:56,101 இது பரவாயில்லை. 129 00:07:59,521 --> 00:08:01,398 அங்கிருக்கும் பையை எடுக்கிறாயா? 130 00:08:11,742 --> 00:08:14,870 கடைசி அளவீடு மாற்றங்களை செய்துவிடுகிறேன். 131 00:08:16,997 --> 00:08:18,123 இதோ! 132 00:08:19,208 --> 00:08:22,544 இப்போது இது உன்னைப் போலவே இருக்கிறது, ஒரு நபரைப் போலவே நடக்கிறது. 133 00:08:22,628 --> 00:08:23,921 நீ சொல்வது சரியாக இருக்கலாம். 134 00:08:24,505 --> 00:08:26,632 இது உண்மையில் ஒரு மனிதன் என்று நம்பப்படலாம். 135 00:08:27,633 --> 00:08:30,219 நான் நடனப் பயிற்சி செய்யம்போது நீ என்னைப் போல நடிக்க வேண்டும். 136 00:08:30,802 --> 00:08:33,764 என் மேஜையில் உட்கார். பாத்திரங்களை கழுவது போன்ற நான் வெறுக்கும் வேலைகளை செய். 137 00:08:33,847 --> 00:08:35,682 முடியாது. பொம்மை ஈரமாகக்கூடாது. 138 00:08:36,600 --> 00:08:39,895 தண்ணீரும் மின்சாரமும் சேர்ந்தால் மோசமான செய்திதான். அதுதான் அறிவியல். 139 00:08:40,520 --> 00:08:41,813 சரி, பாத்திரங்களை கழுவ வேண்டாம். 140 00:08:41,897 --> 00:08:44,149 ஆனால் அப்பல்லோவை நடக்க அழைத்துச் செல்லவும் குப்பைகளை கொட்டவும் உன்னால் முடியும். 141 00:08:44,232 --> 00:08:46,568 எனக்கு அதிக நேரம் கொடுக்கும் எதுவும். 142 00:08:46,652 --> 00:08:47,694 உதவுவதில் மகிழ்ச்சி. 143 00:08:47,778 --> 00:08:51,907 நான் அறிவியல் கண்காட்சியில் முதல் இடம் பெறுவது நிச்சயம். 144 00:09:01,750 --> 00:09:04,336 நீ அதை சுயமாக செய், ஆனால் நாம் வளர வேண்டியதில்லை 145 00:09:04,419 --> 00:09:06,463 நாம் என்றென்றும் இளமையாக இருக்கலாம் 146 00:09:06,547 --> 00:09:09,716 ஏன் என்று என்னால் ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும் 147 00:09:10,300 --> 00:09:14,096 ஆனால் நீ போகிறாய், அது உனக்குத் தெரியும் 148 00:09:14,763 --> 00:09:19,768 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிமிடம் இரு போதுமான நேரத்தை எடுத்துக்கொள் 149 00:09:19,852 --> 00:09:22,604 ஸ்கேன் செய்யப்படுகிறது... 150 00:09:22,688 --> 00:09:23,939 ...எனவே இரு 151 00:09:24,022 --> 00:09:29,862 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நொடி இரு உன் கைகள், என் மீது 152 00:09:29,945 --> 00:09:33,490 நேரம் போய்க்கொண்டிருக்கிறது, எனவே இரு 153 00:09:33,574 --> 00:09:36,827 எனக்கு ஏற்கனவே தெரிந்ததை ஒப்புக்கொள்ள மாட்டேன் 154 00:09:38,120 --> 00:09:40,289 விட்டுக்கொடுப்பதில் நான் கைதேர்ந்தவன் அல்ல 155 00:09:40,372 --> 00:09:41,915 ஸ்கேன் செய்யப்படுகிறது... 156 00:09:43,041 --> 00:09:46,545 -நான் தனியாக இரவைக் கழிக்க விரும்பவில்லை -ஹேய், நலமா, ஜெஸ்ஸி? 157 00:09:46,628 --> 00:09:51,300 எனக்கு நீ வேண்டும், எனக்கு வேண்டும் 158 00:09:52,426 --> 00:09:56,013 ஏன் என்று என்னால் ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும் 159 00:09:56,096 --> 00:09:59,850 ஆனால் நீ போகிறாய், அது உனக்குத் தெரியும் 160 00:10:00,517 --> 00:10:03,228 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிமிடம் இரு 161 00:10:04,229 --> 00:10:05,981 போதுமான நேரத்தை எடுத்துக்கொள் 162 00:10:06,064 --> 00:10:09,693 நேரம் போய்க்கொண்டிருக்கிறது 163 00:10:09,776 --> 00:10:12,779 -எண்பத்து ஏழு சதவிகிதம். -நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நொடி இரு 164 00:10:12,863 --> 00:10:15,240 உன் கைகள், என் மீது 165 00:10:15,324 --> 00:10:18,702 நேரம் போய்க்கொண்டிருக்கிறது, எனவே இரு 166 00:10:18,785 --> 00:10:20,454 ஹேய், அதைத்தான் நான் பார்க்க விரும்பினேன். 167 00:10:21,747 --> 00:10:25,042 நீ செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதுதான் 168 00:10:27,002 --> 00:10:28,587 அது உனக்குத் தெரியும் 169 00:10:28,670 --> 00:10:34,635 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிமிடம் இரு போதுமான நேரத்தை எடுத்துக்கொள் 170 00:10:34,718 --> 00:10:38,430 நேரம் போய்க்கொண்டிருக்கிறது, எனவே இரு 171 00:10:38,514 --> 00:10:43,727 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நொடி இரு உன் கைகள், என் மீது 172 00:10:43,810 --> 00:10:48,190 நேரம் போய்க்கொண்டிருக்கிறது, எனவே இரு 173 00:10:52,402 --> 00:10:55,197 நீ செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதுதான் 174 00:10:55,280 --> 00:10:56,823 தொண்ணூற்று இரண்டு சதவிகிதம். 175 00:10:59,743 --> 00:11:00,744 தொண்ணூற்று இரண்டு. 176 00:11:03,664 --> 00:11:04,831 பிறகுதான் தெரியவந்தது, 177 00:11:04,915 --> 00:11:08,669 எங்கள் வீடு, வாகனம், படகு காப்பீடுகளை தொகுப்பதன் மூலம் கிட்டத்தட்ட 12% 178 00:11:08,752 --> 00:11:11,213 அதிகமாகச் சேமிக்கிறோம் என்று. 179 00:11:11,296 --> 00:11:12,422 பன்னிரண்டு சதவீதம். 180 00:11:12,506 --> 00:11:16,176 இன்னும், அது நிறைய பணம்தான். நாங்கள் செய்வது எல்லாம் செலவு மட்டும்தான் என்று தெரிகிறது. 181 00:11:17,052 --> 00:11:18,428 அதை நினைவு வைத்துக்கொள், ஜெஸ்ஸி. 182 00:11:18,512 --> 00:11:21,974 உனக்கு வயதாக வயதாக, உன் பணத்தைச் சேமித்துவை. 183 00:11:22,057 --> 00:11:24,935 அல்லது வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பயன்படுத்தும் படகை வாங்காதே. 184 00:11:30,482 --> 00:11:32,943 வரவு செலவு திட்டம்தான் பிரச்சினை என்றால், என்னால் உதவ முடியும். 185 00:11:33,861 --> 00:11:36,446 உங்கள் சராசரி மாத வருமானம் என்ன என்று சொல்கிறீர்களா? 186 00:11:36,947 --> 00:11:40,075 ஜெஸ்ஸி. இது தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிய கேள்வி. 187 00:11:40,868 --> 00:11:42,119 வரவு செலவு திட்டதை உருவாக்குவதற்கான முதல் படி 188 00:11:42,202 --> 00:11:45,289 உங்கள் மாத வருமானத்தை மாதாந்திர செலவுகளுடன் ஒப்பிடுவதுதான். 189 00:11:45,372 --> 00:11:47,332 நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த, 190 00:11:47,416 --> 00:11:50,252 உங்கள் தவறான படகில் முதலீட்டின் அடிப்படையில், 191 00:11:50,335 --> 00:11:52,004 நீங்கள் அப்படி செய்வது போல தெரிகிறது. 192 00:11:53,130 --> 00:11:55,507 நான், உங்கள் கோப்பைகளை மீண்டும் நிரப்பட்டுமா? 193 00:11:56,717 --> 00:11:58,468 நன்றி, அன்பே. சுவையாக இருக்கிறது. 194 00:11:58,552 --> 00:12:02,389 -தேன்தான் காரணம். இயற்கையானது. -எனக்கு இயற்கையானவை பிடிக்கும். 195 00:12:05,601 --> 00:12:06,977 நீ என்ன செய்கிறாய்? 196 00:12:07,060 --> 00:12:09,813 உரையாடுகிறேன், திரு. வாலஸின் நகைச்சுவைகளுக்கு சிரிக்கிறேன். 197 00:12:09,897 --> 00:12:13,233 எனது பதிவுகளின் படி, அவை மிகவும் நகைச்சுவையானவை அல்ல. 198 00:12:13,317 --> 00:12:15,777 அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீ கேட்கக் கூடாது, அது நாகரீகமற்றது. 199 00:12:15,861 --> 00:12:19,031 திரு. வாலஸ் தனது சொந்த பணத்தை நிர்வகிப்பதில் சிக்கலை எதிர்கொள்கிறார். 200 00:12:19,114 --> 00:12:20,657 என்னால் பல்வேறு விஷயங்களில் உதவ முடியும். 201 00:12:20,741 --> 00:12:23,410 நீ அவருக்கு கற்பிப்பதை அவர் விரும்பவில்லை. அவர் தன் படகைப் பற்றி பேச விரும்புகிறார். 202 00:12:23,493 --> 00:12:26,288 என் அறைக்கு போ. நான் பார்த்துக்கொள்கிறேன். 203 00:12:27,748 --> 00:12:28,957 ஜெஸ்ஸி, நீ நலமா? 204 00:12:31,793 --> 00:12:33,003 அதற்கு வருந்துகிறேன். 205 00:12:33,086 --> 00:12:35,214 நான் புள்ளியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறேன், 206 00:12:35,297 --> 00:12:37,799 எண்கள் மிகவும் வசீகரமானவை. 207 00:12:39,051 --> 00:12:41,887 எனவே, மீண்டும் உங்கள் படகின் பெயர் என்ன? 208 00:12:41,970 --> 00:12:43,180 பணக் குழி. 209 00:12:55,108 --> 00:12:56,109 உதவியாளர் மிகச்சரியானது அல்ல, 210 00:12:56,193 --> 00:12:58,153 ஆனால் எனக்கு நிறைய பயிற்சி நேரம் கிடைக்கிறது. 211 00:12:58,237 --> 00:13:01,198 நேற்று இரவு 92 புள்ளிகள் பெற்றேன். தொண்ணூற்று இரண்டு. 212 00:13:01,281 --> 00:13:04,326 நல்லது. அதற்கு உதவியாளர் தேவை முடித்துவிட்டதாக அர்த்தமா? 213 00:13:04,409 --> 00:13:07,204 அறிவியல் கண்காட்சிக்கான எனது விளக்கக்காட்சியை நினைத்து பதட்டமாக இருக்கிறேன். 214 00:13:07,704 --> 00:13:09,373 என் மதிப்பெண் அதை நம்பியிருக்கிறது. 215 00:13:10,541 --> 00:13:14,753 நெருப்பு கம்புகளை சுற்றும் வித்தை போன்ற ஒன்றை நீ செய்ய வைக்கலாம். 216 00:13:14,837 --> 00:13:16,129 இல்லை. 217 00:13:16,630 --> 00:13:21,718 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிமிடம் இரு போதுமான நேரத்தை எடுத்துக்கொள் 218 00:13:22,302 --> 00:13:25,806 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 219 00:13:25,889 --> 00:13:29,059 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நொடி இருப்பதுதான் 220 00:13:29,142 --> 00:13:31,562 உன் கைகள், என் மீது 221 00:13:31,645 --> 00:13:34,940 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 222 00:13:35,023 --> 00:13:37,526 நீ செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதுதான். 223 00:13:38,193 --> 00:13:40,612 -தொண்ணூற்று ஆறு சதவீதம். -ஆம்! போகலாம்! 224 00:13:42,489 --> 00:13:43,824 என் கதை முடிந்தது. 225 00:13:56,795 --> 00:13:58,463 நான் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும், 226 00:13:58,547 --> 00:14:00,632 எனவே நீ எனக்காக அறிவியல் வகுப்புக்கு போக வேண்டும். 227 00:14:00,716 --> 00:14:02,801 சரி. வகுப்பில் நான் என்ன செய்ய வேண்டும்? 228 00:14:02,885 --> 00:14:06,096 காராவுக்கு அருகில் உள்ள இருக்கையில் உட்கார். குறிப்பு எடு. எதுவும் சொல்லாதே. 229 00:14:06,180 --> 00:14:07,890 போகலாம். வகுப்பு ஆரம்பமாகிறது. 230 00:14:08,473 --> 00:14:11,435 திரு. ஹாட்ஜ் உன்னிடம் கேள்வி கேட்டால், நீ ஏதாவது சொல்லலாம். 231 00:14:11,518 --> 00:14:13,896 மற்ற குழந்தைகள் செய்வதை மட்டும் செய். 232 00:14:13,979 --> 00:14:16,273 மற்ற குழந்தைகள் செய்வதை நானும் செய்வேன். 233 00:14:16,356 --> 00:14:19,193 நீ இங்கிருந்து வெளியே வருவதற்கு முன், நான் போவதற்கு ஒரு நொடி காத்திரு, சரியா? 234 00:14:39,713 --> 00:14:43,884 இப்போது, பிளாட்டிபஸ் ஒரு மோனோட்ரீம் என்று அழைக்கப்படுகிறது, 235 00:14:44,968 --> 00:14:48,722 குட்டிகளைப் பெற்றெடுப்பதற்குப் பதிலாக முட்டையிடும் பாலூட்டி இது. 236 00:14:49,473 --> 00:14:52,601 இப்போது, மோனோட்ரீமின் அறியப்பட்ட மற்றொரு இனம் மட்டுமே உள்ளது. 237 00:14:52,684 --> 00:14:53,936 அது என்னவென்று யாராவது சொல்ல முடியுமா? 238 00:14:55,020 --> 00:14:56,188 ஆம், ஜெஸ்ஸி. 239 00:14:56,271 --> 00:14:58,398 மோனோட்ரீம்களில் உண்மையில் நான்கு அறியப்பட்ட இனங்கள் உள்ளன. 240 00:14:59,733 --> 00:15:01,276 ஒன்று மட்டுமல்ல, அது தவறானது. 241 00:15:01,360 --> 00:15:03,403 வாத்து வாய் பிளாட்டிபஸுடன், 242 00:15:03,487 --> 00:15:05,656 எக்கிட்னாக்களில் நான்கு வெவ்வேறு இனங்கள் உள்ளன. 243 00:15:09,076 --> 00:15:12,246 என் தவறு சரி திருத்தப்பட்டது என்று நினைக்கிறேன். தொடர்வோம். 244 00:15:13,580 --> 00:15:14,998 அங்கே என்ன நடந்தது? 245 00:15:15,499 --> 00:15:17,334 திரு. ஹாட்ஜின் கேள்விக்கு பதில் சொன்னேன். 246 00:15:18,210 --> 00:15:19,211 நிஜமாகவா? 247 00:15:19,294 --> 00:15:20,671 எனக்கு தண்ணீர் தேவை. 248 00:15:37,563 --> 00:15:40,065 110 அறிவியல் ஆய்வகம் 249 00:15:45,904 --> 00:15:46,989 என்னால் விளக்க முடியும். 250 00:15:48,365 --> 00:15:50,993 ஜெஸ்ஸி, என்ன ஆனது? 251 00:15:51,076 --> 00:15:52,369 நீ கோபப்படுவதற்கு முன், 252 00:15:52,452 --> 00:15:54,997 உன் சொந்த படைப்பே உன்னை ஏமாற்றியது மிகவும் அருமை, இல்லையா? 253 00:15:55,080 --> 00:15:59,376 அது முக்கியமில்லை, சரியா? நீ பிடிபட்டால் உன் திட்டம் என்ன? 254 00:15:59,459 --> 00:16:02,421 நான் எப்படி பிடிபடுவேன்? இது என்னைப் போலவே தெரிகிறது. 255 00:16:02,504 --> 00:16:04,298 ஆம், ஆனால் இது நீ இல்லை. 256 00:16:05,090 --> 00:16:08,051 இது ஒரு உதவியாளர், எல்லாம் தெரிந்த சமூகத்தில் பழகும் திறன்கள் இல்லாமல் 257 00:16:08,135 --> 00:16:10,304 அது அடிப்படையில் ஒரு முட்டாள் போல தெரிகிறது. 258 00:16:11,221 --> 00:16:15,058 நீ என்னிடம் பொய் சொன்னாய், எனவே நீயும் ஒரு முட்டாள் என்று நினைக்கிறேன். 259 00:16:15,142 --> 00:16:17,644 அட, காரா. அது ஒரு வகுப்பிற்கு மட்டும்தான். 260 00:16:18,520 --> 00:16:20,189 இன்னும் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது... 261 00:16:20,272 --> 00:16:22,149 நீ என்னிடம் சொல்லவில்லை. 262 00:16:22,649 --> 00:16:25,611 இது என் திட்டம், ஜெஸ்ஸி. 263 00:16:25,694 --> 00:16:28,113 உன் அறையில் உட்கார்ந்திருப்பதற்கும், உன் வேலைகளைச் செய்யவும் 264 00:16:28,197 --> 00:16:31,241 நீ அதைக் கடன் வாங்கினாய், பள்ளிக்கு அனுப்ப இல்லை. 265 00:16:32,242 --> 00:16:33,577 நான் மிகவும் வருந்துகிறேன். 266 00:16:33,660 --> 00:16:37,331 அது ஒரு முட்டாள்தனமான யோசனை, அடுத்த முறை நான் கவனமாக இருப்பேன். 267 00:16:37,414 --> 00:16:39,166 நீ அதை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பேன் என்று நினைக்கிறாயா? 268 00:16:40,083 --> 00:16:42,336 காரா, நீ அனுமதிக்க வேண்டும். 269 00:16:42,419 --> 00:16:45,506 நாளை என் ஆடிஷன். இது எனக்கு எவ்வளவு தேவை என்று உனக்குத் தெரியும். 270 00:16:46,173 --> 00:16:47,424 எனக்குத் தெரியாது, சரியா? 271 00:16:48,091 --> 00:16:50,177 அடுத்த முறை நாம் பிடிபட்டால் என்ன செய்வது? 272 00:16:50,260 --> 00:16:51,887 இருவரும் கடுமையான சிக்கலில் மாட்டலாம். 273 00:16:51,970 --> 00:16:54,765 அது வேலை செய்யாமல் போனால், எனக்கு கடைசி மதிப்பெண் கிடைக்கும். 274 00:16:55,265 --> 00:16:57,059 இனி இதை பள்ளிக்கு அனுப்பமாட்டேன், சத்தியமாக. 275 00:16:57,142 --> 00:17:00,062 அது... நடனம் மட்டும்தான் எனக்கு நன்றாக தெரிந்த ஒன்று. 276 00:17:01,230 --> 00:17:03,190 பார், நீ மிகவும் கடினமாக பயிற்சி செய்வது தெரியும், ஆனால்... 277 00:17:03,273 --> 00:17:07,402 இன்னும் ஒரு நாள்தான். அட. தயவுசெய்து. 278 00:17:13,075 --> 00:17:14,409 நல்லது. 279 00:17:14,992 --> 00:17:19,498 ஆனால் உன் வாழ்நாள் முழுவதும் நீ எனக்குக் கடன்பட்டிருக்கிறாய். 280 00:17:19,580 --> 00:17:21,708 சரி. 281 00:17:37,599 --> 00:17:39,059 எழுபத்தி நான்கு சதவீதம். 282 00:17:39,142 --> 00:17:41,854 நீ தொடர்ந்து ஏழாவது முறையாக அந்தத் தவறைச் செய்கிறாய். 283 00:17:42,604 --> 00:17:43,564 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறாய். 284 00:17:43,647 --> 00:17:45,190 உன் நடன மதிப்பெண் 18% குறைந்துள்ளது. 285 00:17:45,274 --> 00:17:46,984 நீ 23% முன்னேற வேண்டும் 286 00:17:47,067 --> 00:17:49,653 டிராவிஸின் 96% புள்ளிகளை நீ வெல்லப் போகிறாய் என்றால். 287 00:17:51,029 --> 00:17:52,447 எனக்குத் தெரியும். நன்றி. 288 00:17:52,531 --> 00:17:56,159 உன் கால்களை சரியாக நிலைநிறுத்தினால், அது உன் புள்ளிகளை பல மடங்கு அதிகரிக்கும். 289 00:17:57,119 --> 00:17:58,787 நிஜமாகவா? எனக்கு அது தெரியவில்லையே. 290 00:17:59,580 --> 00:18:01,123 நீ விரும்பினால் நான் உனக்கு உதவ முடியும். 291 00:18:02,457 --> 00:18:03,625 உனக்கு நடனமாடத் தெரியுமா? 292 00:18:03,709 --> 00:18:06,295 என்னால் பல்வேறு பாடங்களில் உதவ முடியும். 293 00:18:06,879 --> 00:18:09,590 நல்லது. உனக்கு எல்லாம் தெரிந்தால், நீ ஏன் வழக்கமானத்தை செய்யக்கூடாது? 294 00:18:17,055 --> 00:18:19,308 நீ அதை சுயமாக செய், ஆனால் நாம் வளர வேண்டியதில்லை 295 00:18:19,391 --> 00:18:21,602 நாம் என்றென்றும் இளமையாக இருக்கலாம் 296 00:18:21,685 --> 00:18:24,897 ஏன் என்று என்னால் ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும் 297 00:18:25,480 --> 00:18:29,818 ஆனால் நீ போகிறாய் அது உனக்குத் தெரியும் 298 00:18:29,902 --> 00:18:35,365 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிமிடம் இரு போதுமான நேரத்தை எடுத்துக்கொள் 299 00:18:35,449 --> 00:18:38,744 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 300 00:18:39,286 --> 00:18:42,497 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நொடி இருப்பதுதான் 301 00:18:42,581 --> 00:18:44,833 உன் கைகள், என் மீது 302 00:18:44,917 --> 00:18:48,337 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 303 00:18:54,468 --> 00:18:56,261 நீ செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதுதான் 304 00:19:02,100 --> 00:19:03,560 அது சரியான மதிப்பெண். 305 00:19:05,354 --> 00:19:07,064 100%. 306 00:19:10,984 --> 00:19:14,488 ஜெஸ்ஸி, நீ நிஜமாகவே எங்களை ஆச்சரியப்படுத்திவிட்டாய் என்று சொல்ல வேண்டும். 307 00:19:15,489 --> 00:19:17,574 எப்படி ஆச்சரியப்படுத்தினேன்? 308 00:19:18,075 --> 00:19:19,910 நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா? 309 00:19:19,993 --> 00:19:23,288 உன் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பது. தினமும் இரவு உன் அறையை சுத்தம் செய்வது. 310 00:19:23,372 --> 00:19:25,082 காலையில் எங்கள் படுக்கையை கூட தயார் செய்வது. 311 00:19:25,832 --> 00:19:29,670 நான் செய்தேனா? அதாவது, ஆம். பிரச்சினை இல்லை. 312 00:19:30,504 --> 00:19:31,839 "நல்ல வேலை செய்தாய்" என்று சொல்கிறோம். 313 00:19:32,422 --> 00:19:34,466 நடனப் பயிற்சியோடு உன் பள்ளிப் படிப்பில், உன் வேலைகளில், 314 00:19:34,550 --> 00:19:36,552 மற்ற எல்லாவற்றிலுமே உன்னால் கவனம் செலுத்த முடிந்தது. 315 00:19:36,635 --> 00:19:37,886 உன்னை நினைத்து பெருமைப்படுகிறோம். 316 00:19:37,970 --> 00:19:40,597 நான் ஒன்றும் செய்யவில்லை. அதற்கு உதவியாளர்தான் காரணம், நான் அல்ல. 317 00:19:40,681 --> 00:19:43,684 உதவியாளர் பயனுள்ளதுதான், ஆனால் அது ஒரு கருவி. நீதான் வேலையைச் செய்கிறாய். 318 00:19:44,977 --> 00:19:46,478 நான் அப்பல்லோவை நடக்க கூட்டிச்செல்ல வேண்டும். 319 00:19:47,646 --> 00:19:49,481 அந்த நாய் எங்கே? 320 00:19:54,027 --> 00:19:56,280 எனக்குத் தெரியாது. தனி அறையில் பார்க்கிறேன். 321 00:20:02,744 --> 00:20:04,371 அப்பல்லோ. அமைதியாக இரு. 322 00:20:05,247 --> 00:20:08,750 காரா. அவசரநிலை. 323 00:20:12,504 --> 00:20:13,797 என்னால் இதை நம்ப முடியவில்லை. 324 00:20:15,215 --> 00:20:16,383 இது பாழாகிவிட்டது. 325 00:20:16,466 --> 00:20:18,177 எங்கிருந்து தொடங்குவது என்று கூட தெரியவில்லை. 326 00:20:18,886 --> 00:20:21,138 சரி, நாளைக்குள் சரிசெய்துவிட முடியும் என்று நினைக்கிறாயா? 327 00:20:22,723 --> 00:20:24,308 இன்னும் இன்றிரவு நீ பயிற்சி செய்யலாம். 328 00:20:25,017 --> 00:20:26,935 ஒருவேளை நான் அடுத்த நூறு ஆண்டுகள் பயிற்சி செய்தால்தான், 329 00:20:27,019 --> 00:20:30,314 சரியான புள்ளிகளைப் பெறுவேன், ஆனால் இது ஒவ்வொரு முறையும் 100% பெறுகிறது. 330 00:20:30,397 --> 00:20:33,609 பொறு. இது உனக்காக நடனமாடப் போகிறது. 331 00:20:34,401 --> 00:20:37,362 -அருமையான யோசனை, இல்லையா? -உண்மையில், இது ஏமாற்றுவது போல தெரிகிறது. 332 00:20:37,446 --> 00:20:39,823 நான் நடனக் குழுவில் சேரும் வரை தான். 333 00:20:40,574 --> 00:20:44,494 யாராலும், டிராவிஸ் கூட சரியான புள்ளிகளை வெல்ல முடியாது. 334 00:20:46,038 --> 00:20:47,122 உனக்கு என்ன ஆனது? 335 00:20:47,206 --> 00:20:49,041 என்ன சொல்கிறாய்? 336 00:20:50,709 --> 00:20:55,005 அதாவது இது உனக்காக எல்லாம் செய்தால், உனக்கு பயிற்சி செய்ய அதிக நேரம் கிடைத்தது, 337 00:20:55,923 --> 00:20:58,383 ஆனால் இப்போது நீ சொந்தமாக நடனமாடப் போவதில்லை. 338 00:20:58,467 --> 00:21:03,222 நான் பேஸ்பால், கலை, செஸ் கிளப்பை எல்லாம் முயற்சித்தேன். 339 00:21:04,139 --> 00:21:07,059 இதுதான் எனக்கு எல்லாமே. நான் உன்னைப் போல மேதை இல்லை. 340 00:21:07,976 --> 00:21:11,605 எனக்கு இது நிஜமாகவே வேண்டும். இது எனக்குத் தேவை. 341 00:21:13,315 --> 00:21:15,234 எனவே தயவுசெய்து என்னை எடை போடாதே. 342 00:21:18,779 --> 00:21:20,697 ஒருவேளை நான் சரிசெய்ய முயற்சிக்கலாம். 343 00:21:21,365 --> 00:21:24,785 நன்றி, காரா. நீ சிறந்தவள். 344 00:21:24,868 --> 00:21:26,453 ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்வோம். 345 00:21:27,079 --> 00:21:28,163 எனக்கு இது பிடிக்கவில்லை, 346 00:21:29,039 --> 00:21:30,916 ஆனால் நான் இதை சரிசெய்ய வேண்டும், 347 00:21:31,625 --> 00:21:34,461 அல்லது அறிவியல் கண்காட்சிக்கு சமர்ப்பிக்க என்னிடம் திட்டம் இல்லை. 348 00:21:54,898 --> 00:21:56,942 காரா, அதை சரிசெய்துவிட்டாயா? 349 00:21:57,025 --> 00:21:59,611 ஆம். இரவு முழுவதும் ஆனது, ஆனால் அதற்கு தீர்வு கண்டுபிடித்துவிட்டேன். 350 00:21:59,695 --> 00:22:00,863 இனி தடுமாற்றம் இல்லை. 351 00:22:02,281 --> 00:22:05,784 அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசே, இதோ வருகிறேன். மீண்டும். 352 00:22:07,953 --> 00:22:09,454 நீ அற்புதமானவள். 353 00:22:10,497 --> 00:22:12,165 அது நிஜம்தான். 354 00:22:12,249 --> 00:22:14,168 நினைவிருக்கட்டும், நான் இதை ஆதரிக்கவில்லை, 355 00:22:14,251 --> 00:22:15,919 ஆனால் இதை கூட்டிச் செல். 356 00:22:16,795 --> 00:22:19,882 நீங்கள் இப்போது இடங்களை மாற்றிக்கொள்வது நல்லது. உன் ஆடிஷன் தொடங்கப்போகிறது. 357 00:22:22,843 --> 00:22:23,844 ஆம். 358 00:22:42,654 --> 00:22:44,990 நீ அதை சுயமாக செய், ஆனால் நாம் வளர வேண்டியதில்லை 359 00:22:45,073 --> 00:22:47,326 நாம் என்றென்றும் இளமையாக இருக்கலாம் 360 00:22:47,409 --> 00:22:50,537 ஏன் என்று என்னால் ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும் 361 00:22:51,205 --> 00:22:55,542 ஆனால் நீ போகிறாய் அது உனக்குத் தெரியும் 362 00:22:55,626 --> 00:23:01,215 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நிமிடம் இரு போதுமான நேரத்தை எடுத்துக்கொள் 363 00:23:01,298 --> 00:23:04,593 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 364 00:23:05,093 --> 00:23:08,055 நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நொடி இருப்பதுதான் 365 00:23:08,138 --> 00:23:10,557 உன் கைகள், என் மீது 366 00:23:10,641 --> 00:23:14,228 நேரம் போய்க்கொண்டிருக்கிறது எனவே இரு 367 00:23:14,311 --> 00:23:15,896 வ்ஹூ-ஹூ! 368 00:23:15,979 --> 00:23:17,356 ஓ. 369 00:23:19,316 --> 00:23:20,526 நன்றாக ஆடுகிறாய் 370 00:23:23,695 --> 00:23:25,113 நீ செய்ய வேண்டியதெல்லாம் 371 00:23:33,247 --> 00:23:35,791 நீ செய்ய வேண்டியதெல்லாம் இருப்பதுதான் 372 00:23:41,672 --> 00:23:43,757 நீங்கள் எல்லோருமே இன்று அற்புதமாக நடனமாடினீர்கள், 373 00:23:43,841 --> 00:23:45,801 நீங்களே உங்களை நினைத்து மிகவும் பெருமைப்பட வேண்டும். 374 00:23:45,884 --> 00:23:48,470 எல்லோரும் மீண்டும் அடுத்த ஆண்டு முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன், 375 00:23:48,554 --> 00:23:49,972 ஆனால் இந்த ஆண்டு, 376 00:23:50,055 --> 00:23:51,890 நம்முடைய பெண் நடனக் கலைஞர்… 377 00:23:52,808 --> 00:23:54,184 மோனிகா. 378 00:23:55,519 --> 00:23:56,895 நன்றாக ஆடினாய், மோனிகா. 379 00:23:58,564 --> 00:24:00,607 அதோடு நம் ஆண் நடனக் கலைஞர்… 380 00:24:04,236 --> 00:24:05,404 டிராவிஸ். 381 00:24:07,781 --> 00:24:10,284 நன்றாக ஆடினீர்கள். வாழ்த்துக்கள், நடனக் கலைஞர்களே. 382 00:24:11,410 --> 00:24:12,703 நன்றாக ஆடினாய், டிராவிஸ். 383 00:24:13,370 --> 00:24:16,373 வாழ்த்துக்கள், டிராவிஸ். நீ இதற்கு தகுதியானவன். 384 00:24:16,456 --> 00:24:18,667 நன்றி. அடுத்த வருடம் நீ அணியில் சேருவாய் என்று நம்புகிறேன். 385 00:24:18,750 --> 00:24:19,751 நீ நிஜமாகவே நன்றாக ஆடினாய். 386 00:24:25,799 --> 00:24:27,885 நீ உதவியாளரைப் பயன்படுத்தப் போகிறாய் என்று நினைத்தேன். 387 00:24:28,385 --> 00:24:30,345 என்னால் அப்படி செய்ய முடியவில்லை. நீ சொன்னது சரி. 388 00:24:30,429 --> 00:24:33,056 அப்படி நான் நடனக் குழுவில் சேர்ந்திருந்தால், அது ஏமாற்றுவதாக இருக்கும். 389 00:24:34,183 --> 00:24:36,643 நீ செய்தது சரிதான் என்று நினைக்கிறேன். 390 00:24:38,604 --> 00:24:39,771 நீ நலமா? 391 00:24:39,855 --> 00:24:42,733 உண்மையில், அருமையாக இருக்கிறேன். 392 00:24:43,817 --> 00:24:45,360 -நிஜமாகவா? -ஆம். 393 00:24:45,444 --> 00:24:47,404 நான் இதுவரை நடனமாடியதில் இதுவே சிறந்ததாக இருந்தது. 394 00:24:49,239 --> 00:24:51,283 வா. நாம் பீட்சா சாப்பிட போவோம். 395 00:24:51,366 --> 00:24:53,869 நான், நீ, அதோடு உதவியாளர். 396 00:24:55,245 --> 00:24:56,914 சரி, ஆனால் நீ இன்னும் எனக்குக் கடன்பட்டிருக்கிறாய். 397 00:24:56,997 --> 00:25:00,000 எனது அறிவியல் கண்காட்சி விளக்கக்காட்சிக்கு எனக்கு நிறைய உதவி தேவை. 398 00:25:00,083 --> 00:25:01,543 உதவுகிறேன். 399 00:25:03,545 --> 00:25:06,632 எனவே, எனது பொது சார்பியல் கோட்பாடு 400 00:25:06,715 --> 00:25:11,386 புவியீர்ப்பு ஒரு விசை என்பதை விட விண்வெளி நேரத்தின் ஒரு பண்பு என்று விவரிக்கிறது. 401 00:25:11,887 --> 00:25:13,263 அதோடு அந்த… 402 00:25:13,347 --> 00:25:15,599 இது மிகவும் ஈர்க்கக்கூடிய வேலை, காரா. 403 00:25:15,682 --> 00:25:16,683 நன்றி. 404 00:25:16,767 --> 00:25:20,103 ஐன்ஸ்டீன் எல்லா விஷயங்களும் சார்புடையது என்று சொல்லியிருக்கலாம், 405 00:25:20,187 --> 00:25:24,566 ஆனால் உன் வேலை மிக உயர்ந்தது என்று சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். 406 00:25:25,359 --> 00:25:28,779 உண்மையில், ஐன்ஸ்டீன் எல்லா விஷயங்களும் சார்புடையது என்று சொல்லவில்லை. 407 00:25:28,862 --> 00:25:30,948 அவரது கோட்பாடு ஆற்றல், எடை, தூரம், வேகம் எல்லாமே 408 00:25:31,031 --> 00:25:33,450 தொடர்புடையவை என்று குறிப்பதாக இருந்தது, 409 00:25:33,534 --> 00:25:36,995 ஒரு தனிநபரின் கருத்து தற்சார்புடையதாக இருப்பதைக் குறிக்கவில்லை. 410 00:25:37,079 --> 00:25:40,165 ஒரு ஆசிரியராக, நீங்கள் வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். 411 00:26:41,810 --> 00:26:43,812 வசனத் தமிழாக்கம் அருண்குமார்